விரதம் இருப்பது எப்படி?

பலன்கள், வெற்றிலை மாலை ஏன்?

[ ஆன்மீகம்: ஆஞ்சநேயர் ]

How to fast? - Benefits, why betel leaf? in Tamil



எழுது: சாமி | தேதி : 31-05-2023 01:18 pm
விரதம் இருப்பது எப்படி? | How to fast?

அனுமன் ஜெயந்தி அன்று நாம் விரதம் இருந்தால் சகல செல்வங்களும் நமக்குக் கிடைக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி பெற முடியும்; துன்பம் விலகும்; இன்பம் கிட்டும்.

விரதம் இருப்பது எப்படி?


அனுமன் ஜெயந்தி அன்று நாம் விரதம் இருந்தால் சகல செல்வங்களும் நமக்குக் கிடைக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி பெற முடியும்; துன்பம் விலகும்; இன்பம் கிட்டும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு உணவு அருந்தாமல், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஆஞ்சநேயரை ஸ்ரீராம நாமத்தால் வழிபடுவதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து வெண்ணை சாத்தி வழிபட வேண்டும். அனுமன் வாலில் பொட்டு வைக்க வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றைக் கலசத்திற்குள் வைத்து, 'ஓம் நமோ பகவதேவ வாயு நந்தனாய்' என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

ஓம் ஹம் ஹனுமதே நம.. என்ற மந்திரத்தைச் சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும், வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும். அனுமனின் ஆரத்தியின்போது 5, 11, 50, 108 நெய் நிரப்பிய சிவப்புத் திரியைப் பயன்படுத்த வேண்டும். கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.

 

விரத பலன்கள்

ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் விரும்பிய பலன்களைப் பெற முடியும். காலை உணவாகப் பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதைப் பிறருக்கும் கொடுக்கலாம். பகல் உணவாகக் கிழங்கு, காய்கறிகளைச் சாப்பிடலாம்.

இரவில் ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள் சுலோகங்கள் சொல்லி வணங்க வேண்டும். சேது சமுத்திரக்கரையில் அமர்ந்து இராம தியானம் செய்து வரும் அனுமன், இராம நாமம் சொல்லும் பக்தர்கள் அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும், செல்வங்களையும் வாரி வழங்குவார். ஆஞ்சநேய விரதம் இருந்தால் பிரிந்து சென்ற கணவன், மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர். பகைமாறி வெற்றி உண்டாகும்.

தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம் பெறும். ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறுவகையான பலன்களும் நிரந்தரமாகக் கிடைக்கப் பெறுவர். அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.

இதற்குரிய மந்திரமான 'ஓம் நமோ பகவதே வாயு நந்தனாயகி' என்பதை மூன்று தடவை சொல்லிச் சந்தனத்தைக் கையால் எடுத்து நெற்றியில் அணிந்து, அரச மாளிகைக்குச் சென்றால் ராஜமரியாதை கிடைக்கும்.

வெளியில் செல்லும்போது ஆஞ்சநேயரின் மூல மந்திரத்தைத் தியானம் செய்துவிட்டுப் போனால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். 13 முடிச்சுள்ள அனுமன் விரத கயிற்றைக் கழுத்திலோ அல்லது வலது கையிலோ கட்டிக் கொண்டால் நமது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

 

வெற்றிலை மாலை ஏன்?

இராமனின் வெற்றிச் செய்தியை இலங்கையில் உள்ள அசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவியிடம் முதன் முதலில் சொன்னவர் ஆஞ்சநேயர்.

அந்த சந்தோஷ செய்தியை கூறிய ஆஞ்சநேயருக்குத்தான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என எண்ணினாள் சீதா. பரிசு கொடுக்க அப்போது தன்னிடம் எதுவும் இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்தாள். தன் அருகில் வெற்றிலைக் கொடி படர்ந்து இருந்தது.

அதில் இருந்து சில இலைகளை பறித்து அதை மாலையாக தொடுத்து இதை போட்டுக் கொள் என்று அனுமனிடம் கொடுத்தாள். இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : விரதம் இருப்பது எப்படி? - பலன்கள், வெற்றிலை மாலை ஏன்? [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : How to fast? - Benefits, why betel leaf? in Tamil [ spirituality ]



எழுது: சாமி | தேதி : 05-31-2023 01:18 pm