நரம்பு மண்டலத்தில் உயிர் இருக்கிறதா?

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Is there life in the nervous system? - Medicine Tips in Tamil

நரம்பு மண்டலத்தில் உயிர் இருக்கிறதா? | Is there life in the nervous system?

உண்மையில் நாம் அனைவரும் கண்டும் கண்டுகொள்ளமால் இருப்பதே இந்த நரம்பு மண்டலத்தைத் தான். இந்த நரம்பு தான் கால் முனையில் இருந்து மூளை வரை உணர்வுகள் ஆகட்டும், மூளையில் உள்ள நரம்புகளால் தான் உலகத்தில் எந்த மூலையில் உள்ள செய்திகளையும் புரிய, அறிய முடிகிறது.

நரம்பு மண்டலத்தில் உயிர் இருக்கிறதா?

 

நரம்பு மண்டலம் (Nervous System) என்பது நம் வாழ்க்கையை அழகாக்குமா? நரம்புகள் ஆரோக்யத்தின் உச்ச வரம்புகள்.

உண்மையில் நாம் அனைவரும் கண்டும் கண்டுகொள்ளமால் இருப்பதே இந்த நரம்பு மண்டலத்தைத்  தான். இந்த நரம்பு தான் கால் முனையில் இருந்து மூளை வரை உணர்வுகள் ஆகட்டும், மூளையில் உள்ள நரம்புகளால் தான் உலகத்தில் எந்த மூலையில் உள்ள செய்திகளையும் புரிய, அறிய முடிகிறது. அத்தகைய நரம்பு மண்டலம் பலவீனப்பட விடலாமா? நினைவுகள் இருந்தால் தான் உயிர் இருப்பதற்கு அழகு. அப்பேற்பட்ட உயிர் போன்ற நரம்பு மண்டலத்தை பாதுகாக்காமல் விடலாமா? எப்படி பாதுகாக்கிறது? என்னென்ன நோய்கள் தாக்குகிறது? விரிவாக கட்டுரையில் பார்ப்போம்.

 

நரம்பு சம்பந்தமான நோய்கள்

மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படும் செல்கள் மற்றும் நரம்பணுக்கள் அழிந்து வருவதாலும், வயது மூப்பின் காரணமாக கூட இந்த நோய்கள் நம் உடம்பில் எட்டிப் பார்க்கும். இதன் அறிகுறிகள் வீக்கத்தை காண்பிக்கும் அவ்வளவே. மேலும் நரம்பியல் கடத்தல் நோய்கள் மரபணுக்கள் பாதிப்பின் காரணமாக வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

காரணங்கள்:

1. நம்முடைய உணவுப் பொருள்கள் அனைத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளித்து வளர்க்கப்பட்டு தான் தற்காலங்களில் நமக்கு பெரும்பாலும் வருகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. நாள் பட்ட தயாரிப்பு உணவு பொருள்கள், பூஞ்சைகள் சூழ்ந்த உணவு வகைகள், இன்னும் நமக்கே தெரியாமல் கெட்டுப் போன உணவுகள் இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். சுருங்கக் கூறினால், நோய் என்பது தானாக வருவதைக் காட்டிலும், நாம் தானாகவே நோயை அழைப்பது தான் இங்கே அதிகம் நடை பெறுகிறது.

2. தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் உணவு வகைகளில் ருசிக்காகவோ அல்லது கெட்டுப் போகாமல் இருப்பதற்கோ, இன்னும் கூடுதலாக சொல்லப் போனால் அந்த தொழிற்சாலை ஓடுவதற்கே சில இரசாயன பொருள்கள் பயன்படுத்தச் செய்கிறார்கள். அப்புறம் அல்லவா அந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களைப் பற்றி சொல்வது. அதை விடுங்க. அது வெளிப்படுத்துமே புகைகள், அது காற்றில் கலந்தால் எப்படி நாம் தூயக் காற்றை சுவாசிப்பது. இதற்குத் தான் முந்தியக் கட்டுரையில் எழுதியிருப்பேன். சுவாசிக்கும் காற்றை விக்கும் கடைகள் கூட வருங்காலத்தில் வர வாய்ப்புகள் அதிகம் இருக்கு என்று. அப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதே என்னுடைய வேண்டுதல். ஆனால் என்னத்த சொல்ல தண்ணீரும் அப்படி தான இருந்தது. ஒவ்வொரு இல்லத்திற்கும் முதலில் போனால் முதலாவதாக தண்ணீரை தான் கொடுப்பார்கள். அது காரணம் வெளியில் இருந்து வெய்யிலில் அலைந்து வந்து இருப்பார், மேலும் பிரச்சனைகள் காரணமாக டென்ஷன் குறைவதற்கும் கொடுப்பார்கள். அந்த தண்ணீரே விற்பனைக்கு வந்து விட்டதே! அதை நினைத்துத் தான் பயம் வருகிறது. இருந்தாலும் அந்த தண்ணீர் இன்னும் மனிதர்களுக்குள் இலவசமாக பரிமாறப்படுகிறது என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள், பிரச்சனைகள், புதுசு புதுசா பெயரில் பிறந்து வந்தாலும் மனிதம் இறந்து விட வில்லை. சிறப்பு. மகிழ்ச்சி.   

2. அடுத்து தான் ஹை லைட்டே மது அருந்துதல், புகைப் பிடித்தல் இது எப்படி தெரியுமா? ஆப்பு எனத் தெரிந்தும் நல்லா இருக்கும் உடம்பின் கேப்பை புரிய வில்லையா? அதாவது இடைவெளிக்குள் தானே ஆப்பை எடுத்துச் சொருகிப் புண்ணாக்குறது. இது பழக்க வழக்கங்களால் ஏற்படுவது. இது ஆரம்ப காலங்களில் ஒன்னும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்ற நினைப்பை மனதில் ஏற்படுத்துகிறோம். அவ்வளவே. ஆனால் விஷயம் அதுவல்ல. இளமைக்காலங்களில் நமக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தியினால் கூட நம்மிடம் அதனுடைய சக்தியை இழந்து விடலாம். கொஞ்சகொஞ்சமாக மெதுவிஷம் என்று சொல்வார்களே அது போல மெது மெதுவா நம் உடம்பை பாதிப்புக்கு உள்ளாக்கும். ஒன்னும் செய்யாது என்ற நினைப்பு ஏற்படுத்தும் மனதிலே பங்கம் விளைவித்துவிடும். புரிகிறதா? மனது இருக்கும் இடம் என்று எதை சொல்கிறேன் என்று. ஆம். இதயம், நுரையீரல் தான். இன்னும் நீங்கள் மனது என்பது சிந்திக்கும் மூளை தான் என்கிறார்களே என்று தர்க்கம் பண்ணினால் அங்கேயும் பாதிப்பை ஏற்படுத்த தயாராக இருக்கிறது. நரம்புகள் இருக்கும் ஒவ்வொரு இடமும் தாக்க தயார். அதனால் தான் கவனம் நாம் தான் வைக்க வேண்டும்.

 

நரம்பியல் கடத்தலின் அறிகுறிகள்:

• நரம்பியல் கடத்தல் நோய்களை குணப்படுத்த முதலில் அதன் அறிகுறிகள் தென்படும்போதே சரி செய்ய மருத்துவரை அணுக வேண்டும்.

• ஞாபக சக்தி குறைதல், மறதிகள் அதிகரித்தல், பேசுவதில் வார்த்தைகள் தடுமாறுதல் போன்ற நிலைகள் வழக்கத்திற்கு மாறாக உங்களுக்கு வர ஆரம்பித்து விட்டால், வயது மூப்பில் வரும் தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நரம்பு சில வேலைகளை காட்டுகிறது என்று அர்த்தம்.

