மலம் என்ற கழிவு வெளியேறுதல் என்பது நமது உடலில் அன்றாட முக்கிய வேலையாக உள்ளது. உடல் நலமில்லாமல் மருத்துவரிடம் சென்றால், பசி எடுக்கிறதா? மலம் கழிக்க முடிகிறதா? என்று அவர் கேட்பார்.
சுஜி முத்திரை நீண்டகால மலச்சிக்கலுக்குத் தீர்வா?
மலம் என்ற கழிவு
வெளியேறுதல் என்பது நமது உடலில் அன்றாட முக்கிய வேலையாக உள்ளது. உடல் நலமில்லாமல்
மருத்துவரிடம் சென்றால், பசி எடுக்கிறதா? மலம் கழிக்க முடிகிறதா? என்று அவர் கேட்பார். மலச்சிக்கல் என்பது பலருக்கு
நிரந்தர வியாதியாக உள்ளது. இதனால் மனமும், வாழ்க்கையும்கூட பாதிக்கப்படுகிறது.
நீண்டகால மலச்சிக்கல், வேறு பல உடல்நலக்
கோளாறுகளை உருவாக்கும். யோகாசனப் பயிற்சி செய்பவர்களுக்கு குடல் சுத்தமாக இருப்பது
அவசியம். மலச்சிக்கல் தொடர்ந்து இருக்கும் நிலையில் பசி எடுக்காது; சாப்பிடுவதில் ஆர்வம்
இருக்காது. இதனால், மன அழுத்தம் உண்டாகி, நோய்களும், உணர்ச்சிவசப்படும் நிலையும் உண்டாகும்.
சுஜி முத்திரை, மேற்கண்ட எல்லாப்
பிரச்னைகளையும் தீர்க்க உதவுகிறது.
இரண்டு கைகளையும்
தனித்தனியே இறுக்கமாக மடக்க வேண்டும். கட்டை விரல், நடுவிரலின் மேல் இருக்கமாக
இருக்க வேண்டும். கைகளை மார்புக்கு அருகில் வைத்துக்கொள்ளவும். மூச்சை மெதுவாக
உள்ளே இழுத்தபடி வலது கையை வலது பக்கமும், இடது கையை இடது பக்கமும் மூடிய நிலையிலேயே நகர்த்த
வேண்டும்.
இரண்டு கைகளிலும் சுட்டு
விரலை மட்டும் (ஆள்காட்டி விரல்) மேல் நோக்கி நீட்ட வேண்டும். ஆறு முறை மெதுவாகச்
சுவாசத்தை இழுத்துவிட்ட பிறகு, ஆட்காட்டி விரலை மடக்கி கைகளை மீண்டும் மெதுவாக நெஞ்சுக்கு நேராகக்
கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்ய வேண்டும். இந்த முத்திரையை
நின்றுகொண்டோ,
அமர்ந்துகொண்டோ
செய்யலாம். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள், தினமும் காலை, நண்பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் பிரச்னை தீரும் வரை
செய்யலாம்.
ஆள்காட்டி விரலில், பெருங்குடல்
சம்பந்தப்பட்ட சக்தி ஓட்டப் பாதை உள்ளது. பிற விரல்களை மடக்கி ஆள்காட்டி விரலை
மட்டும் நீட்டும்போது, பெருங்குடல் ஓட்டப்பாதை திறக்கிறது. இதனால், அந்த ஓட்டப் பாதைக்குள்
அதிகச் சக்தி செல்வதால், பெருங்குடல் நன்கு செயல்பட்டு மலச்சிக்கல் நீங்குகிறது.
இதைச் செய்யும்போது, சிலருக்கு
வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், இந்த முத்திரையைச்
செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
1. மன அமைதி ஏற்படும்.
2. நன்கு பசி எடுக்கும்.
3. மன அழுத்தம்
நீங்கும்.
4. உடலில் இருந்து
கழிவுப் பொருள்கள் வெளியேறி, குடல் சுத்தமாகும்.
5. ஒற்றைத் தலைவலி, வயிற்று வலி,ஜலதோசம், மூல நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள்
குணமாகும்.
6. வாயுத் தொல்லை
தீரும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சுஜி முத்திரை நீண்டகால மலச்சிக்கலுக்குத் தீர்வா? - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Is Suji Mudra a cure for chronic constipation? - Recipe, Benefits in Tamil [ ]