இவ்உலகத்தில் நாம் பசியைத் தீர்க்க நாம் போராடுகிறோம். பசியின்மையால் சிலர் அவதிப்படுகிறார்கள் என்றால் வியப்பாய் இருக்கிறது அல்லவா? உண்மை தான். அப்பேற்பட்ட மனிதர்களுக்கான தீர்வாகத் தான் இந்த கட்டுரைப் பதிவிடப்படுகிறது.
பசியின்மை என்பது ஒரு நோயா?
நல்லதா? கெட்டதா?
இவ்உலகத்தில் நாம் பசியைத் தீர்க்க நாம்
போராடுகிறோம். பசியின்மையால் சிலர் அவதிப்படுகிறார்கள் என்றால் வியப்பாய்
இருக்கிறது அல்லவா? உண்மை தான். அப்பேற்பட்ட மனிதர்களுக்கான தீர்வாகத் தான் இந்த
கட்டுரைப் பதிவிடப்படுகிறது. நாம் அனைவருக்கும் வயது மூப்பும், முதுமையும்
எல்லாருக்கும் வரத் தான் செய்யும். முதுமை வந்தாலே நோயும் அழையா விருந்தாளியா
சிவப்பு கம்பளம் போட்டுப் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு நோயா வரிசையில் நம்மைக்
கேட்காமலே நம்மைத் தாக்கும். வரவேற்கும். ஏன் பயம் மற்றும் மனம் சரியில்லை என்றால்
மனதின் கதவாகிய இதயத்தை தாக்குகின்ற இதய நோய்கள் எல்லாம் எந்நேரம் என்றாலும் வலியைக்
கொடுத்து இறப்பிற்கு வழிகாட்டிச் செல்லும்.
ஒரு உயர்ந்த கட்டிடங்களுக்கு பலமான, நல்லதொரு திடமான அஸ்திவாரம் தேவைப்படுவது போல நோயில்லாமல்
வாழ்வதற்கு நல்ல ஆரோக்யமான உடம்பு வேண்டாமா? மனிதப் பிறவி என்பது மகத்தான பிறவி. அது
நமக்கெல்லாம் கிடைத்த அதிசயப் பிறவி ஆகும். அந்த அதிசயத்தை, அரிய சந்தர்பத்தை நாம்
ஆரோக்யத்துடனமும், ஆனந்தத்துடனும் நம்முடைய வாழ்நாள்களை வளமுடன் நலமுடன் பரிபூரணமாக
அனுபவிக்கலாம் அல்லவா? கப்பல்களுக்கு
வழிகாட்டியாய் இருக்கும் கலங்கரை விளக்கம் போலவே நாமும் நம் உடம்பை ஆரோக்யமாக
வைத்து இருக்க தமிழர் நலம் என்கிற நம் வலைத்தளம் உங்களுக்கு வழிகாட்டுகிறது. மாட்டு
வண்டிகள் சிறப்பாக ஓடுவதற்கு மையப்புள்ளியாக வண்டிக்கு அச்சாணி இருப்பது போல், மனிதர்களுக்குத் தேவை நிம்மதியும்,
மகிழ்ச்சியும் மனதில் நிலவ பெரிதும் உதவியாக இருக்கப்போவது நம் உடல்
நலம் மற்றும் ஆரோக்யமான இந்த உடம்பே
முக்கியக் காரணக்கர்த்தாவாகவே இருக்கிறது. அப்பேற்பட்ட உடம்பை நாம் பேணிக் காப்பது
என்பது நம் தலையாயக் கடமை அல்லவா?
''அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்
அரிது'' என்பது அவ்வைப் பாட்டி நமக்காக சொல்லி வைத்த
அமுதமொழி. வாகனங்கள் பழுது ஏற்பட்டால் உடனே புதிய உதிரிப் பாகங்களை வைத்துக் கூட
பொருத்தி சரி செய்து விடலாம். இயந்திரங்கள் சரிவர ஓடுவதற்கு உராய்வுப் பொருள்கள் (கிரீஷ்)
தேவைப்படுவது போல நம் உடம்பு சரி வர ஆரோக்யமாக இருக்க வேண்டுமென்றால் முதலில்
ஆரோக்யமான உணவை மேற்கொள்ள வேண்டும். உணவு மேற்கொள்ளலில் கட்டுப்பாடு இருந்தால்
உடம்பானது நம் கட்டுப்பாட்டில் வந்து விடும். நாம் சமைக்கும் சாப்பாடு சரி
இல்லாமலோ, நமக்குப் பிடிக்காமல் போனாலோ ஒரு நாள் சாப்பிடாமல் விரதம் இருப்பதை போல
இருந்து விடலாம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை விரதம் மேற்கொள்ளுதல் உடம்புக்கு
மிக மிக நல்லது. முன்காலங்களில் அதை பின் தொடர்ந்தும் வந்தார்கள். நூறு
வருடங்களுக்கும் மேல வாழ்ந்தார்கள். அதே நேரத்தில் பசி இல்லாமல் சாப்பிடாமல் இருப்பது
என்பது ஒரு வகை நோயாகத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பசிக்காமல்
இருப்பது கூட உணவு ஆரோக்யத்தில் கவனமின்மையே காரணம். அதில் கவனம் செலுத்தி
தொடர்ந்து உடம்புக்கு ஒத்து கொள்ளக்கூடிய உணவை மட்டுமே எடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமும்
உண்மையில் சரியாக இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இயற்கையாகவே மனிதர்கள் பழக்க
வழக்கங்களுக்கு அடிமையானவர்கள். இன்னும் சொல்லப் போனால் தீயப் பழக்கங்கள் உடனே
ஈர்த்து விடும் மனநிலையை கொண்டிருப்போம். அந்த நிலைகளில் அந்த தீயப்பழக்கங்களினால்
விளையப் போகும் விளைவுகளையும் மனதில் நினைத்தால் மனம் அடிமை ஆகாது. அதுவே உளவியல்
முறைப்படி உண்மையும் கூட. அதே நேரத்தில் பழக்கத்தினை பின் தொடர்ந்து வந்தால்
மனிதனால் எதையும் சாதிக்க முடியும் வல்லமை கொண்டவர்கள். எந்த பழக்க வழக்கத்தையும்
விரைவாகவும் பழகக்கூடிய விரைந்து செயல்படுத்தக் கூடிய திறன் படைத்தவர்கள் ஆவார். சுருங்கக் கூறின் மனிதர்கள் உணவுகளை எப்படி உண்ண
வேண்டும் எனில், காட்டில் வாழும் விலங்குகள் போல உண்ண வேண்டும். வியப்பாகதீர்கள்! நான் சொல்ல
வருவதை மேற்கொண்டு படியுங்கள். நான் விலங்குகளை போல் உண்ணச் சொன்னது விலங்குகள்
சாப்பிடும் உணவை சொல்லவில்லை மாறாக கருத்து படிவத்தை புரிந்து கொள்ளுங்கள். இந்தப்
புரிதல் என்பது சமயத்தில் அப்படியே நேர் எதிராக புரிந்துக் கொள்ளுதலில் போய்
முடியும் அதனால் முடிவு எதிர்பார்த்ததற்குப் பதிலாக எதிர் பாராத முடிவைத் தந்து
விட்டுப் போகும். அதற்கும் நாம் தான் நம் புரிதல் தன்மை தான் காரணமாக அமைகிறது.
இந்த இடத்தில நான் சொல்ல வருவது காட்டு விலங்குகள் தன் பசிக்காக வேட்டையாடி
உண்ணும். பசி தீர்ந்த உடனே சாப்பிடுவதை நிறுத்தி விடும். அப்படியே மனிதர்களை
நினைத்துப் பாருங்கள். நாம் பசிக்கு மட்டுமல்லாமல் ருசிக்கு சாப்பிடுகிறோம். அதோடு
விட்டு விடுகிறோமா? ருசியின் கூடுதலினால் வயிறு வரையெல்லாம் சாப்பிட்டது போய்
நெஞ்சு வரை ஏன் தொண்டை வரை கூட சாப்பிடும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மை. நாம் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் முரண்பாடாக கூட
இருக்கலாம் ஏழைகள் பசிக்காக சாப்பிடுகிறார்கள். பணக்காரர்கள் ருசிக்காக சாப்பிடுகிறார்கள்.
