சர்க்கரை நோயை எப்படி குணப்படுத்துவது?

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

How to cure diabetes? - Siddha medicine in Tamil

சர்க்கரை நோயை எப்படி குணப்படுத்துவது? | How to cure diabetes?

சர்க்கரை நோயை குணப்படுத்துதல் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்படி அந்த நோயை குணப்படுத்த சில வழிமுறைகள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

சர்க்கரை நோயை எப்படி குணப்படுத்துவது?

சர்க்கரை நோயை குணப்படுத்துதல் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்படி அந்த நோயை குணப்படுத்த சில வழிமுறைகள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்று 90 சதவிகித மக்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். மலச்சிக்கல் வர முக்கிய காரணம் என்னவென்றால் இட்லி, தோசை, பூரி, அரிசிச் சோறு, மாமிச வகைகள், மாட்டுப்பால், காபி, டீ, எண்ணெய் பலகாரங்கள், ரொட்டி பிஸ்கட் வகைகள் போன்ற நார்ச்சத்து இல்லாத மாவு பொருள் உணவுகளை அதிகம் உண்பதால் தான். இப்படி உணவுகளை உண்பதால் மலம் பிசுபிசுப்பு தன்மை அடைந்து குடலில் ஒட்டிக்கொண்டு சரியாக வெளியேறுவதில்லை. மேலே சொன்ன உணவுகள் உடல் உஷ்ணத்தையும் உருவாக்கும். மலச்சிக்கல் வந்துவிட்டால் உடல் ஆரோக்கியம் கெட ஆரம்பித்து விடும். சாப்பிட்ட உணவு சீரணமாகி மலமாகிய வுடன் இத்தனை மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று இருக்கிறது. அதன்படி இன்று பலருக்கு மலம் வெளியேறுவதில்லை. இன்று சிலர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கிறார்கள். இப்படி சில நாட்கள் மலம் குட்லுக்குள் தங்குவதால் மலம் அழுகி கெட்ட நாற்றம் அடைகிறது. மலத்திலுள்ள விஷத்தன்மை ரத்தத்தில் கலக்கிறது. இதனால் இரத்தம் கெட்டுப் போகிறது. ரத்தம் கெடும் போது உடல் ஆரோக்கியமும் குறைந்து விடுகிறது. ரத்தம் உடல் முழுவதும் உச்சி முதல் பாதம் வரை ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். நல்ல ரத்தம் வேகமாக ஓடும். இதனால் சுறுசுறுப்பாக வாழச் செய்யும். ரத்தம் கெட்டுவிட்டால் உடல் முழுவதும் பாதிப்படையும். உடலிலிருந்து கெட்ட நாற்றம் வரும். இந்த நாற்றம் ரத்தத்திலிருந்து வருவதுதான். வியர்வையும் நாற்றமாக இருக்கும். ஒரு சாக்கரை நோயாளி ஆண் அல்லது பெண் இயற்கை மருத்துவத்தை நாடி வந்து ஐயா என் நோய்களை குணமாக்கி நல்வாழ்வு தாருங்கள் என்று வந்தவருக்கு இயற்கை மருத்துவம் எப்படி குணமாக்கிறது என்பதை பார்ப்போம். இதைத்தான் சர்க்கரை நோயாளிகள் கவனித்து படிக்க வேண்டும். இயற்கை மருத்துவத்தின் முதல் பணி என்னவென்றால் முதல் வேலையாக மலத்தை வெளியேற்றி மலக்குடலை சுத்தம் செய்வோம். எப்படியென்றால் எங்களிடம் மருத்துவத்திற்கு வந்த முதல் நாள், இரவு உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் சென்றதும் மலத்தை வெளியேற்றும் மூலிகைப்பொடி ஐந்து கிராம் கொடுப்போம். சாப்பிட்ட