தற்காலங்களில் மனிதர்கள் சந்தித்தால் வார்த்தைகளின் பரிமாற்றம் உங்களுக்கு சுகர் எப்படி இருக்கிறது? கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று தான் கேட்டுக் கொள்கிறார்கள் என்கிற நிலையில் சர்க்கரை நோய் நிலவி வருகிறது.
சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோயா?
தற்காலங்களில்
மனிதர்கள் சந்தித்தால் வார்த்தைகளின் பரிமாற்றம் உங்களுக்கு சுகர் எப்படி
இருக்கிறது? கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று தான் கேட்டுக் கொள்கிறார்கள் என்கிற
நிலையில் சர்க்கரை நோய் நிலவி வருகிறது. இந்த நோய் பரம்பரை நோய் என்று சொல்கிறார்களே
எப்படி என்று தானே கேட்குகிறீர்கள். உங்களுக்கான பதில் தான் இந்தக் கட்டுரையில் உள்ளது.
இயற்கை சக்திக்கு மிஞ்சிய சக்தி உலகில் வேறு எதுவும் இல்லை. அதுபோல் இயற்கை மருத்துவத்தை
மிஞ்சிய மருத்துவமும் உலகில் இல்லை. இயற்கை என்பது உண்மை. அதுபோல் இயற்கை மருத்துவமும்
உண்மை உலக உயிர்கள் அனைத்தையும் காப்பது இயற்கை. அதுபோல் மனிதர்களின் நோய்களை குணமாக்கி
நலமாக வாழவைப்பதும் இயற்கை மருத்துவம்தான். இதுவே உலக உண்மையாகும். இன்றைய மனித வாழ்வில்
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கு சர்க்கரை நோய் பல துன்பங்களையும் வேதனைகளையும்
உருவாக்கி நிம்மதியில்லாமல் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சர்க்கரை நோய் வரக் காரணம்
நொறுக்குத் தீனியும், அளவுக்கு
அதிகமான உணவும், தீய உணவுகளும்
தான். தீய உணவுகள் என்றால் மாட்டுப்பால்-பால்பொருள்கள்-மாமிச வகைகளாகும். சர்க்கரை
நோயாளிகள் பல மருத்துவங்கள் பார்த்தாலும் நோயும் நோயின் பாதிப்புகளும் குணமாவதில்லை.
குறைவதும் இல்லை. அவர்கள் என்றும் நோயாளிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்கள்
செல்லச் செல்ல மேலும் சில நோய்கள் வந்து ஒட்டிக்கொள்கின்றன. சர்க்கரை நோயையும் அதனுடன்
சேர்ந்த மற்ற நோய்களையும், நோய்களின்
பல பாதிப்புகளையும் இயற்கை மருத்துவம் சில நாட்களில் முழுமையாக குணமாக்குகிறது. இயற்கை
மருத்துவம் உலகிலேயே மிக மிக உயர்ந்த மருத்துவம். உலகத்தில் தோன்றிய முதல் மருத்துவமும்
இயற்கை மருத்துவம் தான். இதை நம்பியவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக
வாழலாம். இயற்கை மருத்துவம் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின் நோய்களை எப்படி குணமாக்குகிறது
என்று இந்த கட்டுரைகளில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறைந்த படிப்பறிவுள்ள
மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் நம் தாய்மொழி தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. படித்துபயன்
பெறுங்கள். இயற்கை மருத்துவத்தால் சர்க்கரை நோயையும் மற்றும் அனைத்து நோய்களையும் குணமாக்கப்படும்.
