மனித இயல்புகளும் நரம்புப் பிணிகளும்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Human Nature and Neural Networks - Medicine Tips in Tamil

மனித இயல்புகளும் நரம்புப் பிணிகளும் | Human Nature and Neural Networks

மனிதர்களிடம் அமையும் உணர்ச்சி வழிப் பட்ட பழக்க வழக்கங்களும் நரம்பியல் கோளாறுகளுக்கு வகை செய்து விடக்கூடும்.

மனித இயல்புகளும் நரம்புப் பிணிகளும்


மனிதர்களிடம் அமையும் உணர்ச்சி வழிப் பட்ட பழக்க வழக்கங்களும் நரம்பியல் கோளாறுகளுக்கு வகை செய்து விடக்கூடும். நல்ல பண்பு, உயர்ந்த ஒழுக்கம், சிறந்த பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களின் நரம்பு மண்டலம் ஒழுங்கு முறையுடன் சீராக இயல்பாக இயங்குகிறது.

இதற்கு மாறுபட்ட இயல்புகள் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களின் நரம்பு மண்டலம் சீரான செயற்பாட்டினை இழந்து நிலை குலைந்து செயற்படத் தொடங்குகிறது.

மிகக் குறுகிய காலத்தில் ஒரு மனிதன் தம்மை விட மிகவும் உயர்ந்த நிலையில் வாழ்க்கை நடத்துகிறான் என்பதைச் சிலரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.

அந்த மனிதனைக் காணும்தோறும் பொறாமைத் தீ அவர்கள் மனத்தைத் தகிக்கத் தொடங்குகிறது. ஆத்திரமும் ஆவேசமும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

அந்தச் சமயத்தில் பொறாமை உணர்ச்சிக்கு இலக்கானவர்களின் உடலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினால் அவர்களது நாடித் துடிப்பு அதிகமாக இருப்பதை உணர முடியும். அதாவது அவர்களது இரத்த அழுத்த நிலை உயர்வடைந்திருக்கும்.

உணர்ச்சி நரம்புகள் அந்தச் சமயம் கிளர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும். ஜீரண உறுப்புக்களின் செயற்பாடுகளில் குறைபாடு தோன்றும். உதாரணமாக இரைப்பையில் காரணமில்லாத அமிலச் சுரப்பி ஏற்பட்டிருக்கும்.

பிறர்மீது துவேஷம் கொள்வோர், மற்றவர்களுடைய வாழ்க்கையைச் சீர்குலைக்க எண்ணுபவர்களைப் போன்றவர்களுக்கும் அவர்கள் மனத்தில் தீமை தரும் செயல்களை பற்றி எண்ணிப் பார்க்கும் போதே மேற்சொன்ன உடலியல் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதை உணர முடியும்.

எப்பொழுது பார்த்தாலும் காம நினைவுகளுக்கு மனமழிந்து தடுமாறுவோருக்கும் மேலே சொன்ன உடல் நிலை அதிர்ச்சிகள் ஏற்படும்-

ஒரு வேலையும் செய்யாமல் சோம்பியிருந்து வீண் காலம் கடத்துபவர்களின் நரம்பு மண்டலம் இயல்பான செயல்முறை கெட்டு மிகவும் மந்த கதியில் இயங்கத் தொடங்கும். சோம்பேறித்தனம் கூட ஒருவித நரம்புக் கோளாறின் பிரதிபலிப்புதான். ஆகவே நம்மிடம் அமைந்து விடும் நல்ல தீய செயற்பாடுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் உடல் நிலை மனநிலை - நரம்பு நிலை பாதிப்புகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று எண்ணி கூடாது. அவையும் நமது உடல், உள்ளக் கோளாறுகளுக்கு அடிப்படை வகிக்கிறது என்பதை உணர்ந்து நம்மை - நமது பழக்க வழக்கங்களைத் தக்கவாறு திருத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பலவகை நரம்புப் பிணிகளிலிருந்து விடுபட முடியும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

மருத்துவ குறிப்புகள் : மனித இயல்புகளும் நரம்புப் பிணிகளும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Human Nature and Neural Networks - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்