மனித மூளையானது கம்ப்யூட்டரை விட பெட்டர் என்று சொல்வதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது.
மனித மூளை கணினி விட பவர் அதிகமா?
மனித மூளையானது கம்ப்யூட்டரை விட பெட்டர் என்று சொல்வதற்கு
நிறையக் காரணங்கள் இருக்கிறது. அனைவரும் எளிமையாக புரியும் வகையில் சொன்னால்
கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததே இந்த மனித மூளை தான். உண்மை தான். மனித மூளையில்
உள்ள நியூரான்களின் எண்ணிக்கையானது வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின்
கூட்டத்தை விட அதிகமாம். முதலில் நட்சத்திரம் எண்ணிக்கை என்ன இருக்கிறது என்று எண்ணுவதே மனதில் எண்ண முடியாத
விஷயம். நரம்பு மண்டலத்தின் தலைமை பகுதியே இந்த மூளைப்பகுதி தான். இந்த மூளை தான்
மனிதனை உலகில் உச்சியில் கொண்டு போய் நிறுத்துவதும், நான் சொல்ல வருவது புரிந்து
இருக்கும் அதாவது நாம் எதுவெல்லாம் வெற்றி என்று நினைக்குரோமோ அங்கெல்லாம் கொண்டு
நினைக்க முடியாத உச்சியில் வைப்பதும் இந்த மூளை தான். அதே நேரத்தில் மனிதனுக்கு
சோர்வின்மை, உடல் முழுவதும் சோர்வு, மன நோய், தாழ்வு மனப்பான்மை, தயக்க உணர்வு,
பயப்படுதல், புத்தி மந்தம் என்று சொல்வோமே அசமந்தம் நிலை மற்றும் உளவியல் ரீதியான
அனைத்து நோய்களையும் மனிதனுக்கு வரக் காரணமாக இருக்கிறது. இந்த மூளை மனிதனை ராஜாவாக்கவும்
செய்யும். அதே நேரத்தில் மனிதனை ஒரு மூலையில் கூஜாவை வைத்து இருக்கவும் செய்யும்.
அது நம்மை பயன்படுத்துவதை விட நாம் அதை பயன்படுத்தினால் ராஜா பதவி நமக்கு ரெடி.
அப்பேற்பட்ட மூளையின் வேலைகளையும், மூளையை வைத்துச் செய்யும் நம் வேலைகளையும், மூளையின்
முக்கியத்துவத்தை முக்கியமாக கட்டுரையில் விரிவாக படிக்கலாம்.
மூளையானது பெரு மூளை, சிறு மூளை, மூளைத் தண்டு என்று மூன்று
பகுதிகளை மனித மூளை கொண்டுள்ளது. மனித மூளையானது சுமார் 1400 – 1500 கிராம் எடை கொண்டது.
1260 க.செ.மீ அளவு உள்ள ஒரு மனிதனின் முக்கிய உறுப்பாக காணப்படுகிறது. பெரு மூளை,
சிறு மூளை மற்றும் தலைப் பகுதியில் இருக்கும் மூளையின் வெளிப்பகுதி சாம்பல்
நிறத்தில் அதாவது உயிரோடு இருக்கும் மூளையிலே காணப்படும். அது செயல் இழந்து
இறக்கப்பட்டு, எரிக்கப்பட்டு மீன்றும் சாம்பல் நிறம்மாகிறது. அவ்வளவு தான் அதன்
சுழற்சி வளர்ச்சி எல்லாம். நாம் உயிரோடு இருக்கும் போது என்னவெல்லாம் அதை பற்றி
பேசுகிறோம். உனக்கு அறிவு இருக்கா? மூளை இல்லையா? மூலையில் களிமண்ணா? அப்படி
இப்படின்னு மூச்சுக்கு மூன்னூறு தடவை மூளையை பற்றி நாம் உயிரோடு இருக்கும் போதே
இந்த மூளையையே பயன்படுத்தி கன்னாபின்னாவென்று பேசுகிறோம். நாம் ஏன் அதை சரியாகப்
பயன்படுத்தி உலகிற்கே சாம்பிளாக இருக்க வேண்டாமா?
