டிஜிட்டல் மார்க்கெட்டிங் - ன் முக்கியத்துவம்

குறிவைத்து சந்தைப்படுத்தல், விற்பனை

[ வணிகம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் ]

Importance of Digital Marketing - Targeted Marketing in Tamil

டிஜிட்டல் மார்க்கெட்டிங் - ன் முக்கியத்துவம் | Importance of Digital Marketing

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது பாரம்பரிய மார்க்கெட்டிலிருந்து வேறுபட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்னணு ஊடகங்கள் வழியாக ஆன்லைனில் பிராண்டுகள் அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளின் சந்தைப்படுத்தல் தந்திரமாகும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் - ன் முக்கியத்துவம்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது பாரம்பரிய மார்க்கெட்டிலிருந்து வேறுபட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்னணு ஊடகங்கள் வழியாக ஆன்லைனில் பிராண்டுகள் அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளின் சந்தைப்படுத்தல் தந்திரமாகும். அதிக தீவிரத்தில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள், தேடுபொறிகள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் மின்னஞ்சல் போன்ற சேனல்கள் மூலம் தெரிவிக்கப்படும் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் ஊக்குவிப்பாக குறிப்பிடப்படுகிறது.

குறிவைத்து சந்தைப்படுத்தல் (Targeted Marketing)

2013. ஸ்பெயின் நகரங்களின் பிரதான சாலைகளில் இந்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ANAR அறக்கட்டளையின் (Aid to Children and Adolescents at Risk) 'சிறார் துன்புறுத்தல் விழிப்புணர்வு' தொடர்பான பிரச்சாரம்.

ஏழு வருடங்களாகியும் "குறி வைத்து சந்தைப்படுத்தலுக்கு" இன்றும் இது ஒரு கிளாசிக் எடுத்துக்காட்டு. தென்மேற்கு ஐரோப்பா முழுவதும் ஆபத்தில் இருக்கும் இளம் சிறாருக்கு ANAR ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இது விளம்பரத்தின் ஒரு வரி நோக்கம்.

பிரச்சனை எதுவென்றால், குழந்தைகள் பெரும்பாலும் வயது வந்தவர்களுடன்தான் வீதிக்கு வருகிறார்கள். கூட வருபவரே துன்புறுத்தும் நபராக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு தொலைபேசி எண்ணை சொல்ல வேண்டும். அதே சமயத்தில் கூட வருபவர் விளம்பரத்தை தடுத்துவிடக்கூடாது. குறிவைத்த பிரச்சாரம் தேவை. மிகக் குறைந்த செலவில் பதாகைகளை நிறுவியது அனார் அறக்கட்டளை. அதில் எந்த தொலைபேசி எண்ணும் குறிக்கப்படவில்லை.

பதாகையில் ஒரு மலர்முக சிறுவனின் அழகிய படம். படத்தைத் தாண்டிச்செல்லும் பெரியவர்கள், விளம்பரத்தின் நேர்த்தியை ரசித்தபடி கடந்தனர். ஆனால் அந்த சிறுவனின் முகம் ரத்த காயங்களுடன் குதறப்பட்டிருப்பதாக சிறார்கள் பிதற்றினார்கள். "இது என்ன சமாசாரம்? சிறார் துன்புறுத்தல் என்றால் என்ன? ஏன், எப்படி நடக்கிறதென்று" பெற்றோரை துளைத்தெடுத்தனர். ஓரிரு வாரங்களிலேயே தங்கள் கண்களுக்கு புலப்படாத ஒரு விடயம் சிறுவர்கள் மத்தியில் பிரபலமாவதை பெற்றோர்கள் கண்டறிந்தார்கள்.