இப்போது தெரியும் பெயர் தெரியாத நோய்கள் யாருக்கு அதிகம் வருகிறது என்று.
தற்காலங்களில் அது முரண்பாடுகளாக இருக்கலாம். அது உணவுத் தரம், சுற்றுப்புற சூழல்
இன்னும் பல காரணங்கள் அது வேறக் கதை. அதைப் பற்றி வரும் பதிவில் விலாவரியாக
பார்க்கலாம்.
இன்றைய சூழ்நிலைகளில் எது வேண்டும் என்றாலும்
திரும்பப் பெற்று விடலாம். பணம், பொருள், பதவி, உறவுகள் இன்னும் பல. ஒன்றை வைத்து
இன்னொன்றை எளிதாகப் பெறலாம். உதாரணத்திற்க்கு பணம் இருந்தால் எப்பேர்பட்ட பதவியை கூடப்
பெறலாம். பதவிகள் இருந்தால் இழந்தாலும் அதற்குப் பல மடங்காக இழந்த பணத்தைப் திரும்பப்
பெற்று விடலாம். எதை இழந்தாலும் ஒன்றோடொண்று தொடர்பு படுத்தி பெறலாம். ஆனால் இந்த
இடத்தில் திரும்பப் பெற முடியாத ஒன்றே ஒன்று இருக்கிறது. என்னவென்று புரிந்து
இருக்கும். ஆம் சரி தான். நீங்கள் துல்லியமாக கணக்கீடு செய்து இருக்குறீர்கள்.
இந்த உடல் தான்..
சுவர் இருந்தால் தான் சித்திரம் செதுக்க முடியும், கண் கெட்டப் பிறகு சூரிய
நமஸ்காரம் எதுக்கு? இது போன்ற பழமொழிகள் உங்கள் இதயக் கதவை தட்டுவது எனக்கு
கேட்குகிறது? அவ்வளவு முக்கியமான இந்த உடம்பை இளமை காலங்களில் நம்மிடம் இருக்கும்
கூடுதல் வலிமையால் எத்தனையோ நாட்கள் உண்ணாமலும், உறங்காமலும், பிரச்சனைகள், கடமைகள்
இன்னும் இத்யாதி காரணங்களினால் சரியான நேரத்தில் சாப்பிட முடியாம தவறவிட்ட
நேரங்கள், உணவுகள் முதுமை காலங்களில் வச்சு செய்கிறதா? சிலர் நேரம் கழித்து
உணவுகளை உட்கொள்வார்கள்.
சாப்பிடும் நேரங்கள்
• காலை 7-8
மணிக்குள் சாப்பிடுவதும்,
• மதியம் 12-1 மணிக்குள் சாப்பிடுவதும்
• இரவு 7-8 மணிக்குள் சாபிடுவதும் உத்தமம்.
