☘ நீ ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பாய், ஆண்டவனும் உனக்கு என்று ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பான். ☘ நீ போட்ட கணக்கு தவறாகிவிட்டால் தவறு அல்ல, ஆண்டவன் போட்ட கணக்கு தான் உனக்கு எப்போதும் சரியாக இருக்கும்.
கஷ்ட நேரங்களை எப்படி கடப்பது?
☘ நீ ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பாய், ஆண்டவனும் உனக்கு என்று
ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பான்.
☘ நீ போட்ட கணக்கு தவறாகிவிட்டால் தவறு அல்ல, ஆண்டவன் போட்ட கணக்கு
தான் உனக்கு எப்போதும் சரியாக இருக்கும்.
☘ ஆதலால் வருந்த வேண்டாம்..... ஆண்டவனின் கணக்கு எப்போதும் நிரந்தரமான கணக்கு.
☘ எப்போதும் நீ ஆண்டவனின் கணக்கிலேயே இரு.
அனேக நேரங்களில்.......
அறிவுரையோ, ஆறுதலோ கூறாமல் நம்
புலம்பல்களை கேட்டால் போதும் என்பதே இங்கு விரும்பப்படுகிறது.......
அதனால்
தான்..............
கடவுள்கள் இங்கு
கொண்டாடப்படுகிறது.............!!
புரிதல் எங்கெல்லாம்
இருக்கிறதோ,
அங்கெல்லாம் உறவுகள்
வலுப்படும்.
எளிதில் கிடைக்கும்
எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பு இருப்பதில்லை.
ஒருவரின் தோல்விக்குப்
பிறகு அவரிடம் காரணம் கேட்காமல் இருப்பது, நீங்கள் தரும் ஆறுதலை விட பல மடங்கு ஆறுதலைத் தரும்.
பிரச்சினைகள் வரும் போது
உடனே சமாளிப்பது எளிதல்ல. அப்படி சமாளிக்கத் தொடங்கி விட்டால் எந்த பிரச்சினையும்
பெரிதல்ல.
அவர் நல்லவரா இவர்
கெட்டவரா என்று நினைப்பதை விட நாம்
நல்லவராக வாழ்வோம்
என்று ஒவ்வொருவரும்
நினைத்தால் இந்த உலகம்
உன்னதமானதாக மாறி விடும்.
இன்பம் எது, துன்பம் எது என்று பிறர்
சொல்லிக் கேட்பதை விட அனுபவத்தால் அறிந்து கொள்வதே சாலச் சிறந்தது.
பொருளில்லா வாழ்க்கை
இல்லை, பொருளற்ற வாழ்க்கையும்
இல்லை. தெளிந்த நீரோடை போல மனம் வைத்து
வாழுங்கள், மாசற்று வாழுங்கள், மரியாதையுடன் வாழுங்கள்.
அவனவன் வேலையில் கவனம்
செலுத்தினால் புது புது சாதனைகள் புரியலாம். அடுத்தவன் வேலையில் கவனம்
செலுத்தினால் புது புது வேதனைகள் அடையலாம்.
நாம் சந்திக்கும் கஷ்டமான
காலம் எல்லாம் கடுமையான காலம் என்று எண்ணாதீர்கள். அந்தக் காலம் தான் நம்மை
கட்டமைக்கும் காலம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்வினிது சிந்தித்து
செயலாற்றுங்கள்.
நடனமாடுங்கள், அல்லது குளியலறைக்கு போய்
குழாயில் வரும் நீருக்கு கீழே நில்லுங்கள்.
உடலில் உஷ்ணம் குறையும்
போது வருத்தம் உங்கள் உடலிலிருந்து மறைவதை காண்பீர்கள்.
அந்தநீர் உங்கள் மீது
பொழியும்போது, வேர்வையும் தூசியும் அகன்றதை போல அந்த வருத்தம்
அகற்றப்பட்டு விட்டதாக நினையுங்கள்.
என்ன நடக்கிறது என்று
பாருங்கள்.
.
பழைய முறையில் செயல்பட
முடியாத சூழலுக்கு மனதை கொண்டுவர முயலுங்கள்.
.
எதுவும் உதவும்.
உண்மையில்
நூற்றாண்டுகளாக பயன்படுத்திய நுட்பங்கள் எல்லாமே மனதை பழைய பழக்கங்களிலிருந்து
திருப்ப முயன்றதுதானே தவிர வேறெதுவுமில்லை.
.
உதாரணமாக, நீங்கள் கோபமாக
உணர்கிறீர்களா, அப்படியே ஆழமாக சுவாசியுங்கள்.
உள்ளே ஆழமாக இழுங்கள், வெளியே ஆழமாக மூச்சை
விடுங்கள்.
இரண்டு நிமிடங்கள்
போதும்.
உங்கள் கோபம் எங்கே
என்று பாருங்கள்.
நீங்கள் மனதை
குழப்புகிறீர்கள்.
.
என்ன வேண்டுமானாலும்
செய்யுங்கள்,
ஆனால் அதையே திருப்பி
செய்யாதீர்கள்.
அதுதான் விஷயம்.
