மனித வாழ்க்கை..

குறிப்புகள்

[ ஊக்கம் ]

human life - Tips in Tamil

மனித வாழ்க்கை.. | human life

தனக்கான சந்தோஷத்தை அடுத்தவரை அவமானப்படுத்தி பெற நினைக்கும்.. 🍂மனிதர்கள் வாழும் உலகத்தில் இருக்கிறோம் என்பது வேதனையே...

மனித வாழ்க்கை..


🍂தனக்கான சந்தோஷத்தை அடுத்தவரை அவமானப்படுத்தி பெற நினைக்கும்.. 🍂மனிதர்கள் வாழும் உலகத்தில் இருக்கிறோம் என்பது வேதனையே...

நீ அறிந்து வைத்துள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்...

 

நீ

அறியாத

ஒரு மனிதன் இருக்கிறான்...

நினைவுகள் எப்போதும் வித்தியாசமானவை..

சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும்..

சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்

மனிதன் மனம் ஒரு குரங்கு..

வாழ்க்கையின் பாதி துன்பம் தவறானவர்களை எதிர்பார்ப்பதனால் வருகிறது.

மீதி துன்பம் உண்மையானவர்களை சந்தேகிப்பதினால் வருகின்றது.

 

பிறக்கும் போது பலரை சிரிக்க வைத்து இறக்கும் போது பலரை அழ வைக்கிறோம் !

 

நமக்கென எதுவும் இல்லாமல் இந்த உலகில் பிறக்கிறோம் அதே நிலைமையில் இருக்கிறோம் !

 

முதலில் பணத்திற்காக ஆரோக்கியத்தையும் பின்பு ஆரோக்கியத்திற்காக பணத்தையும் இழக்கிறோம் !

 

பணம் இல்லையென்றால் வயிற்றை நிறைக்க ஓடுகிறோம், பணம் இருந்தால் வயிற்றை குறைக்க ஓடுகிறோம் !

 

பிறரை மகிழ்வித்து நமது மகிழ்ச்சியயை தொலைக்கிறோம் !

 

பல விடயங்களை தொலைத்த பின்னரே தேட ஆரம்பிக்கிறோம் !

 

பணத்திற்காக பாசத்தையும் பின்பு பாசத்திற்காக பணத்தையும் இழக்கிறோம் !

 

எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்தே ஏமாந்து போகிறோம் !

 

எதிர்காலத்தை பற்றி சிந்தித்தே நிகழ்காலத்தை இழக்கிறோம் !

 

ஆடம்பரத்திற்காக அத்தியாவசியத்தை இழக்கிறோம் !

 

பிறரை வீழ்த்துவதாக நினைத்து நாமே வீழ்ந்து விடுகிறோம் !

 

பிறரை மேன்மை படுத்தியே நம்மை தாழ்மை படுத்தி விடுகிறோம் !

 

மற்றவர்களுக்காக வாழ நினைத்து நம் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம்!

 

நாலு காசு சம்பாரிக்கணும் என ஓடியே கடைசியில் நாலு கால் நாற்காலியில் உக்கார வைக்க படுகிறோம் !

 

இது தான் வாழ்க்கை...

நீங்கள் வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்!.

 

உங்களின் மகிழ்ச்சியே! எங்களின் வளர்ச்சி!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

ஊக்கம் : மனித வாழ்க்கை.. - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : human life - Tips in Tamil [ Encouragement ]