சர்க்கரை நோய் இருப்பதை தெரிந்து கொள்வது எப்படி?

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

How to know if you have diabetes? - Siddha medicine in Tamil

சர்க்கரை நோய் இருப்பதை தெரிந்து கொள்வது எப்படி? | How to know if you have diabetes?

சர்க்கரை நோய் ஒருவருக்கு ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ வருவதில்லை. தவறான உணவுப் பழக்கங்களும் அதிகமாக உணவுகளை உண்பதாலும் கணையம் சிறிது சிறிதாக பழுதடைய ஆரம்பிக்கிறது.

சர்க்கரை நோய் இருப்பதை தெரிந்து கொள்வது எப்படி?

சர்க்கரை நோய் ஒருவருக்கு ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ வருவதில்லை. தவறான உணவுப் பழக்கங்களும் அதிகமாக உணவுகளை உண்பதாலும் கணையம் சிறிது சிறிதாக பழுதடைய ஆரம்பிக்கிறது. இது மாதக் கணக்கில் அல்லது சிலருக்கு வருடக்கணக்கில் நடந்து கொண்டிருக்கும். மனித உடலில் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 80 முதல் 120 வரை இருக்க வேண்டும். தவறான உணவுப் பழக்கத்தால் கணையம் சிறிது பழுதடைய ஆரம்பித்து விடுகிறது. உடனே கணையத்தின் செயல்பாடு சிறிது குறைய ஆரம்பிக்கிறது. இப்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 160 வரை அதிகரிக்கும். மீண்டும் தவறான உணவுகளை உண்பதால் கணையம் மேலும் சற்று அதிகமாக பழுதடையும். அதன்பின் 180-200-240-280-300-400 பேன்று சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். 300 அல்லது 400 ஐ தாண்டும் போதுதான் (உடலில் ஏதாவது குறைபாட்டை உருவாக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாகியவுடன் உடல் நலத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படும். அப்போது தான் மருத்துவமனை செய்வீர்கள். பரிசோதித்து பார்த்தால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகமாக இருப்பது தெரிய வரும். சர்க்கரையை பரிசோதித்த நாளிலிருந்து தான் சர்க்கரை நோய் வந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்போ அல்லது சில மாதங்களுக்கு முன்போ உங்கள் கணையம் பழுதடைய ஆரம்பித்து விட்டது. முற்றிய நிலையில்தான் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே இன்றைய தவறான உணவுப் பழக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு கணையம் பழுதடைந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையை படித்தவர்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை சரிசெய்து சர்க்கரை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இது ஒரு கொடிய வியாதி. உஷார். ஆயுள் வரை நிம்மதியாக வாழவிடாது பணச்செலவும் அதிகமாகும்.

 

இயற்கை மருத்துவத்தால் இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்த முடியுமா?

நிச்சயம் நிறுத்த முடியும். ஆனால் பொறுமை வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சில நாட்களில் நிறுத்திவிடலாம். 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் சில நாட்கள் அதிகமாகும். 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் பொறுமையாக இரண்டு மாதங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை இயற்கை மருத்துவம் பார்க்க வேண்டும். ஏன் அதிக நாட்கள் தேவைப்படுகிறது என்றால் அவர்களுக்கு உடல் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாத பருவம். கணயத்தின் செயல்பாடும் குறைவாகவே இருக்கும். சிலருக்கு சிறிதும் இருக்காது. அவர்களுக்கு அதிக பசி இருந்தால் ஐந்து நாட்களுக்குள் பசியை தாங்கும் சக்தியை இயற்கை மருத்துவமும் நலம் தரும் உணவுகளும் கொடுத்து விடும். இளம் வயதிலும் சிறு வயதிலும் கணையம் பழுதடைந்து சர்க்கரை நோய் வந்து விட்டால் மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாது. ஆரம்பத்திலேயே இன்சுலின் ஊசிதான் போட வேண்டும். இவர்கள் காலையும், மாலையும் உணவை சாப்பிடும் முன் ஊசி போட்டுக் கொள்வார்கள். இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு இல்லாததால் ஊசி மருந்தின் மூலமாக தினமும் உணவுக்கு முன் அவர்கள் உடலில் இன்சுலின் செலுத்தப்படவேண்டும். இவர்கள் ஆயுள் உள்ளவரை இன்சுலின் ஊசிபோட்டுத்தான் ஆக வேண்டும். ஊசி போடாமல் வாழ முடியாது. சிறு வயது சர்க்கரை நோயாளிகள் இயற்கை மருத்துவம் பார்த்தால் அவர்கள் போடும் ஊசி மருந்தின் அளவை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்து பின் ஊசியை நிறுத்திவிடும் அளவுக்கு வந்துவிடும். பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக இருந்தால் அதன்பின் ஊசி தேவையில்லை. சர்க்கரையின் அளவு கூடினால் ஒரு ஊசி மட்டும் மருந்தின் அளவை குறைத்து சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் போட்டுத்தான் ஆக வேண்டும். அதன்பின்பு தான் அந்த ஒரு ஊசியையும் நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். சிறு வயதினர்களுக்கு மட்டும் அவசரப்படாமல் பொறுமையாக மருத்துவம் பார்க்க வேண்டும். இளம் வயதில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்காது. (சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்). இளம் வயது சர்க்கரை நேயாளிகளின் பெற்றோர்கள் அக்குழந்தைகளின் படிப்பில் தான் அக்கரை காட்டுகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒரு வருடம் படிப்பை நிறுத்தி மருத்துவம் பார்த்தால் நோயில்லாமல் வாழலாம். இளம் வயதில் சர்க்கரை நோய் வருவதற்கு யார் காரணம் என்றால் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் தான். நலம் தரும் உணவுகளை அக்குழந்தைகளுக்கு கொடுத்து வளர்த்திருந்தால் சிறு வயதிலே நோயாளியாக இருப்பார்களா? சிந்தித்து செயல்படுங்கள். குழந்தைகளை நோயாளிகளாக்குவது தான் பெற்றோர்களின் கடமையா?