இரவு எட்டு மணிக்கு மேல சாப்பிடும் உணவுகள்
நஞ்சிற்கு சமம் அது நெஞ்சிற்கு சரி வராது என்றும் சொல்கிறார்கள். அது சரியோ தவறோ
நாம் அந்த குறப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட ஆர்ம்பிக்கலாம்மே. இரவு நேரங்களில்
தான் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகிறது. கல்லீரல் அதன் பணியை இரவு 11 மணி – அதி
காலை 3 மணி வரை தன் வேலையை செய்கிறது. ஆனால் நவீன உலகத்தில் தற்கால நிலவரப்படி நாம்
என்ன செய்கிறோம் என்று அனைவருக்கும் தெரியும். உண்மை தான் நாம் அந்த நேரங்களில் தான்
மொபைலை நோண்டிக் கொண்டு இருக்கிறோம். கல்லீரலின் பணியை செய்ய விடாமல் தொந்தரவு
செய்கிறோம். உடம்பில் என்ன நடந்தாலும் கடைசியாக பாதிக்கப்படும் உருப்பே இந்த கல்லீரல் தான். அதையே நாம் கவனம்
செய்யாமல் விட்டால் அந்தக் கல்லீரல் நம்மை எப்படி வச்சு செய்யும். கல்லீரல் பற்றி
தனியாக ஒரு பதிவு போடலாம். கண்டிப்பாக விளக்கமாக வரும் கட்டுரைகளில் பதிவிடுவோம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் கல்லீரலுக்கு அதிக வேலை கொடுப்பார்கள். புரிய வில்லையா?
தேவைக்கு மேல் உணவு சாப்பிடுதல், ருசிக்குறதே என்ன செய்ய, அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமே நஞ்சாகி போய் விடுகிறது. நாம் தற்போது சாப்பிடுவது எல்லாம் அமிர்தமா?
யோசியுங்கள். துரித உணவுகள். அமிர்தமே நஞ்சு என்றால் இதை என்னவென்று சொல்ல.
உங்களிடமே விட்டு விடுகிறேன். இன்னும் சிலர் சாப்பிடாமலே இருப்பது. அது அதை விட
கெடுதல். உடம்பிற்கு சத்து எங்கே கிடைக்குறது தெரியுமா? நாம் சாப்பிடும்
சாப்பாட்டில் தானே கிடைக்கிறது. அதிலே நாம் கவனம் செலுத்த வேண்டும். கவனம்
செலுத்தாதவர்கள் இனியாவது செலுத்துங்கள். இல்லை என்றால் அது நம்மை கவனம் செலுத்த
வைத்து விடும். அதன் வலி கொஞ்சம் அதிகம் அல்ல. நாம் சேர்த்து வைத்த மொத்த சொத்தையே
ஆட்டைய போட்டு விட்டுச் சென்று விடும். சில நோய்கள் உயிரையே பறித்து விடும் சூழல்
கூட உண்டு. அதிகம் சாப்பிடுவதும், சாப்டாமல் இருப்பது ரெண்டுமே கெடுதல் தான்.
இப்போது புரிந்து இருப்பீர்கள்.
ஆரோக்கியத்தை பேணும் முறைகள்:
• வைட்டமின் D சூரிய ஒளியில் தான் கிடைக்கிறது.
தினமும் காலையில் நடை பயிற்சி செய்தால் விட்டமின் D யை பெற்ற மாதிரியும் ஆகி
விட்டது. நல்ல சுவாச காற்றை சுவாசிக்க வேற செய்யலாம். நடை பயிற்சியில் தான் முடி முதல்
அடி வரை அனைத்து உறுப்புகளும் இயங்க வழி செய்கிறது. மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலிகள்
இல்லாமல் போவதற்கு அதிக வழிகள் உள்ளது.
• உடம்பிற்கு நீர்ச் சத்து அவசியம் தேவை. தினமும் அதி
காலையில் நீர் அருந்தி வருதல் உடம்பை சூடு இல்லாமல் வைக்க உதவும். சாப்பிடுவதற்கு ஒரு
மணி நேரத்துக்கு முன்பும், சாபிட்ட பின்பு சூடான நீர் அருந்துதல், சாப்பிடும் போது
தேவைபாட்டுக்கு கொஞ்சம் நீர் அருந்துதல், குறிப்பாக தண்ணீர் தாகம் எடுக்கும் போதேல்லாம்
தாகத்தை தீர்க்க தண்ணீரை பருகுங்கள். வயதுக்கு தகுந்தவாறு 1.5 லிட்டர் – 5 லிட்டர்
வரை அருந்துங்கள்.
