வாழ்க்கை முழுவதும் மகிழ்சியா? வருத்தமா ? எது வேண்டும்?

பதினாறு பேறுகள்

[ அனுபவம் தத்துவம் ]

Is life happy? Are you sad? What do you want? - Sixteen children in Tamil

வாழ்க்கை முழுவதும் மகிழ்சியா? வருத்தமா ? எது வேண்டும்? | Is life happy? Are you sad? What do you want?

கத்தும் தவளைகள்.. கனமழை நின்றதால்... மகிழ்சியா ? வருத்தமா ? வாடியப் பயிர்கள் இனி செழித்து வளரும். மழை பெய்கிறது வாழ்ந்துக் கொண்டிருக்கும் வீட்டில். அமரக் கூட இடமில்லை விவசாயிக்கு... மகிழ்வதா ? வருந்துவதா ?

வாழ்க்கை முழுவதும் மகிழ்சியா வருத்தமா ? எது வேண்டும்?


கத்தும் தவளைகள்..   கனமழை நின்றதால்...

மகிழ்சியா ? வருத்தமா ?

 

வாடியப் பயிர்கள்

இனி செழித்து வளரும். மழை பெய்கிறது வாழ்ந்துக் கொண்டிருக்கும் வீட்டில்.

 

அமரக் கூட இடமில்லை விவசாயிக்கு...

மகிழ்வதா ? வருந்துவதா ?

 

செம்மண் சேர்த்து செங்கல் வார்க்க இனிச்சொட்டு நீரில்லை.

 

மழை பொழிகிறது.

 

செய்து வைத்த கற்களோ செந்தீயில் வாடு முன் கரைந்துக் கொண்டிருக்கிறது.

மகிழ்வதா ? வருந்துவதா ?

 

கொட்டும் கோடையிரவு மழை,ஊரெங்கும் குளிர்ச்சி.

 

என் நகர அறை முழுதும் புழுக்கம்.

மின்சாரமில்லாததால்...

மகிழ்வதா ?வருந்துவதா ?

 

கழனியில் வழிந்தோடும் கன மழை நீரை ரசித்துக் கொண்டிருக்கும் ரசிகன்...

 

மறுபுறம் பார்த்தான்....

கரைந்தோடிக் கொண்டிருக்கும் கரையான் புற்று.

மகிழ்வதா ? வருந்துவதா ?

 

வீட்டினுள் போர்வைக் கதகதப்பில் நான்....

 

சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தேன்...

 

மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கும் நாய்க்குட்டி

மகிழ்வதா ? வருந்துவதா ?

 

மகிழ்ச்சியோ...

 

வருத்தமோ....

 

இரண்டும் எப்போதும் அனவைருக்கும் சமமாக அமைவதில்லை!

 

வருவதை வாங்கிக் கொள்வோம்....

 

மழைத்துளிகள் சுகமாக வந்தால் வாங்கிக் கொள்வோம்.

 

அதுவே சேர்ந்து சுனாமியாக வந்தால் தாங்கிக் கொள்வோம்...

 

அது தான் வாழ்கை.....

 

வாழ்ந்து தான் பார்ப்போமே!

 

வாழ்க வளமுடன்.

 

''கனவுகள் நனவாகட்டும்...!"

வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் கனவு என்பது மிக மிக அவசியமாகும்...

 

கனவை மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும், கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது செயல் வடிவம் பெறும்...

 

வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள், கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள்...

 

நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். பலருக்கும் பல குறிக்கோள்கள் இருக்கும், அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள்.

இருந்தாலும் உங்களது குறிக்கோள்களை, முயற்சிகளை மட்டும் கைவிடாதீர்கள்...

 

ஆம் தோழர்களே...!

 

🟡 நீங்கள் கண்ட குறிக்கோள் கனவை  அடைய எந்நேரமும் சிந்தித்துக்கொண்டே இருங்கள். கனவில் இருந்துதான் சிந்தனை பிறக்கும். உங்கள் சிந்தனைதான் செயல்களாகும்...

 

🔴 உங்கள் குறிக்கோள் கனவை படிப்படியாக நடைமுறைப்படுத்துதலே வெற்றியாகும். மற்றவர்களை வெற்றி பெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் கனவு மெய்ப்பட வேண்டும்...!!

 

உங்களின் வெற்றி முகவரி இன்னொருவருக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், உங்களின் கனவை இன்றே நனவாக்கும் முயற்சியை தொடங்குங்கள்.!!✍🏼🌹

 

🌷

🌸🌼🌿 தன் பாதையிலேயே தன் குருவை காண்பான்.

