கோடீஸ்வர யோகம் அமைய பெண்கள் தினமும் இதை செய்தால் போதும்..!!! கோடீஸ்வரராக ஆக வேண்டும், பணபற்றாக்குறை இல்லாத வசதியான வாழ்க்கை வாழ வேண்டும், வாழ்க்கையில் முன்னேறி வேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறுவது கிடையாது. சில குறிப்பிட்ட பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் பணம் நம்மை தேடி வந்து கொண்டே இருக்கும். வாழ்வில் எடுக்கும் காரியங்களில் வெற்றிகள் பெற்று, வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை பெற முடியும். நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் பெயர் சொல்லாதது என சொல்லப்படும் வசம்பினை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். வசம்பினை எப்போதும் பேரம் பேசி வாங்கக் கொள்ள வேண்டும். வசம்பிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு.
வசம்பு என்னும் மூலிகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
கோடீஸ்வர யோகம் அமைய பெண்கள் தினமும் இதை செய்தால்
போதும்..!!!
கோடீஸ்வரராக ஆக வேண்டும், பணபற்றாக்குறை இல்லாத வசதியான வாழ்க்கை வாழ வேண்டும், வாழ்க்கையில் முன்னேறி வேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் இருக்க
முடியாது.
ஆனால் இந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறுவது கிடையாது.
சில குறிப்பிட்ட பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் பணம் நம்மை தேடி வந்து கொண்டே
இருக்கும்.
வாழ்வில் எடுக்கும் காரியங்களில் வெற்றிகள் பெற்று, வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை பெற முடியும்.
நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும்
பெயர் சொல்லாதது என சொல்லப்படும் வசம்பினை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.
வசம்பினை எப்போதும் பேரம் பேசி வாங்கக் கொள்ள வேண்டும்.
வசம்பிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு.
இதை வாங்கி வந்து, வீட்டின் பூஜை அறையில் இரு நாட்கள் வைத்து வழக்கமான
பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கற்பூர ஆரத்தி, தீபம், தூபம் காட்டி வழிபடுவதால் வசம்பிற்கு தனித்துவமான
தெய்வீக சக்தி ஏற்படும்.
பிறகு அந்த வசம்பிற்கு முன் ஒரு அகல் விளக்கில் நெய்
ஊற்றி ஏற்றி வைக்க வேண்டும். அகல் விளக்கு இல்லை என்றால் வழக்கமாக வீட்டில் ஏற்றும்
காமாட்சி விளக்கில் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.
அந்த சுடரில் வசம்பினை காட்டி சுட வேண்டும். லேசாக
கரி போன்று மாறும். அதில் விளக்கில் உள்ள சிறிதளவு நெய்யினை பூசி மீண்டும் சுடரில்
காட்டி, தீயாக எரிய
வைக்க வேண்டும்.
அதில் வரும் கருப்பான மெழுகு போன்ற பொருளை பெண்கள்
தினமும் தங்களின் உச்சந்தலையில் சிறிதளவு வைத்துக் கொண்டால் பணம் வந்து கொண்டே இருக்கும்.
எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் விலகி விடும்.
வெளியில் முக்கியமான காரியத்திற்காக செல்லும் போது
பெண்கள் உச்சந்தலையிலும், ஆண்கள் நெற்றியிலும் வைத்துக் கொண்டு சென்றால் போகிற காரியம் வெற்றிகரமாக அமையும்.
வசம்பினை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்தாலும், பணம் வைக்கும் பர்ஸ் போன்றவற்றிலும் வைத்திருந்தால்
பணம் வந்து கொண்டே இருக்கும்.
பகையை என்பது நெருங்காது. இந்த பரிகாரத்தை தொடர்ந்து
செய்து வந்தால் கோடீஸ்வர யோகம் பலமாக அமையும். வறுமை என்பது முற்றிலுமாக நீங்கி விடும்.
அதே போல் ஆடை ஆபரணங்கள் அணிந்து கொண்டிருக்கும்
பெருமாளின் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் அந்த படத்தில் கண்
விழித்து வந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைத்துக் கொண்டே இருக்கும். உங்களிடம் பணம்
குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.
மற்றொரு பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் மாலையில் பசு
மாட்டிற்காக உங்களால் முடிந்த உணவை வழங்கி வந்தால் லட்சுமி தேவியின் அருட் கடாட்சத்தை
பெற முடியும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : கோடீஸ்வர யோகம் அமைய பெண்கள் தினமும் இதை செய்தால் போதும் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : It is enough for women to do this daily to become millionaire yoga - Tips in Tamil [ ]