 

செயலிழந்த கணையத்தை செயல்பட வைக்க முடியுமா?

கணையத்தை முழுமையாக செயல்பட வைக்க முடியாது. இதற்கு உதாரணம் எப்படியென்றால் ஒரு சர்க்கரை நோயாளிக்கு அவரின் கணையத்தின் செயல்பாடு 25 சதவிகிதம் தான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இயற்கை மருத்துவத்தால் அவரின் கணையத்தை 50 முதல் 60 சதவிகிதம் வரை செயல்பட வைக்கமுடியும். சிலருக்கு கணையம் அதிகம் பாதிக்கப்படாமலிருக்கும் போது சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தால் அவர்கள் தாமதிக்காமல் இயற்கை மருத்துவம் பார்த்தால் அவர்களின் கணையம் முழுமையாக செயல்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதிகம் பாதிப்படையும் முன் பாதுகாத்து கொள்ளுங்கள். வருமுன் காப்பவர்கள் அறிவாளிகள். 25 சதவிகிதம் செயல்பட்டுக் கொண்டிருந்த கணையத்தை சுமார் 60 சதவிகிதம் வரை இயற்கை மருத்துவம் எப்படி செயல்பட வைக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கணையத்தை பழுதடையச் செய்தது நீங்கள் சாப்பிட்ட தீய உணவுகளும், அதிகப்படியான உணவுகளும், நொறுக்குத் தீனியும் தான். இயற்கை மருந்துவத்திற்கு நீங்கள் வராவிட்டால் முன்பு சாப்பிட்ட உணவுகளைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். இதனால் கணையத்திற்கு மேலும் மேலும் தீங்குதான் உண்டாகும். இயற்கை மருத்துவர்கள் கொடுக்கும் பழங்களிலுள்ள இனிய பழச்சாறுகளும், தேங்காயிலுள்ள இயற்கை பாலும், முளைக் கட்டிய தானியங்களிலுள்ள இயற்கை பாலும் சென்று கணையத்தில் பட்டவுடன் கணையம் புத்துயிர் பெற ஆரம்பிக்கிறது. இயற்கை மருத்துவம் கொடுக்கும் சமையல் உணவும் கணையத்திற்கு அதிக வேலைப் பளுவை கொடுக்காது. மேலும் தினமும் ஏழுமுறை கொடுக்கும் பலவகையான மூலிகைகளின் சாறுகள் பட்டவுடன் கணையம் மேலும் சற்று புதிய சக்தியை பெறுகிறது. ஒரு உதாரணம் நம் காலில் முழுங்கால் வரை சாக்கடை ஒட்டிக் கொண்டால் நல்ல தண்ணீர் விட்டு கழுவினால் சாக்கடை ஓடிவிடும். காலில் ஒட்டி இருக்கும் சாக்கடையில் மேலும் ஊற்றி கழுவினால் கால் எப்படி சுத்தமாகும்? அதுபோல் தான் நீங்கள் தீய உணவுகளை சாப்பிட்டு உடலில் நோய்களை உருவாக்கி மீண்டும் தீய உணவுகளையே சாப்பிட்டால் நோய்கள் எப்படி குணமாகும்?

 

அதிக இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?

இனிப்புகள் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருவதில்லை. இன்று சிலருக்கு பழங்கள் கொடுத்தாலே வேண்டாம் எனக்கு சர்க்கரை நோய் வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். பழ வகைகள் அனைத்தும் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் தான் அதிகம் கிடைக்கும். இயற்கை இனிப்புகளான பனங்கருப்பட்டி – பனங்கற்கண்டு - நாட்டு சர்க்கரை இவைகளை பயன்படுத்தி நம் இல்லங்களில் தயார் செய்து சாப்பிடும் நல்ல உணவுகளும் உடலுக்கு எந்த தீங்கும் செய்யாது. ஆனால் வெள்ளைச்சீனியில் தயாரிக்கும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு பல தீமைகளைத் தான் உருவாக்கும். வெள்ளைச் சீனியை வெண்மையாக கொண்டுவர பலவகையான கெமிக்கல்கள் சேர்ப்பதால் அது உடலுக்கு பல தீமைகளை உண்டாக்குகிறது. வெள்ளைச் சீனியை வீட்டுக்குள் நுளைய விடாதீர்கள். உடலுக்குள்ளும் தான். வெள்ளைச் சீனி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெடும். பற்களும் பலகீனமடையும்.

 

உணவே மருந்து என்றால் என்ன?