உடல் எடையில் 2 சதவீதம் தான் இருந்தாலும் இந்த மூளையானது
அதிகமான ஆற்றலை பத்து மடங்கு அளவில் 20 சதவீதம் அளவுகளில் எடுத்துக்கொள்கிறது. ஆதலால்
அதற்கேற்ற ஆற்றலை உணவுகள் மூலம் நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மனித மூளையும் தொல் காலத்தில் வாழ்ந்த
மனிதர்களுக்கு அதன் எடை குறைவாக இருந்தது என ஆய்வுகள் சொல்கிறது. அது வளர வளர
ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதற்கேற்ற உணவுகளும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் அறிஞர்களின் மூளை எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சியும் செய்யப்படுகிறது.
ஏன் நமக்கு அனைவருக்கும் தெரிந்த அறிவியல் அறிஞரின் மூளையை திருடிக்கொண்டு கூட
ஆராய்ச்சியும் நடந்தது. அதில் அவர்கள் எடை மற்றும் சில அமைப்புகளில் வித்தியாசம்
கண்டு சொன்னார்கள். அது எதுவாயினும் நாம் நம் மூளைக்கு சரிவரத் தீனிகள் போட்டாலே நம்முடைய
IQ லெவல் அதிகமாகும். தீனி என்று சொல்லும் போது உணவுத் தீனி மட்டும் அல்ல அறிவுத்
தீனியும் சேர்த்துத் தான் சொல்லப்படுகிறது. மற்ற எல்லாச் செல்வங்களும் கொடுக்கக்
கொடுக்க, அள்ள அள்ள குறையும். இந்த கல்விச் செல்வத்தின் மூலம் கிடைக்கும் அறிவு
மட்டுமே கொடுக்க கொடுக்க, வாங்க வாங்க மூளை வங்கியில் சேமித்துக் கொண்டே போகும்.
அது அதிகமாக சேமிக்க இடம் இருக்கிறதோ இல்லையோ
என்று நினைத்து விடாதீர்கள். அதற்க்கு நான் சொல்லப்போவதை மேற்கொண்டு படித்தால்
நீங்கள் அசந்து விடுவீர்கள். ஆம். உண்மை தான். நம்முடைய மூளையானது கம்ப்யூட்டரை
விட பல மடங்குகள் சேமிக்கும் திறனை கொண்டது. மூளையின் மையப் பகுதியில் இருக்கும்
ஒரு சின்ன இடத்தில் நினைவகப் பகுதி தான் பல மில்லியன் தகவல்களை சேமிக்கிறது
என்றால் எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது. நாம் தான் இங்கே அதிகம் படிக்காதே குழம்பி
விடுவாய் என்று நாம் சுருக்கிக் கொள்கிறோம். விஷயம் அப்படி அல்ல. எவ்வளவுக்கு
எவ்வளவு நாம் அறிவைத் தேடி தேடி சேகரித்து படித்து குறிப்பாய் உள்வாங்கி படிக்க படிக்க
மூளையானது நமக்குத் தேவைப்படும் நேரத்தில் நமக்கு அருவி போல் கொட்டும். நாம் தங்கு
தடையின்றி அதை வாரி வாரி அள்ளி எடுத்துக் கொண்டே போகலாம். அது ஒரு அறிவு
களஞ்சியமாக அமுத சுரபி போல நமக்கு தேவையானதை தேவைக்கு அதிகமாய் கொடுத்துக் கொண்டே
இருக்கும். இது தான் மூளையின் அற்புதம் ஆகும். நினைத்து பார்க்கவே நினைக்க முடியாத
அளவுக்கு நினைவாற்றல் உள்ள இந்த மூளை எப்பேற்பட்ட பட்ட வரசாதம் நமக்கு. அதுவும்
தற்போதைய உலகில் நாம் தேடித் தேடி போக கூட வேண்டாம். நம்மையே தேடி வரும் அளவுக்கு