• சிலர் தள்ளாடி தள்ளாடி செல்வர். நீங்கள் நினைப்பது புரிகிறது எனக்கு. அது மப்பில் தள்ளாடி போகிறது. அது வேற கதை. நான் சொல்ல வருவது நார்மலான மனிதர் திடீர்னு தள்ளாடுகிறார் என்றால் அது யோசிக்க கூடிய விஷயம். அங்கும் நம்முடைய நரம்பு வம்பு இழுக்கிறது என்று அர்த்தம்.

• நரம்பு நோய் பாதிக்கப்பட்டவர் எப்போதும் பதற்றத்துடனும், மன அழுத்தம் அதிகம் இருப்பவர்களாகவும் காணப்படுவர்.

• எப்போதும் சோர்வும், கை, கால் நடுக்கம் அதிகமாகவும் இருக்கும்.

தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் இந்த நரம்பியல் மண்டலத்தை பாதிக்குமா? என்றால் அதுவும் சரியான கேள்வி? கொரானா  வைரஸ் பொதுவா சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நரம்பு மண்டலத்திற்கு இரத்தம் மற்றும் வாசனை உணரும் நரம்புகள் மூலம் மூளைக்குள்ளே செல்ல வாய்ப்பு ஒன்று. மூளைக்குச் செல்லும் ரத்ததை கொண்டு செல்கின்ற இரத்த நாளங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும். நம்மிடம் இருக்கும் எதிர்ப்பு சக்தியின் அளவுகளை குறைக்கவும் வாய்ப்பு ஒன்று. ஆனால் கொரானா வைரசால் பாதிப்பு ஏற்பட்டால் சிலருக்கு சில வாரங்களோ அல்லது இன்னும் சிலருக்கு சில மாதங்களோ வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

 

நரம்பு மணடலத்தை சரி செய்யும் முறைகள்:

நம் உடலில் உள்ள அற்புத சக்தியை நமக்கே தெரிய வைக்கும் அற்புதமே இந்த யோகாசனம் மற்றும் தியானம். இதனால் மன வலிமை மற்றும் நரம்பு மண்டலம் அனைத்தும் எழுச்சி பெற அதிக வாய்ப்பு உண்டு. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து சக்திகளும் உள்ளது. குறிப்பாக பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் சூழப்பட்டு இறுக்கிறது. அதே மாதிரி நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை சொல்வார்கள்.

கட்டை விரல் : நெருப்பு

ஆள்காட்டி விரல் : காற்று

நடுவிரல் : ஆகாயம்

மோதிர விரல் : பூமி

சுண்டு விரல் : தண்ணீர்

பஞ்ச பூதங்கள் சமநிலையில் இருந்தால் உடம்பும் ஆரோக்யமாக இருக்கிறதாக அர்த்தமாம். சரி. விரல்களை கொண்டு முத்திரை ஒரு மண்டலம் செய்தால் நரம்பு மண்டலம் பலன் தருமா? பலம் பெறுமா? இரண்டுமே கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? படியுங்கள் ஒவ்வொரு முத்திரைக்கும் விளக்கமாக சொல்லி இருக்கிறேன்.

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை செய்து வருதல் மூளை நரம்புகளை தட்டி எழுப்பி உற்சாகத்தை ஏற்படுத்தும். உற்சாகம் வந்தாலே நமக்கு இருக்கும் தலைவலி, கவலைபடுதல், கோவப்படுதல், எரிச்சல் படுதல், தூக்கம் இன்மையால் அவதிப்படுதல் இன்னும் பல பிரச்சனைகள் நமக்கு பஞ்சாகி பறந்து போக வாய்ப்புள்ளது. எப்படி செய்வது என்பதை சொல்கிறேன் செய்து பாருங்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. அதுவும் தியானம் செய்பவர்கள் பயன்படுத்தும் முத்திரை. கட்டை விரலின் நுனிபகுதியை, ஆள்காட்டி விரலின் முனை பகுதியோடு இணைத்து மற்ற விரல்களை நேராக நீட்டி கொண்டு குறைந்த பட்சம் 5 நிமிடமாவது இல்லை நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்து வர மனம் ஒரு நிலைப்படும். மனம் ஒரு நிலைப்பட்டாலே தெளிவு பிறக்கும். நோய் பறக்கும்.