உடல் பலகீனமாக சிறுவர், சிறுமிகள், இளம் வயதினர்கள், இளம் தம்பதிகள், பெரியவர்கள் இவர்கள் அனைவருக்கும்
சிறப்பு மருத்துவம் உண்டு. மனிதர்களுக்கு நோயில்லாத மகிழ்ச்சியான வாழ்வைத் தரும் இயற்கை
மருத்துவம் மிகப்பெரிய அளவில் செயல்பட குறைந்தது 15 ஏக்கர் நிலமாவது வேண்டும். எங்கள் ஊருக்கு மிக அருகில்
இடம் தயாராக உள்ளது. ஆனால் வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. இன்று பலரிடம் பணம் கோடிகோடியாக
யாருக்கும் பயன்படாமல் முடங்கிக் கிடக்கிறது. யாராவது ஒருவர் பணஉதவி செய்தால் போதும், இயற்கை மருத்துவம் பெரிய அளவில்
விரைவில் செயல்பட ஆரம்பித்துவிடும். இதனால் பல மக்கள் நல்வாழ்வு பெறுவார்கள்.
மனிதர்களாகப்
பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பிறருக்கு பயன்படும் படி பணிசெய்து வாழ வேண்டும்.
இது நம் முன்னோர்களின் வாக்கு, நாம்
வாழும் வரை தான் நம் சம்பாதித்த பணம் நமக்கு சொந்தம், நம் மரணத்திற்குப் பின் நாம் கட்டியிருக்கும்
துணியுடன் தான் மண்ணில் புதைக்கப்படுகிறோம். இதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.
பணத்தை கோவில் திருப்பணி என்ற பெயரில் பெரிய அளவில் செலவழிப்பதால் ஒரு பயனும் இல்லை.
அந்தப் பணம் உழைக்காத சோம்பேறிகளின் வயிற்றையும் பணப்பெட்டியையும் தான் நிரப்பும்.
மேலும் பல சோம்பேறிகளை உருவாக்கும். ஏமாற்றுப் பேர்வழிகள் அதிகரித்துக் கொண்டேயிருப்பார்கள்.
பணத்தை நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்றால், இயற்கை மருத்துவ வளர்ச்சிக்கு உதவி செய்யலாம். இயற்கை
வளங்களைப் பாதுகாக்க செலவழிக்கலாம். இயற்கையின் செல்லக் குழந்தைகளான வாயில்லா ஜீவன்கள்
வாழும் வனப் பகுதிகளை பாதுகாக்க செலவு செய்யலாம். இதனால் அதிக பயன்கள் உண்டு. இப்படி
நல்ல வழிகளில் பணத்தை செலவு செய்வதனால் நீங்கள் மனிதனாகப் பிறந்ததன் பலனை அடைவீர்கள்.
நம்மை வாழவைக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்த வேண்டும்.
ஒரு
கிராமத்தில் இயற்கை உலகம் என்ற பெயரில் இயற்கை ஆழ்ந்த நிலையில் ஒரு பெரிய இடத்தை உருவாக்க
வேண்டும். அங்கே உணவுக்கலை. – யோகா நம் பாரதநாட்டின் பழம்பெரும் விளையாட்டுக்கலைகள்
- நோயில்லாமல் மகிழ்ச்சியாக வாழும் கலை – தீய உணவுகளையும் தீய பழக்கங்களையும் மறக்கும்
கலை. வாய் இல்லா ஜீவன்களை தன் உயிர்போல் நேசிக்கும் கலை - இன்னும் சில நல்லொழுக்கப்
பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் இயற்கை கல்விக் கூடமாக செயல்படும். இயற்கை உலகம் ஒரு
சுற்றுலா ஸ்தலமாக விளங்கி பல குடும்பங்களுக்கு நோயில்லாத மகிழ்ச்சியான வாழ்வு கொடுக்கும்.
விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இயற்கை உலகத்தில் சில நாட்கள்
தங்கி நல்ல உணவுப் பழக்கங்களையும்,
மற்றும்
அனைத்து நல்வாழ்வுக் கலைகளையும் கற்று ஆரோக்கியமான அன்புள்ளம் கொண்ட புதிய மனிதர்களாக
தங்கள் இல்லங்களுக்கு செல்லலாம். மேலும் சாப்பாட்டுக்கு தேவையான காய்கறிகள்
இயற்கையாகவே எந்தவித கெமிக்கல் சேராது வளர்ந்த காய்கறிகள் கொண்டு சமைத்து பலன் பெற
வேண்டும் என்பதே ஏன் ஆசை. கூடுமானவரை எவர் உதவி இன்றி செயல்படுத்த வேண்டும். ஆனால்
அதற்க்கு காலம் அதிகமாகும் என்ற காரணத்தில் தான் பண வசதி உள்ள இயற்கையின் மீது
காதல் கொண்ட நல்லுள்ளம் கொண்டு உதவி செய்யும் ஈகை மனம் கொண்ட நபர்களை எதிர்பார்க்கின்றேன்.