🌷

 

பாப்பா இந்த விளக்கில் வெளிச்சம் இருக்கிறதே அது எங்கிருந்து வந்தது எனத் தெரியுமா என கேட்டேன்.

 

அந்த குழந்தை சட்டென விளக்கை ஊதி அணைத்து விட்டு,

 

'தாத்தா ! இப்போ இந்த வெளிச்சம் எங்கே போச்சோ,

 

அங்கிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது' என பதில் சொன்னது.

 

ஆஹா!!....

 

ஞானம் எனக்கு மட்டும் சொந்தம் என கர்வம் கொண்டிருந்தேன்.

 

அதை தகர்த்த அந்த குழந்தைதான் என் மூன்றாவது குரு என்றார் அந்த முதியவர்.

🌷

எனவே குரு என்பவர் ஒரு நபர் அல்ல குரு என்பது ஒரு தன்மை "இருளை அகற்றும் மின்னல் கீற்று"..

 

அஞ்ஞானம் போக்கும் அறிவு...!

🌷

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகள் எல்லாம் செய்ய முடியாது..!

 

அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.

 

மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதா உபதேசத்தை..

 

ஒழுக்கத்தில் சிறந்த பீஷ்மனுக்கு கூறவில்லை.

 

வித்தையில் சிறந்த துரோணருக்கு கூறவில்லை.

 

பக்தியில் சிறந்த விதுரனுக்கு கூறவில்லை .

 

பின் யாருக்குத்தான் கூறினான் ?

 

தன்னையே சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்குத் தான் கூறினார்.

 

அர்ஜீனன் முழுவதும் ஏற்கும் தன்மையில் இருந்ததனால் கிருஷ்ணனுக்கு வேறு வழியே இல்லை அர்ஜுனனை சீடனாக ஏற்றுக்கொண்டான். கீதை அருளப்பட்டது.

🌷

இவ்வளவு ஏன்? ஞானத்திற்கெல்லாம் தலைவனாக இருக்க கூடிய சிவபெருமான் கூட தன் மகனாக இருந்தாலும், மண்டியிட்டு வாய் மூடி தலை குனிந்து தன்னை சீடன் என்ற நிலைக்கு இறக்கிக் கொண்ட பின்புதான் முருகனிடம் உபதேசம் பெறமுடிந்தது.

 

சம்மட்டி ஓசையை கேட்டு ஞானமடைந்தவரைப் பற்றியும், உடைந்த குடத்தின் ஓசையிலே ஞானமடைந்த பெண் புத்தத்துறவியைப் பற்றிய கதையையும் படித்துள்ளோம் தானே.

 

ஆகவே இங்கு ஆன்மீகத்தில் முக்கியமானது குருவின் தகுதி மட்டுமே அல்ல; சீடனின் தகுதிதான் மிகவும் முக்கியமானது...!

🌷

எவ்வளவு மழை பெய்தாலும் திறந்த பாத்திரத்தைத்தான் மழையால் நிரப்ப முடியும்.

 

மூடிய பாத்திரத்தை வானமே கிழித்துக்கொண்டு பெய்தாலும் நிரப்ப முடியாது .

🌷

தெரியுமா உங்களுக்கு?

 

உண்மையிலேயே கிரேக்க ஞானி டயோஜனிஸிக்கு ஒரு நாய்தானே குரு.

 

நியூட்டனுக்கு ஆப்பிள் தானே குரு.

 

ஆர்க்கிமிடிஸிக்கு தான் குளித்த தண்ணீர்தானே குரு.

 

உலகின் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைக்கு நட்சத்திரங்களை பற்றி விளக்கிய குரு சோப்பு நுரைதானே.

🌷

அதனால்தான் நதிமூலம் பார்ப்போரின் தாகம் தீர்வதில்லை..

 

ரிஷிமூலம் பார்ப்போர் ஞானம் அடைவதில்லை..

 

தவித்தவன் தண்ணீரை தேடி பயணிப்பது போல, தாகம் கொண்டவனின் தொண்டையை நனைக்க தண்ணீரும் பயணப்படுகிறது.

 

🌿தன்னை தகுதிபடுத்திக் கொண்டவன் தன் பாதையிலேயே தன் குருவைக் காண்பான்...

 

🌺👉இறைவன்...

🌺உங்களுக்காக...