அடுத்து வாயு முத்திரை இதுவும் முன்னமே சொன்ன மாதிரி தான் வைக்க வேண்டும். வைத்து விட்டு சற்று ஆள்காட்டி விரலை கட்டை விரலின் நுனிப் பகுதிக்கு பதிலாக அடிப்பகுதியில் வைத்து, கட்டை விரலை கொண்டு ஆள்காட்டி விரலை அடிக்கடி அழுத்தம் கொடுத்து வர வாய்வு சமபந்தப்பட்ட அதாவது நாம் இப்போ அடிக்கடி சொல்கிறோமே Cash Trouble இது அனைவரும் சொல்கிறார்கள். நான் சொல்ல வரும் Gas Trouble வேற. இது சிலரிடம் இருக்கிறது. இவர்கள் பக்கம் சென்றால் நம்மை இடி போன்ற சத்தத்தில் கூட வரவேற்பார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். இது ஜோக்கிற்காக சொல்லப்பட்டாலும் இது ஒரு வாயு சம்பந்தப்பட்ட நோய் தான். இந்த முத்திரையை செய்து வர இரத்த ஓட்டம் சீராகும். வாயு தொந்தரவு நீங்கும்.

அடுத்து வருண முத்திரை செய்து வர தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், பருக்கள்  வராமல் தடுக்க முடியும். ஆச்சர்யமாக இருக்குதா? இது எப்படி செய்வது? கடைசி விரலான சுண்டு விரல் நுனி மற்றும் கட்டை விரல் நுனி ஒன்றாக இணைத்து மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்து அடிக்கடி செய்து வாருங்கள். மேற் சொன்ன நோய்களுக்கு ஒரு சிறப்பான முத்திரை.

அடுத்து சூரிய முத்திரை செய்ய மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அடிக்கடி அழுத்தம் கொடுத்து வர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்த வழியிலே போய் விடும். இது செய்ய செய்ய உடம்பின் வயிற்றுப் பகுதியில்  சீரணத்துக்கான வேகம் அதிகரிக்கும். அதற்க்கு தேவையான வெப்பம் இந்த முத்திரையின் வாயிலாக கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இன்னும் பல முத்திரைகள் இருக்கிறது. முதலில் முத்திரையை செய்ய ஆரம்பிங்கள். அப்புறம் முடிவை பாருங்கள். அதன் பின்னே பலமான முத்திரையாக உங்கள் மனதில் பதியும்.

கை கால்கள் மரத்துப் போதல், ஊசி குத்துவது போல ஆங்காங்கே வலிகள், உணர்வே இல்லாமை, கை கால் விரல்களை நிமிர்த்த முடியாமல் போதல் இது போன்ற அறிகுறிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் தென்படும். சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. காரணம் நரம்பு செல்களானது மற்ற செல்களுக்கு தேவைப்படும் இன்சுலின் போல் அல்லாமல், இன்சுலினே இல்லாவிட்டாலும் ஆற்றலை எடுக்க வல்லது. அதனால் என்னவோ சர்க்கரை நோயாளிகளின் நரம்பு மண்டலம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இரயில் வண்டிக்கு தண்டவாளங்கள் எப்படியோ அது போல உடம்புக்கு நரம்பு மண்டலம் மிக அவசியமானது. நாடி நரம்பு புல்லா முறுக்கேறி கிடக்குன்னு சொல்றதை கேள்வி பட்டு இருப்பீர்கள் தானே. ரத்தம் பாயும் அந்த நரம்புகளை பலப்படுத்துவோமா? இல்லை பலவீனப் படுத்துவோமா? என்னிடம் ஒரு நெருங்கிய நண்பர் உடலில் நரம்பு மண்டலம் (nervous system) என்பதில் தான் உயிரே இருக்கிறது என்றார். நான் இதயம் என்று சொன்னேன். இன்னும் சிலர் ஒவ்வொரு உறுப்புகள் சொல்வார்கள். அனைத்து உறுப்புகளுமே முக்கியம் தானே. அதில் எந்த உறுப்பு முக்கியம் என்பது தெரிவது அதை விட முக்கியம். ஏனென்றால் உயிர் போவது என்பது இதயம், மூளை இயங்குவது நின்றாலும் ஒரு சில நொடிகள் உயிர் இருக்க வாய்ப்பு இருக்கு. நரம்புகள் கட்டாகி விட்டால் ஒரே நொடி தான் அம்பேல். முரண்பாடாக இருந்தால் விட்டு விடுங்கள். அதில் உள்ள முக்கியத்துவத்தை மனதில் பதியுங்கள். நான் முக்கியத்துவமாக சொல்வது உறுப்புகளை பேணி காப்பது. அவ்வளவு தான். மூளைகளில் இருக்கும் நரம்புகளில் நியூரான்களின் எண்ணிக்கையானது விண்வெளியில் இருக்கும் நட்சத்திரங்களை விட சாஸ்தி என்று சொல்கிறார்கள். இந்த நரம்பு மண்டலமானது மூளை, முதுகு தண்டுவடம், மற்றும் உடல் முழுவதுமே ஒரு தொடர்பு அனுப்பியும், பெற்றும் வருவது தான் இந்த நரம்பு மண்டலத்தின் மிகப் பெரிய பொறுப்புகள் ஆகும்.

