அனைத்து துறைகளிலும் போட்டியாளர்கள் (competitor) இருப்பார்கள். ஏன்? இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி போட்டியாளர்கள் இருப்பதினால் தான் சந்தையில் (market) சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கிறது.
வியாபாரத்தில் போட்டியாளர்களை எப்படி சமாளிப்பது?
அனைத்து துறைகளிலும் போட்டியாளர்கள் (competitor) இருப்பார்கள். ஏன்?
இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி போட்டியாளர்கள் இருப்பதினால் தான் சந்தையில் (market)
சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கிறது. சிறந்த சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு
தள்ளப்படுவதற்குரிய சூழ்நிலைகள் உருவாகிறது. மோனோப்லி என்பது அவர்கள் செய்யும்
வியாபாரங்கள் அவர்கள் கையில் தான் உள்ளது. அப்படி உள்ள தயாரிப்புகளும் இருக்கத்
தான் செய்கிறது. அந்த தயாரிப்புகளுக்கு போட்டிகள் கிடையாது. தற்போதய காலங்களில்
அப்படிப்பட்ட தயாரிப்புகள் மாதிரி தயாரிப்பாக வலம் வந்து விடுகிறது. இருந்தாலும்
அதற்கான மகிமையும், சிறப்பும் தனி தான். உதாரணத்திற்கு இருட்டு கடை அல்வா என்பது
திருநெல்வேலியில் சிறப்பு பெற்றது. ஆயிரம் பேர் தயாரித்தாலும் அவர்களின் அல்வாக்கான
சுவையும், தன்மையும் வேறு தான். அதை வாடிக்கையாளர்கள் உணரும் பட்சத்தில் இருக்க
வேண்டும். சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்க தினம் தினம் புதிய விலை
மற்றும் தள்ளுபடி சேவைகளில் கூடுதல் வசதிகள் கொடுத்தல், விரைவாக அனுப்புதல், உடனடி
கிடைக்கப் பெறுதல், சுவை கூட்டுதல், மலிவான பொருள்கள் கிடைத்த வண்ணமாகவே உள்ளன. ஆகவே
போட்டி என்பது வியாபார தளத்திற்கு மிகவும் தேவையான ஒன்று தான். அந்த போட்டிகளில்
விற்பனைகள் தடைப் படுவது என்பது வேகத் தடைகள் வருவது போன்று ஆகும். அந்த தடைகள்
வரும் போது நீங்கள் உயரப் போகுகிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளுங்கள். மாறாக
வியாபார வேகம் குறைகிறதே என்று எதிர்மறை எண்ணங்களில் மனதை செலுத்த வேண்டாம்.
அதற்கு அந்த நேரத்தில் கடந்து போகும் போது நீங்கள் உயர செய்யும் சிந்தனைகள் தான்
சந்தையில் முன்னணி வருவதற்கு ஏற்படும் பொறிகள். அந்தப் பொறிகளை பரப்புங்கள். அப்புறம்
என்ன ? உங்கள் வியாபாரம் சூடு பிடிக்கத் தானே செய்யும்.
போட்டியாளர்கள் (Competitors)
போட்டியை சமாளிக்க பின்வருவனவற்றை முயற்சி
செய்து பாருங்கள் :
1. போட்டியை சமாளிக்க
முதலில் உங்களின் பலம் (strength) மற்றும் பலவீனங்களை (weakness)
ஆராய வேண்டும். அடுத்து உங்கள் போட்டியாளரின் பலம் மற்றும்
பலவீனங்களை ஆராய வேண்டும்.
2. உங்கள் பொருளின் தரம் (quality)
மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும்.
3. புதிய தொழில்நுட்பங்களால்
(technology) உங்கள் பொருள் மெருகேற்ற வேண்டும். அந்த புதிய
தொழில்நுட்பங்களை உங்கள் வாடிக்கையாளர் அறியும் வகையில் செய்யவேண்டும்.
4. உங்கள் வாடிக்கையாளர்
சேவை (customer service) ஒரு எடுத்துக்காட்டாக அனைவருக்கும்
விளங்க வேண்டும்.