🌺கொடுத்துள்ள எதையும்...

🌺👉குறைவாக...

🌺மதிப்பிடாதீர்கள்...

 

☘👉சில...

நேரங்களில்...

சிலவற்றின்...

☘👉மதிப்பு...

உடனே புரிவதில்லை...

 

🌸👉பல...

🌸நேரங்களில்...

🌸👉இல்லாததை...

🌸நோக்கியே...

🌸👉மனம்...

🌸ஏங்குகிறது...

 

👉இந்த...

      பிரபஞ்சத்தில்...

      👉இறைவன்...

      நமக்கு அளித்திருக்கும்...

      👉அனைத்துமே...

      விலைமதிப்பற்றவை...

      👉இறைவனுக்கு...

      👉நன்றி சொல்ல...

      மறவாதீர்கள்.......👍🦚

😊தன்னுடைய செயலும்...

😊👉வார்த்தைகளும்...

😊மட்டும் தான் சரியென்று...

😊👉வாதாடுபவர்கள்...

😊மத்தியில் உங்கள்...

😊👉அமைதியை...

😊மட்டும்...

😊👉ஆயுதமாக...

😊வைத்துக்கொள்ளுங்கள்...

 

🌝👉நீங்கள்...

🌝எவ்வாறு...

🌝👉பேசக்கற்றுக் ---...

🌝கொள்கிறீர்களோ...

🌝அதே போல்...

🌝👉மெளனத்தையும்...

🌝கற்றுக்கொள்ளுங்கள்...

 

🌞👉பேச்சு...

🌞உங்களுக்கு ...

🌞👉வழிகாட்டலாம் ...

🌞ஆனால் நிறைய...

🌞👉சந்தர்ப்பங்களில்...

🌞👉மெளனம்...

🌞உங்களைப் பாதுகாக்கும்...

 

👁👉மெளனம்...

👁சிலருக்கு ...

👁👉கோபத்தின்...

👁வெளிப்பாடு...

👁👉சிலருக்கோ...

👁நிரந்தரமான...

👁👉சுகந்திரம்...

 

👉உங்களை...

      தவிர வேறு யாரும்...

      உங்களுக்கு...

      👉அமைதியை...

      தர முடியாது......👍🦚

படைத்தவன் மட்டுமே இறைவன் அல்ல..

1. படைத்தவன் மட்டுமே இறைவன் அல்ல.. மற்றவர் பசிக்காக உழைப்பவனும் இறைவன் தான்.

 

2. பசியை போக்கும் அன்னை தெய்வம் என்றால்.. உழவு செய்து அன்னம் படைக்கும் உழவன் கூட கடவுள் தான்.!

 

3. நீங்கள் விவசாயம் செய்யவில்லை என்பதற்காக விவசாயி அழிவை வேடிக்கை பார்க்காதீர்கள்.. நாளை உங்கள் பிள்ளைகள் உணவிற்காக கையேந்தும் நிலை வரலாம்.!

 

4. மண்ணை கடவுளாகவும் விவசாயத்தை உயிராகவும் நினைப்பவர் விவசாயி மட்டும் தான்.

 

5. இளம் விஞ்ஞானியை விட இளம் விவசாயி தான் நம் நாட்டுக்கு தேவை.

 

6. கீழே சிந்தும் உணவை கண்டால் விவசாயிக்கு மட்டுமே அதிகம் வலிக்கும்.

 

7. பணம் தேடிக்கொள்ள ஆயிரம் தொழில்கள் உண்டு.. ஆனால் உயிர் வாழ உணவை தேடிக்கொள்ள விவசாயம் மட்டும் தான் இருக்கிறது.

 

8. கல்லாக இருந்தாலும் கடவுள் தானே என்று நினைக்கும் இந்த உலகம் கடவுளாக இருக்கும் விவசாயியை ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை.

 

9. இதுவரை விளம்பரம் செய்யாத ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான். ஏனென்றால் விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்.

 

10. உணவு அனைவருக்கும் வேண்டும் ஆனால் யாரும் விவசாயம் செய்வதில்லை. தண்ணீர் அனைவருக்கும் வேண்டும் ஆனால் யாரும் அதை சேமிப்பதில்லை.. நிழல் அனைவருக்கும் வேண்டும் ஆனால் மரங்களை பாதுகாக்க மாட்டார்கள்..!