அறிவியல் வளர்ந்து விட்டது. அதனால் தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு பெரிய அளவு
மூளை கூட தேவை இல்லை என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நமக்கு ஆதி காலத்தில்
தான் தகவல்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருந்தது. ஒரு விஷயம் தெரிய வில்லை
என்றால் நாம் அதப் பற்றி தெரிய பல நாட்கள் ஏன் வருடங்கள் இன்னும் கூடுதல் படுத்தி
சொன்னால் தெரியாமலே போவதற்கு கூட வாய்ப்பு அதிகம் இருந்தது. அப்படியே இப்போ
நினைத்துப் பாருங்கள். அடுத்த வினாடியே நம் நண்பன் கூகுளே தொகுத்து நமக்காக
கொடுத்து விடுறான். காலங்களும் சேமிக்கப் படுகிறது. எம்மா பெரிய வேலைய செய்து இந்த
கூகுள். அதற்க்கு ஒரு பெரிய நன்றியைத் தான் நாம் சொல்ல வேண்டும். நாம் உலக மூளை தினமாக ஜூலை 22 ம் தேதி வருடம் தோறும்
கொண்டாடுகிறோம்.
உடம்பில் எங்கே அடிபட்டாலும் மூளை தான் வலி என்ற
உணர்ச்சியை ஏற்படுத்தும். அந்த தகவல் பரிமாற்றம் ஒரு நிமிடத்திற்கு 260 மைல்கள்
வேகம் கொண்டது. அதே சமயம் நாம் பேசும் போது வரும் வார்த்தைகளும் மூளையில் இருந்து
அந்த வேகத்தில் வரக் கூடியது என்கிறார்கள். மூளையானது சேதம் அடைதல், அடிபடுதல்,
காயம் உண்டாதல், மூலையில் காயம், புண்கள் ஏற்படும் போது ஆரம்பித்தலே கவனித்தால்
உயிர் பலியை தவிர்க்கலாம். மூளை புண்ணானது மூளையின் மூலையிலோ அல்லது மொத்தத்திலோ
பாதிப்பை ஏற்படுத்தலாம்.
• இதன் அறிகுறிகள் லேசாக தலை வலித்தல், திடீர்
தலை வலியில் ஆரம்பித்து மோசமான அதிகமான தாங்க முடியாத வலியை கொடுக்கும்.
• பசியின்மை, வாந்திப் பேதி, அசீரணக்
கோளாறு, நினைவு இழத்தல், குழப்பம் மன நிலையில் இருத்தல், கழுத்தில் வலி ஏற்படுதல்,
செவி திறன், கண் பார்வை குறைபாடு, பேச்சுக்கள் குளறுபடியாதல் இது போன்ற பல காரணங்களும்
தொடர்பு இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
• வைரஸ் தொற்றுக்கள் மூளையின் செல்களை
பாதிக்கிறது.
மூளை புண்கள் என்பது மூளை திசுக்களின் சேதமடைந்த
ஒரு பகுதி ஆகும். இது ஒரு அதிர்ச்சிகரமான காயம், தொற்று அல்லது மூளை செல்கள் அழிவு காரணமாக
நிகழலாம். மூளைக் காயத்தின் ஆரம்ப நிலைகள் எந்த அறிகுறிகளையும் காட்டாமல்
இருக்கலாம். இருப்பினும், புண்கள் காலப்போக்கில்
முன்னேறும்போது, அவை மன மற்றும் உடல் மாற்றங்களை
ஏற்படுத்தும். பல வகையான மூளைப் புண்கள் உள்ளன, அவை பெரியவை
முதல் சிறியவை எனவும் சிலவற்றை மற்றொன்றுடன் ஒப்பிடும் போது பாதிப்பில்லாதவை முதல்
உயிருக்கு ஆபத்தானவை வரை இருக்கலாம். என்றைக்குமே ஆரம்பத்துலே கவனித்தால்
முற்றிலும் குணப்படுத்தி விடலாம். காட்டில் தீ பிடிக்கும் போதே அனைத்தால் பரவ
வாய்ப்பு இருக்காது. இதுவே காலம் தாழ்த்தும் போது அணைக்க காலங்களும் அதிகம் எடுக்கும்.
