இறைவனை வழிபடும்போது காணிக்கை செலுத்துவது என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆலயங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய பொருட்கள் இறைவனை வழிபடும்போது காணிக்கை செலுத்துவது என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு காணிக்கை செலுத்துகின்றனர். பணம், தங்கம் அல்லது வெள்ளி நகைகளைத்தான் காணிக்கையாக செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. கீழ்க்கண்டவற்றைக் கூட காணிக்கையாகச் செலுத்தலாம். ஆலயக் குடமுழுக்கு விழக்களை நடத்தினால் ஆச்சரியப்படத்தக்க வகையில் வாழ்க்கை அமையும். ஒருவர் தெய்வத் திருப்பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டுமானால், அவர் வாழ்க்கையில் கேது பலம் பெற்றிருக்க வேண்டும். நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது போல, நமக்கு அருள் வழங்கும் இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கோவில்களில் தரப்படும் விபூதி, குங்குமத்தைப் பெரும்பாலானவர்கள் அங்குள்ள கல் தூண்களில் கொட்டி விடுகின்றனர். இதை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் பழைய செய்தித் தாள்களை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து கல் தூண்களில் கட்டி வைக்கலாம். நந்திக்கு அபிஷேகம் செய்யும்போது. சில அபிஷேக நீரானது பக்தர்கள் அமரும் இடங்களுக்கு வந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க அங்கு வடிகால் அமைத்து பக்தர்கள் அனைவரும் தெளித்துக் கொள்ளும் வகையில் செய்யலாம். பிரசாதம் வழங்குவதற்குத் தொன்னை செய்து கொடுக்கலாம். ஆலயங்களில் உள்ள விளக்குகளுக்கு எண்ணை, நெய், திரி போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். மின் விளக்குகள் வாங்கிக் கொடுத்தால் நம் வாழ்வில் வெளிச்சமும், விடிவு காலமும் பிறக்கும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : ஆலயங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய பொருட்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Items to be dedicated to temples - Spiritual Notes in Tamil [ spirituality ]