5. வாடிக்கையாளரிடம் இருந்து
வரும் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.
6. போட்டியாளர்கள் நம்
பொருட்களை போல் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது அவர்களை விட சிறந்த பொருளை
குறைவான விலைக்கு விற்க வேண்டும்.
7. தொடர்ந்து நமது
பொருட்களின் தரம் மற்றும் சேவையை மேம்படுத்திய வண்ணம் இருக்கவேண்டும்.
8. நம் பொருட்களுக்கு
ஏதேனும் மாற்றுப் பொருட்கள் சந்தையில் அறிமுகம் ஆகிறதா என்று அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
9. நீங்கள் எப்போதும் உங்கள்
போட்டியாளர்களை விட மூன்று படிகள் முன்னே இருக்கவேண்டும்.
10. உங்கள் பொருளை
வாடிக்கையாளர் வாங்க காரணங்கள் என்ன? அதே போல் உங்கள்
போட்டியாளர் பொருளை ஏன் வாங்குகிறார்கள்? என்பதை
அறிந்துகொள்ளவேண்டும்.
11. உங்களை பற்றி
வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்கள்
போட்டியாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்று தெரிந்து
கொள்ளவேண்டும்.
12. நீங்கள் போட்டி போடும்
சந்தையில் வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று எதிர்பாரக்கீறிர்கள்? இவ்வாறு உங்கள் தொழிலை பாதிக்ககூடிய அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து
தக்க நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கவேண்டும்.
• உங்களுக்கு
வரவேண்டிய நிலுவையில் உள்ள ரொக்கத்தை வங்கியிடம் (bank) தக்க ஆவணங்களுடன்
சமர்ப்பித்து நீங்கள் அதன் பெயரில் கடன் (loan) பெறலாம்.
• உங்கள் வாடிக்கையாளர்களுக்கு (customer) எவ்வாறு மேலும் சிறந்த சேவை அளிக்க முடியும்
என்று முயற்சி செய்யுங்கள்.
• அவர்களுக்கு மேலும் என்ன சேவை (service) மற்றும் பொருள்கள் (product) தேவை என அறிந்து அவற்றையும் கொடுங்கள்.
• உங்கள் ஊழியர்களை (employees)
சரியான இடைவெளியில் பயிற்சியளியுங்கள்.
• நீங்கள் சார்ந்த துறையில் வந்திருக்கும் புதிய தொழில் நுட்பங்களை (technology) உங்கள் பொருள்களில்
புகுத்துங்கள்.
• அனைத்து வேலைகளையும் நீங்கள் உங்கள் தலையில் போட்டுக்கொண்டு
செய்யாதீர்கள், தொழிலின்
முக்கிய அம்சங்களை விட்டுவிட்டு மற்றவற்றை அவுட் சோர்ஸ் (outsource) செய்யுங்கள்.
• நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்குங்கள்.
• நிறுவனத்தை மேம்படுத்த தேவையான மென்பொருள்களை (software) நிறுவுங்கள்.
• உங்கள் நிறுவனத்தின் இணையதளத்தை மேம்படுத்துங்கள், அதில் enquiry,
live chat போன்றவற்றை உருவாக்குங்கள்.
• உங்கள் வாடிக்கையாளர்கள் (customer) கொடுக்கும் புகார்கள், சந்தேகங்களுக்கு
உடனே தீர்வு காணுங்கள்.
• உங்களுடய ஊழியர்களிடம் புது ஐடியாக்களை (idea) கேளுங்கள்.
• ஏதேனும் புதிய விசயங்களை உங்கள் தொழிலில் முயற்சி செய்து பாருங்கள்.
• உங்கள் நிறுவனத்திற்கு facebook ல் ஒரு பக்கத்தை (FB page) தயார் செய்யுங்கள், அதில் அடிக்கடி நிறுவனத்தை
பற்றிய தகவல்களை பகிருங்கள் (post sharing). வாடிக்கையாளரிடம்
தொடர்பில் இருங்கள். relationship build பண்ணுவதில் கவனம் செலுத்துங்கள்.