அந்த விளம்பர பதாகைகள் 'லென்டிகலர்' (lenticular) தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருந்தன. பெரியவர்கள் பார்வையில், அவர்கள் உயரத்திலிருந்து இப்படித் தெரியும். "சில நேரங்களில் துன்புறும் சிறார்களுக்கு மட்டுமே அதன் துயரம் தெரியும்" என்ற வாக்கியத்தை மட்டுமே பெரியவர்கள் படித்தார்கள். ஆனால் சிறுவர்களுக்கு வேறு மாதிரியாக காட்சியளித்தது. தவிர அவர்களுக்கு மட்டும் வேறு சில வார்த்தைகளும் தெரிந்தன:

"உன்னை யாராவது துன்புறுத்தினால் "116–111" என்ற எண்ணில் கூப்பிடு. உனக்கு நாங்கள் உதவுவோம்"

'சிறார் துன்புறுத்தல்' பற்றி ஒரே மாதத்தில் ஐரோப்பா முழுவதும் செய்தி சென்றடைந்தது. அந்த பதாகை 'ஒளியியலுக்குரிய மாயை' (optical illusion) பயன்படுத்தப்பட்ட மிக நுட்ப விளம்பரம். சிறுவர்களின் பார்வை உயரத்திலிருந்து வேற மாறித்தெரியும். புதுமை, தொழில் நுட்பம், முக்கியமாக இலக்கினை குறிவைத்த targetting நேர்த்தி எல்லாம் சேர்ந்து, பிரச்சாரம் அனைவரையும் பேச வைத்தது.

விளம்பரத்திற்கான இலக்கில், அதாவது சிறார்கள் மத்தியில் அந்த தொலைபேசி எண் பசுமரத்தாணியாக நிலை நினறது. பிரசாரத்தின் முதல்வாரம் முதலே நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள். பல நூறு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஸ்பெயின் அரசு இதற்க்கென தனியொரு இலாகாவையே நிறுவ நேர்ந்தது. பொதுவாக மக்களிடையே சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், குறிப்பாக சிறுவர்களுக்கு ஒரு தொடர்பு தொலைபேசி எண்ணை தருவதும்தான் விளம்பர நோக்கம்.

இருவேறு பார்வையாளர்களிடம் இப்படைப்பு இருவேறு மொழிகளில் பேசியது.


முதலில், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்று புரிந்துகொள்வதுதான் மிகவும் முக்கியம்.

 

சேல்ஸை விற்பனை என்கிறோம். விற்றலின் மொத்த செயல்பாட்டையும் விற்பனை என்று சொல்லலாம். ஆக, விற்றல் என்று சொன்னாலும் பொருந்தும்.

 

ஆனால் மார்க்கெட்டிங்கை “சந்தையிடுதல்” என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். (திரையிடுதல், உணவிடுதல் போல..) சந்தைப்படுத்துதல் என்று சொல்வது சந்தையை படுத்துவதாகிவிடும்.

 

ஆக, விற்பனை (அ) விற்றல் மற்றும் சந்தையிடுதலுக்குரிய வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள ஒரு கற்பனை செய்வோமா?

 

இந்த உலகில் இன்னும் பேஸ்ட் பிரஷ் கண்டுபிடிக்கப்படவில்லை. செங்கல் பொடியும், கரியும், வேப்பங்குச்சியும் வைத்துத்தான் பல் விளக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால், மற்ற எல்லா தொழில்நுட்பமும் இருக்கிறது.

 

இந்த நிலையில், வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு விளம்பரம் வருகிறது. சூப்பர் ஸ்டார் முதல்முறையாக விளம்பரத்தில் வருகிறார்.

 

கண்ணா! இவ்ளோ நாள், ரொம்பக் கஷ்டப்பட்டு பல் தேச்சிக்கிட்டிருந்த! அதை விட்டுட்டு புதுசா, கெத்தா ஒரு பொருளை நான் அறிமுகப்படுத்துறேன். வாங்கிப் பாரு!

 

இதோ.. இதான் டூத்பிரஷ்,…. என்று சொல்லி பல் தேய்க்கும் பிரஷ்ஷைக் காட்டுகிறார்.

 

இதோ.. இதான் பேஸ்ட் என்று சொல்லி பேஸ்டை எடுத்து, பிரஷ்ஷில் வைத்து, பல் தேய்த்துக் காட்டுகிறார்.

 

தன் கையால், வாயில் ஊதிக்காட்டி, நறுமணத்தை உணரவைத்து, பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் மீண்டும் எடுத்துக்காட்டி…

 

வெறும் 40 ரூபாய்தான்! இனிமே இதையே வாங்கி யூஸ்பண்ணி என் ஜாய் பண்ணு !

 

இதெப்டி இருக்கு!”

 

என்று சொல்கிறார்.

