சிக்கன் சுக்கா செய்வது எப்படி

குறிப்புகள்

[ சமையல் குறிப்புகள் ]

How to make Chicken Chukka - Notes in Tamil

சிக்கன் சுக்கா செய்வது எப்படி | How to make Chicken Chukka

வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதன் பிறகு அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு சிக்கன் சேர்த்து பிரட்டவும், அப்பொழுது அதிலேயே தண்ணீர் வரும்.

🐓சிக்கன் சுக்கா செய்வது எப்படி?

 

தேவையான பொருட்கள்

 

சிக்கன் - அரை கிலோ

 

வெங்காயம் - 3

 

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

 

பச்சை மிளகாய் - 3

 

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 

மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

 

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 

மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

 

எண்ணெய் - தேவைக்கேற்ப

 

உப்பு - தேவைக்கேற்ப

 

கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

 

கறிவேப்பிலை - 2 கொத்து

 

செய்முறை

 

வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

 

சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

 

 வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

 

அதன் பிறகு அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

 

நன்றாக வதங்கிய பிறகு சிக்கன் சேர்த்து பிரட்டவும், அப்பொழுது அதிலேயே தண்ணீர் வரும்.

 

அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு குறைவான தீயில் 20 நிமிடம் வேக விடவும்.

 

அதன் பிறகு நன்றாக தண்ணீர் சுண்டி சிக்கன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.

 

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :இது எல்லாவகையான சாதம் வகைகளுக்கும், சப்பாத்தி, நான் உடனும் தொட்டு சாப்பிடலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சமையல் குறிப்புகள் : சிக்கன் சுக்கா செய்வது எப்படி - குறிப்புகள் [ ] | cooking recipes : How to make Chicken Chukka - Notes in Tamil [ ]