சிறிது அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
குபேர பூஜை எப்படி செய்வது? சிறிது அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாவினால் 9 குபேர கட்டங்களை ஒரு மரப்பலகையில் குபேர கட்டம் 23 28 21 22 24 26 27 20 25 போடுங்கள். பின்னர் அந்தக் கட்டங்களுக்குள் அரிசி மாவினால் எண்களை எழுத வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள எண் மீதும், ரூ.1 நாணயத்தைத் தெரியும் வகையில் வைக்க வேண்டும். பின், அந்த மரப்பலகையில் எதிரே லட்சுமி குபேர படத்தை வைக்கவும். நாணயத்தின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து, குபேர சுலோகம் சொல்ல வேண்டும். அவ்வாறு சுலோகம் சொல்லும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பூவை வைக்கவும். மீதமிருக்கும் பூவை குபேர படத்தின் மீது போடவும். இந்தப் பூஜையை மிகுந்த பயபக்தியுடன் செய்ய வேண்டியது அவசியம். பூஜை முடிந்த பின்னர், கட்டங்களில் உள்ள நாணயங்களை எடுத்து உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, கல்லாப்பெட்டியிலோ வைக்க, செல்வம் பெருகும்; வறுமை அகலும். குபேரனுக்கு என்று அமைந்த கோயில்கள் குறைவு தான். சென்னையில் வண்டலூரில் உள்ள ரத்னமங்கலத்தில், குபேரனுக்கு என்று கோயில் உள்ளது. அங்கு சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பைத் தரும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : குபேர பூஜை எப்படி செய்வது? - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : How to perform Kubera Puja? - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]