மகிழ்ச்சியின் ரகசியம் விரும்புவதை செய்வது! வெற்றியின் ரகசியம் செய்வதை விரும்புவது!
மனிதனின் எண்ணங்கள்..
மகிழ்ச்சியின் ரகசியம்
விரும்புவதை செய்வது!
வெற்றியின் ரகசியம்
செய்வதை விரும்புவது!
இயற்கையின் படைப்பில் எல்லா
உயிரினங்களுக்கும் எல்லாமும் நிறைவாகவே இருக்கத் தான் செய்கிறது.
பேராசைப்பட்டு நாம் தான்
நம்மிடம் இருப்பவைகளை அறிந்து முழுமையாக உபயோகித்து மகிழ்ந்து வாழாமல்,பிறரிடம்
உள்ளதைப் பார்த்து, பெரும்பாலும் பொறாமைப்பட்டு வாழ்ந்து
வருகிறோம்.
வாழு! வாழ விடு! எவ்வளவு
எளிமையான அழகான வார்த்தை.
வாழ்க்கை என்பது ஒரு பெரிய
கடல் போன்றது. அதில் பயணம் செய்வது தான் நாம் வாழும் முறை.
கடல் பயணத்தில் பலவிதமான
துயரங்களும், இழப்புக்களும் ஏற்படத் தான் செய்யும்..
அவ்வளவு இடர்ப்பாடுகளையும்
கடந்து, பயணத்தை
மகிழ்ச்சியாக்கி, அனுபவித்து, நாமும்
நல்ல முறையில் வாழ்ந்து, பிறருக்கும் நல்ல உதாரணமாய்,
உபயோகமானவர்களாக வாழ்ந்து காட்டுவோம்...
'‘HUMAN THOUGHT POLLUTION IS NOW HERE IN THIS WORLD’'
அதாவது., மனிதனின்
எண்ணங்கள் இன்று மாசடைந்து விட்டன என்ற நிலையை மாற்ற நாம் செய்ய வேண்டியது
''HUMAN THOUGHT POLLUTION IS NO WHERE IN THIS WORLD’'
இப்படிச் செய்தால்., மனிதனின்
மாசடைந்த எண்ணங்கள் எங்குமே இல்லை என்ற நிலையை உருவாக்கி விடலாம்.
ஆம்.,நண்பர்களே..,!
தனக்கு மட்டுமே (OWN) என்ற
நிலையை மாற்றி நமக்கு (WE) என்ற நிலைக்குச் சென்றால்
மனிதகுலம் மெச்சும்.. நாமும் மனிதரில் மாணிக்கம் ஆகலாம்.
காலை எழுந்தவுடன் மனதில்
இந்த வரிகளை சொல்லுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்கும்....!
எனது தேவைகளை நிறைவேற்ற
கூடிய பணம் என்னிடம் நிறைய இருக்கிறது.
எனது எண்ணங்கள் மிகவும்
சக்தி வாய்ந்தவை.
நான் எப்பொழுதும் சரியான
இடத்தில் சரியான நேரத்தில் சரியான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.
பிரபஞ்சம் என் மீது அளவற்ற
வளங்களை பொழிகிறது.
என் வாழ்க்கை மிக அழகானது.
எனது சக்தியின் அளவு
எப்பொழுதும் மிக சிறப்பாக இருக்கிறது.
எனது எண்ணம்,வாக்கு &
செயல் எப்பொழுதும் ஒருங்கிணைந்து இருக்கின்றன.
நான் எப்பொழுதும்
புன்னகையுடன் இருக்கிறேன்.
என்னால் வாழ்வில் எதையும்
சுலபமாக எதிர்கொள்ள முடியும்.
நான் எப்பொழுதும் நல்ல
விஷயங்களையே நாடுகிறேன்.
என் இலட்சியங்கள்
நிறைவேறியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்.
நல்லவர்களை மட்டுமே என்
வாழ்வில் ஈர்க்கிறேன்.
நான் வளமையான உணர்வுடன்
வாழ்கிறேன்.
என்னைப் பற்றி சிறப்பாக
உணர்கிறேன்.
என்னை நான் மதிக்கிறேன்.