 

நரம்புகளை பலப்படுத்த உட்கொள்ளும் உணவுமுறைகள்:

மேற்சொன்ன முத்திரை பயிற்சி, உடற்பயிற்சிகள் செய்து பலப்படுத்துங்கள். மேலும் பலப்படுத்த உணவு முறைகளை பின் தொடருங்கள்.

1. பாதாம் பருப்பு வகைகள், வால் நட்ஸ், பிஸ்தா போன்ற சத்துள்ள பொருள்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். மேலும் இதில் உள்ள விட்டமின் பி மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்கள் நரம்பு மண்டலத்திற்கு நல்லதொரு ஆரோக்யத்தை கொடுக்கிறது.

2. அதே போன்று ஓட்ஸ் சத்தான ஒன்றாகும். இதிலும் விட்டமின் பி உள்ளது. கனிமச் சத்துக்களாகிய இரும்புசத்து, ஜிங்க், மக்னீசியம், புரோட்டின் உள்ளது. இதே மாதிரியான உணவுகள் நரம்புகளின் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.

3. மீனில் மற்றும் கடல் உணவுகளில், ஆட்டு இறைச்சிகளில், சிக்கன், மாட்டு இறைச்சி அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுங்கள்.  இதில் அனைத்தும் விட்டமின் பி12 அதிகம் உள்ளது. ஒமேகா 3 உள்ளது கடல் உணவுகளில் இருக்கிறது. இது மூளையின் ஆரோக்யத்திற்கு உதவுகிறது. இந்த விட்டமின் பி12 குறைபாடு தான் நரம்பு பாதிப்புக்கு முக்கிய காரணம். இந்த விட்டமின்களை உணவில் சேர்த்து வர மன அழுத்தம் குறைத்து மூளை சுறுசுறுப்பாகும்.

4. நவ தானியங்கள், பால், பார்லி, தினைகள், பச்சை காய்கறிகள் அனைத்தையும் உணவாக்குங்கள்.

 

