தன்னம்பிக்கை இன்றி இருப்பவரா?

குறிப்புகள்

[ அனுபவம் தத்துவம் ]

Insecure? - Tips in Tamil

தன்னம்பிக்கை இன்றி இருப்பவரா? | Insecure?

♦ நீங்கள் மன்னிக்கக் கற்றுக் கொண்டால், உங்களிடம் உறங்கிக் கிடக்கும் திறமைகள் வெளிப்படும்♦ ♦ முன்னர் நீங்கள் கற்பனை செய்ததை விட , மிக வலுவான மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள் காண்பீர்கள்♦

தன்னம்பிக்கை இன்றி இருப்பவரா?

நீங்கள் மன்னிக்கக் கற்றுக் கொண்டால், உங்களிடம் உறங்கிக் கிடக்கும் திறமைகள் வெளிப்படும்

 

முன்னர் நீங்கள் கற்பனை ெய்ததை விட , மிக வலுவான மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள் காண்பீர்கள்

 

ஆகவே வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும், ஆனா‌ல் அதே சமய‌ம் பின்னோக்கியு‌ம் பார்க்க வேண்டும்

 

எதி‌‌ரி என்று யாரையு‌ம் எண்ணி‌க் கொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள்

 

அவ‌ர்களது செய‌ல் உ‌‌ங்களைத் து‌ன்புறு‌த்‌தினா‌ல் அவ‌ர்களுடனான தொட‌ர்பைக் குறை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்

 

அவ‌ர்களைப் ப‌ழி வா‌ங்கவோ, த‌ண்டனை அளிி‌க்கவோ முயல வே‌ண்டா‌ம்

 

ம‌ற்றவ‌ர்களைக் காய‌ப்படு‌த்து‌ம் வா‌ர்‌த்தைகளைப் பிரயோ‌கி‌க்கா‌தீ‌ர்க‌ள்

 

கு‌ற்ற‌ம் பா‌ர்‌க்‌கி‌ன் சு‌ற்ற‌ம் இல்லை

 

ஒவ்வொருவ‌ர் இடமு‌ம் கு‌ற்ற‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ந்தா‌ல் உறவுக‌ள் இரு‌க்காது👍

 

🩸எண்ணெயில் பொரித்தெடுத்த பெரிய அப்பளம் போல்,

மேல்வாரியாகப் பார்ப்பதற்கு அழகாய்த் தான் தெரிகிறது இந்த வாழ்க்கை🩸

 

🩸ஆனால் நோயும், துன்பமும், இடையூறுகளும்

சிறு அழுத்தம் கொடுத்தாலோ விழுந்த விரிசலை ஒட்ட வைக்கவே மிச்சமிருக்கும் வாழ்நாட்கள் போராட்டமாக மாறி விடுகிறது🩸

 

🩸வாழ்க்கைப் போராட்டத்தை தேரோட்டமாக வடிவமைப்பது நம் கையிலே🩸

 

🩸எப்படினா வாழ்க்கையில் வெற்றி பெற🩸

 

🩸சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்🩸

 

🩸வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதில் விடாமுயற்சி இருக்க வேண்டும்🩸

 

🩸வென்று காட்ட வேண்டும் என்ற பிடிவாதம் இருக்க வேண்டும்🩸

 

🩸அடைவதற்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க

வேண்டும்🩸

 

🩸அந்தக் குறிக்கோள்களில் ஒரு தீவிரம் இருக்க வேண்டும்🩸

 

🩸ஆம், எந்தச் சூழலிலும் துணிவாக முடிவெடுப்பதும், தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்👍

 

நம்மை நிராகரிக்கப்பட்ட இடத்திலிருந்து... நாம் தவிர்க்கப்படாத சக்தியாக உருவெடுப்பதுதான் உண்மையான வெற்றி...🏆  🎯🎯🎯🎯🥇🎯🎯🎯🎯  இந்த ஆண்டு உங்களுக்கு கோடீஸ்வர ஆண்டாக அமையும்... வாழ்த்துக்கள்...

🥇💸🥇💸🥇💸🥇💸🥇

 

பலமுறை முயற்ச்சி செய்தும் முன்னேற்றமில்லை என்றான பின்

 

இது நமக்கு சரி வராது என முடிவெடுப்பது

தோல்வி இல்லை

 

அது தான் அனுபவப்பாடம்.

 

வலிகளையும் ஏமாற்றங்களையும் கொடுத்தவங்கள எப்பவும் மறக்காதீங்க...

வைராக்கியம் பிறக்கும்.

 

ஈஃபிள் டவரில் வசித்த பல்லிகள் ஓட்டப் பந்தயம் நடத்தின. யார் முதலில் டவரின் உச்சியை அடைவது என்று போட்டி. நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின. கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது, இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.

 

“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டன.

 

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன. “உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது”.

 

ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது. கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின. “தற்கொலை முயற்சிடா தருதலை..!”.

 

எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.

 

எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது. அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது. “அவனுக்கு காது கேட்காது”.

 

நாமும் சில நேரங்களில் இப்படி தான் இருக்க வேண்டும். வெற்றியை எட்ட நினைப்பவர்கள்  எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. நம்மை சிதைக்க எப்பேர்ப்பட்ட மோசமான கருத்துக்கள் கூறப்பட்டாலும் நாம் எதையும் பொருட்படுத்தக் கூடாது. முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

 

‘’வாழ்க்கை கணக்கு...’’

