ஒவ்வொரு வருடமும் தசரா விழாவிற்கு பிறகு வரும் 21 நாட்களுக்கு பின்னே தீபாவளி ஏன் வருகிறது?
தீபாவளி பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
ஒவ்வொரு வருடமும் தசரா விழாவிற்கு பிறகு வரும் 21 நாட்களுக்கு பின்னே தீபாவளி ஏன் வருகிறது? இதைப்
பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள்
நம்பவில்லை என்றால், காலெண்டரைப் பாருங்கள். வால்மீகி முனிவர் நம்
ராமாயணத்தில் எழுதி இருக்கிறார்கள். ஸ்ரீராமன் தனது முழு படையையும் இலங்கையிலிருந்து அயோத்திக்கு நடந்து செல்ல அவர்களுக்கு 504 மணி நேரம் பிடித்தது. இந்த 504
மணிநேரத்தை நாம் 24 மணி நேரத்தால் வகுத்துப் பார்த்தால் கிடைக்கும்
பதில் 21 ஆகும். அதாவது
இருபத்தி ஒரு நாள்கள்! எனக்கும் ஆச்சரியமாக இருந்தது! சொல்லப்பட்டதை நினைத்து, ஆர்வத்தில் கூகுள்
மேப்பில் தேடினேன். இலங்கையில் இருந்து அயோத்திக்கு நடந்து செல்ல
இருக்கின்ற தூரம் ஆனது 3145 கிமீ ஆகும். மேலும் அதற்க்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் 504
மணி நேரம்
ஆகி இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. ஆச்சரியமாக இல்லையா?
தற்போது, கூகுள் மேப்ஸ் முற்றிலும் நம்பகமானதாக கருதப்படுகிறது. இந்த சுவாரஸ்யமான தகவலை மற்றவர்களுக்கும் கொடுங்கள். வால்மீகி முனிவர் ராமாயணத்தை இயற்றினார். அவரது கணிப்பும், விளக்கமும் எவ்வளவு
துல்லியமாக இருந்தது! சனாதன
இந்து கலாச்சாரம் எவ்வளவு பெரியது!
இந்தியா, நேபாள தேசங்களில் ஸ்ரீ
ராமன் 14 ஆண்டுகள் வன வாசம் முடிந்து, இராவணனை வதம் செய்து பின்பு தன்னுடைய தலைநகரம் அயோத்திக்கு திரும்பி வருகையில்
அந்த நகர மக்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்த தங்கள் இல்லங்களிலும், தெருக்களிலும் விளக்குகளை ஏற்றி ஸ்ரீ ராமரை வரவேற்றி
மரியாதையை காண்பித்தார்கள். தீபாவளி நம்முடைய அகத்தின் அதாவது மனதின் இருளை அகற்றி
மனதிலே நல்ல ஒளியை எண்ணங்களை ஏற்படுத்தும் ஒரு விழாவாகும். ஒவ்வொரு வகையில் பல
கதைகள் தீபாவளி பற்றி சொன்னாலும், இருள் அகன்று ஒளி கிடைக்க வேண்டும் என்பதே
முக்கிய காரணம் ஆகும். அதர்மம் அழிய வேண்டும். தர்மம் நிலைக்க வேண்டும். அனைத்து
நாடுகளுமே கொன்றாடுகிறார்கள்.
யம தீபம்
தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள்
!
யம தீபம் பற்றிய விளக்கம்:
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றி வருவது தான்
நம் மரபு ஆகும். யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில்
முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள்
தானாகவே வரும்.
மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள்
வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று திதி கொடுப்பது பற்றி தெரிந்து இருப்பீர்கள். அப்படி வந்த
அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே என்பது
ஒரு ஐதீகம் ஆகும். அத் தீபத்தை தீபாவளி நேரத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்றினால்
நல்லது. இது எப்போதும்
தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும். யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும்
வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும். யம தீபமானது
துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு பிரச்சினைகள்
தருவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நன்மைகளே மட்டுமே செய்வார்கள்.
சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:
1. உங்கள் வீட்டிலே
உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்படுதல் வேண்டும்.
2. தெற்கு திசை
நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
3. விளக்கேற்றிய
பின்னர், இந்து
பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
4. பின்னர்க்
கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
*ஜெய் ஸ்ரீ ராம்*
நல்லதையே நினைப்போம். நல்லதே
நடக்கும்.
நாளை நம் கையில்.
ஓம்
நமச்சிவாய !!!
தமிழர் நலத்தின் சார்பாக அனைவருக்கும் தீபாவளி
நல்வாழ்த்துக்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான
சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீகம் : தீபாவளி பற்றிய சுவாரசியமான தகவல்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Interesting facts about Diwali - Spiritual Notes in Tamil [ spirituality ]