மத்திய நரம்பு மண்டலம்

நரம்பு நோய் வேறு, மன நோய் வேறு. இரண்டையும் சம்பந்தப் படுத்த வேண்டாம். ஏன் என்றால் மன நோயின் போது நரம்பு பாதிக்கப்படாது. ஆனால் நரம்பு நோய் இருந்தால் கண்டிப்பாய் மனம் பாதிக்கத் தான் செய்யும். முதலில் இரண்டையும் சரி செய்யப் பாருங்கள். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு நரம்பு மண்டலம் வளர்ச்சி அடைய சிறிது காலங்கள் ஆகும். அதனால் தான் என்னவோ பிறந்த குழந்தைகள் ஏதாவது பெரிய சத்தம் கேட்டால் பயப்படுவார்கள் அழுவார்கள். அதே நேரத்தில் குழந்தைகள் பெரியதாக ஆனவுடன் நாம் தான் தைரியம் ஊட்ட வேண்டும். அதை குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போதே நம்முடைய வரலாற்று வீரக் கதைகள் சொல்லி அந்த உணர்வில், நரம்பில் இணைக்கும்படி சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். சில குழந்தைகளின் பயம் பெரிய வயதில் இருப்பதற்கும் இதுவே காரணம். குழந்தைகளிடம் இரவு தூங்கும் போது நல்லக் கதைகளை சொல்லி தூங்க வைப்பது பெரிய வயதில் நற்குணங்கள் வருவதற்க்கு முக்கிய காரணமாகும். சில செயல்களில், ஏன் பரிட்சையில் தோற்றால் கூட வெற்றி அடைவது முக்கியம் தான். ஆனால் அதைவிட முயற்சி செய்வது தான் ரொம்ப முக்கியம் என்று அவர்களது தோல்வியை மையப்படுத்தி பேசுவதை விட அடுத்து வெற்றிக்கு என்ன செய்ய முடியும் என்று முயற்சி செய் என்றே முயற்சியை முன் நிறுத்தியே அதாவது நேர்மறை எண்ணங்களை அவர்களுக்கு மனதில் பதியுமாறு பேசிப் பழகுங்கள். முயற்சி செய்து பழகியவனிடம் கண்டிப்பாய் ஒரு நாள் வெற்றி வர முயற்சி செய்யும். மேலும் தோத்தா தான் ஜெயிக்க முடியும். நீ தோத்து தோத்துத் தோற்றுக்கொண்டே அதுவும் சீக்கிரமாகவே duck அவுட் ஆகுகிறாய் என்றால் அனுபவம் அதிகமாக வரும். அதனால் வெற்றி உன்னை நோக்கி சீக்கிரம் வரும் என்று ஊக்கப்படுத்துங்கள். இங்கே தோக்கமால் யாரும் ஜெயிக்கவில்லை என்று சொல்லுங்கள். மேலும் குழந்தைகளிடம் சைக்கிள் அல்லது வேற எந்த விளையாட்டு, செயல்கள் செய்தாலும் கீழே விழுந்து விடுவாய் என்று சொல்லி முளையிலே கிள்ளி விடாதீர்கள் அது கில்லி விளையாட்டானாலும் சரி. கவனமாக விளையாடு என்று மட்டும் சொல்லி பாருங்கள். அப்போது அவன் ஆட்டத்தை பாருங்கள். வேற யாரும் அவன மாதிரி விளையாட முடியாது. அவன் அப்புறம் கீழே விழுந்தாலும் கவலைப் படமாட்டான். எங்கே கவனத்தை சிதற விட்டோம் என்றே கவனிப்பான். அடுத்து விழவே மாட்டான். இங்கே கவனிக்க வேண்டியது நாம் சொன்ன கவனம் எங்கே போய் கவனம் செய்கிறான் என்று பார்த்தீர்களா? இதை தான் நாம் கற்று கொடுக்கும் முறை. ஊக்குவிக்கும் சரியான முறை ஆகும். மேலும் தோல்வி உன்னை துரத்துகிறதா? நீ வெற்றியை நெருங்கி கொண்டுரிக்கிறாய் என்று அர்த்தம் என்று சொல்லிப்பாருங்கள். எடிசன் கதையைச் சொல்லி தாருங்கள். 1000 முறைக்கு மேல தோத்தவர் என்று நாம் தான் சொன்னோம். ஆனால் அவரிடம் கேட்டனர். என்ன சொன்னார் தெரியுமா? நான் ஆயிரம் முறை தோற்கவில்லை. அத்தனை முறை ஜெயித்து இருக்கிறேன் என்று எப்படி சொல்கிறீர்கள்ன்னு கேட்குறீர்களா? நான் அத்தனை முறை அப்படிச் செய்தால் வெற்றி கிடைக்காது என்று தெரிந்து கொண்டேன். “DO NOT” அதாவது எதுவெல்லாம் செய்யக் கூடாது என்கிற முறையை ஆயிரத்துக்கு மேல் கண்டுகொண்டேன். அத்தனையும் அனுபவமாக்கினார். இதல்லவா நேர்மறை சிந்தனை. அதற்கு பலன் அவருக்கு என்ன கிடைத்தது. வெற்றி தான். அடுத்து அவர் ஆயிரத்துக்கு மேலான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இது அவருடைய தாயின் வெற்றி என்று சொன்னார். உண்மை