மூலிகைப்பொடி உடனே மலத்தை வெளியேற்றாது. மூலிகை சீரணமாகி மலக்குடலுக்குள் சென்று உள்ளே கெட்டியாகி தேங்கி கிடக்கும் மலத்தை கரைத்து குளுகுளுப்பாக மாற்றும். இந்த வேலை இரவு முழுவதும் நடக்கும். காலையில் தூங்கி எழுந்தவுடன் வாய் கொப்பளித்து குளிர்ந்த தண்ணீரை அவர்களால் முடிந்த அளவு குடிக்க சொல்வோம். சிறிது நேரம் சென்றதும் மலக்குடலில் பல வருடங்களாக தேங்கிக்கிடந்த எல்லா மலமும் வெளியேறி விடும். இப்போது ருடல்சுத்தமடைந்து விட்டது. இனி உடல் எப்படி சுத்தமாகிறது என்பதை பார்ப்போம். அதன் பின் ஒரு மூலிகைச் சாறு கொடுப்போம். சரியாக எட்டு மணிக்கு காலை உணவு. இதில் அதிக விளைச்சல் இல்லாத தேங்காய், முனைக்கட்டிய தானிய கலவை, நாட்டு வாழைப்பழம், கருப்பு திராட்சை, பப்பாளி, இயற்கை வட்டு மற்றும் சீசன்களில் கிடைக்கும் பழங்கள். இதுதான் காலை உணவு. பத்து மணிக்கு கசப்புதன்மை கொண்ட சில மூலிகை கலவை. பதினோரு மணிக்கு துவர்ப்பு சுவை கொண்ட சில மூலிகை கலவை. பணிரெண்டு மணிக்கு நரம்புகளுக்கு வலுவூட்டும் மூலிகை கலவை. ஒரு மணிக்கு மதிய உணவு. இதில் சம்பா கோதுமையில் தயார் செய்த சமையல் உணவு, அதனுடன் காய்கள், கீரைகள், பழங்கள் தேங்காய், நாட்டு வெங்காயம், கண்ட வற்றல் வழங்கப்படும். மீண்டும் மூன்று மணிக்கு கசப்பு தன்மையுள்ள மூலிகை கலவை. நான்கு மணிக்கு துவர்ப்பு சுவையுள்ள மூலிகை கலவை ஐந்து மணிக்கு நாம்புகளை வலுப்படுத்தும் மூலிகை கலவை. இரவு ஏழு மணிக்கு இயற்கை உணவு. காலையில் சாப்பிட்டதைப்போல். இரவு உண்வுக்குப் பின் மூலிகை தேவையில்லை. காலையும், மாலையும் நோயாளிகளின் உடலுக்கு தக்கபடி யோகா கற்றுக் கொடுக்கப்படும். இதுதான் இயற்கை மருத்துவத்தின் ஒரு நாள் செயல்முறை ஆகும். இது மிகவும் சாதாரணமாக எல்லாரும் செய்யக் கூடிய ஒன்றாகும். முதலில் மலக்குடலை சுத்தம் செய்து விட்டோம், நாங்கள் கொடுக்கும் உணவுகளில் அதிக நார்ச்சத்துக்கள் இருப்பதால் தினமும் இருவேளை மலம் சிரமமில்லாமல் கழியும். அத்துடன் குடலில் பழைய மலம் சிறிது ஒட்டியிருந்தாலும் அதையும் வெளியேற்றி விடும். நாங்கள் கொடுக்கும் உணவுகள் விரைவில் சீரணமாகும். புதிய ரத்தமும் மிக வேகமாக உற்பத்தியாகும். மூலிகைகளின் பணிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கசப்புத் தன்மை கொண்ட மூலிகைகள் ரத்தத்தில் கலந்து ரத்தத்திலுள்ள பழைய நோய்க் கிருமிகளைக் கொன்று ரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொடுக்கும். துவர்ப்பு சுவைகள் உள்ள மூலிகைகள் ரத்தத்தில் கலந்து உடலுக்கு புதிய சக்தியை கொடுத்து தளர்ந்து இருந்த உடலை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நாம்புகளை வலுவூட்டும் மூலிகைகளும் அதன் பணிகளை சிறப்பாக செய்து நோய்களை சில நாட்களில் குணமாக்குகிறது. இவைகளே மூலிகைகளின் பணிகளாகும்.

1. கசப்புத் தன்மை கொண்ட மூலிகைகள்.

2. துவர்ப்பு சுவைகள் கொண்ட மூலிகைகள்.

3. நரம்புகளை வலுப்படுத்தும் மூலிகைகள்.

