நாம் எம்பெருமானை உள்ளத்தால் தொடுகிறோமோ இல்லையோ... அவன் நம் உள்ளத்தை...ஆங்கே, அப்போதே ஓடி வந்து தொடுகிறான்!
இறைவனை எப்படி அடைவது?
நாம் எம்பெருமானை உள்ளத்தால் தொடுகிறோமோ இல்லையோ...
அவன் நம் உள்ளத்தை...ஆங்கே, அப்போதே ஓடி வந்து
தொடுகிறான்!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான் என்று முருகப்
பெருமானையும் இப்படி "ஆங்கே" என்று தான் குறிப்பார் அருணகிரி!
உள்ளத்தைத் தொட்டு, அவன் திருந்தினானா என்று பார்த்து, திருந்தவில்லை என்று
ஆன பின்பு, மார்பைப் பிளந்தது சிம்மம் என்பது மரபு வழி வியாக்யானம்!
ஆனால் இதில் இன்னொரு ஆழமான பொருளும் உள்ளது!
மார்பைப் பிளத்தல் - இதை அனுமனும் தான் செய்தான்! தன் மார்பைத் தானே
பிளந்து உள்ளே இராமனைக் காட்டினான் அல்லவா?
அதே போல் தான் இங்கு இரணியன் மார்பைப் பிளந்ததும்!
அனுமன் தன்னைத் தானே பிளந்து காட்டினான்! இரணியனை இறைவன் பிளந்து
காட்டினான்! - அவ்வளவு தான் வித்தியாசம்! அனைவர் உள்ளத்திலும் இறைவன்
"அந்தர்யாமியாய்" உள்ளான், என்பதையே ஆழ்வார்
"உளம் தொட்டு" என்கிறார்!
இரணியன் வேறு யாருமல்ல! எம்பெருமானின் பக்தனான ஜய-விஜயன் தானே?
இறைவனின் உலக நாடகத்துக்காகத் தன்னைத் தானே உட்படுத்திக் கொண்ட
பக்தன்! தனக்குக் காலமெல்லாம் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, இறைவனின் உலக
நாடகத்துக்குத் தம்மை ஒப்புக் கொடுத்தவன்!
மோட்ச பதவியில் இருக்கும் ஜய-விஜயர்கள், எம்பெருமானுக்காகத்
தம்மை உலகம் இழித்தாலும் பரவாயில்லை என்று வந்தவர்கள்! ஆனால் நாம எப்படி? :)
உலகத் துன்பம் தாங்க மாட்டாது தான் மோட்சத்தின் மீது கண் வைத்துச்
சுயநலமாய் இருக்கிறோமே தவிர, எம்பெருமான் மீது அன்பு வைத்தா மோட்சம் கேட்கிறோம்?
ஜய-விஜயர்கள் போல், மோட்சத்தையும் உதறி விட்டு வரும் மனம் நமக்கு இருக்குமா? எம்பெருமானுக்காக
காலமெல்லாம் இரணியன் என்று கெட்ட பெயர் சுமக்கும் காதல் உள்ளம் நமக்கு வருமா? :)
மோட்சத்தில் இருப்பவரெல்லாம் ஒரு முறை கட்டாயம் கீழே மீண்டும் வந்து, உலக நன்மைக்காக, இறை நாடகத்தில்
தீயவர்களாக காட்டப்படுவார்கள்-னு சட்டம் வரட்டுமே! அப்பறம் எத்தனை பேர் மோட்சத்தை
விரும்புகிறோம் என்று பார்த்து விடலாம்! ஹிஹி!
In the world, not everyone is a sinner and not everyone is a saint,
but a mix of both...and true love will even don the role of sinner, just for
His sake! Glory to those hearts!
எம்பெருமான் உள்ள உகப்புக்கு மட்டுமே இருக்கும் பக்தனின் காதல் சொல்லி
மாளாது!
அதனால் தான் இறைவன், அவர்களின் அவதார பூர்த்தியின் போது உள்ளத்தைத் தொடுகிறான்!
ஆழ்வார் உளம் "தொட்டு" என்பதில் மிக்க ஆழம் உள்ளது!
உளம் "ஆராய்ந்து" என்று சொல்லி இருக்கலாமே? ஏன்
"தொட்டு" என்று மென்மை காட்ட வேண்டும்?
இறைவனின் உள்ள உகப்புக்கு மட்டுமே இருந்த காதல் உள்ளத்தைத்
"தொட்டு", அவன் யார் என்று அவனுக்கு உணர்த்தி, உள்ளத்து
அந்தர்யாமியைக் காட்டி, அவதாரப் பூர்த்தி செய்து வைக்கிறான் இறைவன்!
இதுவே உள்ளத்தைத் "தொடுதல்"!
நம் உள்ளத்தையும் "தொடுமாறு" நாடி நாடி நரசிங்கா என்று அவனை நாடுவோம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : இறைவனை எப்படி அடைவது? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : How to reach God? - Tips in Tamil [ ]