இயற்கை மருத்துவத்தின் உண்மையான பணி என்னவென்றால். மருந்தால் குணமாகாத நோய்களை இயற்கை மருத்துவம் உணவால் குணமாக்குகிறது. அதன் விபரம். நாம் நலமாக வாழ பூமித்தாய் அவர்கள் பல வகையான மூலிகைகளை கொடுக்கிறார்கள். மூலிகைகள் என்றால் என்ன தெரியுமா? மூலிகைகள் அனைத்தும் கீரைகளே. மூலிகைகள் என்று பெயர் கொண்ட கீரை வகைகளாலும் நலம் தரும் இயற்கை உணவுகளாலும், உடல் ஆரோக்கியத்தை உருவாக்கும் சமைத்த சைவ உணவுகளாலும் தான் இயற்கை மருத்துவம் நோய்களை குணமாக்கி மருந்தில்லா மகிழ்ச்சியான வாழ்வை தருகிறது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வாழ்பவர்கள் ஆயுள்வரை சாப்பிட்டுக் கொண்டுதானே வாழ்கிறீர்கள்? மருந்து மாத்திரைகள் நோய்களிலிருந்து விடுதலை கொடுத்ததா? இதுவரை கொடுக்கவில்லை. மருந்துச் செலவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு தான் போகிறது. உடலில் நோய்களும் அதிகமாகிறது. இயற்கை மருத்துவம் சொல்லும் உணவே மருந்து என்று-சொல்லும் உண்மையை தெரிந்து கொண்டீர்களா?

 

பரிசோதனையின் போது சர்க்கரையின் அளவு ஏன் ஒவ்வொரு வேளையும் குறைவாகவும் அதிகமாகவும் இருக்கிறது?

சர்க்கரையின் அளவை கூட்டுவதும் குறைப்பதும் உணவு தான். இந்த உண்மை அதிக நோயாளிகளுக்கு தெரியாது ஒரு சர்க்கரை நோயாளி சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை சாப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் சென்ற பின் அவர் ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரையின் அளவு சுமார் 400 வரை இருக்கும். இன்னும் ஒரு மணி நேரம் சென்ற பின் பரிசோதனை செய்து பார்த்தால் 300க்குள் இருக்கும். இன்னும் ஒரு மணி நேரம் சென்றபின் பரிசோதனை செய்து பார்த்தால் 200க்குள் இருக்கும். சாப்பிட்ட உணவு நன்றாக சீரணமாகியவுடன் சுமார் ஐந்து மணி நேரம் சென்றபின் பரிசோதனை செய்து பார்த்தால் 120க்குள் இருக்கும்.

(குறிப்பு: கணையம் அதிகம் செயலிழந்த சில சர்க்கரை நோயாளிகளுக்கு வெறும் வயிற்றில் கமார் 280 வரை இருக்கும்).

அடுத்து உண்ணும் உணவு சர்க்கரையை கூட்டாத உணவாக இருந்தால் சர்க்கரையின் அளவு 120க்கு மேல் செல்லாது. சர்க்கரையை கூட்டும் தவறான உணவை சாப்பிட்டால் மீண்டும் 400க்கு அதிகரிக்கும். நாம் சாப்பிடும் உணவும், உணவு சீரணமாகிக் கொண்டிருக்கும் நேரமும் மாறுபடுவதால் தான் சர்க்கரையின் அளவை கூட்டியும் குறைத்தும் காட்டுகிறது. சிலர் பாதி உணவு சீரணமாகி இருக்கும் போதோ அல்லது உணவு முழுவதும் சீரணமாகி இருக்கும் போதோ பரிசோதனை செய்து பார்ப்பார்கள். இப்படி தவறான நேரங்களில் பரிசோதனை செய்து பார்க்கும் போது சர்க்கரையின் அளவு சரியாகவும் சற்று கூடுதலாகவும் இருக்கும். இப்படி இருக்கும்போது சிலர் தங்களுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். சிலர் பரிசோதனை செய்ய செல்லும் நாளில் மிகவும் குறைவாக உணவு சாப்பிட்டு செல்வார்கள். இதனால் சிலருக்கு சர்க்கரையின் அளவு சரியாக இருக்கும். சிலருக்கு 150-160 வரை இருக்கும். இவர்களும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். சர்க்கரையின் அளவை சரியாக தெரிந்துகொள்ள வேண்டுமானால் அரிசிச்சோறும் குழம்பும் உருளைக்கிழங்கும் சற்று அதிகமாக சாப்பிட்டுவிட்டு ஒன்றறை மணிநேரம் சென்ற பின் பரிசோதனை செய்து பாருங்கள். உண்மை தெரிந்துவிடும்.

