ஞான முத்திரை அல்லது தியான முத்திரை

ஆத்ம ஞானம், செய்முறை, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Jnana Mudra or Dhyana Mudra - Atma Gnana, Recipe, Benefits in Tamil

ஞான முத்திரை அல்லது தியான முத்திரை | Jnana Mudra or Dhyana Mudra

ஞான முத்திரையை தியான முத்திரை என்றும் சொல்வார்கள். ஞானம் என்றால் அறிவு. அறிவைக் கொடுப்பதால், அறிவு முத்திரை என்றும் சொல்லலாம்.

ஞான முத்திரை அல்லது தியான முத்திரை

ஞான முத்திரையை தியான முத்திரை என்றும் சொல்வார்கள். ஞானம் என்றால் அறிவு. அறிவைக் கொடுப்பதால், அறிவு முத்திரை என்றும் சொல்லலாம்.

ஞானம் இரண்டு வகைப்படும். ஒன்று. 'பரோக்ஷ ஞானம்'; இன்னொன்று, 'அபரோக்ஷ ஞானம்'. பரோக்ஷ ஞானம் என்பது தியரி. அபரோக்ஷ ஞானம் என்பது செய்முறை (பிராக்டிகல்). அதாவது, ஒன்று படித்து அறிந்துகொள்ளுதல். இன்னொன்று நடைமுறையில் செயல்படுத்திப் பார்த்தல். இந்த இரண்டில், அபரோக்ஷ ஞானம்தான் உயர்ந்தது.

ஆத்ம ஞானம்

மனிதன் தனது உண்மையான நிலையை உண்மையாகவே அறிந்துகொள்வதுதான் ஆத்ம ஞானம். முயற்சி, பெரு முயற்சி, இமாலய முயற்சி மேற்கொள்பவர்களுக்குத்தான் ஆத்ம ஞானம் கிட்டும். ஞான நிலையை அடைய உதவக்கூடியது. முத்திரைகளில் முக்கியமானது ஞான முத்திரை. இதை, சின் முத்திரை என்றும் சொல்லலாம்.

செய்முறை

பெரு விரல் (கட்டை விரல்) நுனிப்பகுதியால் ஆள்காட்டி விரலின் நுனிப் பாகத்தை மெதுவாகத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்.

இதை நின்றுகொண்டோ, பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலோ செய்யலாம். ஆனால், அமைதியான சூழ்நிலையில் செய்ய வேண்டும்.

நேர அளவு

இதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ செய்யக் கூடாது. தியானத்தில் இருப்பவர்கள், தியானம் முடியும் வரை செய்யலாம்.

நமது கையில் உள்ள பெரு விரல், நெருப்பு என்ற பஞ்சபூதமாகும். ஆள்காட்டி விரல், காற்று என்ற பஞ்சபூதமாகும். இதனால் நெருப்பு உண்டாகிறது. இந்த நெருப்பால், தீய சிந்தனைகள் போன்ற அழுக்குகள் எரிக்கப்படுகின்றன.

கட்டை விரலில் அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கட்டை விரலைச் சுட்டு விரலால் அழுத்தும்போது மூளை நரம்புகள், பிட்யூட்டரி, நாளமில்லா சுரப்பிகள் ஆகியவை தூண்டப்பட்டு மனத் தெளிவு, நல்ல உணர்வு, நினைவாற்றல் ஆகியவை உண்டாகின்றன.

பலன்கள்

1. தூக்கமின்மை, சோம்பேறித்தனம், கோபம், மனசஞ்சலம் நீங்கும்.

2. குடிப்பழக்கம் குறையும்.

3. ஞாபக சக்தி அதிகரிக்கும்.

4. மூளை கூர்மை அடையும்.

5. எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

6. தூக்கமின்மை குணமாகும்.

7. மனநோய், ஹிஸ்டீரியா, மன எரிச்சல் நீங்கும்.

8. தன்னம்பிக்கை உண்டாகும்.

9. தலைவலி நீங்கும்.

10. மனம் ஒருமுகப்படும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : ஞான முத்திரை அல்லது தியான முத்திரை - ஆத்ம ஞானம், செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : Jnana Mudra or Dhyana Mudra - Atma Gnana, Recipe, Benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்