• சுவைக்கு அருந்துவதை விட உங்கள் உடம்புத்
தேவைக்கு தகுந்தவாறு உணவை மேற்கொள்ளுங்கள். அதாவது அளவறிந்து உண்பதை கொள்கையாக
கொள்ளுங்கள். ஒரு மனிதர்க்கு 2000 – 3500 கலோரிகள் தேவைப் படுகிறது. இப்படி தேவையானதை
தேடி தேடி சாப்பிட்டு வந்தால் நம்மை தேடி நோயும், மருந்தும் வராது என்பதே உண்மை.
• கலோரிகள் முறையே சாப்பிடும் சாதத்தில் 100,
முட்டை 100, காய்கறிகள் 150, தயிர் 100, மாமிசம் 230, இப்படி அடுக்கி கொண்டே
போகலாம். எதில் எவ்வளவு கலோரிகள் என்று தேடி பார்த்து சாப்பிட்டு வாருங்கள். திட
கார்த்தமாக வலம் வருவீர்கள். இனி நீங்க தான் ஆணழகர்கள்.
பசியின்மை ஏன் வருகிறது?
‘எண் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்’ என்கிற ஒரு பழமொழி உலா வருவதை கேள்வி பட்டு
இருப்பீர்கள் தானே? இதன் முக்கியத்துவம் என்னவென்பதை புரிகிறதா? எது எக்கேடு கெட்டாலும்,
என்ன பிரச்சனைகள் இருந்தாலும் நாம் நம் வயிறு சொல்வதை கேட்க வேண்டும். இந்த அரை
சாண் வயித்துக்காகத் தான் நாம் நாயாய் பேயாய் அலைகிறோம். நம் குடும்பத்தை
காப்பாத்துவதற்காகவும் ஓடோ ஓடென்று ஓடி ஓடி நிக்காமல் ஓடுகிறோம். இந்த ஓட்டம் நிக்க
உடம்பு தடையாக இருக்கலாமா? அப்பேற்பட்ட வயிற்றைப் எப்படி பேணிக் காக்க வேண்டும்
என்பதுதான் முதன்மையான வேலை நமக்கு. அப்புறம் தான் வேலையே. நினைவில் நிறுத்திக்
கொள்ளுங்கள். நமது உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் தேவையான சத்துக்களை அந்த
உயிர் அணுக்களை சக்கரைப் பொருளாக மாற்றி இரத்தத்தில் கலக்கச் செய்து நமக்கு
தேவையான ஆற்றலைத் தருவது இந்த வயிறே ஆகும். இந்த வயிறு அதனுடைய செயல் திறங்களை
இழந்தால் சத்துக்கள் உடலில் கலப்பது குறைந்து ஆற்றல் கிடைப்பது அரிதாக தான் இருக்கும்.
இன்னும் பல உறுப்புகளின் வேலைபாடுகள் கூட குறைந்துவிடும். வயிறாகிய இரப்பையில் சக்தி குறைந்தால்
அசீரணக் கோளாறுகள் ஏற்பட்டு உடம்பை உபாதைக்கு இட்டுச் செல்லும். அதனால் நமக்கு பிடித்த உணவு வகைகளை நாம் முன்பு சாப்பிட்ட
அளவிற்கு சாப்பிடவும் இயலாமல் போய் விடுகிறது. மேலும் சாப்பிட்டால் அசீரணக் கோளாறு
மற்றும் வாந்தி பேதி, இன்னும் பல குறைபாடுகள் வர வாய்ப்பு இருக்கிறது. வாழ் நாள்
முழுதும் இருக்கும் இந்த வயிறு எவ்வளவு முக்கியம். அதற்கு ஏன் உணவு தேவைப்படுகிறது?
