படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெரும் தொழில்களை செய்து கொண்டு இருப்பவர்களை மும்மூர்த்திகள் என்று கூறுவோம். அதில் அழித்தல் தொழிலை செய்ய கூடியவராக திகழ்பவர் சிவபெருமான்.
சிவபெருமானின் அருளை
ருத்ராட்சத்தை வைத்து எப்படி பெறுவது?
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெரும் தொழில்களை செய்து கொண்டு இருப்பவர்களை மும்மூர்த்திகள் என்று கூறுவோம். அதில் அழித்தல் தொழிலை செய்ய கூடியவராக திகழ்பவர் சிவபெருமான்.
சிவபெருமானை
வழிபட்டால் நமக்கு மறுபிறவி என்பதே இருக்காது என்று கூறப்படுகிறது. நம்முடைய கர்ம
வினைகள் அனைத்தையும் நீக்கி மறுபிறவி அற்ற நிலையை ஏற்படுத்தும் தெய்வமாக சிவபெருமான்
திகழ்வதால் தான் அவரை வழிபடும் பக்தர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது
ஆனால் இதை தவறாக
புரிந்து கொண்டு சிவனை வழிபட்டால் கஷ்டம் ஏற்படும் என்று சிவபெருமானை வழிபடாமல்
தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். முழு மனதோடு எந்த தெய்வத்தை நாம் வழிபட்டாலும்
நம்முடைய கர்ம வினைகள் குறைவதற்காக நமக்கு கஷ்டங்கள் ஏற்பட்டுத்தான் தீரும். அந்த
கஷ்டத்தை சமாளித்து வெளியே வருவதற்குரிய ஆற்றலை தரக்கூடியவர்களாக தான் நாம்
வணங்கும் தெய்வங்கள் திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட தெய்வமான சிவபெருமானின் அருளை
ருத்ராட்சத்தை வைத்து எப்படி பெறுவது என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில்
நாம் பார்க்க போகிறோம்
ஒவ்வொரு தெய்வத்திற்கும்
விருப்பமான பொருட்கள் என்று இருக்கும். சில பொருட்களில் அந்த தெய்வம் நீக்கமற
நிறைந்திருப்பார். அந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் அந்த தெய்வத்தின் அருளும்
இருக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு நேர்மறை
ஆற்றல்களை வெளிப்படுத்தும் தன்மையும் இருக்கும். அந்த வகையில் சிவபெருமானுக்கு
உகந்த பொருளாக திகழ்வதுதான் ருத்ராட்சம்.
சிவபெருமானை வழிபடும்
ஒவ்வொரு நபரும் தங்களுடனோ அல்லது தங்கள் வீட்டிலோ ருத்ராட்சத்தை வைத்துக் கொள்வது
என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழும். இந்த ருத்ராட்சத்தில் ஒருமுகம், இரண்டு முகம், மூன்று முகம் என்று பல
முகங்கள் கொண்ட ருத்ராட்சம் இருக்கிறது. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு விதமான
பலன்கள் உள்ளது. அதேபோல் எந்தெந்த முகத்தை யார் அணிந்து கொள்ள வேண்டும் என்ற
விதிமுறைகளும் இருக்கிறது. நம்மை போல இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு
இருப்பவர்கள் அணிந்து கொள்வதற்கென்று தான் ஐந்து முக ருத்ராட்சம் இருக்கிறது. -
ஐந்து முக ருத்ராட்சத்தை
பலரும் தங்களுடைய கழுத்தில் அணிந்து இருப்பதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
இந்த ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்து நாம் வழிபாடும் செய்யலாம். ஆறுமுக
ருத்ராட்சம் கிடைத்தால் அது சிவபெருமானையும் முருகப்பெருமானையும் சேர்த்து
வழிபடுவதற்கு சமமான பலனை தரும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது ஐந்து முக ருத்ராட்சத்தை
எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.
இந்த ருத்ராட்சத்தை
கழுத்தில் தான் அணிந்திருக்க வேண்டும் என்று இல்லை. தங்களுடன் வைத்துக்கொள்ள
வேண்டும் என்பதுதான் முக்கியம். இந்த ருத்ராட்சத்தில் நேர்மறை ஆற்றல்கள் அதிகம்
இருப்பதால் எந்தவித எதிர்மறை ஆற்றல்களையும் அருகில் நெருங்க விடாது. இந்த
ருத்ராட்சத்தை நம்முடைய கீ செயினிலோ, பர்ஸிலோ அல்லது கழுத்திலோ அணிந்து கொள்ளலாம். தினமும்
காலையில் எழுந்து வழிபாடு செய்யும்பொழுது இந்த ஐந்து முக ருத்ராட்சத்தை வலது
கையில் இருக்கும் மோதிர விரல் மற்றும் கட்டை விரலை வைத்து பிடித்துக்கொண்டு
சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரமான
ஓம் நமசிவாய என்னும்
மந்திரத்தை 108 முறை மனதார உச்சரிக்க வேண்டும்
எண்ணிக்கை
தெரியாவிட்டாலும் குறிப்பிட்ட நேரம் வரை உச்சரிப்பது போல் உச்சரிக்கலாம். இப்படி
உச்சரித்துவிட்டு இந்த ருத்ராட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லும் பொழுது
இந்த ருத்ராட்சத்தின் நேர்மறை ஆற்றல்கள் மேலும் அதிகரித்து நாம் செல்லும்
காரியத்தில் நமக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக
பெற்றுத்தரும். இயன்றவர்கள் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது இந்த
ருத்ராட்சத்தை சிவபெருமானிடம் வைத்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும்
மிகவும் எளிமையான இந்த
வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்து ருத்ராட்சத்தின் முழு சக்தியையும் உணர்ந்து
வாழ்க்கையில் வெற்றியை பெறுவோம்
திருச்சிற்றம்பலம்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : சிவபெருமானின் அருளை ருத்ராட்சத்தை வைத்து எப்படி பெறுவது? - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : How to get Lord Shiva's grace by wearing Rudraksha? - Tips in Tamil [ ]