சபான முத்திரை செய்தால் மன அழுத்தம் போய் விடும்...

செய்முறை,பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

If you do the Sabana stamp, stress will go away... - Recipe, benefits in Tamil

சபான முத்திரை செய்தால் மன அழுத்தம் போய் விடும்... | If you do the Sabana stamp, stress will go away...

சபான முத்திரை, பெருங்குடல், நுரையீரல் மற்றும் தோல் ஆகிய வற்றை நன்கு செயல்படத் தூண்டி அசுத்தங்களை வெளியேற்றுகிறது.

சபான முத்திரை செய்தால் மன அழுத்தம் போய் விடும்...

சபான முத்திரை, பெருங்குடல், நுரையீரல் மற்றும் தோல் ஆகிய வற்றை நன்கு செயல்படத் தூண்டி அசுத்தங்களை வெளியேற்றுகிறது. 

தூய்மைக்கு ஒரு அடையாளமாக இந்த முத்திரை இருக்கிறது. எல்லாவிதமான மனஇறுக்கத்தையும் நீக்க இந்த முத்திரை உதவுகிறது.

நாம், எதிர்விளைவு, நேர்விளைவு என அனைத்துவிதமான சக்திகளையும் பெறுகிறோம். இருப்பினும், தனிமை மற்றும் ஏகாந்தம் ஆகியவை மிக முக்கியம். ஏகாந்தமான நிலையில் இல்லாவிட்டால், அத்தியாவசிய சக்தி இல்லாத நிலை ஏற்பட்டு, உடல் பலஹீனமாகும். மேலும், நோய்களால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். இத்தகைய பிரச்னைகளிலிருந்து விடுபட சபான முத்திரை உதவுகிறது. மேலும், அடக்கிவைக்கப்பட்டுள்ள எதிர் விளைவுச் சக்தி மற்றும் கிருமிகளால் உண்டாகும் நச்சுப் பொருள்களையும் நீக்கும்.

செய்முறை

இரண்டு கைகளில் உள்ள ஆள்காட்டி விரல்களை மேல் நோக்கியபடி இணைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் படத்தில் உள்ளபடி இணைந்திருக்க வேண்டும். கட்டை விரல்கள் இரண்டும் பெருக்கல் குறிபோல சாய்ந்த நிலையில் ஒன்றின் மீது ஒன்றாக இணைந்திருக்க வேண்டும்.

அமர்ந்த நிலையில் இதைச் செய்தால், ஆள்காட்டி விரல்கள் தரையை நோக்கியபடி இருக்க வேண்டும். படுத்தபடி செய்தால், ஆள்காட்டி விரல்கள் கால்களை நோக்கியபடி இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் தளர்வாக வைத்திருக்க வேண்டும். சுவாசத்தை பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். இந்த முத்திரையைச் செய்யும்போது மூன்று முறை நீண்ட பெருமூச்சு விட வேண்டும். 15 நிமிடங்கள் செய்யலாம்.

பலன்கள்

1. சுவாசம் சீராகும்.

2. எதிர் விளைவு சக்தி வெளியேறி, புதிய சக்தி கிடைக்கும்.

3. எல்லாவிதமான மன அழுத்தமும் நீக்கும்.

4 உடலில் இருந்து நச்சுப் பொருள்கள் வெளியேறும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : சபான முத்திரை செய்தால் மன அழுத்தம் போய் விடும்... - செய்முறை,பலன்கள் [ ] | Yoga Mudras : If you do the Sabana stamp, stress will go away... - Recipe, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்