எனக்குள் அமைதியை
உணர்கிறேன்.
என் சமயோஜிதம் பிரமாதமாக
உள்ளது.
பணம் ஒரு சக்தி நான் அதை
ஈர்க்கிறேன்.
வாழ்வில் எனது பங்கை
புரிந்து செயல்படுகிறேன்.
நான் மிகவும் சக்தி வாய்ந்த
மனிதன்.
என் எண்ணங்கள் எப்பொழுதும்
நான் விரும்பிய பாதையிலேயே செல்கின்றன.
அழகிய நிறங்களும் நல்ல
சக்தியும் என் ஆராவை நிறைக்கின்றன.
என் வாழ்வின் ஒவ்வொரு
வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.
என் இலட்சியங்கள் சுலபமாக
நிறைவேறுகின்றன.
நான் நிகழ்காலத்தில்
வாழ்கிறேன்.
வாழ்வில் எனக்கு கிடைத்த
விஷயங்களுக்காக நான் நன்றி சொல்கிறேன்.
என் மனதில் தன்னம்பிக்கை
நிறைந்திருக்கிறது.
நான் முழுமையான
ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.
நான் பணத்தை ஒரு காந்தம் போல
வசீகரிக்கிறேன்.
நான் நேரத்தை மிகவும்
திறமையாக பயன்படுத்துகிறேன்.
நான் மிகவும் சுறுசுறுப்பாக
இருக்கிறேன்.
எனது எண்ணங்களில்
சுதந்திரத்தை உணர்கிறேன்.
என்னை நான் நேசிக்கிறேன்.
எல்லோருக்கும் என்னை
பிடிக்கிறது.
எனக்குள் ஆனந்தமும்
நிம்மதியும் உணர்கிறேன்.
நான் சாதிக்கப் பிறந்தவன்.
என் மனம் தெளிவாக
இருக்கிறது.
என் வாழ்வின் ஒவ்வொரு
வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.
வாழ்வில் நான் தாண்டி வரும்
இடர்பாடுகள் எனக்கு மேலும் சக்தி அளிக்கின்றன.
அன்பை பெறவும் தரவும் நான்
தயாராக இருக்கிறேன்.
எனது வாழ்வை சிறப்பாக்க இந்த
பிரபஞ்சமே செயல்படுகிறது.
என் உடலும் மனமும் ஒன்றை
ஒன்று வலுப்படுத்துகின்றன.
என் மனம் அமைதியாக இருக்கும்
பொழுது இலட்சியங்களை நிறைவேற்றுவது சுலபமாக இருக்கிறது.
தெய்வீக சக்தி எப்பொழுதும்
என்னை சூழ்ந்து பாதுகாப்பு அளிக்கிறது.
என் ஆராவில் உள்ள நல்ல சக்தி
அனைவரையும் சாந்தப்படுத்தி நிம்மதி அளிக்கிறது.
இந்த நொடி என்னுடையது. அதை
நான் மதிப்புள்ளதாக மாற்றுகிறேன்.
என் உடல் கச்சிதமாகவும் மனம்
சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.
என் ஆழ்மனதின் சக்தியால்
வாழ்வில் அற்புதங்களை உருவாக்குகிறேன்.
நான் எங்கு சென்றாலும் நல்ல
சக்தியை பரவச்செய்கிறேன்.
எனக்கு எது நல்லதோ அதையே
பிரபஞ்சம் தருகிறது.
என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு
உயிருக்காகவும் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.
என் உடலில் பஞ்ச பூதங்களும்
சம நிலையில் இருக்கின்றன.
என் வாழ்வில் சௌபாக்கியங்கள்
நிறைந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட எண்ணங்களை
மனதில் செலுத்திப் பாருங்கள்!
உங்கள் வாழ்க்கை எப்பேற்பட்ட
வளர்ச்சி பாதையில் செல்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்!
நீங்கள்
வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்!.
உங்களின் மகிழ்ச்சியே!
எங்களின் வளர்ச்சி!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஊக்கம் : மனிதனின் எண்ணங்கள்.. - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : Human thoughts.. - Tips in Tamil [ Encouragement ]