இல்லையென்றால், எப்போதெல்லாம் வருத்தமாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம்
நீங்கள் தூவுகுழாய்க்கு கீழே போய் நிற்கிறீர்கள் என்றால், மனம் அந்த பழக்கத்திற்கு
வந்து விடும்.
மூன்று, நான்கு முறைக்குப் பிறகு
மனம் கற்றுக்கொண்டு விடும்.
சரிதான், நீங்கள் வருத்தமாக
இருக்கிறீர்கள்: அதனால்தான் நீங்கள் தூவுகுழாய் குளியல் எடுக்கிறீர்கள் என்று
புரிந்து கொண்டு விடும்.
பிறகு அதுவே உங்கள்
சோகத்தின் பகுதியாகவும், பழக்கமாகவும் ஆகி விடும்.
இல்லை, அதையே திருப்பி
செய்யாதீர்கள்.
ஒவ்வொரு முறையும் மனதை
குழப்பிக்கொண்டே இருங்கள்.
கண்டு பிடியுங்கள், கற்பனை செய்யுங்கள்.
.
உங்கள் பங்குதாரர் ஏதோ
சொல்கிறார், உங்களுக்கு கோபம் வருகிறது. எப்போதும் உங்களுக்கு அவரை
அடிக்க வேண்டும் அல்லது எதையாவது அவர் மீது எறியவேண்டும் என்று தோன்றுகிறது.
இம்முறை மாற்றுங்கள்:
போய் அவரை அணைத்துக்கொள்ளுங்கள்!
அவருக்கு ஒரு முத்தம்
கொடுத்து, அவரையும் குழப்புங்கள்!
உங்கள் மனமும் குழம்பும், அவருமே குழம்பி போவார்.
திடீரென்று விஷயங்கள்
மாறிப் போகும்.
பின்பு மனம் என்பது
எவ்வளவு இயந்திரத்தனமானது, எப்படி அதனால் புதிய விஷயம் ஒன்றை சமாளிக்கமுடியாது, எப்படி அதில் செயல்
இழந்து நின்று போகும் என்பது உங்களுக்கு தெரியவரும்.
.
ஜன்னலை திறந்து
விடுங்கள், புதிய காற்று உள்ளே வரட்டும்.
நல்லதே நினை.
நல்லதே நடக்கும்.
குடும்ப நலன் கருதி யாரோ
ஒருவர் ஊமையாகிப் போவதால் தான்............
பல பிரச்சனைகள்
பெரிதாகாமல் இருக்கிறது..............!!
☘ நம் அலைவரிசைக்கு ஒத்து வராமல் நமது சிந்தனைக்கு ஏற்புடையாமல் இருக்கும் அனைவரையும் ஒதுக்கிவிட.முடியாது. எல்லா காலகட்டத்திலும் அப்படி சிலர் நம்மோடு இருந்து கொண்டேயிருப்பார்கள்.
☘ யோசித்து பார்த்தால் நமக்கு நிறைய அனுபவபாடமே அவர்களால் தான் கிடைக்கும். சில சங்கடங்கள், சில சலிப்புகள், சில கோபங்கள் என பல்வேறு
பரிமானங்களை தாண்டி மிகப்பெரிய வாழ்க்கை பாடம் அவர்களால் மட்டுமே கற்றுத்தர
முடியம்!
சிலரை புரிந்து
கொள்ளாமல் வெறுக்கிறோம். சிலரை புரிந்து கொண்டதால் வெறுக்கிறோம்.
வீழ்ந்த போது தூக்கிவிட
வந்த இரு கரங்களை விட........
வாழும்போது ஆதரவு தர
வந்த பத்து கரங்கள் ஒன்றும் பெரிதல்ல.
ஒரு நதியின் இரண்டு
கரைகளும் தனித்தனியே பிரிக்கப்பட்டு அவற்றிற்கு இடையே அந்த நதியானது ஓடுவதை
போலத்தான் நமக்கு தோன்றுகிறது. ஆனால், உண்மையில் சொல்லப் போனால் அந்த நதியின் அடியாழத்தில் இரண்டு
கரைகளுமே எந்த இடைவெளியும் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டிருக்கின்றன.
நதியின் மேற்புறத்தில்
வேண்டுமானால் இரண்டு கரைகள் தனித்தனியாக பிரிக்கப் பட்டிருப்பதை போல தோன்றலாம்.
ஆனால், அந்த இரண்டு
கரைகளுக்கும் அடையாளமே அந்த நதி தான். அந்த நதியின் பெயரை வைத்து தான் கரைகளை
வைத்து வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைத்துக்கொண்டு இருக்கிறோம்.
எல்லா நதிக் கரைகளில்
இருக்கும் மண் ஒன்று தான். அந்த விதத்தில் இன்னொரு நதிக் கரையாக வேறுபடுத்தி
பார்க்க முடியாது.
ஆன்மீகத்தின் அடிப்படை
உண்மை என்னவென்றால் நமக்குள் உள்ளிருந்து நம்மை இயங்க வைத்துக்கொண்டு இருக்கும்.
