வாழ்க்கை என்பது.. நாம் சரி என்று ஒன்றை நினைத்து, செய்யப் போனால்.. அது உன்னுடைய முதல் தவறு என்றும்,- இப்படித்தான் நீ மாற வேண்டும் என்று நம்மை கட்டாய வழியில் வேறு திசையில் இழுத்துச் செல்வதாகவும் இருக்கும்! காலம் இழுத்துச் செல்லும் திசையிலேயே பயணம் செல்வதுதான்.. மனித வாழ்க்கையின் நடைமுறை என்று பலர் வாழ்க்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கிறது! இது அடித்துச் செல்லும் வேகத்தில்.. மனம் வெகுண்டு, மிரண்டு, போனவர்களும் உண்டு. ஓரளவுக்கு தன்னை ஆசுவாசப்படுத்தி 'வருத்த' கடலில் இருந்து கரை சேர்ந்தவர்களும் உண்டு. உதாரணமாக.. தாம் விரும்பியது போல வாழ்க்கை இணை கிடைத்திருக்க மாட்டார். ஆனாலும் அவருடன் மகிழ்ச்சியாக 80 வயது வரை வாழ்ந்து கொண்டிருப்பார்! வாழ்க்கை என்பது இதுதான் இப்படித்தான்! ஆனாலும்.. நமது விருப்பம் போலவும், வாழ முடியும்! எப்படி? எந்த வாழ்க்கை போராட்டங்களையும், கஷ்ட நஷ்டங்களையும், நாம் துணிச்சலோடு எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல்.. எதிர்கொள்கிற சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக உருவாக்கிக் கொள்ளும் திறமையையும் வளர்த்துக் கொண்டால்… அப்போது முடியும்! அதாவது.. நம்மில் ஒவ்வொருவருக்கும்.. சாதிக்க வேண்டும் என்ற சபதம் வேண்டும் ! வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும். வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு வேண்டும்! அடைவதற்கு ஒரு லட்சியம் என்பது வேண்டும்! வாய்ப்பு? வாய்ப்பு? எங்கே? எங்கே? என்று தேடுகிற தாகம் வேண்டும்!
வாழ்க்கையில்-நாம் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான
முடிவுகள்..என்ன?
வாழ்க்கை என்பது.. நாம் சரி என்று ஒன்றை நினைத்து, செய்யப் போனால்.. அது உன்னுடைய முதல் தவறு என்றும்,-
இப்படித்தான் நீ மாற வேண்டும் என்று நம்மை கட்டாய
வழியில் வேறு திசையில் இழுத்துச் செல்வதாகவும் இருக்கும்!
காலம் இழுத்துச் செல்லும் திசையிலேயே பயணம் செல்வதுதான்..
மனித வாழ்க்கையின் நடைமுறை என்று பலர் வாழ்க்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கிறது!
இது அடித்துச் செல்லும் வேகத்தில்.. மனம் வெகுண்டு, மிரண்டு, போனவர்களும் உண்டு. ஓரளவுக்கு தன்னை ஆசுவாசப்படுத்தி
'வருத்த' கடலில் இருந்து கரை சேர்ந்தவர்களும் உண்டு.
உதாரணமாக.. தாம் விரும்பியது போல வாழ்க்கை இணை
கிடைத்திருக்க மாட்டார். ஆனாலும் அவருடன் மகிழ்ச்சியாக 80 வயது வரை வாழ்ந்து
கொண்டிருப்பார்! வாழ்க்கை என்பது இதுதான் இப்படித்தான்! ஆனாலும்..
நமது விருப்பம் போலவும், வாழ முடியும்! எப்படி? எந்த வாழ்க்கை போராட்டங்களையும், கஷ்ட நஷ்டங்களையும், நாம் துணிச்சலோடு எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல்.. எதிர்கொள்கிற சூழ்நிலைகளை நமக்கு
சாதகமாக உருவாக்கிக் கொள்ளும் திறமையையும் வளர்த்துக் கொண்டால்… அப்போது முடியும்!
அதாவது.. நம்மில் ஒவ்வொருவருக்கும்..
சாதிக்க வேண்டும் என்ற சபதம் வேண்டும் !
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்.
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு வேண்டும்!
அடைவதற்கு ஒரு லட்சியம் என்பது வேண்டும்!
வாய்ப்பு? வாய்ப்பு? எங்கே? எங்கே? என்று தேடுகிற தாகம் வேண்டும்!
உணவு உறக்கம் இவற்றைக் கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு
வேண்டும்!
அடி மேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும்
துணிச்சல் வேண்டும்!
தொடர்ந்து எந்த வகையிலும் 'பலங்களை' கூட்டிக் கொள்ளும் பழக்கம் வேண்டும்!
சூழ்நிலைக்கு தகுந்தபடி அனுசரித்து செல்லும் மனமும், குணமும், வேண்டும்!
விமர்சனத்தை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும்
பக்குவம் வேண்டும்!
அறிவு, ஆற்றல், ஆதரவுகள், அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் அறிவு வேண்டும்!
குறிக்கோள்களை நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை
அதிகமாய் ஒதுக்கும் அக்கறை வேண்டும்!
கடமைகள் காத்து கிடக்க பொழுது போக்குவதை தள்ளி
வைப்பதில் புத்தியை செலுத்தும் பொறுப்பு வேண்டும்.
நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்பதை அளந்து
அறியும் ஆர்வம் வேண்டும்!
இவைகள் அத்தனைக்கும் அடிப்படையாய், ஆணிவேராய், அசைக்க முடியாத தன்னம்பிக்கை என்பது மிக
முக்கியமாகவேண்டும்!!
வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான
முடிவுகள்.. இப்படியாகத்தான் இருக்க வேண்டும்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : வாழ்க்கையில்-நாம் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான முடிவுகள்..என்ன - குறிப்புகள் [ ] | Life journey : In life-the wisest decisions we have to take..what - Notes in Tamil [ ]