டீ தூள் - மூன்று தேக்கரண்டி சுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
மசாலா டீ செய்வது எப்படி????
👇👇👇
(𝗠𝗮𝘀𝗮𝗹𝗮 𝗧𝗲𝗮)
டீ தூள் - மூன்று தேக்கரண்டி
சுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது
துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது
மிளகு - ஒன்று
பட்டைத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது
பட்டை - ஒரு சின்ன துண்டு
கிராம்புத்தூள் - இரண்டு சிட்டிகை
அல்லது கிராம்பு - ஒன்று
ஏலக்காய்த்தூள் - இரண்டு சிட்டிகை
அல்லது ஏலக்காய் - ஒன்று
தண்ணீர் - மூன்றரை டம்ளர்
🍁 பொடி இல்லாவிட்டால்
மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக்கொள்ளவும்.
🍁 மூன்றரை டம்ளர்
தண்ணீரை கொதிக்க விடவும்.
🍁 கொதிக்கும் தண்ணீரில் டீ தூள் போடவும். பிறகு துருவிய இஞ்சி (அ)
சுக்குத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
🍁 இப்போது மற்ற அனைத்து
பொடிகளையும் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். மசாலா டீ ரெடி. இதனுடன் சூடான
பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
🍁 இல்லையென்றால்
சர்க்கரை சேர்த்து, ஒரு டம்ளர் பால் ஊற்றி கொதிக்கவைத்து, இறக்கி பின், வடிகட்டி
குடிக்கலாம்.
🍁 டயட்டில் உள்ளவர்கள் சர்க்கரை
மற்றும் பால் இல்லாமல் குடிக்கலாம்.
🍁 இந்த டீ ஒரு முறை
குடித்து பார்த்தால் அப்புறம், இதை தான் எப்போதும் குடிக்கத் தோணும்.☕
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : மசாலா டீ சுவையாக செய்வது எப்படி? - தேவையான பொருள்கள், செய்முறை [ ] | cooking recipes : How to make masala tea delicious? - Materials required, recipe in Tamil [ ]