சேதங்களும் அதிகம் ஆகும் தானே. அது போல தான் உடம்பைக் கவனித்தலும். ஆரம்பத்துலே
மருத்துவரை அணுகி விடுங்கள். அப்போது தான் மூளையில் ஏற்படும் பாதிப்புகளை முளையிலே
கிள்ளி எரிவதொடு, அதன் ஆணிவேரையே உடம்பின் எந்த மூலையிலும் இல்லாதவாறு அகற்றி
விடலாம். அப்பேற்பட்ட அளவில் மருத்துவ உலகம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் பெரு
மூளையில் உள்ள திசுக்கள் இறக்க இறக்க ஒரு வகை புண் வரும். இந்த திசுக்கள்
இறப்பதற்கு காரணமே போதுமான ஆக்ஸிஜன்
கிடைக்காமல் போவதால் அழிகிறது. மூளை அறுவை சிகிச்சை செய்தும் மூளைப் புண்கள், மூளைக்கட்டிகள்
சரிசெய்யப்படுகிறது. அகற்றப்படுகிறது.
மனித மூளை என்ற உறுப்பு இறைவன் நமக்கு கொடுத்த ஒரு அற்புத படைப்பு.
அதே மாதிரி 100 மில்லியனுக்கு மேலான நரம்புகளை கொண்ட சிக்கலான அமைப்பு. அந்த
நரம்புகளை நீளமாக வைத்தால் பூமியை நான்கு முறையாவது சுற்றலாம் என்கிறார்கள் வியக்க
வைக்குறது நம் மூளையும் தான். மூளையானது பல வழிகளில் நமக்கு பயன்படுகிறது. இன்றைய
அறிவியல் வளர்ச்சி ஆகட்டும், மற்றத் துறை வளர்ச்சி ஆகட்டும் எல்லாத் துறைகளும்
சிறந்த முறையில், நல்ல முன்னேற்றத்தை கொடுப்பதும் இந்த மூளையே. ஏன் மூளையப் பற்றி
ஆராய்ச்சி செய்ய வைப்பதுமே இந்த மூளை தானே. தொலைத் தொடர்பு துறை 5G நோக்கி
செல்கிறது. இன்று உலகம் விரல் நுனியில் வந்து விட்டது. வருங்காலத்தில் புதிய டெக்னாலஜியில்
ஒரு மருத்துவர் ஒரு இயந்திர மனிதன் உதவி கொண்டு எங்கோ அடுத்த நாடுகளில் இருந்து,
நேர் எதிர் மூலையில் மூளை ஆபரேஷன் செய்வார். ஓட்டுனர் இல்லா வாகனங்கள் சாலைகளில்
ஓடும். அப்போது நல்லா சிந்தித்து பாருங்கள். மோதல் நடப்பதிற்கு வாய்ப்பு இருக்காது.
அப்படிப்பட்ட பயன் தரும் மூளையை பாதுகாப்பது என்பது நமக்கு அவசியம் அல்லவா?
பலதரப்பட்ட பயன்கள் கொடுக்கும் மூளையானது சோர்வு இல்லாமல்
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க அதற்குத் தேவையான உணவு பொருள்களை நாம்
மேற்கொள்வோமே!
• விட்டமின் C உள்ள உணவுகளை தேடி தேடி
உட்கொள்ளுங்கள். ஆரஞ்சு பழம் மூளை செல்களை சிதைக்கும் ப்பிரி ரேடிக்களை அழிக்கும்
ஊட்டச் சத்தாக செயல்படும். மேலும் கொய்யா, தக்காளி, கொடை மிளகாய், ஸ்ட்ராபெர்ரி
போன்றவைகள் அதிகம் எடுக்கவும்.
