ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.
கடவுளிடம்
பிரார்த்தனை எப்படி வைக்க வேண்டும்?
ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு
போனான்.
அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு
பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.
ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.
கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.
அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து
எடுத்துக்கோ என்றார்.
அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.
பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன்
கைகளில் வைத்தார்.
அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.
வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை
பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.
அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.
நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு
கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும்.
இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு
அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.
நீதி: கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது எனக்கு
கார் வேண்டும், வீடு
வேண்டும், பணம்
வேண்டும், நகை
வேண்டும் என பிரார்த்தனை செய்யாதீர்கள்.*
என் வாழ்க்கையையே உன் கையில் ஒப்படைத்து விட்டேன்.
என் வாழ்க்கையின் சாரதியாக இருந்து என்னை வழிநடத்தி
செல் என்று இறையருளிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து விடுங்கள்.
நீங்கள் கேட்க நினைத்த வசதிகள் மட்டுமல்ல, நீங்கள் கேட்காத வசதிகள் உட்பட சகல சம்பத்துகளையும்
அந்த இறையருள் உங்களுக்கு அளிக்கும்
சிவ ஓம் நமசிவாய
அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி
ஆத்ம நமஸ்காரங்கள்
துணிவே துணை
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : கடவுளிடம் பிரார்த்தனை எப்படி வைக்க வேண்டும்? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : How to pray to God? - Tips in Tamil [ ]