ஒருவன் நம்மை மதிக்கவில்லையென்று நினைப்பதை விட மதிக்கிற அளவிற்கு அவன் இன்னும் வளரவில்லையென கடந்துசெல்..
உத்வேக வார்த்தைகள்
ஒருவன் நம்மை
மதிக்கவில்லையென்று நினைப்பதை விட
மதிக்கிற அளவிற்கு அவன்
இன்னும் வளரவில்லையென கடந்துசெல்..
மனதில் உறுதியான
தீர்மானம் இருந்தால் முடியாத காரியமும் முடியக் கூடியதாக அமையும். மன உறுதி
இல்லாதபோது முடியக் கூடியதும் முடியக் கூடாததாக மாறிவிடும்
செயலை விதையுங்கள்
பழக்கம் உருவாகும்
பழக்கத்தை விதையுங்கள்
பண்பு உருவாகும்
பண்பை விதையுங்கள்
எதிர்காலம் உருவாகும்.
ஆணின் கண்ணீரும் மீனின்
கண்ணீரும்............
வெளி உலகின் பார்வைக்கு
வருவதே இல்லை.
சிலருக்கு விடை
தெரியாது........
பலருக்கு வினா
தெரியாது.........
இருந்தும் தொடர்
தேர்வுகள் வாழ்க்கை.
எப்படி வாழணும்
என்பதையும்............
இப்படித்தான் வாழணும்
என்பதையும் தீர்மானிப்பது..........
பணமல்ல மனம்.
மௌனம் திமிர்
அல்ல.........
மறைந்திருக்கும்
வலி........
அவர்களிடம் பேசி பாருங்க
அழ வச்சிடுவாங்க .
நீ யாருக்காக
எல்லாவற்றையும் இழக்குகிறாயோ...
நீ யாருக்காக
எல்லாவற்றையும் செய்கிறாயோ...
அவங்க வாழ்க்கையில
ஒரு கட்டத்துக்கு மேல
உன்னை ஒரு ஆளா கூட
மதிக்கவே மாட்டார்கள்.
முதுகெழும்பில்லாத
ஆண்மைகளின் கோழைத் தனமே..........
பல பெண்களின் வாழ்க்கை நிர்க்கதியாக காரணம்.
☘ உங்களை புரிந்து
கொள்ளாதவர்களிடத்தில் நீங்கள் நேர்மையான வாதங்கள் எத்தனை வைத்தாலும் தீர்ப்புகள்
உங்களுக்கு
சாதகமாக இருக்காது.
☘ அவர் உங்களை
மதிக்கவில்லை என நினைப்பதும் தவறு. அவருக்கு உங்கள் மதிப்பு தெரியவில்லை என்பதே
உண்மை.
☘ உங்களுடைய மௌனத்தைச்
சரியாக எவரால் மொழிபெயர்க்க முடியுமோ, அவருக்கு மட்டுமே உங்களுடைய மனதைப் பிடிக்கும் சக்தி
உண்டு.
☘ யாருக்கும் உங்களை
கணிக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு உங்களைப் பற்றிய வதந்திகளே அதிகம்
தெரிந்திருக்குமே, தவிர வலிகளை அல்ல.
☘ வதந்திகளை உருவாக்குவது
எதிரிகளின் வேலை பரப்புவது முட்டாள்களின் வேலை. அதனை புறம் தள்ளிவிட்டு கடந்து
செல்லுங்கள்.
மனிதன் தனது சிந்தனையின்
மூலமாக ஒவ்வொருவருடைய தேவைகள் அறிந்து ஒவ்வொரு இயந்திரத்தை, வேறு வேறு வாகனத்தை
உருவாக்கியது போல
இறைவன் இவ்வுலக இயக்கம்
நடைபெறுவதற்காக ஒவ்வொரு உயிரினத்தையும் படைத்தான் என்பதே உண்மையாகும்.
எனவே ஒவ்வொரு
விலங்கிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. ஒரு ஆற்றல் இருக்கிறது.
அது சிந்தனையால்
வந்ததல்ல, எண்ணங்களால் வந்ததல்ல, அது ஒவ்வொரு
உயிரினத்துக்கும் தனித் தன்மையானது.
அதுவே இயற்கை அதுவே
கடவுள். அதுவே இறைவன் அதுவே விதி. என்று அழைக்கப்படுகிறது.
அடுத்தாக மனிதப்
பிறவிக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அம்சமான சிந்திக்கும் ஆற்றலைப் பார்க்கலாம்.
ஐம்புலன்களின் மூலமாகப்
பெறப்படும் தகவல்களை ஆராய்ந்து சிந்தித்து செயலாற்றும் ஆற்றல் மனித குலத்துக்கு
மட்டுமே உள்ளது.
கடந்த காலத்தில்
நடைபெற்ற சம்பவங்கள் மூலமாக பெற்ற அனுபவ சிந்தனைகளையும் எதிர்காலத்தில் என்ன
நடக்கும் என்ற எதிர்வு கூறல் சிந்தனைகளையும் அலசி ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும்
ஆற்றல் மனித குலத்துக்கு மட்டுமே உரித்தானது.