 

கணிதம் இந்த உலகத்தில் அக்காலத்திலும் இக்காலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

அறிவு சார்ந்த எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் கணிதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும் நுணுக்கத்திற்கும் கணிதமே முக்கிய வழி காட்டுதலாகத் திகழ்கிறது.

 

கணிதம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரியதல்ல. அது நம் அனைவருக்கும் அவசியமானது.

 

ஷாப்பிங் செய்கையில், வீட்டை அலங்கரிக்கையில் அல்லது தினசரி வானிலை அறிக்கையைக்  கேட்பதில் நீங்கள் கணிதத்தை உபயோகிக்கிறீர்கள் அல்லது அவற்றில் இருந்து பயன் அடைகிறீர்கள்.

 

கணிதம் உப்பு சப்பில்லாதது, அன்றாட வாழ்க்கைக்கு உதவாதது என்று அநேகர் நினைக்கின்றனர். நீங்களும் அப்படித் தான் நினைக்கிறீர்களா?

 

கணிதம் எந்தளவுக்கு உபயோகமானதாக, எளியதாக, கவர்ச்சியானதாக இருக்க முடியும் என்பதை இப்போது ஆராயலாம்.

 

"கணிதம் என்பது பொதுவானதொரு மொழியாகும்"

நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின்

நடவடிக்கைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே, அல்லது ஏதேனும் ஒன்றில் சிறிதளவாயினும் திறைமைசாலியாகவோ இருப்பதை நாம் காணலாம்.

 

ஆனால்,பொதுவாக கணிதக் கலையானது அனைவரின் அன்றாட வாழ்வில் இணை பிரியாததாக உள்ளது,

 

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,

 

• கூட்டல்

• கழித்தல்

• பெருக்கல்

• வகுத்தல்

 

இந்த  நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக் கனியாகவே வைத்துக் கொள்ளலாம்.எப்படி என்று பார்ப்போம்..

 

கூட்டல்-

 

நல்ல பழக்க வழக்கங்களை

மேற்கொள்ளுங்கள்.,

 

கழித்தல்-

 

கெட்ட செயல்களைத் தவிருங்கள்..

 

பெருக்கல்-

 

நியாய முறையில் பணத்தை ஈட்டுங்கள். (இதனால் மனமகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது..

 

வகுத்தல்-

 

காலத்திற்கு ஏற்றாற் போல் நேரத்தைத் திட்டமிடுங்கள்.

 

இந்த  நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யுங்கள்..

 

ஆம்.,தோழர்களே..,

 

இக்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழப் பழகிக் கொண்டால், எந்நாளும் பொன்னான நாளாக மாற்றிக் கொள்ளலாம்.

 

மகிழ்ச்சி என்பது நமது சுற்றுச்சூழல் தருகின்ற கொடை அல்ல...

 

 

உள்ளிருந்து

கிளம்ப வேண்டிய ஊற்று.

 

இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து நாளை தீர்மானித்து விடாதே.

 

 

ஏன் என்றால்,

உன்னை படைத்த கடவுளுக்கு உன் நிலையை மாற்ற ஒரு வினாடி போதுமானது.

 

கவலைகளை

மறக்க....

 

மழலைகளின்

முகத்தை விட...

 

சிறந்த மார்க்கம்

வேறொன்றும் இல்லை.!!

 

தான் நேசிப்பவரிடம் எதிர்ப்பார்ப்பதை போலவே

 

 

தன்னை நேசிப்பவரிடமும்

கொடுக்கப்பட வேண்டியது

 

 

உண்மை.......!!

 

வலிகளை கொட்டித் தீர்க்க வேறு வழிகளே இல்லாத

போது..............

 

அநாதைகளாக்கப்பட்டது போல் உணர்கிறார்கள்...............!!

 

பிரிவென்பது..!

 

பழத்த இலையொன்று

கிளை நோகாமல்

உதிர்ந்து

காற்றில் தவழ்ந்து

மண் சேர்ந்து

கண் மூடுமே...

 

அவ்வாறு

இருக்க வேண்டும்..!

எண்ணங்கள் சிதறாத வரை

நம் வாழ்வு வண்ண

மயமாய் இருக்கும்..

 

வெற்றிக்கு எந்த ஒரு

குறுக்கு வழியும் இல்லை..

 

நாம் தான் நடந்து, நடந்து அதற்கான புது வழியை..

 

உருவாக்க வேண்டும்!

 

நமது கண்கள் சரியாக இருந்தால் இந்த உலகத்தை நமக்குப் பிடிக்கும்.................

 

நமது நாக்கு சரியாக இருந்தால் இந்த உலகத்துக்கு நம்மைப் பிடிக்கும்.....................!!

 

☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

 

☘ பாராட்டு, விமர்சனங்கள், பழி இவற்றை காதில் வாங்காமல்  நகருங்கள். காதில் வாங்கினால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தவற விடுவீர்கள்.

 

துவங்கும்போது தூரத்தை பார்க்காமல் இலட்சியத்தைப் பாருங்கள் . திரும்பும்போது இலட்சியத்தைப் பார்க்காதீர்கள். கடந்து வந்த (லி)ழியைப் பாருங்கள்.

 

தழும்புகள் காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல. அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக.

 

உயர்ந்த நிலையை அடைந்தாலும், தொடங்கிய இடத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

அனுபவம் தத்துவம் : தன்னம்பிக்கை இன்றி இருப்பவரா? - குறிப்புகள் [ ] | Philosophy of experience : Insecure? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்