சீர்காழிக்கு அருகில் உள்ள திருவெண்காடு திருத்தலத்து இறைவன் திருவெண்காட்டீசர் இங்கு தன் உடலின் பல பகுதிகளில் காயம்பட்ட நந்திதேவரைக் காணலாம்.
காயம் பட்ட நந்தி தேவர்!
சீர்காழிக்கு அருகில் உள்ள திருவெண்காடு
திருத்தலத்து இறைவன் திருவெண்காட்டீசர் இங்கு தன் உடலின் பல பகுதிகளில் காயம்பட்ட நந்திதேவரைக்
காணலாம்.
மருத்துவன் என்ற அசுரன் பிரம்மனிடம்
வரம் பெற்று. தேவர்களுக்குத் தொல்லை தந்ததால் அவர்கள் திருவெண்காட்டில் வந்து மறைந்து
வாழ்ந்தனர். இங்கும் வந்து மருத்துவன் தொல்லை தந்து துன்புறுத்தவே, தேவர்கள் சிவனிடம் முறையிட,சிவன் நந்திதேவரை அகரனுடன் போரிட அனுப்பி
வைத்தார்.
போரில் நந்திதேவரை அசுரன் சூலாயுதத்தால்
தாக்க, நந்தி தேவரின் உடம்பில் பல இடங்களில்
காயங்கள் ஏற்பட்டன. இறுதியில் அசுரன் வீழ்ந்தான். இப்படிக் காயம்பட்ட நிலையிலேயே நந்திதேவர், திருவெண்காட்டீசர் சன்னிதியில் தரிசனம்
தருகிறார்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : காயம் பட்ட நந்தி தேவர்! - திருவெண்காட்டீசர் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Injured Nandi Dev! - Thiruvenkatiser in Tamil [ spirituality ]