இந்த முப்படைகளின் முழு உதவியுடன் நலம் தரும் நமது உணவு என்ற மன்னன், கொடிய பகைவர்களாகிய நோய்களை விரட்டியடித்து சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்வை கொடுக்கின்றன. முக்கிய குறிப்பு:

சிலருக்கு சர்க்கரை நோய் மட்டும். இருப்பதில்லை, சர்க்கரை நோயுடன் சுமார், ஆறுவகை நோய்களும், பத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும் இருக்கும். இயற்கை மருத்துவம் எல்லா நோய்களையும், அனைத்து பாதிப்புகளையும் 'மொத்தமாக குணமாக்கி விடும். மற்ற நோய்களுக்கும் இடையிடையே நோய்க்கு தக்கபடி வேறு மூலிகைகளும் கொடுக்கப்படும்.

இன்னொரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். நோய்கள் குணமாகியவுடன் மூலிகைகள் சாப்பிட வேண்டியதில்லை. எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை. வாழும் காலம் வரை ஆரோக்கியமாக மகிழச்சியாக வாழலாம். இந்த வசதி வேறு எந்த மருத்துவத்திலும் இருக்காது. சிறுநீரகம், இருதயம், கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்உறுப்புகள் அதிகம் பழுதடைந்து விட்டால், இயற்கை மருத்துவமே அந்த நோயாளியை காப்பாற்றாது. ஆரம்பக் காலத்தில் எதையும் பார்ப்பதே சாலச் சிறந்தது. உப்பு வியாதியும், அதிகமாகி டயாலிஸ் செய்யும் நிலை வந்து விட்டால் காப்பாற்றுவது கடினம் தான். டயாலிஸ் என்றால் மிஷின் மூலம் உடலிலுள்ள ரத்தத்தை உறிஞ்சி ரத்தத்திலுள்ள அதிகப்படியான உப்பை மிஷின் மூலம் சுத்தப்படுத்தி மீண்டும் உடலுக்குள் செலுத்துவதாகும். ரத்தத்தை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. பணச்செலவும் அதிகமாகும். உடலுக்கு தினமும் சித்ரவதைதான்.

 

மூன்று வேளை உணவை ஆறுவேளையாக பிரித்து உண்ணச் சொல்வது சரியான உணவு முறையா?

ஆறு வேளை உண்பது தவறான உணவுப் பழக்கம் தான். இப்படி ஆறுவேளை உண்பது உடலுக்கு மேலும் மேலும் பலகீனத்தைத் தான் தரும். ஆறுவேளை உணவு உண்பதால் கணையத்திற்கு அடிக்கடி வேலை கொடுக்கிறோம். இதனால் கணையம் மேலும் பலகீனமடையும். மனித உணவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வளரும் பருவம் என்றால் சுமார் இருபத்தி ஐந்து வயது வரை தான். இந்த பருவத்தில் மூன்று வேளைகள் உணவு உண்ண வேண்டும். இது உடல் வளர்ச்சி அடையும் பருவம். இருபத்தி ஐந்து வயதுக்குப் பின் உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையாது. 25 வயதுக்கு பின் இரண்டு வேளை தான் உண்ண வேண்டும். காலை, மதியம் உணவுகளை தேவையான அளவு சாப்பிட வேண்டும். இரவில் மட்டும் கிடைத்த பழங்களை மட்டும் உண்ண வேண்டும். இதுதான் மனிதர்களின் உணவு முறை, இருவேளை உண்ண வேண்டும். இருவேளை மலம் கழிக்க வேண்டும். ஆறு வேளை சாப்பிட்டால் ஆறுவேளை மலம் கழிக்க வேண்டுமே உங்களால் முடியுமா? இதை உணவுமுறை சொல்லும் மருத்துவரும் சிந்திப்பதில்லை. நோயாளிகளும் சிந்திப்பதில்லை. ஆறுவேளை உண்பது தவறான உணவுப் பழக்கமாகும். உணவைக் குறைத்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும். அது உண்மை தான். அதற்காக ஆறு வேளை சாப்பிடுவது தவறு. மூன்று வேளை சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவை அதிகரிக்காதபடி நல்ல உணவுகளை சொல்லித்தர வேண்டும். அப்படிப்பட்ட உணவுகளை இயற்கை மருத்துவர்களால் தான் சொல்லித் தரமுடியும்.

 

மூலிகைகள் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை குறைக்குமா?

