விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
காலத்தின் அருமையை அறிவது
எப்படி?.
விஜயபுரி என்ற நாட்டை
விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள்
இடம் பெற்றிருந்தனர்.
அரசன் ஒரு நாள் அந்த
அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு
வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான்.
இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும்
மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும்
அனுபவிக்க முடியாது” என்றான்.
இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும்
மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார்.
மூன்றாவது அறிஞர்
எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை
இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.
நான்காவது அறிஞர், “அரசே, நம்ம பூமிக்கு
வேண்டியஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில்
உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது” என்றான்.
ஐந்தாவது அறிஞர், “வாழ்க்கையில் அனைத்தும்
இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான்
மிக மதிப்பு வாய்ந்தது” என்றார்.
இறுதியாக ஓர் அறிஞர்
எழுந்து, “அரசே, காலம் தான் அனைத்தையும்
விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன
பயன்?.
அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது?. பொறுமையாக இருக்க ஏது
அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம்?. அன்பு காட்டை ஏது
வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள்
காலம்தான்”.
ஆகவே, அதனை வீணாக்காமல்
நம்முடைய ஆக்க பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள
முடியுமோ? அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
அரசர் அந்த ஆறாவது
அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார்.
காலத்தின் அருமையை
குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில்
எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார்.
அது மட்டுமல்ல அவரை தனது
அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார். மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலை
பாராட்டினார்.
நீதி: காலம்தான் இவ்வுலகிலே
விலைமதிக்க முடியாத பொருள். காலத்தை தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற
முடியாது. எனவே இளமையிலே நன்கு கற்க வேண்டும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
நீதிக் கதைகள் : காலத்தின் அருமையை அறிவது எப்படி?. - குறிப்புகள் [ ] | நீதிக் கதைகள் : How to know the beauty of time? - Tips in Tamil [ ]