பூஜையின்போது இரண்டு கைகளில் நிறைய பூக்களை அள்ளி இறைவனுக்கு அர்ப்பணிக்கும்போது கைகளின் அமைப்பு எப்படி இருக்குமோ அந்த அமைப்புதான் புஷ்ப புட முத்திரை.
புஷ்ப புட முத்திரை செய்தால் தீய சக்திகள் நம்மை அண்டாது.
பூஜையின்போது இரண்டு
கைகளில் நிறைய பூக்களை அள்ளி இறைவனுக்கு அர்ப்பணிக்கும்போது கைகளின் அமைப்பு
எப்படி இருக்குமோ அந்த அமைப்புதான் புஷ்ப புட முத்திரை. இந்த முத்திரை எளிதில்
செய்யக்கூடியதும், வெளிப்படையானதும் ஆகும். பக்தியின் மற்றொரு அடையாளமாக
இந்த புஷ்ப புட முத்திரை விளங்குகிறது.
விநியோக சுக்லம் என்ற
பூஜை முறையில்,
இறைவனுக்கு ஒளி விளக்கை
ஏற்றிக் காட்டுவதற்கு புஷ்ப புட முத்திரை பயன்படுகிறது. இந்த முத்திரை மூலம், நீர் அல்லது மலர் அல்லது
பழங்களை இறை வனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நாம் இதய சுத்தியுடன் உண்மையாக இந்த
முத்திரையைப் பயன்படுத்தினால் தீய சக்திகள் நம்மை அண்டா. இதுவே பிரபஞ்ச தத்துவம்.
மனநிலை பாதிப்பினால்
வரும் படபடப்பை நீக்க இந்த முத்திரை உதவுகிறது. மனத்தில் உண்டாகும் எதிர்மறை
எண்ணங்களை மாற்றி மனத்தை ஒருமுகப்படுத்த இந்த முத்திரை உதவுகிறது. மனம்,இதயம், ஆத்மா ஆகியவை அமைதி
அடையும்.
இரண்டு கைகளையும்
விரித்து, கைகளின் இரண்டு
ஓரங்களையும் சேர்க்க வேண்டும். இரண்டு சுண்டு விரல்களுக்கும் இடையே இடைவெளி
இருக்கக் கூடாது. உள்ளங்கை சற்று குழிவாக இருக்க வேண்டும். மற்ற விரல்களும்
ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இடைவெளியின்றி இணைந்திருக்க வேண்டும். கைகள் சற்று
தளர்வாக இருப்பது நல்லது. கட்டை விரல்கள், மேல்புறமாக அந்தந்த ஆள்காட்டி விரலின்
வெளிப்புறங்களைத் தொட்டபடி இருக்க வேண்டும்.
பத்து அல்லது பதினைந்து
நிமிடங்கள் இதைச் செய்யலாம். நின்ற நிலையில் செய்வது நல்லது. பத்மாசனத்தில்
அமர்ந்த நிலையிலும் இதைச் செய்யலாம். மந்திர பூஜையில் இந்த முத்திரை முக்கியப்
பங்கு வகிக்கிறது.
1. அண்டவெளி சக்தியால்
என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவற்றை இந்த முத்திரையும் அளிக்கும்.
2. இரக்க குணம் உண்டாகி, தாராள மனப்பான்மை
உண்டாகும்.
3. தீய சக்திகள் நம்மை
அண்டாது.
4. மனநிலை பாதிப்புகள்
சரியாகும்.
5. மனம் ஒருமுகப்பட்டு
எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
6. ஆன்மிகச் சிந்தனைகள்
அதிகரிக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : புஷ்ப புட முத்திரை செய்தால் தீய சக்திகள் நம்மை அண்டாது. - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : If we do Pushpa Buda Mudra, evil forces will not touch us. - Recipe, time scale, benefits in Tamil [ ]