குபேரன் பூச நட்சத்திரம் கடக ராசியில் பிறந்தவர்.
வீட்டில் குபேர பூஜை எப்படி செய்வது? குபேரன் பூச நட்சத்திரம் கடக ராசியில் பிறந்தவர். உகந்த தினம் வியாழன். எனவே செல்வமின்றி கஷ்டப்படுபவர்களும் செல்வம் நிலைக்காதவர்களும் வியாழக்கிழமை களில் லக்ஷ்மி குபேர பூஜை செய்வது சிறந்தது. வியாழன், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, நவராத்திரி, அட்சய திரிதியை ஆகியவை விசேஷ தினங்கள் சொம்பில் மஞ்சள் தடவிய தேங்காயைக் கவிழ்த்து வைத்து கலசம் ரெடி செய்ய வேண்டும். கலசத்தின் உள் வெள்ளி நாணயம் போட்டு தண்ணீர் நிரப்பவும். அரிசியை பரத்தி அதன்மேல் கலசத்தை வடக்கு நோக்கி வைக்க வேண்டும். காசு, தாம்பூலம், பழம் தட்சிணை வைத்து பின் மஞ்சளில் ஒரு பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு தட்சிணை வைத்து, ஒரு அறுகம்புல் சாற்றி 'ஐந்து கரத்தனை' சுலோகம் சொல்லி நெய்வேத்யம் செய்து மஞ்சள் பிள்ளையாரை சற்றே வடக்கு நோக்கி நகர்த்திவிட்டு லக்ஷ்மி குபேர பூஜை செய்ய வேண்டும். கலசம் முன் தட்டில் குங்குமம் வைத்துக் கொண்டு, கட்டை விரல் மோதிர விரல் சேர்த்து குங்குமத்தை எடுத்து 108 லக்ஷ்மி போற்றிகள் செய்து கலசத்தின் முன் குங்குமத்தைப் போட வேண்டும். பின் நெய்வேத்யம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். வடக்கு பார்த்து குபேரன் படமோ சிலையோ வைக்க வேண்டும். தட்டில் 5 ரூபாய் நாணயங்களோ அல்லது வெள்ளி நாணயங்களோ வைத்துக் கொள்ள வேண்டும்.(குபேரனுக்கு உரிய எண் 5. எனவே தான் 5 ரூபாய் நாணயம்) தட்சிணை வைத்து அஷ்டோத்திரம் என்று சொல்லப்படும். 108 குபேரன் போற்றி நாமாவளிகள் சொல்ல வேண்டும். ஒவ்வொரு போற்றிக்கும் நாணயத்தை கையில் அள்ளி அள்ளி சத்தம் கேட்பது போல் மீண்டும் தட்டிலேயே போட வேண்டும். பின் தூபதீபம் காண்பித்து அவல் பாயசம் அல்லது வெல்லம் சேர்ந்த அவல் செய்து நைவேத்யம் செய்து சாஷ்டாங்கமாக கிழக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். ராஜஸ்தான், குஜராத், மும்பை பகுதிகளில் லட்சுமி விழாவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. குபேரத் திருநாள் என்றும் இதைக் கூறுவார்கள். லட்சுமி, இரவு நேரத்திலேயே வருவதாகக் கருதப்படுவதால் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து வீட்டுக்கு வரும் லட்சுமியை வரவேற்கிறார்கள். தீபாவளியின் போது தமிழ்நாட்டில் ஸ்ரீமத் நாராயணனையும் மகாலட்சுமியையும் வழிபடுவர். நேபாளத்தில் இலட்சுமியை வழிபடுவர். ராஜஸ்தானில் ராமரை வழிபடுவர். மத்தியப்பிரதேசத்தில் குபேரனை வழிபடுவர். வங்காளத்தில் காளிதேவியை வழிபடுவர். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்குபேரனுக்கு உகந்தது!
வீட்டில் நீங்களே லக்ஷ்மி குபேர பூஜை செய்ய...
குபேர பூஜை செய்ய...
குபேரத் திருநாள்!
தீபாவளியும் தெய்வ வழிபாடும்
ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : வீட்டில் குபேர பூஜை எப்படி செய்வது? - குபேரனுக்கு உகந்தது, குபேரத் திருநாள், தீபாவளியும் தெய்வ வழிபாடும் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : How to perform Kubera Puja at home? - Admirable for Kubera, Kubera Thirunal, Diwali and deity worship in Tamil [ spirituality ]