எல்லாம் அந்த கடவுள் அனுகிரகம் கிடைத்தால் நினைத்தது நடக்கும் எவர் உதவி
செய்தாலும், எவர் தடை செய்தாலும் நடப்பவை நடந்தே தீரும்.
இயற்கை
உலகத்தில் குழந்தைகளுக்கு இளைஞர்களுக்கு,
இளம்
பெண்களுக்கு, தம்பதிகளுக்கு, பெரியவர்களுக்கு என்று எல்லா வயதினருக்கும்
நம் தமிழ்நாட்டின் பழம்பெரும் உடல் ஆரோக்கிய விளையாட்டுக் கலைகள் அனைத்தும் கற்றுக்
கொடுக்க எல்லா வசதிகளும் செய்ய வேண்டும். மற்றும் ஓவியக் கண்காட்சி, வன விலங்குகள் அனைத்தையும் பல சிலை
வடிவங்களில் 'உருவாக்கி
ஆங்காங்கே வைத்து சிலைகளின் கண்காட்சி இன்னும் பல வகைகளில் பொழுதுபோக்கு கலைகளையும்
உருவாக்கி வரும் அன்பர்களையும், நண்பர்களையும், நோயாளிகளையும் மகிழ்ச்சி அடையும்
வகையில் உருவாக்க வேண்டும். அன்றுபோல் இன்றும் அன்புள்ளம் கொண்ட சேவை மனப்பான்மை உடைய
இனிய மக்கள் இயற்கை உலகம் உருவாக அன்புக்கரம் நீட்டியிருந்தால் சில வருடங்களுக்கு முன்பே
பல நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்து நான் காட்டியிருப்பேன். அன்று அன்பு என்னும் பண்பு
எல்லோரிடமும் அதிகம் இருந்ததால் நல்ல காரியங்களை உருவாக்க தாமதம் ஏற்படவில்லை. அன்று
அன்பு என்னும் இனிய ஊற்று வற்றாமல் ஓடியது. அதனால் தான் அன்றைய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி
என்னும் மணமுள்ள பூந்தோட்டம் பூத்துக் குலுங்கியது. ஆனால் இன்றைய மனித வாழ்வு அப்படி
இல்லை. அன்பு என்னும் இனிய ஊற்று இன்றைய மனித வாழ்வில் நாளுக்கு நாள் வற்றிக் கொண்டே
போகிறது. அன்பு அழிந்து கொண்டே போகிறது. முற்றிலும் குறையவே இல்லை. மறுபடியும்
முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாமும் வாழலாம் நாம் அனைவரும் ஒன்று கூடி நினைத்தால்
எதையும் செயல்படுத்தலாம். பணவசதி உள்ள அன்பு உள்ளங்கள் மனது வைத்தால் இயற்கை உலகம்
புதிய பொலிவுடன் விரைவில் உருவாகி செயல்பட ஆரம்பித்து விடும். பணமுள்ள அன்புள்ளம் கொண்ட
ஒரு மனிதர் உதவிக்கரம் நீட்டினாலே போதும். அன்பு உள்ளம் கொண்டவர்களே உங்கள் கருணைக்
கண்களை திறந்து இயற்கை உலகம் காலைக் கதிரவன் போல் குளுமையுடன் உதயமாக உதவி செய்யுங்கள்.
இயற்கை உலகம் உதயமாக தமிழக அரசிடமே உதவி கேட்கலாம். நான் செய்யும் சேவை உலக மக்களுக்கும், உலக உயிர்களுக்கும், இயற்கைக்கும் செய்யும் சேவையாகும்.