சில நேரங்களில் ஏன் தேவைபட வில்லை. மந்தமாக இருக்கிறது என்று சொல்வோமே அந்த மந்த
நிலைக்கு என்னென்ன காரணங்கள்னு தெரிந்தாலே இந்த பசி இல்லாமை நிலையை எளிதாக போக்கி
விடலாம். நாம் அனைவரும் நம்முடைய ஆணிவேரான உடம்பை முன் கூட்டியே கவனித்தால் எந்த
கஷ்டமான நிலையும் வராது. நாம் என்ன செய்கிறோம் என்றால் உடலின் பாகங்கள்
தாக்கப்பட்டு அதனுடைய வேலையை அது குறைக்கும் போது தான் நாம் அதை கவனிக்க
ஆரம்பிக்குறோம். கவலை படுகிறோம். அந்த கவலை மேலும் உடம்பை பாதிக்கிறது. இன்னும்
சொல்லப்போனால் கவனிக்காமல் காலம் தாழ்த்துவதால் எந்தவித பிரயோசனமும் இல்லாமல்
சிலரை அபாயக் கட்டத்திற்கு இழுத்துச் செல்கிறது. இந்தப் புனித உடல், உயிர், ஆன்மா
அனைத்தும் உலக இன்பத்தை, சந்தோசத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, ஆரோக்கியமாக
வாழ்க்கையை அனுபவிப்பதற்காக நமக்கு
கிடைத்து இருக்கிறது. அதை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தான்
மேலோங்கி எவருடைய உந்து சக்தி இல்லாமல் நம்முடைய சக்தி அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணங்கள்
தான் நமக்கு இருக்க வேண்டும். நாளடைவில் அது நமக்கு சிறந்த பழக்க வழக்கங்களாக மாறி
மற்றவருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் பரிந்தரை ஒரு உசுரை காப்பாத்துகிறது என்றால்
எவ்வளவு பெரிய விஷயம். ஒரு உயிரை மற்றும் காப்பாத்தவில்லை. நீங்கள் அவர்கள்
சார்ந்த குடும்பம், உறவுகள் அனைவரையுமே நீங்கள் தான் காப்பாற்றி இருக்கீர்கள்
என்றால் மிகையல்ல. முன்னமே இருவர் சந்தித்தால் தொழில், வாழ்க்கை, உறவுகள் என்று பேசிக்கொண்டே
இருப்பார்கள். ஆனால் அது தற்போது மாறி சர்க்கரை அளவு உங்களுக்கு எவ்வளவு? இரத்த
அழுத்தம் எப்படி என்று இது மாதிரியான உரையாடல்கள் போய்க் கொண்டிருக்கிறது? நாம்
எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம். இலவச மருத்துவம் வேண்டும் என்று அனைவரும்
விரும்பும் நாம் ஏன் நல்ல நோயில்லா ஆரோக்ய உடம்பை விரும்பக் கூடாது? அது நடந்தால்
இலவச மருத்துவம் கூட நமக்குத் தேவை இல்லையே. நாம் எப்போதும் மனதின் அடியில்
பிரச்சனைகளின் ஆணிவேரை பற்றி அறிந்து தெரிந்து வருவோம். அது தான் நமக்கு நல்லத் தீர்வை
கொடுக்கும். இனி அந்த பிரச்சனைகள் மீன்றும் மீண்டு வராமல் நம்மை பாதுகாக்கும்.
