ஆறு வழிகளை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.

வாழ்க்கையில் முக்கியமானது

[ அனுபவம் தத்துவம் ]

If you follow the six ways, your problem will be solved and you will not get any diseases for life. - Important in life in Tamil

ஆறு வழிகளை  நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது. | If you follow the six ways, your problem will be solved and you will not get any diseases for life.

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள். யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம். பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !

ஆறு வழிகளை  நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.

 

இதோ !

1 - பசி

2 - தாகம்

3 - உடல் உழைப்பு

4 - தூக்கம்

5 - ஓய்வு

6 - மன அமைதி-

 

பசி !

 

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.

 

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

 

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !

 

தாகம் !

 

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

 

வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

 

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

 

உடல்_உழைப்பு !

 

 ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

 

இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.

 

தூக்கம் !

 

யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

 

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.

 

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.

 

இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

 

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.

 

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

 

ஓய்வு !

 

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

 

மன_நிம்மதி 

 

மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

மன நிம்மதி கிடைக்கும்.....

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

அனுபவம் தத்துவம் : ஆறு வழிகளை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது. - வாழ்க்கையில் முக்கியமானது [ ] | Philosophy of experience : If you follow the six ways, your problem will be solved and you will not get any diseases for life. - Important in life in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்