புகுந்து வந்தால் குழந்தை பாக்கியம்

புராண வரலாறு, வேணுவனச்சருக்கம்

[ ஆன்மீகம்: சிவன் ]

If it enters, the child is blessed - Mythological history, Venuvanacharukam in Tamil

புகுந்து வந்தால் குழந்தை பாக்கியம் | If it enters, the child is blessed

பிள்ளை தாண்டு என்பது இங்குள்ள ஒரு வித்தியாசமான நம்பிக்கை. குழந்தை இல்லாத பெண்கள் இங்குள்ள வெளியே பூட்டப்பட்ட பொல்லாப் பிள்ளையார் சந்நிதியுள்ளே மிக மெலிதான கம்பிகளின் ஊடே புகுந்து, இன்னொரு பக்கமாய் வெளி வரவேண்டுமாம். அப்படிச் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். இப்படிப் பலருக்கும் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

புகுந்து வந்தால் குழந்தை பாக்கியம்

பிள்ளை தாண்டு என்பது இங்குள்ள ஒரு வித்தியாசமான நம்பிக்கை. குழந்தை இல்லாத பெண்கள் இங்குள்ள வெளியே பூட்டப்பட்ட பொல்லாப் பிள்ளையார் சந்நிதியுள்ளே மிக மெலிதான கம்பிகளின் ஊடே புகுந்து, இன்னொரு பக்கமாய் வெளி வரவேண்டுமாம். அப்படிச் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். இப்படிப் பலருக்கும் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

அந்த இடத்தையும், கம்பிகளையும் பார்த்தால் இதற்குள் எப்படிப் புகுந்து வந்திருப்பார்கள் என ஆச்சரியமாக இருந்தது. உள்ளே புகுந்து வரும் பெண்களின் பெற்றோர் அல்லது மாமனார் மாமியார் உடனிருந்து உள்ளே பிடித்துத் தள்ளி விடுவார்களாம்!

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம்

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்தப் பெருமான், திருநெல்வேலி என்ற பெயருடன் திருநெல்வேலிப் பதிகம் பாடியிருப்பதால், அதற்கு முன்பே திருநெல்வேலி என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்புப் பெற்றது என விளங்குகிறது.

ஞான சம்பந்தரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயம் புகுந்த நின்றசீர் நெடுமாறன் சிவன்பால் பற்று மிகக் கொண்டு, மனைவி மங்கையர்க்கரசியாரோடு நெல்லை வந்து வாழ்ந்தார். தம் மகன், தம் நண்பர் வேதியர் புதல்வனைப் பெண் என்று மறைத்துச் சொல்லியபடியே பெண்ணாகக் கண்டவர்.

இறைவன் திருவருளால் அவ்வேதியர்க்கு மற்றுமொரு ஆண் மகவை நல்கி, வடபுலத்து அரசனை நெல்லைநாதர் பூதப்படையால் வென்று, நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் எனப் பாராட்டப்பட்டவர். இக்கோயிலில் மணி மண்டபம் அமைத்துச் சிறப்புச் செய்தவர்.

திருநெல்வேலி சரித்திர நூலாசிரியர் பிஷப்கால்டுவெல், இந்நகரை மதுரையில் இருந்து அரசாண்ட நாயக்க மன்னர் காலத்தில், தென்பகுதியில் இது மிக முக்கியமான நகரமாயிருந்தது என்று குறிப்பிடுகிறார்.

கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ள பாளையங்கோட்டை, தெற்கேயுள்ள கோட்டை நகர்களில் கற்கோட்டையால் மிகப் பலமானதென்று கொள்ளப்பட்டது என்றும், ஆங்கிலத்தில் டின்னவேலி என்று எழுதுவது சரியன்று; திருநெல்வேலி என்று எழுத வேண்டும் என்றும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தலைச் சங்கப் புலவரான அகத்தியர் இறைவன் பணித்தற்கு ஒப்ப, பொதிகைமலை வந்து சேர்ந்தார். இறைவன் திருவருளால் பூமியும் சமநிலை அடைந்தது. பின் அவர் குண்டிகைக் கங்கையைத் தாமிரபரணியாகப் பிறப்பித்து, அது கடலில் சங்கமமாகும் இடம் வரை பூமியை வளம்பட அருளினார்.