அனேக மனிதர்கள் வியாதிகளின் டெப்போ ஆக அலைந்து
கொண்டு இருக்கிறார்கள். காலில் ஆணி என்று ஆரம்பித்து முட்டு வலி, அந்த வலி இந்த
வலின்னு தலை வலி வரை அனைத்து பாகங்களையும் சேதம் பண்ணி சின்னா பின்னமாக்கி
இருப்பார்கள். மனசு முழுவதும் சாவு பற்றிய பயம், தாங்க முடியாத வலி, பண இழப்பு
இப்படியே பலப்பல வலிகள். அவர்கள் எப்படி மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று
நினைத்தாலே நமக்கு கவலை தொற்றிக் கொள்ளும். இப்போது பாதி பேருக்கு சாப்பிட்டுவிட்டு
வெற்றிலை போடும் பழக்கம் போல சட்டைப்
பைகளில் மாத்திரைகள் பலகலர்களில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள். ஆறு சுவைகளும்
உணவில் கலந்தால் எந்த நோயும் அருகில் வராது. அந்த ஆறு சுவைகளாகிய இனிப்பு,
புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, சுவைப்பதற்கே
அன்று சாப்பிட்டோம். 'சுவை'
பார்த்து பார்த்து ரசித்து சாப்பிட்ட காலம் போய், இன்று 'சுகர் அளவு' ‘காரம்
அளவு’ ‘புளிப்பு அளவு’ என ஒவ்வொரு அளவும் பார்த்து பார்த்து சில சுவைகளே உடம்புக்கு ஆகாது என்று நிபந்தனை
விதிக்கப் பட்டு தள்ளி வைத்து சாப்பிடும் நிலைக்கு மாறும் காலமாகி விட்டது. இதனால்
நமக்கு உணவே மருந்து என்ற காலம் மாறி, மருந்தே உணவாகி விடுமோ
என்கிற பயம், அச்சம், சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. ஒரு
ஜோக்கிற்காக சொல்கிறேன் இரண்டு நபர்களின் உரையாடல்களில் ஒருவர் ஜாலியாசொன்னார், ''என்னுடைய பிகரும், சுகரும் ஒண்ணு தான்”, என்று. அதற்க்கு அருகில்
உள்ளவர் ஏன் அப்படி சொல்கிறீர்கள் ''எப்படி?,'' என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்க்கு
முதலானமவர் சொன்னாரே அது தான் அங்கே “ஹை லைட்'' இரண்டையும்
என்னால் கன்ட்ரோல் பண்ண முடியவில்லையே,'' என்று நக்கலுடன்
சிரித்து கொண்டே சொன்னார். இருவரும் கொஞ்ச சில நொடிகள் சிரித்தார்கள். இப்போது
அவருக்கு கண்டிப்பாக சுகரின் அளவு குறைய வாய்ப்பு அதிகம். மகிழ்ச்சி, சந்தோசம், சிரிப்பை
நாம் அள்ளிகொண்டால் மாத்திரை, மருந்துகளை கையிலும், பையிலும் தூக்கி செல்ல
வேண்டாமே எனபதே இந்தக் கட்டுரையின் மையக்
கருத்து.
சாப்பிடும் உணவு வகைகளிலே கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு
நோய் கட்டுப்பட்டு இருக்கும். கட்டுப்படாதவர்களுக்கு நோய் காட்டு காட்டுனு ஒரு ‘காட்டு’
காட்டிவிட்டு நம்மை வாழ்க்கையின் இறுதி கரைக்கு ஒதுக்கி விட்டுவிடும். உணவு
உண்பது என்பது ஒரு வேளை உண்பவனுக்குப் பெயர் 'யோகி', இரு வேளை உண்பவனனுக்கு 'போகி', மூன்று வேளை உண்பவனுக்கு 'ரோகி', நான்கு வேளை உண்பவனுக்குத் 'துரோகி' எனவும் அன்று பிரித்தார்கள்.
இதில் துரோகி என்பது சிலருக்கு நெஞ்சு வரை
விரும்பிய உணவுகள் வாங்கி கொடுப்பீர்கள். அவர்கள் உங்கள் வயிற்றில் அடிப்பார்கள்
அல்லவா? இதை எங்கள் ஊரில் ‘தின்ன கொழுப்பும் தீபாவளி மப்பும்’ என்பார்கள். மப்பு
போதை பொருள்களில் மட்டும் வருவதில்லை. சில கொழுப்பு பிடித்த நபர்களிடம் இருக்கிறது
கவனம் தேவை என்பதை உணர்த்தவே அப்படி சொல்லப்படுகிறது. உணவில் கவனம் அதிகமாகவும், அக்கறை தானாகவும் அன்று இருந்தது. பசி
எடுத்தால் தானா வாயும் கையும் இனைய வேண்டும் அதே மாதிரி வயிறு நிரம்பினால் வாயும்
கையும் பிரிய வேண்டும். இந்த சுழற்சி நடக்கும் ஒருவர் நோய் வலைக்குள் சிக்க
வாய்ப்பில்லை. இந்த சுழற்சி மாறி, மீறி நடப்பவர்களை வலையில் இருந்து தப்பிக்க
வாய்ப்பே இல்லை ராஜா. நீ ராஜா வாக இருக்க ஆசைப்பட்டால் வயிறை எப்போதும் அரைப்
பகுதி உணவாலும், கால் பகுதி வயிறு நீராலும், இன்னும் கால் பகுதி காலியாகவும்,
வைத்திருக்க கட்டுப்பாடு தேவை.