 

முதலில் பார்க்கும்போது, ஆச்சரியமாக இருக்கிறது. அட.. பல் தேய்க்க எப்படி ஒரு ஐட்டம் வந்திருக்கு பாரேன் என்று மகிழ்கிறது.

 

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், மாற்றும் தமிழ்ச் சேனல் எல்லாவற்றிலும் ரஜினி வரும் விளம்பரம்தான்!

 

பார்த்துவிட்டு, மனைவி கேட்கிறார். “ ஏங்க! நம்ப வீட்டுக்கும் நாலு ப்ரஷ், ஒரு பேஸ்ட் வாங்குவோம்க!”

 

நீங்களும், “ஓ! வாங்கிட்டா போச்சு!” என்கிறீர்கள்

 

அடுத்தநாள் , டிவி விளம்பரம் மட்டுமல்ல, சாலையோர பேனர்கள், பெரிய ஹோர்டிங்குகள் என்று எல்லா இடங்களிலும் சூப்பர்ஸ்டார் டூத்பிரஷ்ஷும் கையுமாக நிற்கிறார்.

 

உங்கள் வேலைப் பளுவில் வாங்க மறந்துவிடுகிறீர்கள்.

 

இரண்டு நாட்களில், வீட்டில், மனைவி அழுத்தம் தரத்துவங்குகிறார்.

 

பெரிசா என்ன கேட்டுட்டேன்.. நம்ப அபார்ட்மெண்ட்ல மொதமொதல்ல நாந்தான் பிரஷ் வாங்கி யூஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்.அது ஒரு குத்தமா? உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக்கண்டேன் என்ற ரீதியில் குமுற, அந்த சாதாரண ஆசை, சண்டையாக முற்றுகிறது.

 

உங்களுக்கும் கோபம் வந்து..

 

இப்ப என்னடீ? உனக்கு அந்த டூத் ப்ரஷ் வாங்கணும் அவ்வளவுதானே..? இரு! வாங்கிட்டு வந்துட்டு உன் மூஞ்சில முழிக்கிறேன்” என்று கத்திவிட்டு வெளியேறி, அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று, கேஷுவலாக, ”புதுசா வந்த அந்த டூத்பேஸ்ட் ப்ரஷ் கொடுங்க” என்று கேட்கிறீர்கள்.

 

அவர் சொல்கிறார்.

 

சார்! அந்தக்கொடுமைய ஏன் கேக்குறீங்க? தெனம் ஆயிரம்பேர் கேட்டுட்டுப் போறாங்க சார்! விளம்பரம் கொடுத்தாங்களே ஒழிய இன்னும் சரக்கு வந்து சேரலை! இந்த ஊருக்கே ஒரே ஒரு ஹோல் சேல் ( மொத்த விற்பனை) கடைலதான் இருக்காம். அதுவும் வந்த 100 பீஸும் முதல் நாளே வித்துப்போச்சாம்” என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

 

அய்ய்யோ.. அவள்கிட்ட பெரிய வீராப்பா சொல்லிட்டு வந்துட்டோமே என்று நீங்கள் பதறிப்போய், வேற எங்கயுமே வாங்க முடியாதா?” என்று பரிதாபமாக் கேட்க, அவரும்..

 

ஓ கிடைக்குமே! பெங்களூர்லதான் அந்த கம்பெனியோட ஃபேக்டரி இருக்காம். அங்க கவுண்ட்டர்ல விக்கிறாங்களாம். என்று சொல்கிறார்.

 

நான் மானஸ்தன்” என்று நீங்களும் பெங்களூருக்கு பஸ் ஏறிச் சென்று..(அப்போது லாக்டவுன் இல்லை என்று நினைவில் கொள்க!) அந்த நிறுவனத்தின் ஃபேக்டரியைத் தேடிச்சென்றால், அங்கு உங்களை மாதிரி வாங்க வந்தவர்கள் ஆயிரக்கணக்கில் நிற்க, நொந்து நூடுல்ஸாகி, வாங்கி வந்து சேருகிறீர்கள்.

 

“40 ரூபா பிரஷ்ஷுக்கு ரெண்டாயிரம் செலவழிச்சிருக்கீங்க! கடைல இல்லைன்னா இல்லைன்னு சொல்லிருக்கலாமுல்ல? என்ன ஜென்மமோ?” என்று சர்வசாதாரணமாக மனைவி கத்திவிட்டுச் சென்று விடுவார்.