அந்த ஒளியின் அந்த
பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களின் பகுதியாக இருந்து இயங்க வைத்துக்கொண்டு
இருக்கிறது.
நதியின் கரையைப் போல
நாம் அனைவருமே ஒன்றாக இணைக்கப் பட்டிருக்கிறோம்.
அடி ஆழத்தில் நமக்குள்
பிரிவோ, வேறுபாடோ எதுவுமே
கிடையாது. உங்களுடைய ஆன்மீகத் தன்மை வெளிப்படும் போதெல்லாம் ஆன்மீக ரீதியில் நாம்
நாம் அனைவருமே ஒன்று என்பதால் மற்றவர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று
தோன்றும்.
அப்படி ஒன்றாக ஒரு
இடத்தில் குழுமி இருக்கும்போது ஒருவருடைய கருத்திற்கும், மற்றவருடைய
கருத்திற்கும் வேறுபாடு தோன்றும்.
அப்போது ஒவ்வொருவரும்
அவரவர் கருத்தை சரி என்றும் முன்னிலை படுத்த வேண்டும் என்ற முயற்சி எடுக்கும்போது
ஆன்மிக நிலையை விட்டு விலகி இருக்கிறோம் என்று அர்த்தம்.
அப்போது தனியாக இருக்க
வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இந்த முரண்பாட்டுக்கு இடையில் தவிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
இதுபோல முரண்பாடுகள்
தான் நம்மை தனிமை படுத்துகிறது. வாழ்க்கையில் நிலையான தன்மை நிலையற்ற தன்மை என்ற
முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.
பொருள் சேர்க்க வேண்டும்
என்ற தேவையில் சுய நலம் பிறக்கிறது.
அதை மற்றவர்களுக்கு
கொடுக்க வேண்டும் என்ற தேவையில் சுயனலமின்மை வெளிப்படுகிறது.
நம்மிடம் என்ன
இருக்கிறதோ அதைத்தான் கொடுக்க முடியும். இப்படி அனேக முரண்பாடுகளின் ஓட்டத்தில்
பயணிப்பது தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டால் முரண்பாடுகளால் பிரச்சினை வராது.
ஏற்றுக்கொள்ள பழகிக்
கொண்டால் வாழ்க்கை பயணம் ஒரு நதியை போல சீரான ஓட்டமாக ஓடும்.
இப்படி சலனமில்லாமலும், சங்கடம் இல்லாமலும்
வாழ்க்கை பயணம் தொடர்ந்தால் முடிவில் அந்த நதி கடலோடு கலப்பது போல நாமும்
இறைநிலையின் தன்மையோடு ஒன்றாக கலந்து கரைந்துவிடும் அனுபவம் கிட்டும்.
ஆக முரண்பாடுகளையும்
ஏற்றுக் கொள்வதே வாழ்க்கை. அப்படிப் பட்ட வாழ்வே ஞான வாழ்வு.
பொறுமையைவிட மேலான
தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த
அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும்.
இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி
எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள்
வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
தன்னை போல் தான், பிறரும் என்று
நினைப்பவர் ஒரு போதும் பிறருக்குத் தீங்கு செய்யமாட்டர்கள்.
புன்னகை உடனான
வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டால், பகையில்லாமல் வாழும் வாழ்க்கையை நம்மிடமிருந்து பிறர் கற்றுக்
கொள்வார்கள்.
அறிவு ஒன்று தான்
நம்மிடம் இருக்கும் பயத்தை அகற்றும் அரிய மருந்து. அறிவை நாம் வளர்த்துக் கொண்டால்
எல்லா வித பயங்களும் ஒழிந்து விடும்.
ஒருவனின் வளர்ச்சி
எவரையும் மனிதனாக மாற்றுவதில்லை.
ஒருவனின் சிந்தனைகளும்
எண்ணங்களும் நல்ல மனிதனாக மாற்றும். சிந்தனைகளையும் நல்ல எண்ணங்களையும் மனதில்
வளர்ந்துக் கொள்ளுங்கள்.
நாம் நினைத்த ஒன்று
நினைத்தபடி நடப்பது இறைவன் அருள். சில நேரங்களில் நடக்காததும் கூட இறைவன் அருள்
தான்.
"எல்லாம் அவன்
செயல்" எனும் போது இதுவும் அவன் செயலே.
இதை எல்லோரும் உணர்வதில்லை. உணர்ந்தவர்கள் இறைவனிடம் . கோபம் கொள்வதில்லை.
இதை உணர்ந்து கொள்ளும்
பக்குவம் வந்து விட்டால் வாழ்க்கை மிகவும் அழகாகும். இறைவனுக்கு மனதை கொடுங்கள்.
இருப்பவர்களுக்கு
அன்பைக் கொடுங்கள். இல்லாதவர்களுக்கு கை கொடுங்கள்.
வாழ்த்துகள்.
வாழ்க வளத்துடன்.✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : கஷ்ட நேரங்களை எப்படி கடப்பது? - ஞானவாழ்வு, வருத்தமாக உணர்கிறீர்களா? [ ] | Encouragement : How to overcome difficult times? - Enlightenment, Feeling sad? in Tamil [ ]