“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்...
நான்.. நான்.... நான்...... என்ற ஆணவம் நல்லதா?
“நான்” என்னும் எண்ணம்
ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு
இருக்கின்றான் என்று பொருள்...
அறிவு அதிகமாக உள்ள ஒரு
சிலருக்குத்தான் ஆணவம் வருகிறது. ஆனால்!, பெரும்பாலான நிறை குடங்களுக்கு அது வருவதில்லை...
வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு
தடுமாறி, முட்டாள்
தனமான தைரியம் தோன்றி, ‘எல்லாம் நாமே’ என்ற எண்ணம் ஒரு
சிலருக்கு பிறந்து, தடுமாறி ஒரு செயலை செய்யத் தொடங்கியதும்,
ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, அவர்களை
கூனிக் குறுகச் செய்கின்றது...
ஆணவத்தின் மூலம் வெற்றியோ, லாபமோ
கிடைப்பது இல்லை; அடிதான்
பலமாக விழுகிறது...
தான் பணக்கார வீட்டுப்பெண்
என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;
தான் அமைச்சராகி விட்ட
போதையில் மக்களை அலட்சியப்படுத்தும் அரசியல்வாதிகள்,
தான் சொன்ன ஏதோ ஒன்றை பொது
மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாளும் எதையாவது உளறிக் கொண்டிருக்கும்
தலைவர்கள்;
இவர்களெல்லாம், ஒரு
கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப்
போய் விடு கின்றார்கள்...
‘எதற்கும் தான் காரணமல்ல'; என்று
எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை. ‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று
நினைப்பவன், பொது இடங்களில் அவமானப்படாமல் தப்பியது இல்லை.
ஆணவத்தால் அழிந்துபோன
அரசியல் தலைவர்கள் உண்டு; திரைப்பட
நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு. ஆனால்!, அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக
முன்னேறியவர்கள் பல பேருண்டு...
ஆணவத்தோடு நிமிர்ந்து
நிற்கும் தென்னை, புயல்
காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து,
வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பிவிடுகிறது...
நம்மிடம் ஏதும் இல்லைஎன்பது
ஞானம். நம்மை தவிர ஏதும் இல்லை' என்பது ஆணவம்...!
ஞானம், பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது. ஆனால்!, ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது...!!
ஆணவம் அறிவை அழிக்கும்.
அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!!!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பெரும்பாலான
மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும்
பெரும்பாலும் வெளிப்படையான வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை...
இயலாத, ஒரு நேர்கோடான, சீரான வாழ்க்கைக்காக
ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை எவருக்குமே என்றுமே இதுவரை அமைந்ததில்லை.
இனி அமையப் போவதுமில்லை...
அதனால் அவர்கள்
எதிர்பார்ப்புகளும், நடைமுறைகளும் ஒன்றுக்கொன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை
முழுவதையும் சிக்கல்களாகவே காண்கிறார்கள்...
அதன் காரணமாக, நாளும் வாழ்வில்
அமைதியை இழந்து தவிக்கிறார்கள். உலகம் தானே இயங்குகிறது. நடக்கும் நிகழ்வுகள்
பலதும் நம் கருத்துக்களை ஒத்துப் போவதில்லை...
அதை ஏற்றுக்
கொள்கிறீர்களா...!, இல்லையா...? என்று உலகம் உங்களிடம் கேள்வி கேட்டு எதையும் நடத்துவதில்லை. பல
நேரங்களில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை...
அப்படி இருக்கையில்
நம் கட்டுப்பாட்டில் இல்லாத, நம்மால் மாற்றியமைக்க
முடியாதவற்றை எண்ணி வருந்துவதும், புலம்புவதும், கலங்குவதும் அந்த
நிலைமையை எள்ளளவும் மாற்றிவிடப் போவதில்லை...
பல சிறிய செயல்கள்
பலரையும் தேவைக்கும் அதிகமாக மன அமைதியை இழக்கச் செய்கின்றன...
மழை விடாது பெய்தால்
மனவருத்தம் வந்துவிடுகிறது.