 

மாட்டுப்பால் மனித உணவு இல்லை

மாட்டுப்பால் மாமிச வகைகள் உண்பதால் தான் இன்றைய மனித இனம் பல நோய்களால் துன்பப்படுகிறது. மாட்டுப்பால் கன்றுக்குட்டியின் உணவு. மாட்டின் ரத்தம் கலந்தது தான் மாட்டுப்பால். தினமும் மாட்டு ரத்தம் குடியாதீர்கள். மாட்டுப்பாலில் கலந்திருக்கும் மாட்டு ரத்தத்தை தினமும் குடித்துக்கொண்டு சைவம் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். பூமியில் விளையும் உணவுகள் தான் சைவ உணவுகள். மாட்டுப்பால் பூமியில் விழைகிறதா? கன்றையும் தாயையும் தனித்தனியாக கட்டிப்போட்டு சித்ரவதைபடுத்தி அந்தக் கொடுமையிலிருந்து கிடைப்பது தான் மாட்டுப்பால். எல்லா உயிர்களின் தாய்ப்பாலும் அவைகளின் குட்டிகளுக்கே, தாய்பாலை குட்டிகள் வாய் வைத்து சுவைத்து தான் குடிக்க வேண்டும். ஒரு உயிரின் தாய்பாலை இன்னொரு உயிர் குடிப்பதில்லை. கறப்பதில்லை. மனித இனத்தின் தாய்ப்பாலை வேறு உயிர்கள் வந்து குடிப்பதில்லை. கறப்பதும் இல்லை. பணத்திற்கு விற்கப்படுவதும் இல்லை. மற்ற பாலூட்டி உயிர்கள் அனைத்தும் உடல் வளர்ச்சி அடைந்தவுடன் தாய்ப்பாலை மறந்து இயற்கை தங்களுக்கு கொடுத்த உணவுகளை சாப்பிட்டு வாழ்கின்றன. மற்ற அனைத்து உயிர்களும் இயற்கை இட்ட கட்டளையை மீறாமல் அறிவுடன் வாழ்கின்றன. அவைகள் அறிவுடன் வாழ்வதால் தான் நோயில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கின்றன. எந்த உயிரின் தாய்பாலும் கரக்கப்படக்கூடாது. இது இயற்கையின் சட்டம். இயற்கையின் சட்டத்தை மீறும் மனித இனம் மட்டும் பல நோய்கள் மாட்டுப்பாலை கறந்து குடித்து வயிற்றை நிரப்புகிறது. இதனால் விற்று பணம் சம்பாதிக்கிறது. இதனால் பாவங்களும் சேர்கிறது. மற்றொரு உயிரின் பால்சுரக்கும் மார்பகத்தில் கை வைக்க மனித இனத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. இந்த கொடுஞ்செயலை வேறு எந்த உயிரினமாவது செய்கிறதா? நாம் நம் தாய்மைக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோம். அதுபோல் மற்ற உயிர்களையும் நினைக்க வேண்டாமா? மாட்டுப்பால் சாப்பிடாமல் வாழ முடியாது என்று சொல்லும் மனிதக் கூட்டமே. நீங்கள் மாட்டு வயிற்றில் பிறந்திருந்தால் தாராளமாக மாட்டுப்பால் குடிக்கலாம். நான்கு இறைப்பைகள் கொண்ட ஒரு பெரிய விலங்கின் பாலை ஒரு இறப்பை உள்ள மனித இனம் கறந்து குடிப்பது ஒரு முறையற்ற செயல். கன்றுக்குட்டியின் உணவை பறிக்காதீர்கள். கன்றையும் தாயையும் பிரித்து கட்டிப் போடுவது கொடுமையான காரியமாகும். பிறந்தது முதல் சாகும் வரை கட்டிப்போட்ட நிலையில் பல கொடுமைகளை அனுபவிக்கும் உயிர் மாடுதான். மாமிச வகைகளையும் சாப்பிட மனிதர்களுக்கு தகுதி சிறிதும் இல்லை. மனிதர்களுக்கு கோரைப்பற்கள் உண்டா? கூர்மையான நகங்கள் உண்டா? விலங்குகளை கவ்விப் பிடிக்க அகலமான வாய் உண்டா? ஆயுதங்களின் உதவி இல்லாமல் விலங்குகளை விரட்டிப்பிடித்து கடித்து கொன்று தின்ன முடியுமா? பச்சை மாமிசத்தை விழுங்கமுடியுமா?' பச்சை மாமிசத்தை ஜீரணிக்கும் அளவுக்கு உடலில் அதிக உஷ்ணம் இருக்கிறதா? அவைகள் மரணம் வரை பச்சை மாமிசத்தை மட்டும் சாப்பிட்டு வாழ்கிறதே மனித இனத்தால் அப்படி வாழ முடியுமா? இன்னும் எண்ண முடியாத அளவுக்கு பல கேள்விகள் இருக்கிறது. தேங்காயில் கொழுப்பு இருக்கிறது. அது இயற்கை கொழுப்பு. தேங்காயிலுள்ள இயற்கை கொழுப்பானது நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும். தேங்காயைப் போல் உயர்ந்த வகை உணவு வேறு எதுவுமே இல்லை. அதனால் தான் தேங்காய் உணவுகளின் அரசன் என்று இயற்கை மருத்துவம் சொல்கிறது. தேங்காயிலுள்ள இயற்கை கொழுப்பை நம் உடலில் உள்ள உஷ்ணம் இழக்கச் செய்து அதிலுள்ள தேவையான சத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ளவைகளை கழிவுகளாக்கி மலமாக வெளியேற்றிவிடும். தேங்காயிலுள்ள உயிர்ச் சத்துக்கள் அனைத்தும் உடலிலுள்ள பழைய கெட்ட ரத்தத்தை சுத்தம் செய்து புதிய ரத்தத்தை தேவையான அளவு உற்பத்தி செய்யும். நல்ல ரத்தம் ஓடும் உடலில் நோய்கள் இருக்காது, எறும்பு, அணில், சிட்டுக்குருவி இவைகளைப்போல் சுறு சுறுப்பாக வாழச்செய்யும். கடலின் மத்தியில் சில தீவுகள் இருக்கிறது. அங்கே வாழும் மக்களுக்கு தேங்காயை தவிர வேறு உணவுகளே இல்லை. அவர்கள் 100 வயதுக்கு மேலும் மருத்துவ உதவியை நாடாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். இது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு: ஒரு மனிதன் தினமும் இரண்டு முதல் மூன்று தேங்காய் வரை சாப்பிடலாம். தேங்காய் முக்கால் விளைச்சலுக்குள் இருக்க வேண்டும். முற்றிய தேங்காயில் எண்ணெய் சத்து அதிகமாக உற்பத்தியாகி விடும். முக்கால் விளைச்சலுக்குள் உள்ள தேங்காய் கிடைக்காத நாட்களில் முற்றிய தேங்காய் சாப்பிடலாம். தொடர்ச்சியாக தினமும் முற்றிய தேங்காய் சாப்பிட வேண்டாம். உயிர் காக்கும் உணவுக் கடவுளாகிய தேங்காயை யாரும் குற்றம் சொல்லாதீர்கள். இயற்கை மருத்துவம் பார்ப்பவர்களுக்கு தினமும் மூன்று வேளைகளும் அவர்கள் மனம் விரும்பி சாப்பிடும் அளவுக்கு மற்ற உணவுகளுடன் சேர்த்து தேங்காய் கொடுத்து 30 நாட்களுக்குப்பின் இயற்கை மருத்துவம் பார்த்த சர்க்கரை நோயாளிகளின் உடல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகி சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பார்கள். சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சரியான அளவு இருக்கும். அதன் பின் அவர்கள் இயற்கை மருத்துவம் சொன்ன உணவுப் பழக்கத்தின் படி வாழ்ந்தால் அவர்கள் ஆயுள் உள்ள வரை மருத்துவத்திற்கென்று ஒரு ரூபாய் கூட பணம் செலவழிக்க வேண்டாம். இயற்கை மருத்துவம் பார்த்த உடல் பருமனானவர்களின் ரத்தத்தின் கொழுப்பின் அளவை பரிசோதித்து பார்த்தால் பாதிக்கும் மேல் அல்லது முக்கால் பாகத்திற்கும் மேல் குறைந்திருக்கும். உடல் பாதிப்புகளும் பலகீனங்களும் அதிகப்படியான அளவில் குணமாகியிருக்கும் மேலும் ஒரிரு மாதங்கள் இயற்கை மருத்துவம் சொல்லும் உணவுப் பழக்கத்தின் படி வாழ்ந்தால் முழுமையான குணம் பெறலாம். நூறு கிலோ வரை உள்ள உடல் பருமனை அவர்கள் பல வருடங்களாக உருவாக்கியிருக்கிறார்கள். அதை சரியான அளவுக்கு கொண்டு வர சில மாதங்கள் ஆகத்தான் செய்யும். தேங்காய் சாப்பிடச் சொல்லும் இயற்கை மருத்துவம் செய்யும் சாதனையை தேங்காய் சாப்பிடாதீர்கள் என்று சொல்லும் மற்ற மருத்துவங்களால் செய்து காட்ட முடியுமா? உணவு