161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.
அழுக்காறாமை
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
தன் உள்ளத்தில் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.
162. விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
யாரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருப்பதே மிகச்சிறந்த நன்மைக்கு ஒப்பாகும்.
103. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
அறத்தையும் ஆக்கத்தையும்
வேண்டாதவன் என்பவனே பிறன் பெற்ற செல்வத்தைக் கண்டு பொறாமைப்படுவான்.
164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
பொறாமையால் துன்பம்
வரும் என்பதையறிந்து, அறிவுடையோர், பிறர் மீது பொறாமையால்
தீங்கு செய்யமாட்டார்கள்.
165. அழக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.
பொறாமை கொண்டவருக்குப்
பகைவர் கேடு செய்ய வேண்டியதில்லை; அப்பொறாமையே கேட்டினை
உண்டாக்கும்.
166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
பிறருக்கு கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவன். சுற்றத்தாருடன் தானும், உணவும் உடையும் இன்றி துன்பம் அடைவான்.
167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பொறாமை உடையவனை விட்டுத் திருமகள் நீங்கி விடுவாள். அவனிடம் மூதேவி
குடிகொள்வாள்.
168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
பொறாமை குணமாகிய பாவச் செயல். செல்வத்தை அழித்துத் துன்பத்தில் ஆழ்த்தி விடும்.
169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொறாமை உள்ளவன் செல்வனாக வாழ்வதனையும் நன்னெறியாளன் கேடுற்று அழிவதையும் சிந்திக்க வேண்டும்.
170. அழக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பொறாமையால் பெருமை
அடைந்தவர்களும் இல்லை. பொறாமையற்றவர் பெருமையில் இருந்து தாழ்ந்ததும் இல்லை.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
திருக்குறள்: பொருளடக்கம் : அழுக்காறாமை - அதிகாரம்: 17 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Impurity - Authority: 17 in Tamil [ Tirukkural ]