 

11. ஒருநாள் உலகம் நிச்சயம் இவர்களை தேடும்.. அந்த நேரம் விவசாயி மட்டுமல்ல விவசாயமும் எங்கோ தூரத்தில் தொலைந்தது போயிருக்கும்.

 

🌷🌷

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.


பதினாறு பேறுகள்

 

கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு.

 

இந்த பேறுகள் கிடைக்கப் பெற்றவர்கள் எவராயினும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்வது உறுதி.

 

அபிராமி பட்டர் கேட்கும் வரங்கள்

 

அபிராம பட்டர் இந்த பதினாறு பேறுகள் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார்.

 

அந்த பதிகம்:

 

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்

 

கழுபிணி யிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

 

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

 

துன்பமில் லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய

 

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

 

ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!

 

அருள்வாமி! அபிராமியே!

 

இந்தப் பதிகத்தில் ஒரு மனிதனுக்கு வேண்டியது அனைத்தையும் வரமாக அன்னையிடம் கேட்கின்றார்.

 

தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாது அவன் எதிர்பார்க்கும் நன்மைகளை குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், அவனை ஆளும் அரசனிடமிருந்தும் எதிர் பார்க்கின்றார். கல்வி, நோயற்ற வாழ்வு முதலியன அவனை தனிப் பட்ட முறையில் ஏற்றமுறச் செய்பவை.

 

தவறாத சந்தானம், அன்பகலாத மனைவி, குடும்பத்திலிருந்து எதிர்பார்ப்பது. கபடு வாராத நட்பு, தடைகள் வராத கொடை முதலியன அவன் சமூகத்திலிருந்து கேட்பது.

 

தொலையாத நிதி, கோணாத கோல்

 

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது. பாடுபட்டு சேர்த்த நிதி கொடைக்கு உதவவேண்டுமென்றால் தடைகள் வராமலும், தொலையாமலும், திருடர் பயம் இல்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு அரசனின் செங்கோலாட்சி நன்கு நடைபெற வேண்டும்.

 

இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக் கிடைப்பதற்கு, தான் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள அனைவரும் தொண்டர்களாக, அடியார்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும், அதன்படி அவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ அருளியதற்கு அம்பிகையை போற்றுகிறார்.

உனக்கான அடையாளத்தை

உலகம் உணரும் வரை,

உன்னை சுற்றி வரும் விமர்சனம்

ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்.

எண்ணி வருந்தினால், வருந்திக்

கொண்டே தான் இருக்க வேண்டும்

ஏறி மிதித்து விமர்சனங்கள் மீது நிமிர்ந்து நில்.

காலம் மாறும் முயற்சி கைகொடுக்கும்.

கனவு நனவாகும் உலகம் உன்னை உணரும்.*

🌳🌹🌳🌹🌳🌹🌳🌹

              ஓம் ஸ்ரீ  

    ராகவேந்திராய

             நமஹ

யார்...யார் எப்படிப்பட்டவர்கள் ...

 என்பதை அறிந்து இருந்தும் ...

 

 அமைதியாக இருப்பவர்கள் ...

 

 தர்மத்தின் மீது...

 

 நம்பிக்கை உடையவர்கள் ...

 தர்மம் வெல்லும் !

🌳🌹🌳🌹🌳🌹🌳🌹

 .        சிந்தித்து    

   செயல்படுங்கள்

🌳🌹🌳🌹🌳🌹🌳🌹

    குருவே சரணம்

🌹🌳🌹🌳🌳🌹🌳🌹

விருப்பம்

நிறைவேறாத போது

கோபம் அதிகரிக்கிறது

 

விருப்பம்

நிறைவேறினால்

பேராசை அதிகரிக்கிறது

 

கோபமும், பேராசையும்,

நம் வாழ்வை

அழிக்கும் ஆயுதங்கள்

🌳🌹🌳🌹🌳🌹🌳🌹

 .        சிந்தித்து    

   செயல்படுங்கள்

🌳🌹🌳🌹🌳🌹🌳🌹

    குருவே சரணம்

 அன்பு என்பது மனிதனின் பலவீனம்!

 ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும்!

 எதார்த்தமான அன்பு மிருகத்தை மனிதனாக்கும்!

 

❤💛💚🩵💙💜🩷🧡💛


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அனுபவம் தத்துவம் : வாழ்க்கை முழுவதும் மகிழ்சியா? வருத்தமா ? எது வேண்டும்? - பதினாறு பேறுகள் [ ] | Philosophy of experience : Is life happy? Are you sad? What do you want? - Sixteen children in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்