தரும் மரங்களில் உயர்ந்தது தென்னை. இன்றைய மனிதர்களை விட அதிககாலம் வாழ்வதும் தென்னை, தென்னை நம் அன்னை. இன்றைய மனித இளத்தின் தாய் தன் பிள்ளையை அவள் வயிற்றுக்குள் வளரும் போதும் பிறந்த பின்பும் தீய உணவுகளையே கொடுத்து நோயாளியாக்கி பலகீனமாக்கி வளர்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் தென்னை என்னும் நம் அன்னை வழங்கும் உணவானது மிகமிக உயர்ந்த உணவு தேங்காயைப் போய் உயர்ந்த உணவு இப்பூமியில் வேறு எதுவுமே இல்லை, தேங்காய் அதிக நார்ச்சத்து உள்ள உணவாகும். அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்று அன்று ஒரு கவிஞர் சொன்னார். இன்று நான் சொல்கிறேன் தென்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை. ஆகவே தேங்காயை உண்ணாதவர்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை நிச்சயம் இழப்பார்கள். தினமும் தேங்காய் உண்ணுங்கள். உங்கள் ஆயுள்வரை இளமையோடு வாழ்வீர்கள். தேங்காயின் உயர் குணங்களைப் பற்றி இருபது பக்கங்கள் வரை எழுதலாம். இவ்வளவு விளக்கம் போதும். பூமிக்கு அடியில் விளைவதை சர்க்கரை நோயாளிகள் உண்ணாதீர்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பூமிக்குள் விளையும் உணவுகளில் மிக உயர்ந்த உணவு நிலக்கடலை. நிலக்கடலையை பச்சையாக உண்ண வேண்டும். வறுக்காத நிலக்கடலைப் பருப்பு பாக்கெட்டாக கடைகளில் இருக்கும். அதை வாங்கி ஆறுமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு சாப்பிடலாம். பச்சை நிலக்கடலையிலுள்ள பருப்பும் அதிக நார்ச்சத்தும் இயற்கை பால் சத்தும் உள்ளது. இது உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும். வறுத்த நிலக்கடலைப்பருப்பு சாப்பிட்டால் உடலுக்கு தீமை தரும். அவித்த கடலை சாப்பிட்டால் பயன் இல்லை. முதுகெலும்பை நிமிர வைப்பது கீரை வகைகள். அதிக நார்ச்சத்துள்ள கீரைகள் மூன்று வகைகள் உண்டு. 1) அகத்திக்கீரை 2) முறுங்கைக்கீரை 3) கறிவேப்பிலை. அகத்திக்கீரையையும் முறுங்கைகீரையையும் நாம் சமைத்துத் தான் சாப்பிட முடியும். கறிவேப்பிலையை மட்டும் நாம் பச்சையாக சாப்பிடலாம். பச்சை கறிவேப்பிலையை கத்தரியால் பொடிப்பொடியாக வெட்டி வைத்துக் கொண்டு சமைத்த உணவுகளை சாப்பிடும் போது உணவுடன் கலந்து சாப்பிட்டால் கறிவேப்பிலையின் அனைத்து மருத்துவ குணங்களையும் முழுமையாக பெறலாம். தேங்காய் சட்னி மற்றும் பல சட்னிகள் தயார் செய்யும் போது பச்சையாகவே சற்று அதிகம் கலந்து தயார் செய்யுங்கள். கண்களுக்கு ஒளிதரும் கடவுள் கறிவேப்பிலை. கண்களுக்கு மட்டுமல்ல உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சக்தியை கொடுப்பது கறிவேப்பிலை. – கறிவேப்பிலையை சிறுதுளியும் வீணாக்காமல் பச்சையாக சாப்பிட்டு அதிக பயன் பெறுங்கள் மற்றும் எல்லா கீரைகளும் சாப்பிடலாம். பூக்களின் அரசன் வாழைப்பூ. இது ஆறு சுவைகள் கொண்ட அதிக நார்ச்சத்துள்ள உயர்ந்தவகை பூவாகும். வாழைப்பூவை குழம்பாகவும் கூட்டாகவும் சமைத்து சாப்பிடலாம். பச்சையாக ஐந்து அல்லது பத்து இதழ்கள் மென்று சாப்பிட்டால் அதிக நன்மைகள் அடையலாம். வாழைக்காயை தோலுடன் கூட்டு செய்து சாப்பிடுங்கள். காய்களின் அரசன் பாகற்காய். முக்கால் அடி நீளமுள்ள பெரிய பாகற்காவை கூட்டாகவும் குழம்பாகவும் சமைத்து சாப்பிடலாம். சிறிய பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு சிறிதும் உதவாது. இது நாவிற்கு சுவை தரும் பயனில்லாத நாகரீக பாகற்காய். கிழங்குகளின் அரசன் கருணைக்கிழங்கு. இக்கிழங்கின் பெயரே கருணை உள்ளம் கொண்ட பெயர். மற்ற கிழங்கு வகைகளை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லா வகை கிழங்குகளும் நம் உடலுக்கு ஊட்டச் சத்துக்கள் தருபவைகள்தான் சர்க்கரை நோயாளிகளும் எல்லா கிழங்குவகைகளையும் சாப்பிடலாம். ஆனால் குறைவாக சாப்பிட வேண்டும். பயறுகளின் அரசன் உளுந்தம் பயர். இதை முளைக்கட்டி சாப்பிட்டால் உடலின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு பயறுகளை சாப்பிடலாம். வற்றல்களின் அரசன் கண்ட வற்றல். இது ஆறு சுவைகள் கொண்ட நார்ச்சத்துள்ள ஒரு உயர்தர உணவாகும். இதை எண்ணெயில், வறுத்து தான் எல்லோரும் சாப்பிடுவார்கள். அது தவறாகும். உப்பு கலவாத சுண்ட வற்றல் கால்கிலோ வாங்குங்கள். சுத்தம் செய்து வெயிலில் நன்றாக காய வைத்து ஒரு கண்ணாடி டப்பாவுக்குள் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். சமையல் உணவு சாப்பிடும் போது ஐந்து அல்லது பத்து வற்றல் வரை மென்று சாப்பிடுங்கள். இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும். கண்ணாடி டப்பாவில் காற்று போகாமல் பூட்டி வைத்து பயன்படுத்தினால் மாதக் கணக்கில் மொறுமொறு வென்று இருக்கும். சில தானியங்களின் அரசன் கேப்பை (கேள்வரகு) மற்ற சிறு தானியங்கள் சில மாதங்களில் வண்டுகள் புளுக்கள் உருவாகி கெட்டுப் போகும். ஆனால் கேப்பை வருடக் கணக்கில் இருந்தாலும் வண்டுகள் புளுக்கள் உருவாகாது. நிறம்தான் கருப்பாக மாறும். அதிக நார்ச்சத்துள்ள தானியம் மக்காச்சோளம் இதை பச்சை கதிராக இருக்கும் போது மென்று சாப்பிடலாம். காய்ந்த மக்காச்சோளத்தை பனிரெண்டுமணிநேரம் தண்ணீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். பனிரெண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்ததை உப்பு போடாமல்வேக வைத்தும் மென்று சாப்பிடலாம். நன்றாக வேக வைத்த மக்காசோளத்தை வெயிலில் காய வைத்து மிஷினில் பொடியான குறுணையாக உடைத்து உப்புமா செய்தும் சாப்பிடலாம். இந்த உப்புமா மென்று சாப்பிட சுவையாக இருக்கும். வேகவைக்காத மக்காச்சோழத்தை மாவாக அரைத்து பல வகையான உணவுகள் தயார் செய்து சாப்பிடலாம். உடலுக்கு வலிமை தரும் சிறந்த உணவு மக்காச்சோளம். கம்பு – கேப்பை - சோளம் -கோதுமை-மக்காச்சோளம் போன்ற தானியங்கள் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு நன்கு வலிமை தரும். இந்த தானிய கதிர்கள் விளைந்த பின்பு தரையில் சாயாமல் நிமிந்து நிற்கும். இப்படிப்பட்ட சக்திவாய்ந்த தானியங்களை தினமும் சாப்பிடு பவர்கள் உடல் பலத்துடன் என்றும் நிமிர்ந்து நிற்பார்கள். விளைந்தநெய் பயில் நிமிர்ந்து நிற்க முடியாமல் தரையில் சாய்ந்து விடும். அதனால்தான் இன்று அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் நிமிர்ந்து நிக்க முடியாமல் சாய்ந்து கிடக்கிறார்கள் காணப் பெயரை தண்ணீரீல் ஊற வைத்தும் அவித்தும் சாப்பிடலாம்.