அதனால் நான் யாரிடம் வேண்டுமானாலும் உரிமையுடன் பண உதவி கேட்கலாம். அந்த
இயற்கையும், இறைவனும் நினைத்தால் பொதிகை மலை அமைந்த மேற்கு தொடர்ச்சி மலைகளின்
அடிவாரத்தில் உதயம் ஆகாமலா போய்விடப் போகிறது. கண்டிப்பாக உதயமாகும் என்ற
நம்பிகையுடன் செயல்படுகிறேன். நான் இயற்கையின் மாணவன். இயற்கையின் இனிய நண்பன். இயற்கையின்
செல்லக் குழந்தை. உலக உயிர்கள் அனைத்தையும் உருவாக்கி, உருவாக்கிய உயிர்களுக்கு உண்ண உணவும், தங்குவதற்கு இடமும் கொடுத்து வாழ
வைத்துக் கொண்டிருக்கும் தாயுள்ளம் கொண்ட இயற்கையை வணங்குபவன். இயற்கையே இறைவன் என்ற
உண்மையை மக்களுக்கு சொல்பவன். மனிதர்களிடம் அடிமைப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் வேதனையுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் வாயில்லா ஜீவன்களுக்காக தினமும் ஒரு வேளையாவது கண்ணீர் சிந்துபவன்.
வாயில்லா ஜீவன்களின் உயிர் நண்பன் எளிமையான உடையையும், எளிமையான உணவையும் விரும்புபவன்.
மற்ற ஜீவராசிகளைப் போல் வருங்காலத்தைப் பற்றி சிந்திக்காதவன். மற்ற ஜீவராசிகள் யார்
தயவையும் எதிர்பாராமல் வாழ்வதைப்போல் நானும் வாழ்பவன். சிறு வயது முதல் வாழ்ந்து கொண்டிருப்பவன்.
இயற்கை உலகம் ஆரம்பித்தவுடன் இணைந்து செயல்பட பல அன்பு உள்ளங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அறிவில் சிறந்த பெரியர்கள் குடும்ப பொறுப்புகளை முடித்த பெரியவர்கள், வாழ்க்கையில் அமைதியை தேடி அலைபவர்கள், சேவை மனப்பான்மை உடைய இளைஞர்கள், ஆண்கள், அனைவரும் வரலாம். இயற்கை உலகத்தில்
எல்லா வயதினரும் இணைந்து செயல்படலாம். இயற்கை உலகத்தில் பறவைகளின் சரணாலம் சிறந்த முறையில்
அமைக்கப்படும். இந்தக் கட்டுரையை ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள உறுப்பினர்கள்
படித்து அவசியம் பயன் பெற வேண்டும்
இன்றைய
நாகரீக வாழ்வில் மனித இனத்திற்கு மட்டும் தான் நோய்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மேலும் புதுப்புது வியாதிகளும் வந்து கொண்டிருக்கிறது. வேதனைகளும் பல விதங்களில் மனிதர்களை
வாட்டி வதைக்கிறது. இதற்கு காரணம் என்ன?
பணத்தை கண்டு பிடிப்பதற்கு முன் எல்லோருக்கும் ஒரே உணவு. அதனால் அன்று வாழ்ந்த மக்களுக்கு
நோய்கள் இல்லை. பணத்தின் ஆதிக்கம் தலைதூக்கியது. நாகரீகமும் ஆடம்பரமும் வளர்ச்சியடைந்தது.
