* உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன. * இந்தியாவில் 4 வகையான கரடிகள் உள்ளன.
கரடிகளைப் பற்றிய சுவாரசியமான உண்மைகள்:
Information about Sloth bears*
* உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன.
* இந்தியாவில் 4 வகையான கரடிகள் உள்ளன.
* கரடிகளுக்கு கரையான்
புற்றுகள் எறும்பு புற்றுகள் தோண்டி எடுக்கும் வகையில் இயற்கையாகவே நகங்கள்
வலிமையாக இருக்கும்.
* கரடிகளின் கால் பாதங்கள்,
மூக்கு துவாரங்கள், தாடைகள் வித்தியாசமான உருவ
அமைப்பு கொண்டவை.
* இரவு நேரங்களில் இரை
தேடினாலும், சூரிய ஒளி முன்பாக அல்லது பின்பாக காலை மாலை
நேரங்களிலும் இரை தேடும்.
* இனப்பெருக்க காலங்களில்
குறிப்பாக டிசம்பர் காலத்தில் குட்டியை ஈன்றெடுக்கும்,
* தனது குட்டியை இரண்டு
வருடங்கள் பாதுகாக்கும்.
🐻 கரடியை நாம் எதிர் கொண்டால்...
வனவிலங்குகளில் மிகவும் கொடூரமான ஆபத்தான ஒரு விலங்கு என்றால் அது கரடி
என்பது மிகையல்ல... கொடிய விலங்கு கரடியே...
நேருக்கு நேர் கரடி இருந்தால்...
🐻 நாம் ஓடினால் கரடி நம்மை
விட வேகமாக ஓடும்.
🐻 நாம் மரம் ஏறி தப்பிக்கலாம்
என முயன்றால் கரடி நம்மை விட சுறுசுறுப்பாக மரம் ஏறும்.
🐻 நாம் குளம், குட்டை போன்ற நீர்பகுதிகளில் குதித்து நீந்தி தப்பலாம் என்றால் கரடி நம்மை
விட வேகமாக நீந்தும்
ஏனினும், சில ஐடியாக்கள் உள்ளது ( இது
வெற்றி பெறலாம் அல்லது தோல்வியில் முடியலாம்)
* கரடி நடமாட்டம் இருக்கும்
பகுதிகளில் தனிமையில் செல்வது ஆபத்து.
* கூட்டமாக சத்தமிட்டபடி,
கூச்சலிட்டப்படி சென்றால் கரடி நம்மை விட்டு சென்றுவிடும்.
* வனபகுதியில் தனிமையில்
செல்ல நேரிடும் போது கரடி நம்மை பார்க்காமல், நாம் கரடியை
கண்டால்... ஓசையின்றி அமைதியாக பின்னோக்கி நடக்கவேண்டும். தொலைவில் வந்த பிறகு ஓடி
தப்பிக்க வேண்டும்.
* ஒருவேளை கரடியும் நாமும் நேருக்கு நேர் எதிர்கொண்டால், எநத ஆரவாரமுமின்றி சிலை போல அமைதியாக நிற்கவேண்டும். இதனால் கரடி நம்மை
விட்டு விலகி செல்ல வாய்ப்புள்ளது.
* ஒருவேளை கரடி தாக்க
வருவதாக உணர்ந்தால் நாம் கையை மேலே தூக்கி பயங்கரமான சத்தமிடும் பட்சத்தில் கரடி
பயந்து சென்றாலும் செல்லலாம் (இது உறுதி இல்லை)
🐻 எல்லாவற்றையும் விட கரடியை நம் அருகில்
தாக்கும் வெறியோடு வந்தால்...
நாம் செத்த பிணம் போல நடிக்க வேண்டும்.
அதுவும் கரடி முகத்தையும் கழுத்தையும் முதலில் தாக்கும் என்பதால்...
கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு (கண்ணை நோண்டி
எடுக்கும்) கையை கழுத்தில் கோர்த்து, முட்டியை முகத்திற்கு அருகே கொண்டு வந்து சுருண்டு
செத்த பிணம் போல கிடக்க வேண்டும்.
இது ஓரளவுக்கு பலன் தரும், ஒருவேளை கரடி தாக்கினாலும்,
உயிர் பிழைக்க அதிக வாய்ப்பிருக்கும்.
கரடி புலியுடனே சண்டையிடும் கொடிய விலங்கு
என்பதால், நாம் ஒரு போதும் கரடியுடன்
மல்யுத்தம் செய்து பிழைக்க முடியாது... ஆனாலும் இந்தக் கரடியானது காட்டிற்கு மிக அவசியம் மட்டுமல்ல கரடிகள்
பாதுகாக்கப்பட வேண்டும் ஒரு விலங்கு ஆகும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
சுவாரஸ்யம்: தகவல்கள் : கரடிகளைப் பற்றிய சுவாரசியமான உண்மைகள் - குறிப்புகள் [ தகவல்கள் ] | Interesting: information : Interesting facts about bears - Tips in Tamil [ information ]