நாம் உண்ணும் நல்ல உணவு தான் சர்க்கரையின் அளவை அதிகரிக்க விடாமல் சரியான அளவில் இருக்கச் செய்யும். மூலிகைககளின் பணி என்னவென்றால், நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுத்து உடலையும், உயிரையும் பாதுகாக்கும். மூலிகைகள் சர்க்கரையின் அளவை குறைக்காது. ஆனால் மூலிகைகளின் உதவி இல்லாமல் சர்க்கரை நோயை குணமாக்க முடியாது. மூலிகைகளும், மாத்திரைகளும் சர்க்கரையின் அளவை குறைத்து விடும் என்று நினைத்து கண்ட உணவுகளையெல்லாம் அதிகமாக சாப்பிடாதீர்கள். சர்க்கரையின் அளவை கூட்டுவதும் குறைப்பதும் உணவுதான். இது அதிக மக்களுக்கு தெரியாது. ஆங்கில மாத்திரை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்று ஆங்கில மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது உண்மை தான். மாத்திரைகளால் சர்க்கரையின் அளவை குறைப்பது தவறான வழியாகும். அதனால்தான் இன்று அதிகமானவர்கள் மருந்து 'மாத்திரை சாப்பிட்டு வாழ்கிறார்கள். நாம் சாப்பிடும் உணவு சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யக்கூடாது. அத்துடன் உடலுக்கு நலம் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆயுள் உள்ளவரை மருத்துவ உதவியை நாடாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

 

சிறுநீரிலும், ரத்தத்திலும் சர்க்கரையின் அளவு கூடுவதும் குறைவதும் எதனால்?

இந்த உண்மையைத்தான் சர்க்கரை நோயாளிகள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். தீமை தரும் உணவுகளால் தான் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதில் மாட்டுப்பாலும், மாமிச வகைகளும், எண்ணெய் பலகாரங்களும் தான் முன்னிலையில் இருக்கிறது. மனிதர்களாக பிறந்த எல்லோருமே மாட்டுப்பால், மாமிச வகைகளை சாப்பிடக்கூடாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கண்ணால் பார்க்கவே கூடாது. தானிய உணவுகளில் சர்க்கரையின் அளவை மிக வேகமாக அதிகரிக்க வைப்பது அரிசிசோறு தான். அரிசிச்சோறு தான் மாமிச வகைகளை அதிகமாக கேட்கும் மற்ற சிறு தானிய உணவுகள் அனைத்தும் மாமிச வகைகளை சேர்த்து உண்ணச் சொல்லாது. மனித வாழ்வின் மகிழ்ச்சியை ஒழித்ததே அரிசிச்சோறு தான். சோறு என்றால் சோர்வு.

அரிசிச்சோறும், தயிரும் சேர்த்து சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சுமார் 350க்கும் மேல் இருக்கும்.

சோறும், மீனும் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு 350க்கும் மேல் இருக்கும்.

 

சர்க்கரை நோயாளிகள் துன்பமில்லாமல் வாழ வழிகள்:

சர்க்கரை நோயாளிகளை நினைத்தால் பாவம் தான். ஆனால் அவர்கள் உணவில் பல தவறுகள் செய்திருக்கிறார்களே. மீண்டும் சொல்கிறேன். கணையம் பழுதடைந்தால் பழுதடைந்தது தான். அதை மீண்டும் முழுமையாக புதுப்பிக்கும் சக்தி எந்த மருத்துவத்துக்கும் இல்லை. இயற்கை மருத்துவம் மட்டும் கணையம் முன்பு செயல்பட்டதை விட சற்று அதிகமாக செயல்பட வைக்கும். இயற்கை மருத்துவம் பார்த்த பின் உணவுப் பழக்கத்தை நாங்கள் சொல்கிறபடி வைத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவை அதிகரிக்க விடாமல் வைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை தீமை தரும் உணவை சாப்பிட்டாலும் அந்த உணவானது உடனே ரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து விடும். நலம் தரும் உணவுகள் சமையல் உணவிலும் இயற்கை உணவிலும் பல இருக்கிறது. அவைகளை நான் சொல்லித் தருகிறேன். நோயை பற்றி கவலைப்படாதீர்கள்.

1. வெளியூர் பயணத்தை குறையுங்கள்.