• கீரை வகைகள் எடுக்கவும். கீரைகளில்
விட்டமின் k உள்ளது. இது மூளையின் செல்களை புதுப்பிக்கவும், ஞாபக சக்தி
அதிகரிக்கவும் செய்கிறது.
• மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் தெரியும் எவ்வளவு பெரிய எதிர்ப்பு சக்தி உள்ள உணவு என்று. கொரானா
காலத்தில் அனைவரும் இந்த கிருமி நாசினியை பயன்படுத்தினோம். இது மூளை செல்களை
ஊக்குவித்து நினைவாற்றலை அதிகப்படுத்தும்.
• மனதையும் உடம்பையும் சரிவரக் கவனித்தாலே
இந்த மூளையானது ஆரோக்யமாக செயல்படும். இல்லையேல் பலவீனப்படும். காலையில் காபி
அருந்துங்கள். இதில் உள்ள காபின் மூளையை சுறுசுறுப்பாக்கி, விழிப்புணர்வு நிலையை
ஏற்படுத்தி, சிறப்பான கவனத்தை செயலில் காட்டச் செய்யும்.
• முட்டை சாப்பிடுங்கள். இதில் விட்டமின் B6,
B12 இருக்கிறது. பகலில் சாப்பிட்டு வர மூளை வேற லெவலில் இயங்கும்.
• வால் நட்ஸ், பாதாம் பருப்புகள் போன்றவை
மூளை செல்களை அழிக்க விடாமல் எதிர்க்கும் சக்தி வாய்ந்தது.
• பூசணி விதைகளில் உள்ள கனிமச் சத்துக்கள்
மூளையின் செயல்களை ஒருமுகப்படுத்தி செயல்கள் சிறப்பை கூட்டுகிறது.
• பெர்ரி பழங்கள் நல்ல பலன்களைத் தரும்.
இதில் உள்ள விட்டமின் C மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட் மூளையில் புதிய செல்கள்
உருவாகவும், மூளையில் புத்துணர்ச்சிகள் ஏற்படவும் செய்கிறது.
• ஒமேகா 3 இது தான் மூளைக்கு தேவையான
உயிர்ச் சத்து. ஏன் என்றால் மூளையானது பாதிக்கு மேலாக ஒமேகா 3 கொழுப்பு
அமிலங்களால் சூழப்பட்டுள்ளது. இது மூளை நரம்புகளின் வளர்ச்சிக்குத் பெரிதும் தேவைப்படுகிறது.
• மற்றபடி வழக்கமாக உடற்பயிற்சி, குறைந்த
பட்சம் 7 மணி நேரமாவது குறிப்பாய் இரவு 10 – விடிகாலை 3 மணி வரை அவசியத் தூக்கம், வேலைகளுக்கு
நடுவே சின்ன சின்ன ஓய்வு, எடை குறைப்பு, மூளையை ஆரோக்யமாக வைத்து இருக்கும்.
• நம் உடம்பு 25 வாட் மின்சாரம் கொண்டது என
கேள்விப்பட்டு இருப்போம். மனித உடம்பில் மின் சக்தி உண்டு என்பது இந்த மூளை தான். இது
நமக்கு 25 வாட்ஸ் கொண்ட LED பல்பை எரிய வைக்கும் அளவுக்குத் திறன் உண்டு என்றால்
வியக்க வைக்குறது அல்லவா?