உணவுகளும் விதவிதமாக கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களின் பணவசதிக்கு தகுந்தபடி
போட்டி போட்டு தீய உணவுகளை சாப்பிட ஆரம்பித்தார்கள்.. சாப்பிட்டதின் பலன்தான் இன்று
எண்ண முடியாத அளவுக்கு இத்தனை நோய்கள்,
இன்று
உடலுக்கு தீமை தரும் புதுப்புது உணவுகளை கண்டு பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இவைகளை
அனைவரும் விரும்பி உண்பதால் தான் புதிய புதிய பெயர்களில் பலவித நோய்கள் மனிதர்களுக்கு
மட்டும் வந்து கொண்டிருக்கிறது. சுமார் ஐம்பது பேர்கள் இருந்தால் அதில் தலைவன் என்று
ஒருவன் இருப்பான். அதுபோல் வியாதிகளுக்கும் ஒரு தலைவன் இருக்கிறான். அவன் பெயர்தான்
சர்க்கரை வியாதி, சர்க்கரை
வியாதியை மிகவும் கொடிய வியாதி என்றே சொல்லலாம். நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்துள்ள
உணவுகளும், கசப்பு, துவர்ப்பு கலந்த உணவுகளும் இயற்கை
உணவுகளும் தினமும் உண்ண வேண்டும். இப்படி உண்பதால் நோய்கள் வராது. நம் வயிற்றுக்குள்
கணையம் என்று ஒரு உறுப்பு இருக்கிறது. அந்த கணையத்திலிருந்து இன்சுலின் கரக்கிறது.
அந்த இன்சுலின் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றிக்
கொடுக்கிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவிலும் தன் பணியை கணையம் தினமும் செய்து
கொண்டிருக்கிறது. இப்படி முக்கியமான வேலையை செய்யும் கணையத்திற்கு நாம் ஒரு அளவுடன்
தான் வேலை கொடுக்க வேண்டும். மனிதன் இந்த உணவுகளைத் தான் உண்ண வேண்டும். இந்த அளவு
தான் உண்ண வேண்டும். இந்த நேரத்தில் தான் உண்ண வேண்டும். இத்தனை வேளை தான் உண்ண வேண்டும்.
என்ற ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அதன்படி நாம் உணவுகளை சாப்பிட்டால் நம் கணையமும்
மற்ற உறுப்புகளும் பழுதடையாது. நம்மை நோய்களும் அணுகாது. பல மருத்துவர்கள் சர்க்கரை
நோயை பரம்பரை நோய் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பயமுறுத்திக்
கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் வருமாம்.
தாய்வழி சொந்தத்திலோ அல்லது தகப்பன் வழி சொந்தத்திலோ யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால்
பிள்ளைகளுக்கும் வருமாம். இது தவறான கருத்தாகும். பெற்றோர்கள் சேமித்து வைத்த சொத்துக்களும்
பணமும் பிள்ளைகளுக்கு சொந்தமாகலாம். ஆனால் பெற்றோர்களுக்கு வந்த நோய் பிள்ளைகளுக்கு
சொந்தமில்லை. ஆகவே சர்க்கரை நோய் பரம்பரை நோய் இல்லை. கணவனுக்கு சர்க்கரை நோய் இருந்தால்
மனைவிக்கு வரும். மனைவிக்கு சர்க்கரை நோய் இருந்தால் கணவனுக்கு வரும் என்று யாரும்
பயப்பட வேண்டாம். சர்க்கரை நோய் தொற்று நோய் அல்ல. ஒருவர் உடலில் இருந்து மற்றவர்கள்
உடலுக்கு மாறாது. குழப்பம் வேண்டாம். முன் காலத்தில் பணத்தைக் கண்டு பிடிப்பதற்கு முன்
வாழ்ந்த மனிதர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சமையல் உணவுகளையும், இயற்கை உணவுகளையும் சாப்பிட்டு நோயில்லாமல்
வாழ்ந்தார்கள். நலம் தரும் உணவும்,
உடல்
உழைப்பும் அவர்களுக்கு உடல் வலிமையை தந்தது. அன்றைய மனிதர்கள் மூன்று வேளையும் உண்ணவில்லை.
பசி உணர்வு வந்தால் இரண்டு வேளை சாப்பிட்டு வாழ்ந்தார்கள். அவர்களின் உடலின் சக்தி
பல மடங்கு இருந்ததால் அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு உணவே இல்லையென்றாலும் தண்ணீரை
மட்டும் குடித்துக் கொண்டு சூரியன் உதயமாகி மறையும் வரை ஓய்வில்லாமல் உழைத்தார்கள்.