2. தேவையில்லாத சொந்த பந்தங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

3. அழைப்பு கொடுத்த விருந்துகளுக்கெல்லாம் செல்லாதீர்கள். முக்கியமான உறவினர்கள் வீட்டு விருந்துக்கு மட்டும் செல்லுங்கள்.

4. விருந்துகளில் தீய உணவுகள் (மாமிச வகைகள்) கொடுத்தால் உண்ணாதீர்கள். சைவ உணவாக இருந்தால் குறைவாக சாப்பிடுங்கள். விருந்து உணவுகளில் நார்ச்சத்துள்ள உணவுகள் கிடைக்காது.

5. விருந்துகளில் நல்ல உணவுகள் கிடைக்கவில்லை யென்றால் அருகில் இருக்கும் கடைகளில் கிடைத்த பழங்களை வாங்கி சாப்பிட்டு பசியை போக்கிக் கொள்ளுங்கள்.

6. அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக தீய உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் அதற்குரிய தண்டனையை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும். யாரும் உங்கள் வேதனையில் பங்கு கொள்ள வரமாட்டார்கள். இதில் கவனம் தேவை. இதை மட்டும் நீங்கள் உணர்ந்து கொண்டால் உங்களை எந்த நோயும் அணுகாது.

7. இன்றைய விருந்து உணவுகள் அனைத்தும் உடல் நலத்தை கெடுத்து உயிரைக் குடிக்கும் விஷ உணவுகள் என்பதை உணர்ந்து உஷாராக இருங்கள்.

8. ஆடம்பரம், நாகரீகம் இவைகளை ஒழித்து எளிமையாக வாழுங்கள். எளிமையான வாழ்வு இனிமை தரும். ஆடம்பர வாழ்வு அமைதியில்லாத ஆபத்தான வாழ்வைத் தரும். அமைதியான வாழ்வையே விரும்புங்கள்.

9. வெளியூரில் தங்கும் சூழ்நிலையை குறைத்து விடுங்கள். தங்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் முடிக்க வேண்டிய காரியங்களை விரைவில் முடித்துவிட்டு உங்கள் இல்லம் வந்து விடுங்கள். உங்கள் இல்லமே உங்களின் இன்ப உலகம் என்பதை மறவாதீர்கள்.

10. தொலை தூரத்திலிருக்கும் கோவில்களுக்கு செல்வதையும், சுற்றுலா பயணம் செல்வதையும் முழுமையாக நிறுத்தி விடுங்கள். அங்கு தான் உடல் நலம் கெடுக்கும் உணவுகளை உண்ண வேண்டியது வரும். நேரப்படி தூங்கவும் முடியாது. இதனால் உடல் நிலை உடனே பாதிப்படையும். உஷார். உஷார்,

11. தீய பழக்கங்கள் இருந்தால் உடனே மறந்து விடுங்கள். காலதாமதம் சிறிதும் கூடாது. அவைகள் நமக்கு வேண்டாம். அவைகள் நம் விரோதிகள்.

12. நல்லவர்கள் நட்பை அதிகம் விரும்புங்கள். நல்லவர்கள் நட்பு மன அமைதியை கொடுக்கும். தீயவர்கள் நட்பு மன அமைதியை கெடுக்கும்.

13. உடலுக்கு சுகம் தரும் பருத்தி நூல் ஆடைகளையே அணியுங்கள். நாகரீக துணிகளும் பல உயிர்களை கொன்று தயாராகும் பட்டாடைகளும் பயன்படுத்தாதீர்கள். பட்டாடைகளை அணிகிறவர்கள் அனைவரும் பாவம் செய்கிறவர்கள்.

14. ஓய்வு நேரங்களில் நல்ல பண்புகளை சொல்லிக் கொடுக்கும் புத்தகங்களை படியுங்கள். டிவி பார்த்தால் நல்ல பழைய படங்களையும் பழைய பாடல்களையும் விலங்குகளை காட்டும் இயற்கை சேனல்களையும் பாருங்கள். பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

15. பகலில் தூங்காதீர்கள். சரியான நேரப்படி நல்ல உணவுகளை மட்டும். உண்ணுங்கள். நேரப்படி சரியாக தூங்குகள் அதிகாலை ஐந்து மணிக்குள் தூங்கி எழுங்கள்.