• உங்கள் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் (machines) மற்றும் சாதனங்கள்
(equipment), மேலும் சிறப்பாக செயல்பட மற்றும் சக்தியை
குறைவாக செலவழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.
• உங்கள் துறை சார்ந்த, உங்கள் போட்டியாளர்களாக இல்லாதவர்களிடம் சேர்ந்து வாடிக்கையாளர்கள்
தகவல்களை பெற்று இருவரும் வளரலாம். இதற்க்கு affiliate marketing என்று
சொல்வார்கள்.
• உங்கள் வளர்ச்சி (growth) குறித்து உங்கள் வங்கிக்கு தகவல் கொடுங்கள்.
• உங்கள் நிறுவனத்தின் (company) அடுத்த 5 ஆண்டுக்கான
இலக்குகளை இப்போதே முடிவுசெய்யுங்கள்.
• உங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும்
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒரு சட்ட புத்தகத்தை, ஒரு கலாசாரத்தை (culture)
உருவாக்குங்கள்.
• உங்கள் நிறுவனத்தை எங்கிருந்தும் கண்காணிக்க தேவையான மென்பொருள்களை
நிறுவுங்கள் (cloud computing).
• இவை அனைத்தும் உங்கள் நிறுவனத்தை ஒரு படியாவது முன்னேற்றும் என்ற
நம்புகிறேன்.
• புதிய தொழில் வகைகளில் மற்றும் தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்துங்கள்
• சந்தையில் அனைவரும் பார்த்துப் பழகி அலுப்பு ஊட்டக்கூடிய தொழில்களை
விட்டுவிடுங்கள்.
• பக்கத்துவீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று பார்த்து அதையே
நீங்களும் செய்யாதிருங்கள். தொழில் முன்னேற்றம் காண்பவர்கள் அடுத்தவர் என்ன
செய்கிறார்கள் என்று பார்க்காமல் அடுத்து புதுசாக, அனைவரும் எதிர்பார்க்கும்,
யாருமே எதிர்பார்க்காத விதத்தில் உங்கள் சிந்தனை துளிகளை துளிர்க்க விடுங்கள். அது
தளிர்த்து தரமான முடிவுகளை கொடுக்கும். அந்த சிந்தனைகளில் முழுவதும் முழுக் கவனம்
செலுத்தி முன்னேற்றப் பாதைகளில் முன்னாடி ஓடுங்கள். உங்கள் பின்னாடி எவர்
வேண்டுமானாலும் வரலாம். வரட்டும். அவர்கள் உங்களை பின்தொடரலாம். ஆனால் உங்கள்
கவனம் உங்கள் இலக்கில் இருக்க வேண்டும். அப்புறம் என்ன உங்கள் இலக்கின் முடிவுகள்
உங்கள் கைகளில். வெற்றிகள் உங்கள் வியாபாரத்தில் பணமாக, வருமானமாக வரும் என்பதில்
எந்தவித சந்தேகமும் இல்லை.
• நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள், எனவே உங்களுக்கு ஏற்ற தொழில்களை (business) செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால், உங்களுக்கென்று
தனி பாணியை உருவாக்குங்கள்.
• தனித்தன்மை வாய்ந்த தொழிலை தொடங்குங்கள். நீங்கள் சார்ந்த துறையில், நீங்கள் விற்கும் பொருள் (product)
மற்ற அனைத்தையும் விட சிறந்ததாக இருக்கட்டும்.
• Business
is all about solving problems நீங்கள் தொடங்கும் தொழில் புதிய
பிரச்சனைக்கு (problems) தீர்வு கொடுப்பதாகவோ (solutions)
அல்லது பழைய பிரச்சனைக்கு புதிய வகையில் தீர்வு கொடுப்பதாகவோ
இருக்கட்டும்.
• பல்வேறு புதிய தொழில்கள் இருக்கின்றன நாம் தான் அதனை அறிய வேண்டும்.