• நாம் சாதாரணமாக நினைக்கும் போது நம்
மனதில் பதியும் எண்ணங்களை விட பல ஆயிரங்கள் மடங்கு திறன் நம்முடைய ஆழ்மனதிற்கு
உண்டென்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதாவது நம் மனத்தை விட ஆழ்மனம் எவ்வளவு பவர்
வாய்ந்தது என நினைக்கும் போதே உடம்பு புல்லரிக்கிறது அல்லவா? அதை தான் நம்
முன்னோர்கள் மனதில் உள் வாங்கச் சொல்கிறார்கள் அதுவும் ஆள் மனதில். ஆழ்மனதில்
பதிந்தாலே அந்த செயல் முடிச்சதர்க்கு சமம். இந்த பிரபஞ்ச விதி கூட ஈர்ப்பு விதியை
மையப் படுத்துதலே இதை வைத்துத் தான் என்று இப்போ புரிகிறதா? ஒரு எண்ணத்தை மனதில்,
ஆழ்மனதில் பதிய வைத்தாலே அந்த ஆழ்மனமே செயலின் வழிகளை தானாகவே நம் மூளைக்கு வேலையை
முடிக்க கட்டளை கொடுத்து விடும். அப்பேற்பட்ட பவர், சூப்பர் பவர் மூளை பவர்.
• பெண்ணின் மூளை 10 சதவீதம் ஆணின் மூளையை
விடச் சிறியது. மேலும் மனித மூளையின் வளர்ச்சி பதினெட்டு வயதில் நின்னு விடுமாம்.
• குறைந்த பட்சம் 5 நிமிடமாவது ஆக்சிஜன் இல்ல்லாமல் மூளையால் இருக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? 5
ல் ஒரு பங்கு ஆக்சிஜனை மூளை எடுத்துக் கொள்கிறது. முக்கால் சதவீதம் தண்ணீரால் ஆனது
என்று சொல்கிறார்கள். அதே மாதிரி உடலின் ரத்தத்தை 5 ல் ஒரு பங்கு எடுத்துக்
கொள்கிறது.
• மூளையானது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாய்
இருக்குமாம். நம் கை ரேகைகளை போல் வெவ்வேறு விதமாய் இருக்குமாம்.
• ஒரு நாளைக்கு
60 ஆயிரத்துக்கு மேலாக எண்ணங்களை மனமானது எண்ணுகிறது என்றால் நம்ப முடிகிறதா? அதே
நேரத்தில் இரவு நேரங்களில் காணும் கனவுகள் 10 சதவீதம் தான் நமக்கு விழித்த உடன்
தெரிகிறது. நாம் 10 சதவீதம் தான் மூளையை பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். அது
உண்மையோ அல்லது தவறான தகவலோ எதுவாயினும் அதில் உள்ளதில் நல்லதை மற்றும் உள்ளத்தில்
எடுத்துக் கொள்ளவும். நாம் ஏன் 100 சதவீதம் எடுக்கக்கூடாது? இது போன்ற நல்லதை
மட்டும் எடுத்துக்கொள்ளும் எண்ணத்தை எல்லா சூழ்நிலையிலும், செயல்களிலும் பொருத்தி
வாருங்கள். அது நம் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது. இதுவே நேர்மறை எண்ணத்தின்
சாராம்சம். நேர்மறை எண்ணங்களே மனிதனுக்கு அம்சமாக அமையும்.
• 24 மணி நேர வேலைக்காரர் நம் மூளைக்காரர். நாம்
தூங்கினாலும் அவர் அவர் வேலையச் செய்துக் கொண்டே இருப்பார். சிலருக்கு அந்த
நேரங்களிலும் கூட ஆழ்மனதில் தீர்வை கொடுத்து விடுவார். அதனால் தான் என்னவோ பெரிய
மூளைக்காரர் என்று சிலரை சொல்ல வைக்குறது. இன்னும் சில மூளைக்காரர்கள் மற்ற
மூளைகளையும் தனக்காக ஓட வைக்கிறார்கள். அவர்கள் மூளை தான் சரித்திரப் புத்தகத்தில்
இடம் பெறுகிறது. மூளையின் ஆற்றல் உலகின் எந்த மூலையிலும் சாதிக்கும் திறன் பெற்றது.
அப்பேற்பட்ட மூளையை சேதம் செய்யாமல் சாதனை செய்வதற்குப் பயன்படுத்துவோம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
மருத்துவ குறிப்புகள் : மனித மூளை கணினி விட பவர் அதிகமா? - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Is the human brain more powerful than a computer? - Medicine Tips in Tamil [ Medicine ]