சரி சமானம் என்றால் சரிநிகர் என்று பொருள். சமானம் என்றால் சமமாக இருத்தல். அதாவது, சமன்படுத்துதல். நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நமது விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை பூதத்துடன் தொடர்புடையவை.
சமான வாயு முத்திரை தெரிந்தால் போதுமே...
சரி சமானம் என்றால்
சரிநிகர் என்று பொருள். சமானம் என்றால் சமமாக இருத்தல். அதாவது, சமன்படுத்துதல். நமது
உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நமது விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை பூதத்துடன்
தொடர்புடையவை.
இந்த பஞ்ச பூதங்களையும் ஒருங்கிணைத்தால்
சமநிலை உண்டாகும். ஐந்து விரல்களும் இணையும்போது நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து
பூதங்களும் இணைகின்றன. அதனால், பஞ்சபூதங்களின் சக்தியும் ஒருசேரக் கிடைக்கிறது.
இந்த முத்திரைக்கு
சங்கல்ப முத்திரை என்ற பெயரும் உண்டு. அதாவது, உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல். 'தெய்வ சங்கல்பம்' என்ற சொல் அடிக்கடி
பேச்சு வழக்கில் காணப்படுகிறது. அதாவது, இறைவனின் முடிவு என்று பொருள். எனவே முடிவு, உறுதி ஆகியவற்றை
எடுத்துக்கொள்ளவும் பயன்படும் முத்திரை இது. அதனால், இதை சங்கல்ப முத்திரை என்றும்
அழைக்கலாம்.
கட்டை விரலுடன் மற்ற
நான்கு விரல்களையும் குவித்தபடி இணைக்க வேண்டும். விரல்களுக்கு இடையே ஒரு
வெற்றிடம் உண்டாக வேண்டும். இந்த அமைப்பு ஒரு தாமரை மொட்டைப்போல காட்சி தரும்.
இந்த முத்திரையை
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.
தொடக்கத்தில் எட்டு
நிமிடங்கள் செய்ய வேண்டும். பின் படிப்படி யாக அதிகரித்து 45 நிமிடங்கள் செய்ய
வேண்டும். முத்திரையை வைத்த பிறகே சங்கல்பம், மந்திரம் ஆகியவற்றைக் கூற வேண்டும். நாம் எடுக்கும்
உறுதிமொழி மூளைக்குச் சென்று பதிவாகிவிடுகிறது. இதனால் துணிவு, விடாமுயற்சி ஆகியவை
ஏற்படும்.
1. மூளை சுறுசுறுப்பாக
வேலை செய்யும்.
2. உடலுக்கு பஞ்சபூத
சக்திகள் கிடைக்கின்றன.
3. தன்னம்பிக்கை
அதிகரிக்கும்.
4. எடுத்த காரியங்களில்
வெற்றி கிடைக்கும்.
5. தீய சக்திகள்
அண்டாது.
6. அனைத்து உறுப்புகளும்
நன்கு செயல்படும்.
இந்த முத்திரையை அதிக
நேரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 15 நிமிடங்கள் செய்தாலே போதும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : சமான வாயு முத்திரை தெரிந்தால் போதுமே... - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Just knowing the same gas seal is enough... - Recipe, time scale, benefits in Tamil [ ]