ஒரு நிறுவனம் மற்றும் பொருளுக்கான (product) தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
உங்கள் நிறுவனத்திற்க்கு Trade Mark ஐ
எப்படி பெறுவது?
ஒரு நிறுவனம் மற்றும் பொருளுக்கான (product) தேர்ந்தெடுக்கும்
பெயர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த
பிராண்ட் (brand) வாடிக்கையாளர்களுக்கு நம் நிறுவனத்தை
மட்டும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்.
வேறு யாரும் நம் நிறுவனம் மற்றும் பொருளின் பெயரை பயன்படுத்துவதை தடுக்க,
பெயர் கண்டிப்பாக பதிவு செய்யப்படவேண்டும். நம் நிறுவனத்திற்காக
ட்ரேட்மார்க் (Trademark) பெற்றுக்கொள்ளுதல் மிக அவசியம்.
இது குறித்த சரியான வழிமுறைகளை தொழில்முனைவோர் அறிந்திருத்தல் அவசியம் .
உங்களுடய நிறுவனம் அளிக்க கூடிய சேவை / பொருள்
எந்த பிரிவில் வருகிறது, ஏற்கனவே அந்த அப்பெயர் ட்ரேட்மார்க் (Trademark) பதிவுசெய்யப்பட்டுவிட்டதா
என்று Intellectual Property India இணையத்தளம் மூலம்
தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, நீங்கள்
விரும்பும் ட்ரேட்மார்க் இருக்கிறதா அல்லது வேறு எவரும் அதே பெயரை பதிவு செய்திருக்கிறார்களா
என பார்த்து விட்டு பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தை ட்ரேட்மார்க்
அலுவலகத்திற்கு அனுப்பவும். இப்போது அதனை அவர்கள் அப்டேட் (Update) செய்தார்களா என
அறியவும். யாரேனும் உங்கள் Trademark ஐ எதிர்க்கிறார்கள் (அவர்களும்
அதே பெயரை வைத்திருப்பார்கள்) என்றால் உங்களுக்கு அது குறித்து லெட்டர்
அனுப்புவார்கள். யாரும் எதிர்க்கவில்லை எனில் அதை அவர்கள் ட்ரேட்மார்க் நாளிதழில்
வெளியிடுவார்கள். குறைந்தது உங்கள் Trademark உங்களுடையது
என்று பதிவு செய்து சான்றிதழ் வழங்க ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள்
ஆகிவிடும். உங்கள் ட்ரேட்மார்க் விண்ணப்பித்தவுடன் நீங்கள் உங்கள் பிராண்டுடன் (brand)
TM என்று பயன்படுத்தி கொள்ளலாம். பதிவு செய்யப்பட்டு சான்றிதழ்
கிடைத்தவுடன் நீங்கள் உங்கள் பிராண்டுடன் R என பயன்படுத்தி
கொள்ளலாம். மாதம் ஒருமுறை Trademark குறித்த வேலை இருக்கும்
அதற்கு நிறைவேற்ற ஆலோசகர்கள் (consultant) இருக்கிறார்கள்.
ஒருமுறை பதிவு செய்ய அவர்கள் கட்டணம் கேட்பார்கள்.
அவர்களிடம் பெயர் மட்டும் சொன்னால் போதும் அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து
விடுவார்கள். மேலும் ஏதேனும் எதிர்ப்பு வரும்பட்சத்தில் அதற்க்கு நம் கன்சல்டன்ட்
மூலம் தக்க நடவடிக்கை எடுக்கலாம்.
வணிகம்: விபரங்கள் : உங்கள் நிறுவனத்திற்க்கு Trade Mark ஐ எப்படி பெறுவது? - குறிப்புகள் [ வணிகம் ] | Business: Details : How to get Trade Mark for your company? - Notes in Tamil [ Business ]