திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா?

வள்ளியூர் முருகன் கோவில்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Is your marriage struggling? - Valliyur Murugan Temple in Tamil

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா? | Is your marriage struggling?

கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமண்யரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா?


🌺 கல்யாண_வரம்_தரும் வள்ளியூர்_முருகன்

 

கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமண்யரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

 

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!

 

மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட தலம் இது. சுமார் 1500 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் என்பதை, கற்களும் கட்டுமானப் பணிகளும் தெரிவிக்கின்றன.

 

வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்ட தாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. மிகப் புராதனமான, சாந்நித்தியம் நிறைந்த திருக்கோயில் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

 

இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா? - வள்ளியூர் முருகன் கோவில் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Is your marriage struggling? - Valliyur Murugan Temple in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்