அன்றைய உணவு அவர்களுக்கு உடலுக்கு அவ்வளவு சக்தியை கொடுத்தது. அவர்களுக்கு சர்க்கரை
நோய் இருந்ததா? அவர்களின்
பெற்றோர்களுக்கு இருந்ததா? அவர்களின்
பாட்டனாருக்கு இருந்ததா? அவர்களின்
பாட்டனாருக்கு பாட்டனார் இருந்தாரே அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததா? பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த
மேனியாக அலைந்து திரிந்து கொண்டு இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிட்டு 300 வயது வரை வாழ்ந்த காட்டு மனிதர்கள்
அதாவது ஆதிமனிதர்கள் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்ததா? இவர்களில் யாருக்கும் சர்க்கரை நோய்
இல்லை.
மருத்துவ
வசதி துளி அளவும் இல்லாத காலத்தில் ஆதி மனிதர்களை சர்க்கரை வியாதி தாக்கியிருந்தால்
அவர்கள் எப்படி சுமார் 300
ஆண்டுகள் வரை வாழ்ந்தார்கள்? சுமார்
300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு
சர்க்கரை நோய் இல்லையே. அன்று மருத்துவ வளர்ச்சியும் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இல்லை.
அதனால் தான் அன்று நோய்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்று இன்றைய படிப்பறிவில் சிறந்த
பல மருத்துவர்களும், சில
நாகரீக மனிதர்களும் சொல்லலாம். இவர்கள் சொல்வது உண்மையல்ல. அன்றைய மனிதர்கள் அவர்களின்
உடலை விட்டு உயிர் பிரியும் வரை உடல் பலத்துடன் வாழ்ந்த சிறந்த உழைப்பாளிகளாக திகழ்ந்தார்களே
அவர்கள் நோயாளிகளாக இருந்தால் மரணம் வரை உழைத்து வாழ முடியுமா? அவர்கள் கைத்தடி ஊன்றி நடக்கவில்லையே? அவர்கள் கண்பார்வைக் குறைவால் கண்ணாடி
அணிய வில்லையே? மரணத்தின்
போது முப்பத்திரண்டு பற்களும் அப்படியே இருந்ததே? இன்று அப்படி ஒரு மனிதரை நம்மால் காண்பிக்க முடியுமா?
இன்றைய
வாழ்வில் வயதானவர்களில் ஆரோக்கியமான மனிதர் ஒருவரை காட்ட முடியுமா ? இன்று இளம் வயதிலும், சிறு வயதிலும் பலர் ஒவ்வொரு உடல்
உறுப்பையும் இழந்து கொண்டு இருக்கிறார்களே இதை நாம் சிந்தித்துப் பார்த்து. உணர வேண்டும்.
அன்று அனைவருக்கும் நோய்களால் மரணம் இல்லை. இயற்கை மரணம் தான். இன்று இயற்கை மரணம்
இல்லையே? அன்று வாந்தி பேதியால் பல மக்கள்
இறந்தார்களே என்று இன்று பலர் சொல்லலாம். அது உண்மைதான். சுமார் 80 வருடங்களுக்கு முன் மக்கள் வாந்தி
பேதியால் பலர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், அன்றே பலகீனமான சமையல் உணவுகள் உண்ண
ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் தொகை பெருக்கத்தால் பூமி மாசுபட ஆரம்பித்து விட்டது.
அசுத்தங்களில் இருந்து உருவாகிய ஈக்களும்,
கொசுக்களும், மற்றும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளும்
உருவாகி வாந்தி பேதியை உருவரக்கியது அன்று மருத்துவவசதி இல்லாததால் மக்கள் இறந்தார்கள்..