சில உதாரணங்கள்
• medical
disposal
• online
platform for house keeping
• biomass
gasification
• Mixed
Refrigerant Cryocoolerse
• Efficient
Method for Cleaning Clothes
• Biofuel
Processor for Engines
• Extraction
process for Herbal Oil
• Multi-layer
Nanocomposites
• Biosensors
for Health Monitoring
• Pet Care
and Supplies
• Wedding
and Bridal Stores
• Auto-Care
• Payment
Solutions
• Improved
Paint for Underwater Applications.
• Computer
Keyboard for Indian Languages
• A New
Letterbox for India Post
• Light
Weight Prosthesis for Polio-affected Children
• Ascender
: The Climbing Wheelchair
• Automated
Windshield Wiper
• Thermoelectrically
Cooled Helmet
• Home
generated electricity
• Air
purifier
• Fuel
saving technology
• Alternative
transport system
பெரும்பாலானவற்றை நீங்கள்
கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை, இவை எல்லாம் புதிய தொழில்நுட்பத்திற்கான (technology) உதாரணங்கள். இன்னும் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து,
நீங்கள் ஒரு புதிய பொருட்களை உருவாக்குங்கள்.
• திருபாய் அம்பானி பாலியஸ்டர் (polyester) தொழில் தொடங்கும் போது அவர் தொழில் குறித்து
ஏதும் தெரிந்திருக்கவில்லை, பின்னர் அவர் அவற்றை
கற்றுக்கொண்டார்.
• ரிச்சர்ட் பிராண்சன் (Richard Branson) வெர்ஜின் க்ரூப் (Virgin
Group) முதலாளி, அவர் வெர்ஜின் அட்லான்ட்டிக்
என்னும் விமான சேவையை தொடங்கும் போது விமான தொழிலே அவருக்கு தெரியாது.
• தேவைப்படுவதெல்லாம் உங்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்னும் வெறி, சந்தையில் உங்களுக்கு
என்று ஒரு அடையாளம் உருவாக்கவேண்டும் என்பது தான்.
• புதிய தொழில்நுட்பங்களை தேடுங்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள், அவற்றை விடா முயற்சியுடன் முயன்று பாருங்கள். நிச்சயமாக வெற்றி கிட்டும்.
• ஞாபகம் இருக்கட்டும், ஐ போன் (i-phone) அறிமுகம் செய்யும் முன் ஆப்பிள் (apple)
நிறுவனம் கணினி தயாரித்து விற்பனை செய்து வந்தது. அவர்கள் புதியதாக,
போன் சந்தையில் பல புதிய தொழில்நுட்பங்களை களமிறக்கினார்கள்,
இன்று ஜொலிக்கிறார்கள். அவர்கள் I Pod தயாரித்து வெளியிடும் போது
அவர் சொன்ன அந்த வார்த்தைகள் தான் சந்தையில் வெற்றியை கொடுத்தது. ஆம். 1௦௦௦
பாடல்கள் உங்கள் பாக்கெட் ல் என்று சொன்னார். அந்த தொடர்புக்குரிய வார்த்தைகள்
தான் முக்கியம். அது தான் இன்றைய keywords ஆகும். மக்கள் தேடும் வார்த்தைகள்
ஆகும்.
• நீங்கள் எந்த சந்தையில் நுழைகிறீர்கள் என்பது முக்கியமில்லை, தெரிந்த தொழிலா தெரியாத
தொழிலா என்பது முக்கியமில்லை, நீங்கள் நுழையும் சந்தையில்
உங்கள் பொருள் ஒரு புரட்சியை ஏற்படுத்தவேண்டும். அப்படித்தான் நீங்கள் உங்களுக்கான
தொழிலையும் பொருளையும் தேர்ந்தெடுக்கவேண்டும்
• என்னுடைய வேண்டுகோள் புதிய தொழிலை (new business), புதிய பொருளை (new
product), புதிய சந்தையை (new market), புதிய
தொழில்நுட்பத்தை (new technology) உருவாக்குங்கள் என்பதே.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
வணிகம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் : வியாபாரத்தில் போட்டியாளர்களை எப்படி சமாளிப்பது? - வருமானங்கள் அதிகரித்தல் [ வணிகம் ] | Business: Digital Marketing : How to overcome competitors in business? - Increase in incomes in Tamil [ Business ]