கடவுளை அறிவது எப்படி

பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், நீயும் கடவுள் தான்

[ ஆன்மிக பக்தி கதைகள் ]

How to Know God - Blissful form is God, and you are God” in Tamil

கடவுளை அறிவது எப்படி | How to Know God

ஒரு சமயம், ஆர்வமுள்ள பக்தர் ஒருவர், மகான் ஒருவரிடம், “கடவுள் எப்படி இருப்பார்? எங்கு இருக்கிறார்? அவரை எப்படி உணர முடியும்?” என்று விவேகமுள்ள கேள்விகள் கேட்டார். அதற்கு மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், நீயும் கடவுள் தான்” என்றார். அதற்கு பக்தர், “அப்படியானால் என்னால் ஏன் கடவுளை உணர முடியவில்லை?” என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக, “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார், ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார். வெவ்வேறு வழிகளில், மகான் கடவுள் தொடர்பான உண்மையை அந்த பக்தருக்கு புரிய வைக்க முயற்சித்தார். ஆனால் அந்த பக்தர் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார். பிறகு அந்த மகான் அவரிடம், ” ஹரித்வாருக்கு செல்லும்படியும், அங்கு ஓடும் கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது எனவும்” அந்த அபூர்வமான மீனுக்கு மனிதர்கள் போலவே பேசும் குரல் இருப்பதால் அந்த மீன் உன் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் என்றும் சொன்னார்.

கடவுளை அறிவது எப்படி?

 

ஒரு சமயம், ஆர்வமுள்ள பக்தர் ஒருவர், மகான் ஒருவரிடம், “கடவுள் எப்படி இருப்பார்? எங்கு இருக்கிறார்? அவரை எப்படி உணர முடியும்?” என்று விவேகமுள்ள கேள்விகள் கேட்டார்.

 

அதற்கு மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள்நீயும் கடவுள் தான்” என்றார்.

 

அதற்கு பக்தர், “அப்படியானால்  என்னால் ஏன் கடவுளை உணர முடியவில்லை?” என்று வினவினார்.

 

அதற்கு அந்த மகான் மிக அழகாக, “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார், ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை”  என்று பதிலளித்தார்.

 

வெவ்வேறு வழிகளில், மகான் கடவுள் தொடர்பான உண்மையை அந்த பக்தருக்கு புரிய வைக்க முயற்சித்தார்.

 

ஆனால் அந்த பக்தர் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார்.

 

பிறகு அந்த மகான் அவரிடம், ” ஹரித்வாருக்கு செல்லும்படியும்அங்கு ஓடும் கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக்  கொண்ட ஒரு மீன் இருக்கின்றது எனவும்” அந்த அபூர்வமான மீனுக்கு மனிதர்கள் போலவே பேசும் குரல்  இருப்பதால் அந்த மீன் உன் கேள்விகளுக்குப்  பதில் கொடுக்கும் என்றும் சொன்னார்.

 

உடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அந்த பக்தர் ஹரித்வாருக்குப் புறப்பட்டார்.

 

கங்கை நதிக்கரையில் அபூர்வமான மீனின் வருகைக்குக் காத்துக் கொண்டிருந்தார்.

 

அந்த சமயம்,  ’கடவுள் எங்கு இருக்கிறார், எப்படி அவரை உணர முடியும்?” என்ற கேள்விகளைக் மனதிற்குள் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மீன் அங்கு வந்து, ” எங்கிருந்து வந்திருக்கின்றாய்?” என்று கேட்டது.

 

அதற்கு அந்த பக்தர், “மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார்” என்று கூறினார்.

 

அதற்கு அந்த மீன், எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும்?” என்று கேட்டது.

 

அதற்கு பக்தர், “பைத்தியக்கார மீனே, வலது, இடது, மேலே, கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே” என்று பதிலளித்தார்.

 

உடனே மீன் கொஞ்சம் கடுமையாக, “நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார்” என்று மிக அழகாக கூறலாயிற்று.

 

அந்த பதிலைக் கேட்டுத்  திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார்,

 

அப்படியானால் கடவுளை உணர முடியாமல் நான் ஏன் இப்படித் தவிக்கின்றேன்?”எனக்கேட்டார்.

 

அதற்கு அந்த மீன், ” இதே கேள்வி தான் எனக்கும். தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பது தான்”.

 

பக்தனுக்கு மீனின் வடிவமைப்பு தெரிந்ததால், காரணம் புரிந்தது.

 

மீன் நேராக மேலே பார்த்துக் கொண்டு நீந்தினால், தண்ணீர் வாய்க்குள் செல்ல வாய்ப்பே இல்லை. தாகத்தைத் தணித்துக் கொள்ள தலை கீழாக நீந்த வேண்டும்.

 

அதன் வடிவமைப்பு வேறு மாதிரி இருந்திருந்தால், தண்ணீர் உடம்புக்குள் சுலபமாகச் சென்றாலும், மீன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்திருக்கும்.

 

அதனால் தலை கீழாக நீந்தச் சொல்லி பக்தர் மீனிடம் அறிவுரை சொன்னார்.

 

உடனே மீன், “என் தாகத்தைத் தணிக்க தலை கீழாக நான் நீந்துவதைப் போல , கடவுளை உணர நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றால் உனது ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும்.

 

உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களை நீ கடவுள் மேல் திருப்பினால் கடவுள் எங்கு இருக்கிறார், எப்படி அவரை உணர முடியும்?என்பதற்கான தீர்வு கிடைக்கும்”.என்றது

 

பக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார்.

 

கதை சொல்லும் நீதி:

 

கடவுளை அறிய வேண்டும் என்றால் நமது எண்ணங்களை அவர் மீது செலுத்த வேண்டும். எல்லாப் படைப்புகளிலும் அவரை உணர்ந்து வாழ வேண்டும்.

 

கடவுளை யார் அறியலாம்? யார் அணுகலாம்? யார் அணையலாம்? இதென்ன கேள்வி? யாரும் அறியலாம்; யாரும்அணுகலாம்; யாரும் அணையலாந்தானே? எனபதை திருமூலர் கீழ்கண்டவாறு கூறுகின்றார்.

 

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை

ஈரம் உடையவர் காண்பார் இணையடி

பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்

கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

 மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மிக பக்தி கதைகள் : கடவுளை அறிவது எப்படி - பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், நீயும் கடவுள் தான் [ ] | Spiritual devotional stories : How to Know God - Blissful form is God, and you are God” in Tamil [ ]