அகத்தியர் மனைவி லோபாமுத்திரை திருச்செந்தூர் கந்தவேளை வழிபட்டு முக்தி அடைந்தாள். அகத்தியரும் வேணுவனம் அடைந்து கைலைத் திருமணக்கோலம் கண்டு மகிழ்ந்தார். அகத்தியர் வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது இத்தலம் 2000 ஆண்டுக்கு முற்பட்டது என்ற உண்மை நமக்குப் புலனாகிறது.

 

புராண வரலாறு

சூதமுனிவர் நைமிசாரணிய முனிவர்கட்குத் திருநெல்வேலித்தலம், மூர்த்தி, தீர்த்தம், விழாக்கள் இவற்றைத் தரிசித்து முக்தி அடைந்தவர்கள் பெருமை, முக்தி அடைந்த முறை ஆகியவற்றை விரிவாகச் சொல்லினார்.

வடமொழியில் இருந்த புராணத்தினை நீலகண்ட சாஸ்திரியார் உதவியால் தமிழில் பாடியவர், திருநெல்வேலி வேளாளர் நெல்லையப்பப் பிள்ளை என்ற புலவர். அவர் மிகுந்த சிவப்பற்று உடையவர். சிவபெருமான் ஆணைக்கிசைந்தே அதைப் பாடினார். கந்தபுராணத்தைக் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு திருத்தி உதவிய முருகப்பெருமானையொப்ப, இவர் இயற்றிய தலபுராணமும் நெல்லையப்பரால் அவ்வப்போது திருத்தி உதவப்பட்டது.

நைமி சாரணியச் சருக்கம் முதல், தலபுராணம் படித்த வேதியரைக் கண்ட பாவி, கதி அடைந்த சருக்கம் ஈறாக நூற்றி இருபது சருக்கங்களில் 6891 செய்யுட்களை இந்நூல் கொண்டது. முத்தப்பவள்ளல் தூண்டுதலின் பேரில் இயற்றப்பட்டு, சங்கர மூர்த்தி பிள்ளையன் முதலியோர் போற்ற இது சந்நிதியில் அரங்கேற்றப்பட்டது.

புராணத்தை இகழ்ந்த நாகப்பன் குன்ம நோயாற் பொன்றினன். பாராட்டிப்படித்த திருவடியப்பன் குட்ட நோய் நீங்கி இன்புற்றனன். ஆகவே புராணத்தின் பெருமையும் சிறப்பும் இதன் மூலம் விளங்குகிறது.

 

வேணுவனச்சருக்கம்

நான்கு வேதங்களும் தருவாய் (மரமாய்) நின்று நிழலைச் செய்து நித்தியமாய் இருக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்க, அவர் தாம் நடனம் புரியும் இருபத்தொரு தலங்களில் மிகச் சிறந்த தென்காஞ்சி எனப்படும் நெல்லையில் வேணுவாய் அமருங்கள்; அங்கு லிங்கமாய் அமர்ந்தருளுவோம் என்றபடி, வேதங்கள் மூங்கில் மரங்களாக இறைவன் லிங்கமாகி அருள் புரிவாராயினர்.

 

தசரத இராமன் பேறு பெற்றது

இராமர் மாரீசனாகிய மாயமானைத் தொடர்ந்து சென்றபொழுது, வழியில் கயத்தாற்றில் வில்லினால் கீறிப் பொருநையை அழைப்பித்து மேல் பக்கம் லிங்கம் அமைத்து, பூசித்து கோதண்டராமன் என்ற பெயர் பெற்றார். மானூரில் மாய மானைக் கொன்ற பின் சீதையைத் தேடி வருந்தினார்.

பின்னர் அகத்தியரை அடைந்து அவரால் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று, நெல்லையப்பரை வழிபட்டு பாசுபதாத்திரம் பெற்று, இராவணனை வென்று சீதையை மீட்டு, இராமநாதரை வழிபட்டு அயோத்தி அடைந்தார்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம் 

ஆன்மீகம்: சிவன் : புகுந்து வந்தால் குழந்தை பாக்கியம் - புராண வரலாறு, வேணுவனச்சருக்கம் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : If it enters, the child is blessed - Mythological history, Venuvanacharukam in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை








தொடர்புடைய தலைப்புகள்