மனிதனின் உண்மையான இயல்பை அறிவது எப்படி

குறிப்புகள்

[ ஒரு குட்டிக்கதை ]

How to know the true nature of man - Notes in Tamil

மனிதனின் உண்மையான இயல்பை அறிவது எப்படி | How to know the true nature of man

மலையடிவாரத்தில் ஒரு ஜென் குரு இருந்தார். அவருக்கு ஏராளமான மாணவர்கள் இருந்தார்கள்‌. ஒரு நாள் அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு குருவே எனக்கு ஒரு குழப்பம் என்று ஆரம்பித்தார் மாணவர். என்ன என்று குரு கேட்க... நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன் கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையும் தருகின்றன. அது அனுபவபூர்வமாக உணருகிறேன். ༺🌷༻ மகிழ்ச்சி மகிழ்ச்சி இதில் என்ன குழப்பம் என்று குரு கேட்க... நான் தியானத்தில் இல்லாத வேலைகளில் முழுமையான நல்லவனாக இருக்கின்றேனா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில மகரயாழ் நாள்களில் நானும் ஒன்று இரண்டு தவறுகளை செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படி செய்வது சரிதானா இதை யோசிக்கும் போது எனது உள்ளம் மிகுந்த சோகமடைகிறது. ༺🌷༻ குருநாதர் சிரித்தார் நீ தியானமும் செய்கிறாய் தவறுகளும் செய்கிறாய் அப்படித்தானே என்று குரு கேட்கிறார். ஆமாம் குருவே அது தவறில்லையா என்று சீடர் கேட்கிறார்.

மனிதனின் உண்மையான இயல்பை அறிவது எப்படி?

 

மலையடிவாரத்தில் ஒரு ஜென் குரு இருந்தார். அவருக்கு ஏராளமான மாணவர்கள் இருந்தார்கள்‌. ஒரு நாள் அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

 

பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு குருவே எனக்கு ஒரு குழப்பம் என்று ஆரம்பித்தார் மாணவர். என்ன என்று குரு கேட்க... நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன் கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையும் தருகின்றன. அது அனுபவபூர்வமாக உணருகிறேன்.

 🌷

மகிழ்ச்சி மகிழ்ச்சி இதில் என்ன குழப்பம் என்று குரு கேட்க... நான் தியானத்தில் இல்லாத வேலைகளில் முழுமையான நல்லவனாக இருக்கின்றேனா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில மகரயாழ் நாள்களில் நானும் ஒன்று இரண்டு தவறுகளை செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படி செய்வது சரிதானா இதை யோசிக்கும் போது எனது உள்ளம் மிகுந்த சோகமடைகிறது.

🌷

குருநாதர் சிரித்தார் நீ தியானமும் செய்கிறாய் தவறுகளும் செய்கிறாய் அப்படித்தானே என்று குரு கேட்கிறார்.

 

ஆமாம் குருவே அது தவறில்லையா என்று சீடர் கேட்கிறார்.

 

இல்லை நீ தினமும் தியானம் செய் தினமும் தவறு செய்... தினமும் தியானம் செய் மீண்டும் தினமும் தவறு செய்... கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று உனக்கு நின்றுவிடும்.

🌷

ஐயோ ஒருவேளை தவறு நிற்பதற்கு பதில் தியானம் நின்று விட்டால் என்று மாணவர் கேட்டார்.

 

அதற்கு குரு கூறினார் அதுவும் நல்லது தான் உன்னுடைய உண்மையான இயல்பு எது என்று உனக்கு புரிந்துவிடும் இல்லையா என்று குரு சாதாரணமாகச் சொல்லி முடித்தார்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஒரு குட்டிக்கதை : மனிதனின் உண்மையான இயல்பை அறிவது எப்படி - குறிப்புகள் [ ] | A short story : How to know the true nature of man - Notes in Tamil [ ]