 

இதில் என்ன தவறு நடந்தது?

 

அந்த டூத் பிரஷ் நிறுவனம், கோடிக்கணக்கில் செலவழித்து, ரஜினியை வைத்து விளம்பரம் எடுத்து, அதனை அனைத்து முறையிலும் ஒளிபரப்பி, தெரியப்படுத்தினாலும் – அதன் பலனாக, வாடிக்கையாளருக்குக் கிடைக்கவேண்டிய பொருளை அவர்கள் கையில் சுலபமாகக் கிடைக்கும் வகையில் விநியோகச் சங்கிலியை திட்டமிடாமல் இருந்துவிட்டார்கள்.

 

ஆக மார்க்கெட்டிங் – வெற்றி!

சேல்ஸ் – தோல்வி!

 

ஆக, சந்தையிடுதல் என்பது, ஒரு பொருள் உங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியப்படுத்துவது. விற்பனை என்பது அதனை உங்கள் கையில் கொண்டுவந்து சேர்ப்பது.

 

இப்படி யோசித்ததுண்டா? ஒவ்வொரு பொருளையும், அது தயாரிக்கும் இடத்துக்கே சென்றுதான் வாங்கவேண்டும் என்றால், நம் கதி என்ன ஆகும்?

 

சாம்சங் ஃபோன் வாங்க கொரியா போறேன்!

 

ஆப்பிள் பழம் வாங்க காஷ்மீர் போறேன்!

 

லேப்டாப் வாங்க சைனா போறேன்!

 

கோத்ரெஜ் சோப்பு வாங்க மும்பை போறேன்.

 

என்று சொல்லிக்கொண்டு திரிய முடியுமா?

 

ஆக, தொழிற்சாலையில் இருந்து, அந்தப் பகுதிக்கான டீலரை நியமித்து, அவர்களுக்குப் பொருளை அனுப்பி, அது அனைத்து சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டு, பின்னர் சந்தையிடுதல் நடவடிக்கையில் இறங்கினால், நினைத்த விற்பனை அருமையாக நடக்கும்.

 

ஆக, விற்பனை – சந்தையிடுதலில் விளைவுதான் என்றாலும், விற்பனையைத் திட்டமிடாமல், சந்தையிட முடியாது.

 

சில நேரங்களில் சந்தையிட்டு உடனேயே விற்பனையைத் திட்டமிடலாம். ஏனெனில் புதிய தயாரிப்பு என்றால், எந்தக் கடையும் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். அப்போது சந்தையிடுதல் முதன்மைப் பங்கு வகிக்கும்.

சந்தையிடுதல்

சந்தையிடுதல் என்றால்.. விளம்பரம் எடுத்தல் மற்றும் விளம்பரத்தை ஒளி, ஒலி அச்சு பரப்புதல் மட்டுமில்லை.

வாடிக்கையாளர் தேவையை அறிதல்,

அவர்கள் பிரச்னையைப் புரிந்துகொள்ளுதல்,

புதிய பொருளை உருவாக்கத் திட்டமிடுதல்

பொருளின் விலையை நிர்ணயித்தல்

பொருளை பொதி செய்தல்,

அதன் நிறம், பெயர் ஆகியவற்றை முடிவுசெய்தல்

எங்கு விற்பது என்று முடிவெடுத்தல்

ஆகிய எல்லாம் அடங்கும்.

ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு, வெளியேறும்போது உங்களிடம் கேட்கும் பின்னூட்டம், வாடிக்கையாளர் ஆலோசனை, ஆகியவையும் சந்தையிடுதலில்தான் அடங்கும்.

 

விற்பனை

விற்பனை என்றால்.. விற்கும் பொருளின் அளவுகளை நிர்ணயித்தல்

விநியோகஸ்தரை நியமித்தல்

கடைகளுக்குச் சென்று சேர்கிறதா என்று சோதித்தல்

விற்பனை இலக்குகளைத் திட்டமிடல்

விற்பனையை ஊக்குவித்தல்

விற்பவருக்கு ஊக்கத் தொகை அளித்தல்

கடைக்காரருக்கான சலுகைகள்

விற்காத பொருட்களை, விலை குறைத்து விற்க வைத்தல் ஆகியவை அடங்கும்.