 

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் பசியை தாங்கும் சக்தி இல்லை?

சர்க்கரை நோயாளிகளின் உடலில் சேமித்து வைத்திருந்த பழைய சத்துக்களும் தினமும் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களும் தினமும் சிறுநீர் வழியாக வெளியேறுவதால் உடல் பலகீனம் அடைகிறது. மேலும் இவர்கள் சமைத்த உணவுகளையே தினமும் மூன்று வேளைகளும் உண்பதால் மேலும் பலகீனமடைகிறது. இப்படி பலகீனமடைந்த உடலில் பசியை தாங்கும் சக்தி சிறிதும் இருக்காது. இவர்கள் சரியான நேரப்படி உணவை சாப்பிட்டுவிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் ஒரு அளவுடன் சாப்பிட்டுக் கொள்ளலாம் சர்க்கரையின் அளவும் சற்று குறைவாகவே இருக்கும். பசிவந்து அரைமணி நேரம் தாமதித்து விட்டால் உடல் ஆட்டம் கண்டு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து "உடலை சோர்வடையச் செய்து விடும். அதன்பிறகு சாப்பிட்டால் உணவு அளவுக்கு அதிகமாக தேவைப்படும். வயிறு உணவை கொண்டா கொண்டா என்று கேட்கும்: உணவை ஒரு அளவுடன் நிறுத்த வேண்டுமென்று நினைத்தாலும் முடியாது. வயிறு நிறைய சாப்பிட்டு தண்ணீரும் குடித்தால் தான் பசி அடங்கும். இப்போது உடலில் என்ன நடக்கும் தெரியுமா? உதாரணமாக அரைக்கிலோ உணவு கொடுக்க வேண்டிய வயிற்றக்கு ஒரு கிலோ உணவு கொடுத்திருக்கிறது. அரைக்கிலோ உணவு சாப்பிட்டாலே சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200 க்கு மேல் இருக்கும். ஒரு கிலோ உணவை சாப்பிட்டதால் சர்க்கரையின் அளவு சிலருக்கு 400 க்கும் மேல் சென்று விடும். சிலரை சாப்பிட்ட உடனேயே படுக்கச் சொல்லும் உடல் உறுப்புகள் அனைத்தும் சோர்வடைந்து விடும். சற்று நேரம் ஓய்வெடுத்த பின்பு தான் வேறு பணிகளை அவர்களால் செய்ய முடியும். சர்க்கரை நோயாளிகளுக்கு பசியை தாங்கும் சக்தியை மற்ற மருந்துவங்கள் கொடுக்குமா என்று கேட்டால் நிச்சயம் கொடுக்காது. எப்படியென்றால் இதுவரை நீங்கள் சாப்பிட்டது சமைத்த உணவுகள். இனிமேலும் நீங்கள் உயிர்ச்சத்தை இழந்த சமைத்த உணவுகளைத்தான் சாப்பிடுவீர்கள். நீங்கள் தினமும் உணவில் கசப்பு துவர்ப்பு சேர்ப்பதில்லை. நார்ச்சத்துள்ள உணவுகளும் அதிகம் சாப்பிடுவதில்லை. உயிர்ச்சத்துள்ள தேங்காயும் பழவகைகளும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் உங்களுக்கு சொல்லியிருப்பார்கள். உயிருள்ள உணவுகள் அனைத்தையும் சாப்பிடாமல் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் உடலுக்கு எப்படி சக்தி கிடைக்கும்? நீங்கள் சுத்தமான சமைத்த சைவ உணவுகளையே சாப்பிட்டாலும் பலகீனம் தான் வரும். இயற்கை மருத்துவம் பலவகையான சுவைகள் கொண்ட மூலிகைகளும், உயிர்ச்சத்துக்கள் அழியாத உணவுகளும் கொடுத்து உடலுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது. தளர்ந்து கிடந்த உடலை நிமிர்ந்து நிற்க செய்கிறது. இயற்கை மருத்துவத்தில் ஒரு சில நாட்களிலேயே அகோரமாக பசி அடங்கிவிடும். குறைவான உணவே போதும் என்று உங்கள் உடலும் மனமும் ஏற்றுக் கொள்ளும். அளவான உணவும் ஆரோக்கியம் நிறைந்த உணவும் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சரியான அளவு இருக்கும். சர்க்கரையை கூட்டாத உணவுகள் தினமும் சாப்பிடும்போது சாப்பிட்ட உணவுகளின் சத்துக்கள் உடலில் வேகமாக சேமிக்கப்படும். அதன்பின் பசியை மட்டுமல்ல எதையும் தாங்கும் சக்தி உங்கள் உடலுக்கும் மனதிற்கும் வந்து விடும். அதன்பின் ஆயுள் வரை ஆரோக்கிய வாழ்வுதான்.

