உங்களிடம் நிலையான முடிவெடுக்கும் திறமை இல்லையென்றால் நீங்கள் எப்படி நிலையான வெற்றியை பெற முடியும்
முடிவு எப்படி எடுப்பது?
*
உங்களிடம் நிலையான முடிவெடுக்கும் திறமை இல்லையென்றால் நீங்கள் எப்படி நிலையான வெற்றியை பெற முடியும்
🌟
*நம் பிரபஞ்சத்திடம் உரிமையாக,
கட்டளையாகவும் கேட்கலாம், மனம் உருகி கண்ணீர் மல்க கரம் கூப்பிட்டும் கேட்கலாம் ஏன்
என்றால் நாம் பிரபஞ்சத்தின் குழந்தைகள்*
🌟
*எப்படி கேட்பீனும் நம்பிக்கையோடு
கேட்கவேண்டும், கேட்டபின்
நம்பிக்கையோடு இருக்கவேண்டும்*
தினம்தினம் தினம் தினம் தினம் தினம் தினம் தினம் பன்னு ஒரு
டைம்ல ஒரு ஃபோர்ஸ் வரும் அதுவே அலையா
ஆரம்பித்து சுனாமியா மாறும்.....💪💪💪💪💪🌈🥰🎋
(கேள்வி)
என்னால சாதிக்க முடியும்
(பதில்)
நிச்சயமா சாதிக்க முடியும்.
எப்படி ?
ஆழ்மனதை பயன்படுத்தி தான்.
அது எப்படி ?
தூங்கும் முன்பு ஒரு இலக்கு அதாவது உங்கள் கனவு என்ன என்பதை
ஆராய்ந்து அதை ஒரு சுயபிரகடனமாக உங்கள் ஆழ்மனதிடம் இரவு கூறி வாருங்கள்
நிச்சயம் அதுவா மாறுவீர்கள் இங்கு ஒரு வினைக்கு எதிர்
வினை உள்ளது
உங்கள் வாழ்க்கை நல்லதை நினைத்தால் நல்லதை ஈர்ப்பீர்கள்
இவ்வளவு தான் எண்ணம் போல் வாழ்க்கை.
நம்முடைய விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நம் *ஆழ்மனதிற்கு,
நாம் சொடக்கு போடும் நேரம் கூட ஆகாது. நம்முடைய
ஆழ்மனதினுடைய சக்தியானது* அப்படியொரு வேக தன்மையுடையது. அப்படியென்றால் அதனுடைய
வேகத்திற்கு நம்முடைய பங்கு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து
பாருங்கள்...
நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்.......
(1) வெட்கம் :- (Shyness )
எந்த ஒரு தொழிலை அல்லது செயல்களை செய்யும் பொழுது அது நம்மால் முடியவே
முடியாது என்ற மனம் வந்து உங்களை வெட்கப்படுமாறும் மேலும் அதனை நம்மால் செய்ய
முடியுமா? என்ற கேள்வி கனைகளை உங்கள் மனதில் பாய்ந்தால் நீங்கள் எதையும் சாதிப்பது
கடினம் ஆகும். அந்த தொழிலுக்கு அல்லது அந்த செயல் செய்ய நமக்கு தகுதி இருக்கா? அல்லது
செயல்கள் ஒரு வேளை தோல்வி அடைந்தால் சுற்றத்தார்கள் கேலி கிண்டல் செய்வார்களே
என்றும் வெட்கப்பட்டால் நீங்கள் முன்னேற முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
அந்த வெட்கத்தை தூரப் போடுங்கள். மனம் வேகமாக செல்லக் கூடியது. எவ்வளவு தூரம்
என்றாலும் செல்லக் கூடியது. நல்லதும் நினைக்கும். கேட்டதும் நினைக்கும். வெற்றியும்
நினைக்கும் தோல்வியும் நினைக்கும். எது அதிகமாக நினைப்பு வருகிறதோ அது நடக்கும்.
இதைப் பற்றி ஒரு மகானிடம் ஒருவர் கேட்கிறார். சுவாமி எனக்கு கெட்ட எண்ணங்களும்
வருகிறது. நல்ல எண்ணங்களும் வருகிறது. என்ன செய்ய என்று கேட்கும் பொழுது சுவாமி
சொன்னார். நீங்கள் தியானம் செய்து வாருங்கள். நாளடைவியில் ஏதாவது ஒன்று நிக்கும்.
