எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராமத்தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதைவிட, தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும்.
அனுமானின் அருளைப் பெறுவது எப்படி?
எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராமத்தியானத்தில் இருக்கும்
அனுமானுக்கு, தன்னைத்
துதிப்பதைவிட, தனது
இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும். எனவே. அனுமானைப் பூஜித்து எவ்வளவு தடவை
முடியுமோ, அவ்வளவு
தடவைகள். ஸ்ரீராம், ஜெயராம்,
ஜெயஜெயராம்!' என்ற மந்திரத்தை, குரு உபதேசம் பெற்று ஜெபிப்பது நல்லது. அனுமானை
வழிபடுபவர்கள், பூஜை
நேரத்திலும் இதர முக்கியப் புண்ணிய தினங்களிலும் கண்டிப்பாக,
பிரம்மச்சர்ய விரதம்-புலனடக்கம் அனுஷ்டிக்க வேண்டும். அசைவ
(புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள். இதுவும் கண்டிப்பான நிபந்தனை! வடைமாலை
வெற்றிலை மாலையை, காரிய
சித்திக்காக அனுமானுக்குச் சாற்றலாம்.
ஸ்ரீராமஜெயம் முடிந்தவரை எழுதலாம். அனுமானின் வாலுக்கு. 1 மண்டலம் (48 நாட்கள்) சந்தனக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டே வந்து
இறுதி நாளில், விசேஷ
பூஜை செய்து காரிய சித்தி அடையலாம். கண் மூடி தியானித்து 'ராம், ராம்" என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விடப்
பிரியமானது எதுவும் இல்லை. தியாகராஜ சுவாமிகள் 96 கோடிகள் இம்மந்திரத்தை ஜெபித்து, ஸ்ரீராமதரிசனம் பெற்றார்!
இராமநாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் வந்து அந்த நாமத்தைக் கேட்டு மகிழ்ந்து,
தாரக மந்திரத்தை உச்சரிப்பவர்களைக் காப்பார். அசாத்தியமான
செயலைக்கூட ஆஞ்சநேயர் மிக எளிதில் செய்து முடிப்பவர். இதனால் தான் அவர் கடலைத்
தாண்டிச்சென்று சீதையைக் கண்டுபிடித்தார்.
ஞானம், பலம்,
வீரம், பக்தி, சேவை, பிரம்மச்சர்யம் ஆகிய அனைத்திலுமே ஆஞ்சநேயர் உச்சரித்த
நிலையில் உள்ளார். இராமர் வைகுண்டத்துக்குச் சென்றபோதும் இந்த உலகில்
சிரஞ்சீவியாய் இருந்து நம்மைக் காத்து வருகிறார்.
ஆஞ்சநேயரைத் தரிசித்து வந்தால் கஷ்டங்கள் வராது. ஏழரைச்சனி
திசை நடப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தைத் தொட்டு வணங்கினால்,
சனியின் தாக்கம் குறையும். ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு
ஏற்றலாம். வடைமாலை அணிவிக்கலாம். செந்தூரக்காப்பு அணிவிக்கலாம். வெண்ணைக் காப்பு
சாத்தலாம்.
வெற்றிலை மாலை அணிவிக்கலாம். ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதி
ஸ்ரீரா நாம மாலை அணிவிக்கலாம். இவற்றால் நன்மைகள் பல கிடைக்கும். மாணவ-மாணவிகள்,
பெண்கள் ஆகியோர் ஸ்ரீராமஜெயம் அல்லது ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய
ராம என்று 108 முறை
எழுதி, அதை
மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு அணிவிப்பார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : அனுமானின் அருளைப் பெறுவது எப்படி? - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : How to get grace of assumption? - Notes in Tamil [ spirituality ]