இறைநிலை என்பது இவையிரண்டுமே இல்லை !! உயர்த்தாக நினைத்தால் அது எதில் இருந்து உயர்ந்தது ?? தாழ்ந்ததாக கருதினால் அது எதில் இருந்து தாழ்ந்தது ??
இறைநிலை என்பது உயர்ந்ததா
?? தாழ்ந்ததா ??
இறைநிலை என்பது
இவையிரண்டுமே இல்லை !!
உயர்த்தாக நினைத்தால்
அது எதில் இருந்து உயர்ந்தது ??
தாழ்ந்ததாக கருதினால்
அது எதில் இருந்து தாழ்ந்தது ??
எல்லாம் சமநிலை என்ற
ஒன்றை பிரதானமாக கொண்டே உயர்ந்தும் !! தாழ்ந்தும் இருக்கிறது ..
அப்போது
இறை நிலை என்பது சமநிலையே
..
இறைவழிபாடு என்ற ஒன்று
என்றும் மாற பிரதான நிலையை உணர்வதே ..
அந்த நிலையில் நிலையின்
நிதர்சனத்தை அனுபவிப்பதே. எனவே இறைவாழிபாடு என்ற ஒன்று
நாம் உயர்வாக நினைப்பதை
மாயை என்று உணர்வித்து !!
நாம் தாழ்வாக நினைப்பதையும்
மாயை என்று உணர்வித்து!!
சமநிலை தான் அனைத்தும்
என்ற மெய்யை அறிவித்து ..
அதில் பேதம்??
வேறுபாடு??
பாகுபாடு ??
போன்றவை களையச்செய்யும்
அற்புதநிலையே ..
ஆனந்தநிலையே ..
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றாலும், ஆலயம் சென்று வழிபட வேண்டிய அவசியம்..
வீட்டில் வழிபாடு செய்வதற்கும்,
ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு !!!
ஆலயம் என்பது ஆண்டவன்
திருவடியில் ஆன்மா லயிப்பதற்கும் உரிய இடம் என்று பொருள், மற்றும் ‘ஆ’ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கியிருத்தலையும் குறிக்கும் .
எனவே ஆணவ மலத்தையும்
அடக்குமிடம் என்பதே ஆலயமாகும்...
இறைவனைக் கோவிலிலும்
வழிபடலாம், வீட்டிலேயும்
வழிபடலாம் .
ஆனால் ஞானிகளால்
நிறுவப்பட்ட ஆலயம் சென்று வழிபடும்போது பயன் அதிகமாகவும் , விரைவிலேயும் கிடைத்து விடும் .
பசுவின் உடம்பு
முழுவதும் பால் வளம் நிரம்பி பரவி நிற்கிறது. பாலப் பெற விரும்புவோர், அதன் வாலையோ கொம்பையோ பிடித்து இழுத்தால், பால் கிடைப்பதில்லை.
அதெற்கென படைக்கப்பட்ட
காம்பை வருடினால் மட்டுமே பால் கிடைக்கபெறும் .அதுபோலவே ஆலயங்களில் உள்ள
தெய்வத்திரு
உருவங்கள் பசுவின்
மடியைப் போன்றவை .
அங்கே போனதும் பக்தி
உணர்வு சுரந்து விடும் .இறைவன்பால் மனம் ஒன்றிப் போக வழிபிறக்கும் .
கோயிலில் இறைவனை
வழிபட்டால் வினைகள் வெந்து எரிந்து கருகி,நீராகி விடுவது போல் ,
மனம் நிம்மதி கொள்ள
வாய்ப்புகள் உருவாகிவிடும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : இறைநிலை என்பது உயர்ந்ததா ?? தாழ்ந்ததா ?? - வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு !!! [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Is godliness supreme?? Low?? - What is the difference between home worship and temple worship!!! in Tamil [ spirituality ]