பழங்களின் அரசன் பப்பாளி வீட்டுத் தோட்டங்களிலும் காலி இடங்களிலும் விவசாய நிலங்களிலும் விளையும் தன்மை கொண்ட இதற்கு செயற்கை உரமும் நச்சு மருந்துகளும் தேவையில்லை. அதிக நீர்ச்சத்தும் பல மருத்துவக் குணங்களும் கொண்டது பப்பாளி. இது எல்லா வயதினரும் சாப்பிட வேண்டியசிறந்த பழமாகும். நாவல் பழத்தை கொட்டையுடன் மென்று ஐந்து பழங்கள் சாப்பிட்டாலும் போதும், கொட்டையில் தான் ஆறு சுவைகளும் அதிக நார்ச்சத்தும் இருக்கிறது. வெள்ளரிக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும். நம் சுண்டுவிரல் அளவு இருக்கும் வெள்ளரிப்பிஞ்சைத் தான் அதிக மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். அதில் மருத்துவக் குணம் மிக மிக குறைவு. நன்றாக விழைந்த பெரிய வெள்ளரிக்காயில்தான் மருத்துவக் குணம் அதிகம் இருக்கிறது. தோலில் நார்ச்சத்தும் சதைப்பகுதியில் அதிக நீர்ச்சத்தும் விதைகளில் பல மருத்துவக் குணங்களும் இருக்கிறது. பெரிய வெள்ளரிக்காய் இரண்டு சாப்பிட்டால் ஒரு வேளை உணவுக்கு சரியாக இருக்கும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும் உயர்ந்த வகை இயற்கை உணவு. வெள்ளரிக் காயில் உப்பும் மிளகாய் தூளும் கலந்து சாப்பிட்டால் மருத்துவக் குணம் அழிந்து விடும். இனி பெரிய வெள்ளரிக் காயை வாங்கி சாப்பிட்டுப் பயன் அடையுங்கள். விலையும் மலிவாக இருக்கும். வெள்ளரிப்பழம் சாப்பிடும் போது தோலையும் விதைகளையும் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.

