நடராஜரை தரிசிக்கும் முறை எப்படி?

ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கிறீங்க.?, நினைத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்!

[ ஆன்மீக குறிப்புகள் ]

How to visit Nataraja? - Why are you hitting your forehead white?, Vibhuti mantra to succeed in what you think! in Tamil

நடராஜரை தரிசிக்கும் முறை எப்படி? | How to visit Nataraja?

நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்: 1) மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபயஹஸ்தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

நடராஜரை தரிசிக்கும் முறை எப்படி?

 

நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்:

 

1) மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபயஹஸ்தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

 

2) கீழிருந்து மேலாக முதலில் தூக்கிய திருவடியையும், அபயஹஸ்தத்தையும், திரு முகத்தையும் தரிசிக்க வேண்டும்.

 

இவ்வாறு 2 வழிகளில் நடராஜரை தரிசிக்க வேண்டும்.

 

நடராஜர் ஓம் என்ற பிரணவ மந்திர வடிவில் காட்சி அளிக்கிறார்.

அவருக்கு துணையாக

* சிவகாமி அம்மன் அருள் செய்கிறார்.

இந்த நடராஜரும், சிவகாமியும் நாம் பார்க்கும் போது 2 உருவங்களாக தெரிந்தாலும் தத்துவப்படி அவர்கள் ஒன்றாக இணைந்தே அருள்செய்கிறார்கள்.

உதாரணமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவனும் - சக்தியும் இணைந்தே காட்சி அளிக்கின்றனர்.

 

பரத கலையை கற்றுக்கொடுப்பவர்களும், பரத கலையை கற்றுக்கொள்பவர்களும் மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் சிதம்பர நடராஜரை முன்னுதாரணமாக வைத்து வணங்குகிறார்கள்.

தங்களுடைய வீடுகள், வரவேற்பு அறைகளில் நடராஜர் சிலையை வைத்து மகிழ்கிறார்கள்.

 

சைவ சமயத்துக்கு உருவகமாக 2 திருவுருவங்கள் பழக்கத்தில் உள்ளன.

முதலில் சிவலிங்க வழிபாட்டை கூறலாம்.

சிவலிங்கத்துக்கு சிறப்பு உருவமாக சிதம்பரம் நடராஜர் சிலையை நம்முன்னோர்கள் கண்டிருக்கிறார்கள் என்பது மேன்மையான சிறப்பாகும்.

 

பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.

 

பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்ன வழி.

 

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கிறீங்க.?

 

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.

 

அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.

 

வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.

 

ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.

 

வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது.

 

 நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன்.

 

 காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’

என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

நினைத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்!

 

சிலர் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைய முடியாமல் தவிப்பார்கள்.

 

உதாரணத்திற்கு, ஒரு தொழிலை தொடங்கி அதை பாதியிலே விட்டு விடுவது.

 

பல நேர்முக தேர்வுகளுக்கு சென்றும் வேலை கிடைக்காமல் இருப்பது.

 

இது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆன்மிக ரீதியாக சில எளிய வழிமுறைகள் உள்ளன.

 

அதை முறையாக செய்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

 

வாருங்கள் அதற்கான வழிமுறையை பற்றி விரிவாக பார்ப்போம்.

 

 ஒரு விநாயகரை பிடித்து வைத்து,ஒரு நெய் விளக்கு ஏற்றிவிட்டு அதன்பிறகு அவருக்கு அருகம்புல் சாற்றி அலங்கரித்துவிட்டு ,தேங்காய், பழம் ,சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி இவைகளுடன் ஒரு தட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும்.

 

 

அதன் பிறகு முறைப்படி விநாயகர் பூஜை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பி விபூதிதில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும்.

 

அதனுள்ளே ‘’ சிவாயநம’’ என எழுத வேண்டும்.

 

பிறகு கீழே உள்ள மந்திரத்தை கூற வேண்டும்

 

காரிய சித்தி மந்திரம்

 

ஓம் சிவாய நம ஓம்

 

ஓம் சர்வ சக்தி ஓம்

 

ஓம் ஓங்கார சக்தி ஓம்

 

ஓம் பிரணவப் பொருளே ஓம்

 

ஓம் பஞ்சாட்சரமே ஓம்

 

ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம்

 

ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே ஓம்

 

ஓம் சவர் ஜெயசக்தியே ஓம்

 

ஓம் மசி நசி அங் மங் சங்

 

ஆதார சக்தியே ஓம்

 

இந்த மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் தினம் 108 முறை கூற வேண்டும்.

 

அதன் பிறகு தினமும் ஒரு முறை இந்த மந்திரத்தை கூறிவிட்டு விபூதி பரப்பி தகட்டில் கற்பூரம் ஏற்றி வணங்கிவிட்டு அந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி நிச்சயம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : நடராஜரை தரிசிக்கும் முறை எப்படி? - ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கிறீங்க.?, நினைத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்! [ ] | Spiritual Notes : How to visit Nataraja? - Why are you hitting your forehead white?, Vibhuti mantra to succeed in what you think! in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்