இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை!
ஆன்மீகப் பணியில்
எப்படி மனதை செலுத்துவது?
இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கவலை!
நோயின் கொடுமையால் உடல் நோவார்கள் சிலர்.
கடன் சுமையின் அழுத்தம் தாங்காமல் சிலர். கடன் சுமையின் அழுத்தம் தாங்காமல் கலங்குவர்
சிலர். தொழிலில் தோல்வி அடைந்து துவளுவார்கள் சிலர். படித்திருந்தும் வேலையின்றிப்
பரிதவிப்பவர்கள் சிலர். உறவின் பிரிவால் உளம் வருந்துவோர் சிலர்
மேற்சொன்னவைகளெல்லாம் நம் முற்பிறவித்
தவறுகளால் விளைந்திருப்பவை! இந்த விளைவுகளில் இருந்து விடுபட, மறை நூல்களில் சில மந்திரங்கள் இருக்கின்றன.
எந்தெந்த மந்திரத்தை ஓதினால், எந்தத்
துன்பத்திலிருந்து விடுபடலாம் என அறிந்து, அந்தந்த மந்திரங்களைக் கற்று ஓதினால் மக்கள் மனநலமும் உடல் நலமும்
பெறுவது உறுதி என்று ஆன்மீகப் பெரியவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்!
இருப்பினும், எளிய மக்கள் அவரவருக்குண்டான மந்திரங்களை
அறிவதும் அரிது. அறிந்தாலும் அவற்றை ஓதுவதற்கு உண்டான வழி முறைகளை கடைப்பிடிப்பதும்
கடினம்!
இதை அறிந்தே நமது ஆன்றோர்கள் அரிய மந்திரங்களை
யந்திர வடிவில் அமைத்து இறைவன் எழுந்தருளியிருக்கும் பீடத்தின் அடியிலோ அல்லது அருகிலோ
பிரதிஷ்டை செய்து வைத்தார்கள்!
இப்படிச் சிற்சில ஆலயங்களில் பிரதிஷ்டை
செய்யப்பட்டிருக்கும் யந்திரங்களில் உள்ள மந்திர சக்தியானது, எந்தத் தொல்லையைத் தொலையச் செய்யுமோ....
அந்த பலன் அந்த ஆலயத்து ஆண்டவனை ஆராதிப்பவருக்குக் கிடைக்கின்றது. அவரைச் சூழ்ந்திருக்கும்
பீடை விலகுகிறது. அத்தகைய ஆலயங்கள் பரிகாரத் தலங்களாக அறியப் படுகின்றன
எப்படி என்றால், திருமணம் கூடிவர திருமணஞ்சேரி, வாட்டும் கொடிய நோய் நீங்க ஸ்ரீ வைத்தீஸ்வரன்
கோயில், கர்ப்பம் நிலை பெற ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை
கருவறை எனக் குறிப்பிட்ட தோஷ நிவர்த்திகளுக்குக் குறிப்பிட்ட கோயில்கள் கொண்டாடப்படுகின்றன
குறிப்பிட்ட தோஷம் என்று இல்லாமல் அனைத்து
தோஷங்களையும் அகற்றவல்ல ஆலயங்கள் என்று தமிழ்நாட்டிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, சைனா போன்ற இடங்களிலும் அமைந்திருக்கின்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்கள் குறைகளைச் சொல்லி இறை வழிபாடுகளைச் செய்கிறார்கள்.
ஆலயத்து மூர்த்திகளைத் தொழுகிறார்கள்! தோஷங்களைத் தொலைத்து துயர்களில் இருந்து விடுபட்டு
அளப்பரிய அருள்பெற்று ஆனந்தத்துடன் வீடு திரும்புகிறார்கள்.
அப்படிப்பட்ட ஆலயங்களின் தொகுப்பே இச்சிறிய
கட்டுரை ஆகும்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம்
இந்த ஆன்மீக கட்டுரையைப் புரட்டிப் பாருங்கள். தெய்வ நம்பிக்கையும், பக்தி உணர்வும் கொண்ட மற்றவர்களுக்கும்
படிக்கக் ஆதரவு கொடுங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறையும். அந்த இறைசக்தி
உங்கள் இதயத்தில் நித்தியவாசம் கொள்ளும்! தீய சக்திகள் உங்கள் முன் நில்லாது ஓடி ஒழியும்!
என் மனமார்ந்த நன்றி!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : ஆன்மீகப் பணியில் எப்படி மனதை செலுத்துவது? - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : How to focus your mind on spiritual work? - Tips in Tamil [ spirituality ]