அரிசியில் சிறந்தது பச்சரிசி, இது வேகவைக்காமல் இருப்பதால் வேகவைத்த புழுங்கல் அரிசியைவிட பச்சரிசி மிகவும் நல்லது. பச்சரிசியை சமையல் செய்து சாப்பிடுங்கள். உடலுக்கு எந்த தீங்கும் செய்யாது. புழுங்கல் அரிசி வேண்டாம். தேங்காய் பால் அரைலிட்டர் திக்காக எடுங்கள். அதில் அரை எலுமிச்சம்பழத்தை பிளிந்து சாரை மட்டும் விடுங்கள். சிறிது உப்பு போடுங்கள். தேவையென்றால் கறிவேப்பிலையை நூல்போல் பொடியாக வெட்டிப் போடுங்கம். நன்றாக கலக்குங்கள். இயற்கை மோர் தயார்: அரிசி சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட கவையாக இருக்கும். தேவையென்றால் பச்சை நாட்டு வெங்காயம் வற்றல் சேர்த்து சாப்பிடலாம். ஒரு லிட்டர் தேங்காய் பாலுக்கு ஒரு எறுமிச்சை பிரியவும். எலுமிச்சை சாறு அதிகம் விட்டால் இயற்கை மோரின் கவை சற்று குறையும். ஒருமுறை தயார் செய்து சுவையை பார்த்து மறுமுறை சரிப்படுத்தி கொள்வீர்கள். உடளே தயார் செய்து உடனே சாப்பிட்டு விடுங்கள். சாதத்தில் இயற்கை மோர் ஊற்றும் போது கலக்கி ஊற்றுங்கள். உணவுச் செலவு மிகவும் குறைவு பயன்கள் அதிகம். மாட்டுப்பால் மோர் உடலுக்கு பல தீமைகள் செய்பும் இயற்கை அன்னையின் இயற்கை மோர் உடலுக்கு பல நன்மைகள் செய்யும் சாம்பார், ரசம் கூட்டு தயார் செய்ய 30 ரூபாய் வரை செலவாகும். ஒரு தேங்காட் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு தயார். எது நமக்கு லாபம் என்று நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