தான் அவர் வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். அவர் படித்த பள்ளிக்கூடத்தில் மனநிலை சரி இல்லாத குழந்தைக்கு சொல்லி கொடுக்க எங்கள் பள்ளிகூடத்தில் ஆசிரியர்கள் இல்லை என்று கடிதம் கொடுத்து அனுப்பினார்கள். அந்த குழந்தை தன் தாயிடம் காண்பித்து என்ன என்று கேட்கும்போது குழந்தையின் தாய் சொன்ன வார்த்தைகள் இன்னும் சூப்பர். உன் அறிவுக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு அந்த பள்ளிக்கூடம் இல்லை என்று நேர்மறையாய் சொன்னது எவ்வளவு சரியானது. பாருங்கள். சாதனை சிகரத்தை தொட வைத்தது. இதே வேறக் கோணத்தில் நினைத்துப் பாருங்கள். தாழ்வு மனப்பான்மை வந்து விடாதா? அந்த கடிதம் விசயமே பல வருடங்களுக்கு அப்புறம் தான் தெரிய வந்தது எடிசனுக்கு. இப்போ சொல்லுங்கள் இந்த வெற்றி யாருக்குச் சொந்தம். காரணகர்த்தா யார்? அதே சமயத்தில் அவமானப் படாத மனிதனும் இருக்க மாட்டார்கள். அவமானம் வந்தால், யாராவது அவமானப் படுத்தினாலும் அதையே அந்த அவமானத்தையே உங்கள் முன்னேற்றத்திற்க்கு மூலதனமாய், வெகுமானமாய் முன்னேற்றி முன்னேறி செல்லுங்கள். மாறாக அவர்களை பழிவாங்க நினைக்காதீர்கள். உங்கள் காலத்தை வீணடிக்கும். அவ்வளவே. இன்னொரு விசயம் சொல்கிறேன். இதைவிட அல்டிமேட். தாயின் செயல்பாட்டை எங்கே apply செய்தார் தெரியுமா? மேலும் படியுங்கள். அவருடைய டங்ஸ்டன் கண்டுபிடிப்பின் போது நடு ராத்திரியில் சத்தம் போட்டு தூங்கிய மனைவியை எழுப்பி சொல்கிறார். அடுத்த நாள் நாட்டுக்கு DEMO அதாவது நிருபிக்க தயாராகுகிறார். ப்ராஜெக்ட்- ஐ அவருடைய பணியாளர் கொண்டு வரும் போது டமால் டுமீல் உடைத்தே விடுகிறார். அடுத்து தயாராகி மறுபடியும் கொண்டு வரப்பட்டது. கொண்டு வைத்தவர் யார்ன்னு நினைக்குறீங்க? எடிசன் தான் இந்த தடவை அவரே கொண்டு வந்து இருப்பார் என்று எத்தனை பேர் நினைத்தீர்கள்? பணியாள் இருக்கும்போது அவரே செய்தால் ஆளுமைத் திறனில் சந்தேகம் தோன்ற வைக்குமே. கொண்டு வந்தவர் வேற யாருமில்லை அதே பணியாளர் தான். அவரிடம் கேட்கவும் பட்டது. அதற்க்கு அவர் சொன்ன பதில் தான் வேற லெவல். என்ன சொன்னார் தெரியுமா? அவர் கவனம் இல்லாமலோ அல்லது வேறு பல காரணத்தாலோ உடைத்து இருக்கலாம். அதனால் நான் அவர் மனதை உடைக்கலாமா? ப்ராஜெக்ட்யை சில மணி நேரங்களில் திரும்ப செய்து விடலாம். ஆனால் அவர் மனம் உடைந்தால் மீண்டும் சரி செய்ய முடியுமா? மேலும் அவரிடமே திரும்பக் கொடுக்கும் போது மேலும் கூடுதல் கவனம் அவருக்கு வந்து இருக்கும். வெற்றி பெற்றால்  இருவருக்குள்ளும் நம்பிக்கை திடமான அஸ்திவாரம் போட்டு நிக்கும். மாறாக கொடுக்கவில்லை என்றால் அவருக்கே அவருக்குள்ளேயே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மிகப் பெரிய மோசமான மன நிலையப் பெறக் காரணமாக ஆகி இருப்பேன். அந்த மனநிலையை சரி செய்தல் என்பது திரும்பப் பெற முடியாத விஷயம். மனுஷன் எடிசன் எந்த கோணத்தில் யோசனை செய்து இருக்கிறார் பார்த்தீர்களா? அதனால் தான் வெற்றி பாதையில் பயணம் செய்து வெற்றியின் உச்சத்தை தொட்டு இருக்குறார். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இதைத் தான் சொல்வார். எந்த விஷயம் என்றாலும் நல்லதோ, கெட்டதோ, கேட்டதோ, பார்த்ததோ எதுவாயினும் சரி, அவர்களுடைய இடத்தில இருக்கிற மாதிரி நினைத்தாலே எல்லா விதத் தீர்வும் கிடைத்து விடும் என்று. வெற்றியாளர்கள் அதைத் தான் செய்வார்கள். மாறாக நாம் நம் இடத்துலே நின்னு பார்த்தோம் என்றால் பிரச்சனையும், புரிதல் தன்மை இல்லாததும் கூடுதலாகி தோல்வி பாதைக்குக் கூட்டி செல்லும். இப்போது புரிய வரும். நமக்கான பாதை வெற்றியா? தோல்வியா? நம் கையில்...