 

சரி.. ஒரு பட்டியலாக சந்தையிடுதல் மற்றும் விற்பனையின் வித்தியாசம் பார்ப்போமா?

இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஆனால் தனித்தனியான –ஆழமான- துறைகள்.

இரண்டின் வித்தியாசமும் இப்போது ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

 

எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு தலைப்பு.

டிஸ்ரப்டிவ் மார்க்கெட்டிங் (Disruptive Marketing)

அதாவது, சந்தையில் ஒரு வழக்கம் இருக்கிறது. பல வருடங்களாக பலரும் அது தான் சிறப்பானது என்று எண்ணுகின்றனர். அதை ஒருவர்/ஒரு நிறுவனம் சடாரென்று மாற்றி வேறு ஒரு கோணத்தில் ஒரு பொருளையோ, சேவையையோ வழங்கி மொத்த சந்தையையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டு, வாடிக்கையாளர்களை எடுத்து இடுப்பில் சொருகிக் கொள்ளுவது தான் இந்த சீர்குலைக்கும் சந்தைப்படுத்துதல் ஆகும்.

 

இதற்கு சிறந்த உதாரணம் டொயோட்டா கார் நிறுவனம். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் பணம் ஈட்ட affiliate marketing ஒரு நல்ல வாய்ப்பாகும். முதலில் இது என்ன என்பதை பார்ப்போம்.

 

தொடர்புபடுத்தி சந்தைப்படுத்துதல் (Affiliate marketing)

Affiliate marketing என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தில் உள்ள பொருட்களை மற்றொருவர் விளம்பர படுதத்துவது.

எடுத்து காட்டாக.

நீங்கள் Amazon இணையதளத்தில் ஒரு குர்தாவை வாங்க விரும்புகிறீர்கள். அதே உடையை உங்கள் நண்பர்களுக்கும் பிடிக்கும் என்று அந்த லிங்கை WhatsApp மூலமாக நண்பர்களுக்கு பகிர்வீர்கள்.

நீங்கள் அனுப்பிய அந்த லிங்கை பயன் படுத்தி அவர்களும் அதை வாங்குகிறார்கள். இதனால் உங்களுக்கு என்ன பயன்? இதை லாபகரமாக எவ்வாறு மாற்றுவது?

 

லாபகரமாக எப்படி மாற்றுவது?

நீங்கள் அனுப்பிய அந்த லிங்கை அவர்கள் click செய்து அதை அவர்கள் வாங்கினால் உங்களுக்கு ஒரு லாபகரமான தொகை அந்த நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு ஒதுக்கப்படும்.

 

லிங்க் எப்படி பெறுவது?

இந்த லிங்கை பெறுவதற்கு அந்த நிறுவனத்தின் affiliate புரோகரமில் இணைய வேண்டும்.

அது தான் affiliate marketing programs ஆகும்.

Affiliate marketing programs என்று இணையத்தில் தேடினால் இது போன்று நிறைய வரும். இதில் ரெண்டு வகை உள்ளது.

1. இதை செய்ய கட்டாயம் இணையதளம் அல்லது blog அல்லது youtube இருக்க வேண்டும்.

2. இணையதளம் இல்லாமலே இதை நீங்கள் துவங்கலாம்.

எடுத்து காட்டாக

 

Amazon associate என்று எடுத்து கொள்வோம். இது தான் Amazon நிறுவனத்தின் affiliate marketing programs ஆகும்.

 

Review

Amazon associate review என்று முதலில் அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அது உண்மையா பொய்யா என்று தெளிவு படுததுங்கள். எந்த program உங்களுக்கு கிடைத்தாலும அதை பற்றி review செய்து நம்பகத்தன்மையை உறுதி செய்யுங்கள்.

 

யார் இணையலாம்?

Amazon associate இணைய உங்களுக்கு ஒரு இணையதளம்/ஒரு blog இருக்க வேண்டும்.

அதில் மாதம் ஒரு 500 பார்வையாளர்கள் முதல் இருக்க வேண்டும் .

எப்படி இணைவது?

