நேர்த்திக்கடனை இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் வருமா?...

தெய்வத்தின் சாபத்திற்கு நம் குடும்பம் ஆளாகி விடுவோமா?...

[ பொது தகவல்கள்: அறிமுகம் ]

If you don't fulfill your debt to God, will God blame you? - Will our family be cursed by God? in Tamil

நேர்த்திக்கடனை இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் வருமா?... | If you don't fulfill your debt to God, will God blame you?

கஷ்டம் என்று வரும்போது இறைவனை வழிபாடு செய்து, அந்த கஷ்டங்கள் தீருவதற்கு வேண்டுதல் வைப்பது! கஷ்டம் தீர்ந்தவுடன் சூழ்நிலை காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது! என்ற இந்த சூழ்நிலை எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் வரும்.

நேர்த்திக்கடனை இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் வருமா?...

தெய்வத்தின் சாபத்திற்கு நம் குடும்பம் ஆளாகி விடுவோமா?...

கஷ்டம் என்று வரும்போது இறைவனை வழிபாடு செய்து, அந்த கஷ்டங்கள் தீருவதற்கு வேண்டுதல் வைப்பது! கஷ்டம் தீர்ந்தவுடன் சூழ்நிலை காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது! என்ற இந்த சூழ்நிலை எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் வரும்.

இதனை நேர்த்திகடன் பாக்கி இருக்கு என்றும் சிலர் சொல்வார்கள். கடவுளுக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டு, அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றா விட்டால் தெய்வ குத்தம் ஆகிவிடுமா? இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் இருப்பதம் மூலம் அடுத்தடுத்து நம்முடைய குடும்பத்திற்கு வரக்கூடிய பாதிப்புகளுக்கு, அந்த தெய்வத்தின் சாபமும், கோபம் தான் காரணமா?...

 

இந்த சந்தேகம் உங்களுடைய மனதில் இருந்தால் இதை தெளிவு படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவுதான் இது...

 

ஒரு விஷயத்தை மட்டும் நாம் நன்றாக புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ‘எந்த தெய்வமும், நம்மிடம் வந்து கஷ்டம் வரும்போது என்னை வழிபாடு செய்ய என்று சொல்லுவது கிடையாது. எந்த தெய்வமும், எனக்கு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கேட்பதும் கிடையாது. எந்த தெய்வமும் நம்மிடத்தில் இருந்து எதையும் எதிர் பார்ப்பதும் கிடையாது’. நம்மிடம் இருக்கும் எல்லாமும் அந்த இறைவன் உடையதுதான். அந்த இறைவன் நமக்கு கொடுத்தது தான். அப்படி இருக்கும்போது எந்த தெய்வமும் நீங்கள் செய்துகொண்ட வேண்டுதலை நிறைவேற்றாத பட்சத்தில் கோபப்படவும் போவது கிடையாது.

 

‘நீ எனக்கு பூஜை புனஸ்காரங்களை செய்தால் தான், பதிலுக்கு பிரதிபலனாக நான் உனக்கு வரங்களை தருவேன் என்று!’ என்றுமே கடவுளாக பட்டவன் சொல்லவில்லை. நாமே நம்முடைய மன திருப்திக்காக இறைவனுக்கு இதை செய்கின்றேன், அதை செய்கின்றேன் என்று வேண்டிக் கொள்கின்றோம் அவ்வளவுதான். வேண்டுதலை நிறைவேற்றாததன் மூலம் எந்த தெய்வமும் மனிதப் பிறவிக்கு சாதம் கொடுப்பது இல்லை. அந்த அளவிற்கு இறைவன் ஒன்றும் பழிவாங்கும் குணம் கொண்டவன் அல்ல.

 

ஆனால், இதற்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் எந்த பாதிப்பும் நமக்கு வரவே வராது என்று ஆணித்தனமாக அடித்துச் சொல்லிவிட முடியாது.

என்னங்க? குழப்பமாக உள்ளதா?... ‘நேர்த்திக்கடனை நிறைவேற்றா விட்டால், தெய்வ குத்தம் வருமா? வராதா?’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது நன்றாக புரிகின்றது.

 

நேர்த்தி கடனை நாம் இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் அந்த இறைவனின் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் மனித தர்ம சாஸ்திரத்தில் நேர்மை, நாணயம், வாக்கு தவறாமை, என்ற ஒன்றும் கட்டாயம் இருக்கின்றது. மனிதராகப் பிறந்தவர்கள் சொன்ன வாக்கில் சரியாக இருக்க வேண்டும்.

 

அது கடவுளுக்கு கொடுத்த வாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு கொடுத்த வாக இருந்தாலும் சரி, நாணயத்தில் நாம் தவறும் போது நமக்கான தண்டனை நிச்சயம் கிடைத்தே தீரும். ஆகவே, நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதை தான் நம்முடைய வாயால் சொல்ல வேண்டும். சொல்லி விட்டால் அதை செயல்படுத்தி விட வேண்டும். வாக்குத் தவறக்கூடாது. சொன்ன சொல்லை மாற்றக்கூடாது. இதுதான் நேர்மைக்கான அடையாளம். நல்ல மனிதருக்கான அடையாளம்.

 

ஆகவே நான் நேத்திக்கடன் செய்யாவிட்டால் இறைவன் நமக்கு தண்டனை கொடுக்கப் போவதில்லை. நாம் வாக்கு தவறியதற்கு, நாம் நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதற்கு, தர்ம சாஸ்திரத்தின் படி நமக்கு தண்டனை கொடுக்கப்படும். இதுதான் உண்மை.

இதை தான் நாம் இறைவன் நம்மை தண்டித்து விட்டதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றோம்.

 

இப்போதாவது எல்லோருக்கும் புரிந்ததா? இறைவன் என்பவன் நேர்மையில், உண்மையில், நம்பிக்கையில், வாக்குத் தவறாமையில் தர்மத்தின் அடிப்படையில் தான் இந்த பூமியில் இருக்கிறார்..✍🏼


இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

பொது தகவல்கள்: அறிமுகம் : நேர்த்திக்கடனை இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் வருமா?... - தெய்வத்தின் சாபத்திற்கு நம் குடும்பம் ஆளாகி விடுவோமா?... [ ] | General Information: Introduction : If you don't fulfill your debt to God, will God blame you? - Will our family be cursed by God? in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்