நெடுநாட்கள் மகிழ்ச்சியாக வாழ
யோசனைகள்:
• தினமும் நடைப்பயிற்சி செய்து வர பசியின்மை பறந்து
போகும். உடம்பின் சுழற்சி சரிவர இயங்கும். தூக்கம் தானாகவே வரும். மேலும்
உடற்பயிற்சிகள் செய்பவர்களுக்கு 'என்டார்மின்' எனும் ஹார்மோன் சுரக்கிறது. அதன்
காரணமாக மன அழுத்தம் குறைக்கப்பட்டு, மன அமைதியும், எப்போதும்
சுறுசுறுப்பாக இயங்க வழி செய்கிறது.
• எதிலும் ஒரு அளவுக்குள் கட்டுப்பட்டு, அதன் படி
நடக்கவும், சாப்பிடவும், தூங்குவதற்கும் பழகி கொள்ளுங்கள்.
• கடன் என்ற வார்த்தையை மறந்தே விடுங்கள். யாராவது
கொடுத்தால் கூட ஒதுங்கி விடுங்கள். அதே நேரத்தில் உங்களிடம் கேட்டால் அவர்களையும்
ஒதுக்கி விடுங்கள். உறவுகளுக்கு, நெருங்கிய நண்பர்களுக்கும் உபரிப் பணம் இருந்தால்
கொடுத்து உதவுங்கள். இல்லையேல் தவிர்ப்பது நல்லது.
• சம்பாதிக்கும் போதே சேமியுங்கள். சம்பாத்தியம்
என்பது நிலையற்றது. பலருக்கு சம்பாத்தியம் இளம் வயதில் படிப்படியாக கூடி நடுத்தர
வயதில் உச்சத்திற்கு சென்று, மீன்றும் குறைய ஆரம்பிக்கும். பிறகு சேமிக்கலாம்
என்று ஒரு பொழுதும் நினைக்க வேண்டாம். சேமிப்புக்கு பிறகு செலவு செய்யுங்கள்.
செலவு செய்த பின் மீதியை சேமிக்கலாம் என்றால் மீதி என்பது எப்போதும் பூஜ்ஜியம்
தான்.
• நம் உடல் ஒரு மிகப் பெரிய தொழிற் சாலை என்று
சொன்னால் நம்புவீர்களா? நம்பி தான் ஆக வேண்டும். நம்பினால் தான் சோறு. உண்மை தான்.
அந்த சோற்றை சாப்பிட்ட சில நேரங்களிலே அரைத்து, கரைத்து, வெளிவர செய்கிறதே. இப்போ
தெரிகிறதா? தொழிற்சாலையில் நடக்கும் வேலைகள் இங்கும் நடக்கிறது. அத வைத்துத் தான்
சொன்னேன். ஒரு நல்ல உடம்பானது மணத்தை கொடுக்கும். நாமும் மணம் வீச வேண்டாமா?
அதற்க்கு நல்ல மனமும், அந்த மனதில் நல்ல எண்ணங்களும், அன்பும் நிறைந்துக் கிடக்க
வேண்டும். வணக்கம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆரோக்கிய குறிப்புகள் : பசியின்மை என்பது ஒரு நோயா? நல்லதா? கெட்டதா? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Is anorexia a disease? Is it good? Is it bad? - Health Tips in Tamil [ Health ]