சமையல் உணவு என்றால் வேகவைத்த உணவு அதாவது நெருப்பின் உதவியால் கொல்லப்பட்ட உணவு. உயிர்
சத்துக்களை முழுமையாக இழந்த உணவு. மூன்று வேளையும் சமைத்த உணவுகளை உண்பதால் மக்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் நாளுக்கு
நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தான் சாதாரண வாந்தி பேதியைக் கூட தாங்க முடியாமல்
மரணமடைந்தார்கள். இன்று மருத்துவ வசதிகள் பெருகிவிட்டது. அதனால் வாந்தி பேதி வந்தாலும்
இன்று காப்பாற்றி விடுகிறார்கள்.
சர்க்கரை நோய் பரம்பரை நோயா?
பரம்பரை
நோய்கள் எப்படி வரும் தெரியுமா? பெற்றோர்கள்
நொறுக்குத் தீனியில் மன்னர்களாக இருப்பார்கள். அவர்களின் குழந்தைகளும் நொறுக்குத் தீனி
தின்றால் தான் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வரும். ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள்
இருந்தால் அந்த இரண்டு குழந்தைகளும் நொறுக்குத் தீனி தின்றால் இருவருக்கும் முன்னும்
பின்னுமாக சர்க்கரை நோய் வரும். அதில் ஒரு குழந்தை மட்டும் நொறுக்குத் தீனி தின்னாவிட்டால்
அக்குழந்தைக்கு சர்க்கரை நோய் வராது. நொறுக்குத் தீனி என்றால் பலருக்கு தெரியாது. தெரிந்து
கொள்ளுங்கள். மனிதர்கள் மூன்று வேளை தான் உண்ண வேண்டும். ஒரு வேளை சாப்பிட்டபின் அந்த
உணவு சீரணமாகி பசியெடுக்கும் வரை இடையில் எதையும் தின்னக்கூடாது. தண்ணீர் மட்டும் தான்
இடையிடையே குடிக்க வேண்டும். சிலர் சாப்பிட்டபின் வீட்டில் இருக்கும் தின்பண்டங்களை
அடிக்கடி தின்று கொண்டிருப்பார்கள். வெளியில் செல்லுமிடங்களில் யார் என்ன உணவு கொடுத்தாலும்
தின்பார்கள். கடை வியாபாரிகள் சரக்குகளை எடை போட்டும், அளந்தும் கொடுக்கும் போது உணவுப்
பொருள்களை அடிக்கடி வாயில் போட்ட வண்ணமிருப்பார்கள். இப்படி உணவுக்குப் பின் அடிக்கடி
எதையாவது தின்பதற்குத்தான் நொறுக்குத் தீனி என்று பெயர். நொறுக்குத் தீனி தின்பவர்களின்
உடலின் உள்ளுறுப்புகளை நொறுக்கிவிடும் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒரு குடும்பத்தில்
பெற்றோர்கள் மாட்டுப்பால் தயிர்-மோர்-வெண்ணெய்-நெய் போன்றவற்றை அதிகம் உண்பார்கள்.
அவர்கள் உடலில் சளி அதிகமாகி ஆஸ்துமா நோயில் கஷ்டப்படுவார்கள். உடல் பருமனும் வரும்.
இவர்களைப் போல் இவர்களின் குழந்தைகளும் பால் பொருட்கள் அதிகம் சாப்பிட்டால் அந்த குழந்தைகளுக்கும்
ஆஸ்துமா நோய் நிச்சயம் வரும். அதில் ஒரு குழந்தை மட்டும் பால் பொருள்களை சாப்பிடாவிட்டால்
அந்த குழந்தைக்கு ஆஸ்துமா நோய் வராது. ஆகவே பெற்றோர்கள் சாப்பிட்டு வாழ்ந்த உணவுகளையே
குழந்தைகளும் சாப்பிட்டு வாழ்ந்தால் பெற்றோர்களுக்கு வந்த நோய்கள் குழந்தைகளுக்கும்
வரும். இதுதான் பரம்பரை நோய்க்கு விளக்கம். ஆகவே எந்த நோயும் பரம்பரை நோய் இல்லை, பயம் வேண்டாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம்.
- தமிழர்
நலம்
சித்தா மருத்துவம் : சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோயா? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Is diabetes hereditary? - Siddha medicine in Tamil [ Health ]