Amazon associate sign in செய்து தேவையான விவரத்தை சேர்க்கவும். பின் உங்களுக்கு ஒரு லிங்க் தரப்படும். அதுவே உங்களுக்கு லாபம் ஈட்டி தரும் லிங்க் ஆகும்.

இந்த லிங்கை blog WhatsApp YouTube என்று எதில் வேண்டுமானாலும் விளம்பர படுத்தி பணம் ஈட்டலாம்.

எடுத்துகாட்டாக

இது போன்று விளம்பர படுத்தலாம்.. இந்த லிங்கை பயன்படுத்தவும்.

FavouriteHandbagonline

blog உருவாக்குவது இப்பொழுது மிக எளிமையாகி விட்டது.

 

இணையதளம் இல்லாதவர்கள் எப்படி இணைவது?

Affiliate marketing programs without website என்று தேடினால் பல முடிவுகள் கிடைக்கும்.

இதில் நீங்கள் ஒன்றை தேர்வு செய்து அதை பற்றி இணையத்தில் அந்த நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அதில் sign up செய்து உங்களுக்கு கிடைக்க கூடிய லிங்கை பயன்படுத்தி விளம்பரம் செய்யலாம்.

எடுத்து காட்டாக

தமிழர்நலம் apps

இதில் நீங்கள் இணைந்து உங்களுக்கான affiliate லிங்க் பெறலாம். அதை நண்பர்களுக்கு share செய்து அதை யார் click செய்து பொருள் வாங்கி transaction செய்கிறார்களோ அதை பொறுத்து உங்களுக்கும் லாபம் கொடுக்கப்படும்.

இதற்கு எந்த விதமான இணையதளம் தேவை இல்லை.

குறைந்த பட்சம் WhatsApp இருந்தாலே போதும்.

எதையும் முதலில் நம்பிக்கையுடன் செய்ய ஆரம்பித்து பொறுமையுடன் முயற்சி செய்யுங்கள். பலன் நிச்சயம் கிட்டும்.

Affiliate marketing ஆனது மிகப் பழமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகளில் ஒன்று. ஒரு நிறுவனம் அவர்களது பொருட்களை ஆன்லைனில் விற்கும் பொழுது அதனை உங்களின் மூலமாக வேறொருவருக்கு விற்றால் அதற்கான ஒரு பங்கு (கமிஷன்) உங்களுக்கு கிடைக்கும். இந்த பங்கானது 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும்படியாக இருக்கும். அது நீங்கள் விற்பனை செய்து கொடுக்கும் பொருளை பொருத்தது. ஒரு பொருளை விற்றால் அதன் பங்காக பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதே பொருளை 10 பேருக்கு விற்றால் 100 ரூபாய் வரைக்கும் உங்களுக்கு கிடைக்கும்.

Affiliate marketing ஆனது கீழ்க்கண்ட நான்கு வழிகளின் மூலமாக எப்படி நடக்கிறது என்பதை அறியலாம்.

 

1. முதலில் ஏதாவது ஒரு Affiliate program - ல் Sign up செய்து கொள்ளவேண்டும். ( list of Affiliate programs).

 

2. பிறகு ஏதேனும் ஒரு பொருளை தேர்வு செய்து அதனை விளம்பரம் (promote) செய்ய வேண்டும். அதற்க்கென அந்தப் பொருளின் லிங்க்கினை கொடுப்பார்கள்.

 

3. அந்த லிங்கினை நீங்கள் சமூக வலைதளங்கள், பிளாக், யுடியூப் வீடியோஸ், பேஸ்புக் அல்லது வேறு எந்த வழிகளின் மூலமாகவும் ஷேர் செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.

 

4. அந்த link -னை பயன்படுத்தி யாராவது பொருளை வாங்கினால் அதற்கான பங்கு(கமிஷன்) உங்களுக்கு கிடைக்கும்.

 

நீங்கள் இந்தியாவில் Amazon, flipkart போன்ற தளங்களின் மூலம் affiliate marketing செய்யலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம் 

வணிகம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் : டிஜிட்டல் மார்க்கெட்டிங் - ன் முக்கியத்துவம் - குறிவைத்து சந்தைப்படுத்தல், விற்பனை [ வணிகம் ] | Business: Digital Marketing : Importance of Digital Marketing - Targeted Marketing in Tamil [ Business ]