அலுவலகத்திலும், அக்கம்பக்கத்திலும்
ஒருசிலருடைய குணங்கள் வெறுக்கத்தக்கதாக இருந்தால் மனஅமைதி பறிபோகிறது...
முக்கிய வேலையாகப்
வெளியே வாகனத்தில் போகிறோம். வழியில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. வாகனங்கள்
ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன...
இது மகிழ்வுற வேண்டிய
சூழ்நிலை அல்லதான். ஆனால்!, அந்நேரத்தில் சிலர்
படும் அவசரமும், பொறுமையின்மையும் கொஞ்சமல்ல. புலம்பித் தீர்ப்பதும், குடியே மூழ்கிப் போய்
விட்டது போல மனஅமைதி இழப்பதும் பலரிடம் நாம் பார்க்க முடிந்த தன்மைகள்.
எதிர்பார்த்தபடி அடுத்தவர்கள் நடக்கா விட்டால் மனம் குமுறுகிறது...
இவை நாம் புலம்பினால்
வராமல் இருப்பவையும் அல்ல. இது போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் பொழுது மட்டுமே
வாழ்க்கையை நாம் மென்மையாகவும் மேன்மையாகவும் ஆக்கிக் கொள்ளமுடியும்...
ஆம் நண்பர்களே...!
எது நடந்தாலும் அதனை
ஏற்றுக் கொள்ளும்போது நம் சக்தி வீணாவதைத் தடுக்கிறோம். மன அமைதியும்
பெறுகிறோம்...!
அப்போது ‘இப்படி
ஆகிவிட்டதே!’ என்ற ஓலத்திற்கு பதிலாக ‘இனி என்ன செய்வது...?’ என்ற ஆக்கபூர்வமான
சிந்தனை பிறக்கிறது...!!
இப்படிப்பட்ட
ஆக்கபூர்வமான சிந்தனையால் எந்த சூழ்நிலையில் இருந்தும் விடுபடும் வழியோ, அல்லது அந்த
சூழ்நிலையைத் தாங்கும் வழியோ பிறக்கிறது...!!!
இப்படி மாற்ற
முடியாததை ஏற்றுக் கொள்ளும்போது உலகத்துடன் போராடுவதை விட்டுவிட்டு, உலகத்துடன் ஒத்துப்
போய் சமாளித்து வெற்றி பெறுகிறோம்...!
ஒரு குளத்தில் நிறைய மீன்கள்
இருந்தன. ஒரு மீனவன் வாரத்துக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் வலை வீசி மீன்களை
பிடித்து சென்றான்.
அந்த மீனவன் வரும் போதெல்லாம் எல்லா மீன்களும்
பயந்து நடுங்கின. ஆனால் ஒரு மீன் மட்டும் பயப்படாமல் சந்தோஷமாகவே இருந்தது.
மற்ற மீன்களெல்லாம் இந்ந
மீனிடம் அது மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகின்றது என்று கேட்டன.
அதற்கு அந்த மீன் சொல்லியது
என்னவென்றால் மீனவன் வலையை வீசுவற்கு முன் குளத்தில் இறங்கி தன்னுடைய ஒரு காலை
குளத்துக்குள் வைத்து நின்று வலையை வீசுவான்.
நான் அவன் காலுக்கு அருகில்
சென்று நின்று கொள்வேன். அதனால் அவன் வலையில் எப்பவுமே சிக்க மாட்டேன் என்றது.
அது போல நாமும் பகவானுடைய பாதத்திற்கு அருகில்
நின்று கொண்டால் எந்த கஷ்டமும் நம்மை அண்டாது.
எந்த கர்ம வினையும் நம்மை நெருங்காது..
பிரச்சனைகள் தீராது என்று நினைத்தால் கடவுளிடம் விட்டு விடுங்கள். அவரிடம் சராணகதி
அடைவதே தீர்வு....
அன்புடன்....
༺🌷༻தமிழர்
நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி.
வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஊக்கம் : நான்.. நான்.... நான்...... என்ற ஆணவம் நல்லதா? - எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள்...! சரணாகதி அடைதல் [ ஊக்கம் ] | Encouragement : Is the arrogance of I.. I.... I...... good? - Accept anything...! Achieving surrender in Tamil [ Encouragement ]