 

கைகளில் கால்களில் மதமதப்பு ஏன் வருகிறது?

சில சர்க்கரை நோயாளிகளுக்கு கால் மதமதப்பும் எரிச்சலும் அதிகமாக இருக்கும். சிலருக்கு இரவில் தான் அதிகமாக இருக்கும் சரியாக தூங்கவிடாது. இதற்காக சிலர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். கால்களின் அடிப்பாதங்கள் சூடாக இருக்கும். இதை மற்றவர்கள் தொட்டுப் பார்த்தால் தான் தெரியும். மண் தரையில் நடந்தால் முள் குத்துவதுபோல் இருக்கும். இதனால் அவர்கள் செருப்பு அணிந்துதான் நடக்க முடியும். காலில் எந்தப் பொருள் நட்டினாலும் வலியை தாங்க முடியாது. கால்களில் எரிச்சல் வருவதற்கு காரணம் ரத்தக்குறைவுதான். ஆரோக்கியமான மனிதர்களுக்கு உச்சி முதல் பாதம் வரை உடல் முழுவதும் ரத்தம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும். சர்க்கரை நோயாளிகளின் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு கணுக்காலுக்கு கீழே ரத்தம் சரியாக செல்வதில்லை. இப்படிப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் காயம்பட்டு, புண் வந்து விட்டால் விரைவில் ஆறுவதில்லை. ரத்த ஓட்டம் உள்ள பகுதியில் தான் காயங்கள் விரைவில் ஆறும். சர்க்கரை நோயாளிகளின் கால் புண்ணிலிருந்து சிகப்பு கலரில் தண்ணீராக ஓடிக் கொண்டிருப்பதால் தான் புண்கள் விரைவில் ஆறுவதில்லை. இப்படிப்பட்ட புண்ணானது காலின் உள்புறமாக அழுகிக் கொண்டே செல்லும். அதனால் தான் சிலருக்கு கால் விரல் அல்லது முழங்காலுக்கு கீழ் துண்டிக்கப்படுகிறது. கால்களில் நன்றாக ஏத்தம் ஓடிக்கொண்டிருந்தால் புண்ணிலுள்ள ரத்தம் உரைந்து காய்ந்து புண்ணை விரைவாக ஆரச் செய்து விடும். ரத்த ஓட்டம் உள்ளவர்களின் கால் புண்ணில் நீர் வடியாது. ரத்த ஓட்டம் இல்லாமல் மதமதப்பும் எரிச்சலும் உள்ள கால்களுக்கு இயற்கை மருத்துவம் புதிய உயிர்ச்சத்துள்ள நல்ல ரத்தத்தை உடலில் உற்பத்தி செய்ய வைத்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் முழு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உயிருள்ள இயற்கை உணவுகளாலும், சக்திவாய்ந்த சமையல் உணவுகளாலும், சில மூலிகைகளாலும் தான் இதை சரி செய்ய முடியும். நீங்கள் தினமும் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி, அரிசிச் சோறு, காபி, டீ, மாட்டுப்பால், மாமிச வகைகள் மற்றும் பல நாகரீக உணவுகள் உயிர்ச்சத்துள்ள ரத்தத்தை உங்கள் உடலில் உற்பத்தி செய்யுமா? நான் சொல்கிறேன். நிச்சயம் செய்யாது. உயிர்ச்சத்துள்ள ரத்தத்தை நீங்கள் சாப்பிடும் உணவுகள் உற்பத்தி செய்திருந்தால் நீங்கள் நோயாளியாக இருக்கமாட்டீர்கள். சிந்தித்து செயல்படுங்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

சித்தா மருத்துவம் : சர்க்கரை நோயை எப்படி குணப்படுத்துவது? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : How to cure diabetes? - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்