சட்னிகளின் அரசன் தேங்காய் சட்னி இதை இயற்கை தேங்காய் சட்னி என்றுதான் சொல்ல வேண்டும். தயாரிக்கும் முறை தேங்காய் ஒன்று காய்ந்த மிளகாய் வற்றல் இரண்டு வெள்ளைப் பூண்டு இதழ்கள் நான்கு, கறிவேப்பிலை ஐந்து இதழ்கள். இவைகளை கல்லூாலில் போட்டு ஆட்டலாம். உரல் இல்லாதவர்கள் மிக்சியில் போட்டு அரைக்கலாம். அல்லது கிரைண்டரில் அரைக்கணம் மிச்சியில் அரைப்பதில் கவை குறையும். அரைத்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பொரிகடலை (பொட்டுக்கடலை) சேர்க்கக்கூடாது. தாளிதம் செய்யக்கூடாது. சூடுபண்ணக் கூடாது. இதில் வேகவைக்காத பொருள்கள் சேர்க்காததால் இதற்கு பெயர் இயற்கை சட்னி இந்த உயிருள்ள இயற்கை சட்னியை அரிசிச் சாதம் முதல் அனைத்து சமையல் உணவுகளிலும் அதிகமாக ஊற்றி சாப்பிடலாம். அதிக சுவையாக இருக்கும். செலவு குறைவு பயன்கள் அதிகம். திளமும், இயற்கை போகும். இயற்கை தேங்காய் சட்னியும் தயார் செய்து சாப்பிட்டால் என்றும் ஆரோக்கியமாக வாழலாம்.

லட்டுகளின் அரசன் இயற்கை எள் வட்டு வறுக்காத கல் நீக்கப்பட்ட என் கால்கிலோ. இதை வெயிலில் காய வைத்து மிக்சியில் தூள் செய்யுங்கள். இதில் பனங்கருப்பட்டி 100 கிராம் தூள் செய்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையில் தண்ணீர் பட்டும் படாமலும் தெளித்து நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள் தேவையென்றால் சுக்குதூள் சேர்த்துக் கொள்ளலாம். இதுதான் இயற்கை அன்னை வழங்கும் இயற்கை வட்டு. இதை உணவுடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இடைத் தீனியாக தின்னக்கூடாது. அவல்களின் அரசன் சிகப்பு அவல்: தேவையான அளவு சிகப்பு அவல் எடுத்து ஒரு முறை தண்ணீர் விட்டு அசி மீண்டும் தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வையுங்கள். பின் தண்ணீரை சுத்தமாக வடித்து விடுங்கள். அவல் எந்த அளவு இருக்கிறதோ அதே அளவு தேங்காய்ப்பூ போடுங்கள். நாட்டுச்சர்க்கரை சிறிது கலந்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் மட்டும் இனிப்பை சற்று குறைவாக கலந்து கொள்ளுங்கள். இயற்கை மணமுள்ள இனிப்பு அவல் தயார். கார அவல் தேவையென்றால் நனைந்த அவல்-தேங்காய்ப்பூ-சிறிது மிளகுத்தூள் சிறிது சீரகத்தூள்-சிறிது உப்பு-கத்திரியால் பொடிப்பொடியாக பெட்டிய கறிவேப்பிலை சற்று அதிகமாகவே போடுங்கள். இவைகளை நன்றாக கலந்துவிடுங்கள். கார அவல் தயார். கார அவல் சாப்பிடும்போது இனிப்பு அவல் சாப்பிடும்போதும் சிறிது தேங்காய், முளைக்கட்டிய தானியங்கள் சிறிது, மலிவாக கிடைக்கும் பழம் அல்லது பச்சையாக சாப்பிடும் காய் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த உணவு உடலை மணக்கச் செய்யும். இந்த உணவை தயார் செய்ய நெருப்பின் உதவி தேவையில்லை. உணவுச் செலவும் குறைவு. வேலையும் குறைவு. ஆனால் ஆரோக்கியம் மட்டும் அதிகம். மிஷினில் அரைத்த பச்சரிசி மாவு ஒரு கப். துருவிய தேங்காய்ப்பூ ஒரு கப், இதில் தண்ணீர்விட்டு உப்பு போடாமல் கெட்டியாக பிசைந்து கோலி அளவு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் இட்லியைப் போல் ஆவியில் வேக வைத்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும். இத்துடன் தேங்காய் முளைக்கட்டிய தானியங்கள் - பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். கோதுமை மாவிலும் இப்படி தயார் செய்யலாம். பல தானியங்கள் கயந்து அரைத்து வைத்திருக்கும் மாவிலும் தயார் செய்யலாம். இந்த உணவுகளும் உடலை மணக்கச் செய்யும் - ஏன் தெரியுமா ? இதில் உப்பு, புளி, காரம், எண்ணெய் சேரவில்லை. 


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சித்தா மருத்துவம் : சர்க்கரை நோய் இருப்பதை தெரிந்து கொள்வது எப்படி? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : How to know if you have diabetes? - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்