ஆலயத்தில் பிரகாரத்தை ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் சுற்றி வர வேண்டும். அதே போல், இடமிருந்து வலமாகத் தான் சுற்றி வர வேண்டும்.
கோவில் பிரகாரம் எப்படி வலம் வருதல் வேண்டும்?
ஆலயத்தில் பிரகாரத்தை
ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் சுற்றி வர வேண்டும். அதே போல், இடமிருந்து வலமாகத் தான்
சுற்றி வர வேண்டும்.
சிலர் குறுக்கு வழியில் இறைவனை தரிசித்து விட்டு, வலமிருந்து இடமாக பாதி
தூரம் மட்டும் வந்து, கோயிலை விட்டு வெளியேறி வருவார்கள். இதெல்லாம் தவறு.
ஒரு முறை கோயில்
பிராகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.
மூன்று முறை வலம்
வந்தால் மனச்சுமை குறையும்.
ஐந்து முறை சுற்றி
வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
ஏழு முறை வலம் வந்தால்
நினைத்த காரியம் ஜெயமாகும்
ஒன்பது முறை வலம்
வருவதால் சத்ரு நாசம், எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.
பதினொரு முறை சுற்றி
வந்தால் ஆயுள் விருத்தியாகும்.
பதிமூன்று முறை வலம்
வந்தால் வேண்டுதல்கள் கைகூடும்.
பதினைந்து முறை வலம்
வந்தால் தனப்ராப்தி உண்டாகும்.
பதினேழு முறை வலம்
வருவதால் தானியம் சேரும்.
பத்தொன்பது முறை சுற்றி
வலம் வந்தால் ரோகம் நிவர்த்தியாகும்.
இருபத்தொரு முறை வலம்
வந்தால் கல்வி விருத்தியாகும்.
இருபத்தி மூன்று முறை
சுற்றினால் சுக சௌகர்யத்துடன் வாழ்வு கிட்டும்.
நூற்றுயெட்டு முறை வலம்
வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.
இருநூற்று எட்டு முறை
சுற்றினால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
யாருக்கு என்ன தேவையோ
அவர்கள் தான் வலம் வர வேண்டும்.
பிள்ளைகளுக்காக தாய்
செய்கிற பிரார்த்தனைகள் பலிக்கும்.
ஒவ்வொரு தெய்வங்களுக்கு
வலம் வரும் எண்ணிக்கை
1. விநாயகர் - 1 அல்லது
3 முறை
2. கதிரவன் (சூரியன்) -
2 முறை
3. சிவபெருமான் - 3, 5, 7 முறை (ஒற்றைப்படை)
4. முருகன் - 3 முறை
5. தட்சிணா மூர்த்தி - 3
முறை
6. சோமாஸ் சுந்தர் - 3
முறை
7. அம்பாள் - 4, 6, 8 முறை (இரட்டைப்படை)
8. விஷ்ணு - 4 முறை
9. மஹாலட்சுமி - 4 முறை
10. அரசமரம் - 7 முறை
11. அனுமான் - 11 அல்லது 16 முறை
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : கோவில் பிரகாரம் எப்படி வலம் வருதல் வேண்டும்? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : How to crawl according to the temple? - குறிப்புகள் in Tamil [ ]