செய்யுங்கள் என்றார். அதற்க்கு அந்த மனிதர் ஒருவேளை நல்ல எண்ணங்கள் நின்று
விட்டால் என்ன செய்வது என்று கேட்டாரே ஒரு கேள்வி. அதற்க்கும் அந்த சுவாமி கூலாக
நல்ல எண்ணம் நின்றால் அது தான் உன்னுடைய இயல்பு. இயல்பை மாற்ற முடியுமா? என்றாராம்.
ஆனால் இயல்பையும் மாற்ற முடியும் அவரவர்கள் நினைத்தால்.
(2) பயம் :- (Fear)
பயம் ஒரு நோய் என்றே சொல்லலாம். பயம் உள்ளவன் அபாயம் தான்.
இங்கே பயந்தவர்கள் அடுத்த அடியை கூட எடுத்து வைக்க முடியாது. இன்னும் கூடுதலாய்
சொல்லப் போனால் இருந்த, நிக்கிற நிலையில் கூட தொடர முடியாது. பயம் போக்க பயத்தை
எதிர் கொள்ளுங்கள். எதுவெல்லாம் பயம் தருகிறதோ அந்த செயல்களேயே மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
ஒரு கட்டத்தில் பயத்தில் இருந்தும் மீண்டு விடுவீர்கள். இரு மாணவனுக்கு கணக்கு
வரவில்லை என்றால் மீண்டும் மீண்டும் கணக்கையே செய்து பயிற்சி எடுங்கள். ஒரு
சமயத்தில் கணக்கும் எளிதாகி விடும். மேடை பேச்சு பயம் ஏற்படுகிறதா? அதிக மேடைகளில்
ஏறுங்கள். இங்கே அவமானப் படாமல் எதுவும் கிடைப்பது இல்லை. மாறாக அவமானப்
படுத்தினால் நன்றி சொல்லுங்கள்! உங்கள் உயர் நிலைக்கான வித்துக்கள் அவர்கள்.
3) தாழ்வு மனப்பான்மை :- (Poorself-image)
அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை. இந்த தாழ்வு
மனப்பான்மை மிகவும் மோசமானது. இதைப் போக்க எவரையும் ஆச்சிர்யத்துடன்
பார்க்காதீர்கள். மலைக்காதீர்கள். எவ்வளவு பெரிய மலை ஆனாலும் நீங்களும் முயற்சி,
பயிற்சி, விடா முயற்சி, மீண்டும் மீண்டும் முயற்சி! அப்புறம் என்ன? வெற்றி தான்.
என்றைக்குமே யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அது நீங்களே உங்களை அவமானம்
செய்ததற்கு சமம் ஆகும். மாறாக உங்களை உங்களுக்கு ஒப்பீடு செய்து வாருங்கள்.
நேற்றைய நீங்கள் யார்? இன்றைய நீங்கள் யார்? என்ன வளர்ச்சி. சுய மதிப்பீடு செய்து
வாருங்கள். எந்த திறமையும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். பாட வர வில்லையா? தினமும்
பாடி பயிற்சி எடுங்கள். பிரபலம் பாடும் பாட்டுகளை கவனத்துடன் கேளுங்கள். நீங்களும்
பிரபலம் ஆகி விடுவீர்கள்.
(4) நாளையவாதி :- (Procrastination)
அப்புறம் பார்த்துக்கிடலாம். செய்யலாம். நாளைக்கு நல்ல நாள்.
நாளை தொடங்கலாம். ஆரம்பிக்கலாம். என்று நாளை நாளை என்று தள்ளி தள்ளி செல்ல செல்ல
நம்மை நோக்கிய வெற்றியும் நம்மை விட்டு மிகவும் தள்ளி போகும். கவனம் முக்கிய
காரியங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களுக்கு உள்ளேயே ஒரு டார்கெட் வைத்துக்
கொள்ளுங்கள். கால அவகாசம் வைத்துக் கொள்ளுங்கள். இது எல்லாம் மற்றவர்கள் செய்யும்
வேலையின் கால அளவை விட குறைவாக இருக்க வேண்டும். டார்கெட்டோ மற்றவர்களை விட அதிகமாக இருக்க வேண்டும்.
(5) சோம்பல் :- (Lazyness)
சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது…
(6) பிற்போக்கு பழக்க வழக்கம் :- (Negative Habits)
பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள் ஆகியவற்றால்
பிற்போக்கு பழக்க வழக்கங்கள்…
7) எதிர்மறை எண்ணம்:- (negative thoughts)
எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது
தெரிந்தும் அதை நீக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்…!!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : முடிவு எப்படி எடுப்பது? - ஆழ்மனம், கையாளுவது எப்படி? நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள் [ motivation ] | Encouragement : How to decide? - Subconscious, how to handle? Seven obstacles to our progress in Tamil [ முயற்சி ]