கடந்த கால அனுபவங்கள்
என்று கூறும்பொழுது ஒருவனுடைய கடந்த கால அனுபவங்களுடன் அதாவது அவனது குழந்தைப்
பருவத்திலிருந்து பெற்ற அனுபவங்களுடன்
அவனுடைய முற்பிறப்பு
அனுபவங்களும் அடங்குகின்றது என்பதுவும் மறுக்க முடியாத உண்மையாகும்.
மலை போல் அறிவு இருந்தாலும்
பொறுமைக்கு ஈடாகாது. கடல் போல் பணம் இருந்தாலும் அன்புக்கு ஈடாகாது.
முடிந்து போனதை கனவாக
நினைத்துக் கொள்ளுங்கள். நடக்கப் போவதை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அனைத்தின் மீதும் நாம்
நன்றி உணர்வுடன் நடந்து கொண்டால் நம் வாழ்க்கை நிச்சயம் அற்புதமாக மாறி விடும்.
எது எல்லாம் நமக்கு
வலியை தருகிறதோ
அதை எல்லாம் நம்
வலிமையாக மாற்றிக் கொள்வோம் எனில் நம் வாழ்க்கையில் அனைத்தும்
நேர்மறையாகவே இருக்கும்.
எந்த இடத்திலே எந்த
காலத்திலே எந்த நோக்கத்தோடு எந்த செயலை நீங்கள் எவ்வளவு திறமையாக செய்கிறீர்களோ
அதற்குத் தகுந்தவாறே நமக்கு விளைவும் வரும் வெற்றியும் வரும்.
ஒரு விஷயத்தை தொடங்குவது
எளிது. ஆனால் விஷயத்தின் முடிவு விரும்பிய படி வேண்டுமெனில் கடின முயற்சியே தீர்வு.
கவலைப் படுவது காலத்தை
விரயமாக்கும். அது எதையும் மாற்றாது. அது மனதை குழப்பி உங்கள் அமைதியையும்
மகிழ்ச்சியையும் திருடி விடும்.
ஒவ்வொருவர்
வாழ்க்கையிலும் தோல்வி, துயரம், இழப்பு, ஏமாற்றம், அவமானம் இருக்கும். அதை அமைதியாக திறமையாகக் கையாண்டால் வெற்றி, மகிழ்ச்சி, புகழ், நிம்மதி அனைத்தும்
கிடைக்கும்.
தினமும் ஆர்வமுடன்
சலிக்காமல் செய்யும் சிறு சிறு முயற்சிகள் இறுதியில் பெரிய வெற்றியைத் தரும்.
☘ கடற்கரைக்கு வரும்
அலைகள் தொடர்ந்துப் போராடிக் கொண்டே தானே இருக்கின்றது...
☘ தன் கரையை கடப்பதும்
இல்லை,கடந்தால் விட்டு
வைப்பதும் இல்லை...
☘ உனக்கு ஏற்படும்
தோல்விகளோடு,
தொடர்ந்துப் போராடிக்
கொண்டே இரு..
☘ தோல்விகள் தோற்கட்டும்
உன்னிடம்..
முயற்சிகளோடு நீ
செயல்படு...
வெற்றி நிச்சயம்!
தனது நிறை, குறைகளைத் தானே
வடிவமைத்துக் கொள்பவன்
தான்
வாழ்க்கையில் வெற்றி
பெறுகிறான்!!
எல்லாம் தெரியும்
என்பவர்களை விட.
என்னால் முடியும் என்று
முயற்சிப்பவர்களே
வாழ்க்கையில் வெற்றி
பெறுகிறார்கள்
நாக்கு என்பது
பற்களுக்குப் பின்னால்.....
சிறைப்பட்ட ஒரு
குற்றவாளி.
நிலவுக்கே
போய் பார்த்து
சொன்ன பிறகுதான்
புரிந்தது
தூரமாய்
இருந்து
பார்த்தால்தான்
எல்லாம் அழகு என்று
உழைத்து வாழ்பவர்களின்
வாழ்க்கை வளர்பிறை போல வளர்ந்து கொண்டே
செல்லும்.
சோம்பேறிகளின்
வாழ்க்கைத் தேய்பிறை போலக் குறைந்து கொண்டே செல்லும்.
உழைப்பே உயர்த்தும், உழைப்பு மட்டுமே உங்களை
உயர்த்தக் கூடிய சக்தி.
எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும்
கொண்டதே, எளிமையான வாழ்க்கை.
சேர்ப்பது மிகக் கடினம், செலவு செய்வது மிக எளிது, பணம் மட்டும் அல்ல, அடுத்தவர் உள்ளத்தில்
நாம் சேர்த்து வைக்கும் நல்லெண்ணம் கூட.
நாம் நினைக்கும்
எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
அந்த நேர்மறை எண்ணங்கள்
நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.
நம் எண்ணம் ஒருநாள்
செயலாகும் போது தான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும்.
நாம் எதுவாக
நினைக்கிறோமோ அதுவாக மாறி விடுவோம். வெற்றி நிச்சயம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : உத்வேக வார்த்தைகள் - குறிப்புகள் [ ] | self confidence : Inspirational words - Tips in Tamil [ ]