மேலே அந்த கதைகள் சொல்வதற்கு காரணம் மனநிலையை நோயாளியாக ஆக்குவதும் சூழ்நிலையும், சுற்றுப்புறமும் இருக்கலாம் ஏன் நம் சமுதாயம் கூட அந்த மனநிலைக்கு தள்ளி விடலாம். நம் மனதில் திடமாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்.. ஆரோக்யமாக இருக்கலாம் என்பதற்கே சொல்லப்பட்ட கதை ஆகும்.

இனி நரம்புப் பகுதிக்கு வருவோம். மனிதனின் உடம்பில் நரம்பானது மூளையில்   இருந்து பனிரெண்டு ஜோடி நரம்புகள் சுண்டு விரல் அளவில் உள்ள தண்டுவட நரம்புடன் இணைந்து இருக்கும் ஒரு வடம் ஆகும். வலிப்பு நோய் ‘காக்கா வலிப்பு‘ என்று சொல்லப்படும் நோயானது எப்படி வருகிறது தெரியுமா? மூளையில் இருந்து மைய நரம்பு மண்டலத்தின் வழியாக நரம்புகளின் மூலம் செல்லும் இடங்களில் தடைகள் கொஞ்ச நேரம் வருதலின் காரணமாக வலிப்பு ஏற்படுகிறது. இதன் முக்கிய காரணம் மைய நரம்பு மண்டலம் சேதம் ஆகுவதாலும், தலையில் அடிபடுதல், மூளையில் உள்ள கட்டிகள், மூளை காய்ச்சல், ஆல்கஹால், போதை பொருள்களுக்கு அடிமையாய் இருப்பவர்களுக்கும் வலிப்பு வர வாய்ப்பு.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன்  நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்


மருத்துவ குறிப்புகள் : நரம்பு மண்டலத்தில் உயிர் இருக்கிறதா? - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Is there life in the nervous system? - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்